என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் விஜய் சேதுபதி பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் நடித்துள்ள 'விடுதலை' திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். இந்தியில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.


    விஜய் சேதுபதி

    இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி -சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சமூக கருத்துகளை பகிர்ந்து வருகிறார்.


    மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு புத்தகம் வழங்கிய விஜய் சேதுபதி

    இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு ஆயிரம் புத்தகங்களை வழங்கி உள்ளார். அதனை மதுரை மத்திய சிறைத்துறை துணைத் தலைவர் பழனி மற்றும் சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் பெற்றுக்கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் திரைப்படம் ‘வீரன்’.
    • இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் திரைப்படம் 'வீரன்'. ஃபேண்டசி காமெடி ஆக்ஷன் எண்டர்டெயினர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    வீரன் போஸ்டர்

    சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வீரன்' திரைப்படத்தின் முதல் பாடலான 'தண்டர்காரன்' பாடலின் புரோமோ வீடியோ வருகிற 31-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா.
    • இவர் பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார்.

    கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்ய ஸ்பந்தனா. 'சான்டல்வுட் குயின்' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ரம்யா, திரைத்துறையில் இருந்து ஒதுங்கினார். பின்னர் காங்கிரஸ் சார்பில் மண்டியா தொகுதி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார்.


    ரம்யா - ராகுல் காந்தி

    சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில் பல்வேறுவிஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, என்னுடைய தந்தையை இழந்து 2 வாரங்களுக்குப் பிறகு நான் பாராளுமன்றத்தில் இருந்தேன். அங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் ? யாரிடமும் எது குறித்துப் பேச வேண்டும் என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. எல்லாவற்றையும் நான் கற்றுக்கொண்டேன். அப்பாவின் பிரிவு துயரை நான் அரசியல் பணிகளில் ஈடுபட்டு மறக்க முயற்சித்தேன்.

    அப்படித் தொடர்ந்து என்னை பணியாற்ற வைத்தது மாண்டியா மக்கள்தான். என் வாழ்க்கையில் மிகப்பெரிய செல்வமாக நான் நினைப்பது என் அம்மா, அப்பா, அதற்குப் பிறகு ராகுல்காந்தி. என் அப்பா இறந்த பிறகு நான் தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன். நிறையவும் உடைந்து போயிருந்தேன். தேர்தலிலும் தோற்றிருந்த அந்த நேரம் மிகவும் துக்கம் நிறைந்த சமயம். அந்த நேரத்தில் எனக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது ராகுல்காந்திதான். நான் மீண்டுவர அவர் உதவினார் என்று கூறியிருக்கிறார்.

    • எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’.
    • இப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    லாக்கப் படத்தை இயக்கிய எஸ்.ஜி. சார்லஸ் இயக்கியுள்ள சொப்பன சுந்தரி படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ அண்மையில் வெளியானது. டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.


    ஐஸ்வர்யா ராஜேஷ்

    ஐஸ்வர்யா ராஜேஷ்

    இந்நிலையில் சொப்பன சுந்தரி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் பிரியங்கா சோப்ரா.
    • இவர் பாலிவுட்டில் இருந்து தான் வெளியேறுவதற்கான காரணத்தை சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

    பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த இவர் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தடம் பதிக்க ஆரம்பித்தார்.


    பிரியங்கா சோப்ரா

    ஹாலிவுட்டில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் இருந்து விலகுவதற்கு என்ன காரணம் என்று ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், "பாலிவுட் சினிமாவில் இருந்து நான் ஓரம் கட்டப்பட்டேன். பட வாய்ப்புகள் படிப்படியாக குறைய தொடங்கின. எனக்கு அங்கு நடந்த அரசியல் சரியாகபடவில்லை. எனக்கு சற்று ஓய்வு தேவைப்பட்டது. அதே நேரத்தில் ஹாலிவுட்டில் வாய்ப்பு வந்ததால் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டேன்" என்று கூறினார்.


    கங்கனா ரனாவத் - கரண் ஜோஹர்

    இந்நிலையில், பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் இருந்து வெளியேறியதற்கு பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தான் காரணம் என நடிகை கங்கனா ரனாவத் சாடியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், ஷாருக்கான் உடனான பிரியங்கா சோப்ராவின் நட்பின் காரணமாக அவரை இந்தியாவை விட்டு வெளியேற்ற கரண் ஜோஹர் நினைத்ததாகவும் பாலிவுட்டிற்கு கலங்கம் விளைவிக்கும் இதுபோன்ற செயலுக்கு கரண் ஜோஹர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


    • நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் 'பத்து தல'. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    பத்து தல

    ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை முணுமுணுக்க செய்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலானது. நேற்று இப்படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு வெளியிட்டது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளதைத் தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    பத்து தல

    இந்நிலையில், 'பத்து தல' திரைப்படத்தின் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது, இப்படத்தின் முதல் காட்சி அதிகாலை 5 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், படத்தின் முதல் காட்சி தமிழ்நாடு முழுவதும் 8 மணிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    இதற்கு முன்பு வெளியான அஜித்தின் 'துணிவு' திரைப்படத்திற்கும் விஜய்யின் 'வாரிசு' படத்திற்கும் இது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'டைகர் நாகேஸ்வரராவ்'.
    • இப்படத்தில் ரவி தேஜா கதாநாயகனாக நடிக்கிறார்.

    இயக்குனர் வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் தயாராகி வரும் பான் இந்தியா திரைப்படம் 'டைகர் நாகேஸ்வரராவ்'. இந்த படத்தில் பாலிவுட் நடிகைகள் நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் இணைந்து நடிக்கிறார்கள். ஆர். மதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசைமைக்கிறார்.


    டைகர் நாகேஸ்வரராவ்

    அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுத, அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். 1970-களில் ஸ்டூவர்ட்புரம் எனும் கிராமத்தில் வாழ்ந்த டைகர் நாகேஸ்வரராவ் என்னும் திருடனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தில் டைகர் நாகேஸ்வரராவ் எனும் கதாபாத்திரத்தில் ரவிதேஜா வித்யாசமான கெட்டப்பில் நடிக்கிறார்.


    டைகர் நாகேஸ்வரராவ் போஸ்டர்

    தற்போது இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 'டைகர் நாகேஸ்வரராவ்' திரைப்படம் வருகிற அக்டோபர் 20-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டரில் ரவி தேஜா, டைகர் நாகேஸ்வரராவின் தோற்றத்தில் நீராவி ரயில் மீது நின்றிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

    • ஈஸ்வரியிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை, ஆல்பத்தில் உள்ள போட்டோக்களுடன் ஒப்பிட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இந்த வழக்கில் மேலும் 43 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது.

    நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் லாக்கரில் இருந்த நகைகளை வேலைக்காரப் பெண் ஈஸ்வரி, டிரைவர் வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து சிறிது சிறிதாக திருடி தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரிடம் இருந்தும் 100 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.

    இதுதவிர வெள்ளி மற்றும் வைர நகைகளும் மீட்கப்பட்டன. வேலைக்காரப் பெண்ணான ஈஸ்வரி திருடிய நகைகளை விற்று அதில் சோழிங்கநல்லூர் பகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பில் நிலம் வாங்கி போட்டிருப்பதும், குடும்பத்துக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்திருப்பதும் தெரியவந்தது.

     


    கணவருக்கு காய்கறி கடை, மகளுக்கு மளிகை கடை ஆகியவற்றை வைத்துக் கொடுத்திருப்பதுடன் இன்னொரு மகளுக்கு திருமணம் செய்து வைத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தேனாம்பேட்டை போலீசில் ஐஸ்வர்யா அளித்த புகாரில் குறிப்பிட்டிருப்பதை விட அதிக அளவில் கூடுதல் நகைகள் வேலைக்காரப் பெண்ணான ஈஸ்வரி வீட்டில் இருந்து மீட்கப்பட்டிருப்பதுதான் இந்த வழக்கில் போலீசாரை அடுத்த கட்ட விசாரணைக்கு தள்ளி இருக்கிறது.

    இதையடுத்து திருடப்பட்ட நகைகள் தொடர்பாக கூடுதல் விவரங்களை திரட்ட போலீசார் திட்டமிட்டனர். இதற்காக ஐஸ்வர்யாவின் லாக்கரில் சோதனை நடத்தி அவரிடமும் விசாரிக்க போலீஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. ஐஸ்வர்யா போலீசில் புகார் அளித்தபோது தனது சகோதரி சவுந்தர்யா திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்கள் அடங்கிய போட்டோ ஆல்பம் ஒன்றையும் கொடுத்துள்ளார். அந்த திருமணத்தின் போது ஐஸ்வர்யா அணிந்திருந்த விலை உயர்ந்த நகைகள் திருடப்பட்டிருந்தன. இதைதொடர்ந்து வேலைக்காரப் பெண் ஈஸ்வரியிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை, ஆல்பத்தில் உள்ள போட்டோக்களுடன் ஒப்பிட்டு பார்த்தும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.


    ஐஸ்வர்யா ரஜினி

    ஐஸ்வர்யா ரஜினி

    மேலும், இந்த வழக்கில் மயிலாப்பூரைச் சேர்ந்த வினால்க் சங்கர் நவாலி என்பவரிடம் இருந்து 340 கிராம் நகை மீட்கப்பட்டது. திருட்டு நகைகளை வாங்கியதாக வினால்க் சங்கரை போலீசார் கைது செய்தனர். நேற்று ஐஸ்வர்யா வீட்டு வேலைக்கார பெண் ஈஸ்வரி மற்றும் டிரைவர் வெங்கடேசன் ஆகியோரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதியளித்துது.

    இந்நிலையில் கைது செய்யப்பட்ட வீட்டின் பணியாளர் ஈஸ்வரி, கார் ஓட்டுநர் வெங்கடேசனிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில் மேலும் 43 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு மேலும் சூடுபிடித்துள்ளது.

    • இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'.
    • இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார்.

    இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை' இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.


    ராம் -நிவின் பாலி

    இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் நிவின் பாலியின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்து பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


    ஏழு கடல் ஏழு மலை

    அதன்படி, 'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் 90 நிமிடங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் இதன் பணிகள் சென்னையில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த பணிகள் முடிந்தது ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'பத்து தல' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்திற்காக சிம்பு ரசிகர்களுக்கு வீடியோ வெளியிட்டுள்ளார்.

    ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் 'பத்து தல'. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    பத்து தல

    பத்து தல

    ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை முணுமுணுக்க செய்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலானது. நேற்று இப்படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு வெளியிட்டது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளதைத் தொடர்ந்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


    சிம்பு

    சிம்பு

    இந்நிலையில் ரசிகர்களுக்காக சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிம்பு பேசியதாவது, உங்க எல்லோருக்கும் தெரியும் நாளைக்கு பத்து தல திரைப்படம் வெளியாக இருக்கு. படத்துக்கு பெரிய ஓப்பனிங் இருக்குனு சொல்றாங்க. அதுக்கு நான் காரணம் கிடையாது. என்னுடைய முன்னாடி படம் ஹிட் ஆனதுனாலயும் கிடையாது. இது நீங்க எனக்கு கொடுத்த ஆதரவு. அதை என்னைக்கும் நான் மறக்கவே மாட்டேன். எனக்கு ஆதரவு இருக்குனா அதுக்கு முழு காரணம் நீங்க தான். இதற்கு நான் எத்தனை தடவை நன்றி சொன்னலும் பத்தாது. எல்லோருக்கும் நன்றி. அனைவரும் படத்தை தியேட்டர்ல வந்து பாருங்க என்று சிம்பு பேசினார்.

    • இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'.
    • இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இதில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கிறார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.


    காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் போஸ்டர்

    இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் டீசர் மார்ச் 31-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் போஸ்ட ர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர் வைரமுத்து.
    • இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.

    ரஜினி நடிப்பில் 1980-ம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை வைரமுத்து பெற்றார்.



    இந்நிலையில் வைரமுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுப்பது வைரலாகி வருகிறது. அதில், கமல் இருக்கும் வரை

    ரஜினிக்கும்

    ரஜினி இருக்கும் வரை

    கமலுக்கும்

    விஜய் இருக்கும் வரை

    அஜித்துக்கும்

    அஜித் இருக்கும் வரை

    விஜய்க்கும்

    ஒரு பிடிமானம் இருக்கும்

    எனக்கிருந்த பிடிமானத்தைப்

    பிய்த்துக்கொண்டு

    போய்விட்டீர்களே

    வாலி அவர்களே

    காற்றில் கத்தி சுற்றிக்

    கொண்டிருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    ×