இதற்கு நான் காரணம் கிடையாது.. ரசிகர்களுக்காக சிம்பு வெளியிட்ட வீடியோ

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'பத்து தல' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இப்படத்திற்காக சிம்பு ரசிகர்களுக்கு வீடியோ வெளியிட்டுள்ளார்.
சிம்பு
சிம்பு
Published on

ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் 'பத்து தல'. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பத்து தல
பத்து தல

பத்து தல

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை முணுமுணுக்க செய்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலானது. நேற்று இப்படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு வெளியிட்டது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளதைத் தொடர்ந்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

சிம்பு
சிம்பு

சிம்பு

இந்நிலையில் ரசிகர்களுக்காக சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிம்பு பேசியதாவது, உங்க எல்லோருக்கும் தெரியும் நாளைக்கு பத்து தல திரைப்படம் வெளியாக இருக்கு. படத்துக்கு பெரிய ஓப்பனிங் இருக்குனு சொல்றாங்க. அதுக்கு நான் காரணம் கிடையாது. என்னுடைய முன்னாடி படம் ஹிட் ஆனதுனாலயும் கிடையாது. இது நீங்க எனக்கு கொடுத்த ஆதரவு. அதை என்னைக்கும் நான் மறக்கவே மாட்டேன். எனக்கு ஆதரவு இருக்குனா அதுக்கு முழு காரணம் நீங்க தான். இதற்கு நான் எத்தனை தடவை நன்றி சொன்னலும் பத்தாது. எல்லோருக்கும் நன்றி. அனைவரும் படத்தை தியேட்டர்ல வந்து பாருங்க என்று சிம்பு பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com