ஆர்யா படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது தெரியுமா?

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'.இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்
காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்
Published on

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இதில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கிறார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் போஸ்டர்

இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் டீசர் மார்ச் 31-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் போஸ்ட ர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com