என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'.
    • இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இதில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கிறார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.


    காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் போஸ்டர்

    இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் டீசர் மார்ச் 31-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் போஸ்ட ர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர் வைரமுத்து.
    • இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.

    ரஜினி நடிப்பில் 1980-ம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை வைரமுத்து பெற்றார்.



    இந்நிலையில் வைரமுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுப்பது வைரலாகி வருகிறது. அதில், கமல் இருக்கும் வரை

    ரஜினிக்கும்

    ரஜினி இருக்கும் வரை

    கமலுக்கும்

    விஜய் இருக்கும் வரை

    அஜித்துக்கும்

    அஜித் இருக்கும் வரை

    விஜய்க்கும்

    ஒரு பிடிமானம் இருக்கும்

    எனக்கிருந்த பிடிமானத்தைப்

    பிய்த்துக்கொண்டு

    போய்விட்டீர்களே

    வாலி அவர்களே

    காற்றில் கத்தி சுற்றிக்

    கொண்டிருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    • கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.


    இந்தியன் 2

    இந்தியன் 2

    இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பொன்னியின் செல்வன் பட நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பின்னர் படப்பிடிப்புக்காக கமல் 4 நாட்கள் தைவான் நாட்டிற்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • 5 கிரகங்கள் அணிவகுத்த வீடியோவை பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
    • வீடியோ பதிவிட்ட சில நிமிடங்களிலேயே 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்தது.

    வானில் அரிய நிகழ்வாக நேற்று மாலை செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள் ஒரே நேரத்தில் அணிவகுத்தன.

    சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மேற்கு தொடுவானில் நிலவுக்கு அருகே இந்த 5 கிரகங்களும் அணிவகுத்தன. இந்த அரிய நிகழ்வு சில வினாடிகள் நீடித்தது.

    இந்தநிலையில் 5 கிரகங்கள் அணிவகுத்த வீடியோவை பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த 45 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவுடன் பதிவு ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.

    அதில், என்ன ஒரு அழகான காட்சி, 5 கிரகங்கள் இன்று ஒன்றாக இணைந்துள்ளன. அழகான மற்றும் அரிதான காட்சி. நீங்களும் இதற்கு சாட்சியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த வீடியோ பதிவிட்ட சில நிமிடங்களிலேயே 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்தது.

    மேலும் அவரது பதிவிற்கு நடிகை ஷில்பா ஷெட்டி, நடிகர் சித்தார்த் கபூர் உள்ளிட்ட பல பிரபலங்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.

    • 'பொன்னியின் செல்வன் -2' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா இன்று நடைபெறவுள்ளது.
    • இதில் நடிகர் சிம்பு கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

     

    கமல்

    கமல்


    பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று (29.03.2023) நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவுள்ள பிரபலங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதில் நடிகர் கமல் கலந்து கொள்ளவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    • சில தினங்களுக்கு முன்பு நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார்.
    • புதுச்சேரியில் மறைந்த நடிகர் மயில்சாமிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நகைச்சுவை நடிகர் மயில்சாமி கடந்த பிப்ரவரி 19ம் தேதியன்று அதிகாலை 3.30 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி தெரிவித்தனர். பின்னர் இவரது உடல் சென்னை வடபழனி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.


    பார்த்திபன்
    பார்த்திபன்


    இந்நிலையில் மறைந்த நடிகர் மயில்சாமிக்காக புதுச்சேரியில் பார்த்திபனின் மக்கள் மன்றம் சார்பில் நினைவேந்தல் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். இது தொடர்பான வீடியோவை பதிவிட்ட பார்த்திபன், மறையா மனிதம் மயில்சாமிக்கு…! என்று குறிப்பிட்டுள்ளார்.

    • கரீனா கபூர் கடந்த வாரம் முதல் புதிய படம் ஒன்றில் தபு மற்றும் கிருத்தி சலோனுடன் நடித்து வருகிறார்.
    • ராஜேஷ் கிருஷ்ணன் இயக்கும் படம் 3 பெண்களை பற்றிய கதை ஆகும்.

    இந்தி நடிகை கரீனா கபூர் திரைத்துறையில் 23 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 39 வயதான அவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்காக உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார்.

    அவர் எதை செய்தாலும் சுறுசுறுப்பாகவும், தன்னம்பிக்கையுடனும் எடுத்த காரியத்தை செய்யக்கூடியவர். சமீபத்தில் யூனிசெப்பின் புதிய முயற்சியான 'எவரி சைல்ட் ரீடிங்' திட்டத்தின் நல்லெண்ண தூதராக கரீனா கபூர் நியமிக்கப்பட்டிருந்தார்.

    நேற்று அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் முதலில் ஆரஞ்சு நிற உடையில் கவர்ச்சிகரமாக காட்சியளித்த அவரது தோற்றத்தை ரசிகர்கள் பாராட்டினர்.

    குறைந்த மேக்கப்புடன் காணப்பட்ட கரீனா தனது தலைமுடியை தளர்வாக வைத்திருந்தார். சிறிது நேரம் கழித்து மஞ்சள் நிற பேண்ட்-சூட் உடையில் அவர் தோன்றினார். அவரது இந்த இரண்டு தோற்றங்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

    கரீனா கபூர் கடந்த வாரம் முதல் புதிய படம் ஒன்றில் தபு மற்றும் கிருத்தி சலோனுடன் நடித்து வருகிறார். ராஜேஷ் கிருஷ்ணன் இயக்கும் இந்த படம் 3 பெண்களை பற்றிய கதை ஆகும்.

    • கீர்த்தி சுரேஷ், நானியுடன் தசரா படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'சாணிக்காயிதம்' படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது. தற்போது தெலுங்கில் நானியுடன் தசரா படத்திலும் தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.


    தசரா

    தசரா

    தசரா திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இணையத்தில் ஒருவர் தசரா பட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவிற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் இது எனக்கு மிகவும் பிடித்த காட்சி என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் பலரும் பேசி வருகின்றனர்.

    • பிரபல போஜ்புரி பட நடிகையான ஆகான்க்சா துபே (வயது 25) என்பவர் தூக்கு போட்ட நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை கண்டெடுக்கப்பட்டார்.
    • நடிகை ஆகான்க்சா துபே மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை என அவரது தாயார் கோரிக்கை விடுத்து உள்ளார்.

    உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பிரபல போஜ்புரி பட நடிகையான ஆகான்க்சா துபே (வயது 25) என்பவர் தூக்கு போட்ட நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை கண்டெடுக்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவத்திற்கு முந்தின நாள் இரவு, பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியபடி, செல்பி வடிவிலான வீடியோ ஒன்றை பதிவு செய்து, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். நடிகர் மற்றும் பாடகரான சமர் சிங் என்பவருடன் காதலில் இருந்த ஆகான்க்சா, அதுபற்றி சமீபத்தில், காதலர் தினத்தில் இணையத்தில் தங்களது காதலை அவர்கள் உறுதிப்படுத்தி இருந்தனர். படப்பிடிப்பு ஒன்றுக்காக ஓட்டலுக்கு வந்த அவர் மரணம் அடைந்து இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியது.


    ஆகான்க்சா துபே

    ஆகான்க்சா துபே

    இந்நிலையில் அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக அவருடைய தாயார் மது குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து கூறும்போது, சமருடன் ஆகான்க்சா 3 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார். ஆனால், ஒரு பைசா கூட கொடுத்தது இல்லை. அந்த வகையில் சமர் கொடுக்க வேண்டிய பணம் ரூ.3 கோடி இருக்கும். ஒரு ஆல்பத்திற்கு ரூ.70 ஆயிரம் வீதம் சமர் பணம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும், ஆகான்க்சா பணம் கேட்கும்போது, சமர் அவளை அடித்து, சித்ரவதை செய்து துன்புறுத்தி வந்துள்ளார்.


    ஆகான்க்சா துபே

    ஆகான்க்சா துபே

    பிற கலைஞர்களுடன் பணியாற்ற முயற்சி செய்தபோதும், அவளை சமர் துன்புறுத்தி வந்து உள்ளார். சமரின் பல ஆல்பத்தில் ஆகான்க்சா பணியாற்றி உள்ளார் என கூறியுள்ளார். ஆகான்க்சா துபே மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை என அவர் கோரிக்கை விடுத்து உள்ளார். வாரணாசி போலீசார், மதுவின் புகாரின் பேரில் சமர் சிங் மற்றும் அவரது சகோதரர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    • ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் சீரிசில் கோஸ்ட், ரைத் மற்றும் டான் மற்றும் கலினன் பிளாக் பேட்ஜ் போன்ற மாடல்கள் உள்ளன.
    • இந்தியாவில் இந்த காரை வாங்கியுள்ள மூன்றாவது நபராக ஷாருக் கான் இருக்கிறார்.

    இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக் கான் சமீபத்தில் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இவர் வாங்கி இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் காரின் விலை ரூ. 8.2 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும். இவர் வாங்கியுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் மாடல் ஆர்க்டிக் வைட் நிறம் கொண்டிருக்கிறது.

    இத்துடன் காரின் இண்டீரியர் முழுக்க ஆல்-வைட் லெதர் மற்றும் கோபால்டோ புளூ அக்செண்ட்களை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த காரை வாங்கியுள்ள மூன்றாவது நபராக ஷாருக் கான் இருக்கிறார். முன்னதாக ஐதராபாத்தை சேர்ந்த நசீர் கான் என்பவருக்கும், இரண்டாவதாக புவனேஷ்வரை சேர்ந்த நபருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் மாடல் டெலிவரி செய்யப்பட்டது.

     

    ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் சீரிசில் கோஸ்ட், ரைத் மற்றும் டான் மற்றும் கலினன் பிளாக் பேட்ஜ் போன்ற மாடல்கள் உள்ளன. ஸ்டாண்டர்டு கலினன் மாடலில் இருப்பதை விட பிளாக் பேட்ஜ் மாடலின் ஸ்பிரிட் ஆஃப் எக்டசி சின்னம் மற்றும் இரட்டை R பேட்ஜ் உள்ளிட்டவைகளில் டார்க் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

    இதேபோன்று முன்புற கிரில் சரவுண்ட், பக்கவாட்டு ஃபிரேம் ஃபினிஷர்கள், பூட் ஹேண்டில், பூட் ட்ரிம், லோயர் ஏர் இண்டேக் ஃபினிஷர் மற்றும் எக்சாஸ்ட் பைப் உள்ளிட்டவைகளில் டார்கென்டு க்ரோம்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த எஸ்யுவி-இல் 22 இன்ச் ஃபோர்ஜ் செய்யப்பட்ட அலாய் வீல்கள், காண்டிராஸ்ட் ரெட் நிற பிரேக் கேலிப்பர்கள் உள்ளன.

    கலினன் பிளாக் பேட்ஜ் மாடலிலும் 6.75 லிட்டர், டுவின் டர்போ வி12 எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 600 ஹெச்பி பவர், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதில் வழக்கமான கலினன் மாடலை விட 29 ஹெச்பி மற்றும் 50 நியூட்டன் மீட்டர் டார்க் அதிகம் ஆகும். இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியொன்றில் டாப்சி கவர்ச்சியான ஆடை அணிந்து கழுத்தில் மகாலட்சுமி அம்மன் உருவத்துடன் கூடிய நெக்லஸ் ஒன்றை அணிந்திருந்தார்.
    • கவர்ச்சி ஆடையில் கடவுள் உருவம் பொறித்த நெக்லஸை எப்படி அணியலாம் என்று வலைத்தளத்தில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    ஆடுகளம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை டாப்சிக்கு பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்கள் குவிந்து வருகின்றன. பிங்க் படத்தின் மூலம் அவருக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் தற்போது தமிழில் ஜெயம் ரவியின் ஜன கன மன படத்தில் நடித்து வருகிறார்.


    சில தினங்களுக்கு முன்பு ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியொன்றில் டாப்சி கலந்து கொண்டார். அப்போது அவர் கவர்ச்சியான ஆடை அணிந்து கழுத்தில் மகாலட்சுமி அம்மன் உருவத்துடன் கூடிய நெக்லஸ் ஒன்றை அணிந்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், கவர்ச்சி ஆடையில் கடவுள் உருவம் பொறித்த நெக்லஸை எப்படி அணியலாம் என்று வலைத்தளத்தில் அவருக்கு எதிராக நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நடிகை டாப்சி அணிந்திருந்த ஆடை மற்றும் அணிகலன் இந்து கடவுள் மற்றும் இந்து மதத்தின் மீது நம்பிக்கையை கொண்டிருப்பவர்களின் மனதை புண்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகன் ஏக்லவ்யா கவுர் என்பவர் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.


    இந்தப் புகார் குறித்து வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்றும், குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ஆய்வாளர் கபில் சர்மா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்' .
    • இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

    இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.


    மேலும் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான போரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருவம் இந்த படத்தில் ஏராளமான துப்பாக்கி குண்டுகள் மற்றும் குண்டுவெடிப்புகளுடன் படக்குழு பெரிய அளவில் காட்சியை பதிவு செய்து வருகிறது.


    இந்நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் 'கேப்டன் மில்லர்' படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "கேப்டன் மில்லர் படத்திற்காக மூன்று, நான்கு பின்னணி இசை கம்போஸ் செய்திருக்கிறேன். இவற்றுக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. சிறப்பான பின்னணி இசை வந்து கொண்டிருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். இந்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    ×