கமல் இருக்கும் வரை ரஜினிக்கும்.. விஜய் இருக்கும் வரை அஜித்துக்கும்.. வைரமுத்து ட்வீட்

தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர் வைரமுத்து.இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.
வைரமுத்து
வைரமுத்து
Published on

ரஜினி நடிப்பில் 1980-ம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை வைரமுத்து பெற்றார்.

இந்நிலையில் வைரமுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுப்பது வைரலாகி வருகிறது. அதில், கமல் இருக்கும் வரை

ரஜினிக்கும்

ரஜினி இருக்கும் வரை

கமலுக்கும்

விஜய் இருக்கும் வரை

அஜித்துக்கும்

அஜித் இருக்கும் வரை

விஜய்க்கும்

ஒரு பிடிமானம் இருக்கும்

எனக்கிருந்த பிடிமானத்தைப்

பிய்த்துக்கொண்டு

போய்விட்டீர்களே

வாலி அவர்களே

காற்றில் கத்தி சுற்றிக்

கொண்டிருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com