என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்' .
    • இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

    இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.


    மேலும் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான போரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருவம் இந்த படத்தில் ஏராளமான துப்பாக்கி குண்டுகள் மற்றும் குண்டுவெடிப்புகளுடன் படக்குழு பெரிய அளவில் காட்சியை பதிவு செய்து வருகிறது.


    இந்நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் 'கேப்டன் மில்லர்' படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "கேப்டன் மில்லர் படத்திற்காக மூன்று, நான்கு பின்னணி இசை கம்போஸ் செய்திருக்கிறேன். இவற்றுக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. சிறப்பான பின்னணி இசை வந்து கொண்டிருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். இந்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • இயக்குனர் ரோகின் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் திரைப்படம் ‘தீராக் காதல்’.
    • இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

    இயக்குனர் ரோகின் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் திரைப்படம் 'தீராக் காதல்'.இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதி செய்கிறார். பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.


    இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து 'தீராக்காதல்' படத்தின் முதல் பாடலான 'உசுரான் கூட்டில்' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. மோகன் ராஜன் வரிகளில் சத்யபிரகாஷ் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.




    • ஈஸ்வரியிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை, ஆல்பத்தில் உள்ள போட்டோக்களுடன் ஒப்பிட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
    • இந்த வழக்கில் மயிலாப்பூரைச் சேர்ந்த வினால்க் சங்கர் நவாலி என்பவரிடம் இருந்து 340 கிராம் நகை மீட்கப்பட்டது.

    நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் லாக்கரில் இருந்த நகைகளை வேலைக்காரப் பெண் ஈஸ்வரி, டிரைவர் வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து சிறிது சிறிதாக திருடி தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரிடம் இருந்தும் 100 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.

    இதுதவிர வெள்ளி மற்றும் வைர நகைகளும் மீட்கப்பட்டன. வேலைக்காரப் பெண்ணான ஈஸ்வரி திருடிய நகைகளை விற்று அதில் சோழிங்கநல்லூர் பகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பில் நிலம் வாங்கி போட்டிருப்பதும், குடும்பத்துக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்திருப்பதும் தெரியவந்தது.

    கணவருக்கு காய்கறி கடை, மகளுக்கு மளிகை கடை ஆகியவற்றை வைத்துக் கொடுத்திருப்பதுடன் இன்னொரு மகளுக்கு திருமணம் செய்து வைத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தேனாம்பேட்டை போலீசில் ஐஸ்வர்யா அளித்த புகாரில் குறிப்பிட்டிருப்பதை விட அதிக அளவில் கூடுதல் நகைகள் வேலைக்காரப் பெண்ணான ஈஸ்வரி வீட்டில் இருந்து மீட்கப்பட்டிருப்பதுதான் இந்த வழக்கில் போலீசாரை அடுத்த கட்ட விசாரணைக்கு தள்ளி இருக்கிறது.

    இதையடுத்து திருடப்பட்ட நகைகள் தொடர்பாக கூடுதல் விவரங்களை திரட்ட போலீசார் திட்டமிட்டனர். இதற்காக ஐஸ்வர்யாவின் லாக்கரில் சோதனை நடத்தி அவரிடமும் விசாரிக்க போலீஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. ஐஸ்வர்யா போலீசில் புகார் அளித்தபோது தனது சகோதரி சவுந்தர்யா திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்கள் அடங்கிய போட்டோ ஆல்பம் ஒன்றையும் கொடுத்துள்ளார். அந்த திருமணத்தின் போது ஐஸ்வர்யா அணிந்திருந்த விலை உயர்ந்த நகைகள்தான் திருடப்பட்டிருந்தன. இதைதொடர்ந்து வேலைக்காரப் பெண் ஈஸ்வரியிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை, ஆல்பத்தில் உள்ள போட்டோக்களுடன் ஒப்பிட்டு பார்த்தும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும், இந்த வழக்கில் மயிலாப்பூரைச் சேர்ந்த வினால்க் சங்கர் நவாலி என்பவரிடம் இருந்து 340 கிராம் நகை மீட்கப்பட்டது. திருட்டு நகைகளை வாங்கியதாக வினால்க் சங்கரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், ஐஸ்வர்யா வீட்டு வேலைக்கார பெண் ஈஸ்வரி மற்றும் டிரைவர் வெங்கடேசன் ஆகியோரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

    • பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் பிரியங்கா சோப்ரா.
    • இவர் தற்போது ஹாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார்.

    பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த இவர் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தடம் பதிக்க ஆரம்பித்தார்.


    பிரியங்கா சோப்ரா

    கடந்த 2018- ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். இருவரும் வாடகைத் தாய் மூலம் மால்தி மேரி என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். ஹாலிவுட்டில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் பிரியங்கா சோப்ரா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், ஏன் பாலிவுட்டில் இருந்து விலக என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினர்.


    பிரியங்கா சோப்ரா - நிக்ஜோனஸ்

    இதற்கு பிரியங்கா கூறியதாவது, "பாலிவுட் சினிமாவில் இருந்து நான் ஓரம் கட்டப்பட்டேன். பட வாய்ப்புகள் படிப்படியாக குறைய தொடங்கின. எனக்கு அங்கு நடந்த அரசியல் சரியாகபடவில்லை. எனக்கு சற்று ஓய்வு தேவைப்பட்டது. அதே நேரத்தில் ஹாலிவுட்டில் வாய்ப்பு வந்ததால் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டேன்" என்று கூறினார்.

    • சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’.
    • இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் 'பத்து தல'. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை முணுமுணுக்க செய்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலானது. இப்படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதைத் தொடர்ந்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


    இதையடுத்து இப்படத்தின் நான்காவது பாடலான 'ஒசரட்டும் பத்துதல' பாடல் நேற்று வெளியாகி ட்ரெண்டானது. நாட்டு ராஜதுரை வரிகளில் தீப்தி பாடியுள்ள இந்த பாடல் ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இதனை படக்குழு புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் உர்பி ஜாவேத்.
    • இவரின் கவர்ச்சியான ஆடையால் பலரும் இவரை விமர்சித்து வருகின்றனர்.

    பிரபல தொலைக்காட்சி நடிகையான உர்பி ஜாவேத் இந்தி பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர். தனது பிரபலத்தை அப்படியே விட்டு விடக் கூடாது என நினைத்த உர்பி ஜாவேத் தொடர்ந்து வித விதமான கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.


    உர்பி ஜாவேத்

    மேலும், பொது இடங்களில் படுகவர்ச்சி உடைகளை அணிந்து விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளார். சமீபத்தில் சன்னி லியோனுடன் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து உர்பி ஜாவேத் கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த மேலாடை ஒரு சிலந்தி வலைபோல் இருப்பதைப் பார்த்து புகைப்படக்காரர்கள் சிலர் கருத்துகளைப் பறக்க விட்டனர்.


    உர்பி ஜாவேத் - சன்னிலியோன்

    இதைச் சிரித்துக் கொண்டே ரசித்த உர்பி ஜாவித். அங்கேயே அவர்களுக்கு பதில் சொன்னார். இவர் அணியும் உடைகளால் மாணவர்கள் மனது பாதிக்கப்படுவதாகக் கடுமையான கண்டனம் எழுந்து அடங்கியது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால்.
    • இவர் தற்போது ’லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான விஷ்ணு விஷால் 'வெண்ணிலா கபடி குழு' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இவர் ராட்சசன், குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி போன்ற பல படங்களில் நடித்தார்.


    லால் சலாம்

    சமீபத்தில் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் -ஐஸ்வர்யா லட்சுமி நடித்த 'கட்டா குஸ்தி' திரைப்படம் வருமான ரீதியாக வரவேற்பை பெற்றது. இவர் தற்போது இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் 'லால் சலாம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    விஷ்ணு விஷால் பதிவு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஷ்ணு விஷால் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "ஒரு அழகான சாலை ஒரு அழகான பயணம் மற்றும் இலக்குக்கு வழிவகுக்கிறது. இதை என் வாழ்க்கையின் மறக்க முடியாத பயணமாக மற்றியதற்கு இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.


    • சிம்பு நடித்துள்ள 'பத்து தல' திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் கதாப்பத்திரங்களை படக்குழு தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகிறது.

    ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் 'பத்து தல'. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.



    ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை முணுமுணுக்க செய்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலானது. இப்படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதைத் தொடர்ந்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.



    தொடர்ச்சியாக இப்படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு அறிமுகப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதில் அருண்மொழி என்ற கதாபாத்திரத்தில் சந்தோஷ் பிரதாப்பும், இன்பன் என்ற கதாபாத்திரத்தில் சவுந்தரும், ஆராதனா என்ற கதாபாத்திரத்தில் ஹர்சிதாவும் நடித்துள்ளதாக போஸ்டர்களை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.



    இந்நிலையில் பத்து தல படத்தில் பூங்குன்றனாக சென்றாயன் நடித்துள்ளதாக போஸ்டர் வெளியாகி படக்கு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    • தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன்.
    • இவர் திரையுலகிற்கு அறிமுகமாகி 20 ஆண்டுகள் கடந்துள்ளதற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

    2003ம் ஆண்டு வெளியான கங்கோத்ரி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் அல்லு அர்ஜுன். அதன்பின்னர் ஆர்யா, பருகு, வேதம், ரேஸ் குர்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா படத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    அல்லு அர்ஜுன்

    அல்லு அர்ஜுன்

    இந்நிலையில் அல்லு அர்ஜுன் திரைத்துறைக்கு அறிமுகமாகி 20 ஆண்டுகள் கடந்துள்ளதை அவர் சமூக வலைத்தளத்தின் வாயிலாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவர் குறிப்பிட்டிருப்பது, இன்றுடன் நான் திரையுலகில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன். உண்மையில் நீங்கள் காட்டிய அன்பினால் நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். நான் திரைதுறையில் இருக்கும் அனைவருக்கும் கடமைப்பட்டிருக்கிறேன். நான் யார் என்பதை நீங்கள் காட்டிய அன்பு மற்றும் நம்பிக்கை மீது தெரிந்துக் கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார்.

    • ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'.
    • இந்த திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    பத்து தல போஸ்டர்

    இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதைத் தொடர்ந்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


    பத்து தல போஸ்டர்

    இதையடுத்து இப்படத்தின் நான்காவது பாடல் நேற்று வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில், இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இதில் அருண்மொழி என்ற கதாபாத்திரத்தில் சந்தோஷ் பிரதாப்பும் இன்பன் என்ற கதாபாத்திரத்தில் சவுந்தரும் ஆராதனா என்ற கதாபாத்திரத்தில் ஹர்சிதாவும் நடித்துள்ளனர். இதனை படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்துள்ளது. 


    • சின்னத்திரை நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்து கொடுத்து வருகிறார் மஞ்சு.
    • மஞ்சு கடந்த ஜனவரி மாதம் 5 லட்சம் ரூபாயை அபர்ணா வங்கி கணக்கிற்கு செலுத்தியிருக்கிறார்.

    சென்னை மேற்கு மாம்பலம் ஆற்காடு சாலையை சேர்ந்தவர் மஞ்சு. ஆடை வடிவமைப்பு தொழில் செய்து வருகிறார். சின்னத்திரை நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்து கொடுத்து வரும் மஞ்சுவுக்கு 2 மகள்கள் உள்ளனர். நடிகர் ஜெமினி கணேசன் மற்றும் நடிகை சாவித்திரியின் பேரனான நடிகர் அபிநய் மனைவி அபர்ணா ஆகியோர், மஞ்சுவிடம் வாடிக்கையாளராக நன்றாக பழகி வந்துள்ளனர்.

    மஞ்சுவின் மகள் லாவண்யா ஸ்ரீ நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்ததை அறிந்த அபர்ணா ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் தனக்கு தெரிந்த நண்பர் இருப்பதாகவும் 20 லட்சம் ரூபாய் கொடுத்தால் லாவண்யா ஸ்ரீக்கு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி விடலாம் எனவும் கூறி இருக்கிறார். முதற்கட்டமாக 5 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து மருத்துவ சீட்டை புக் செய்து ரசீது பெற்றுக் கொள்ளலாம் என அபர்ணா கூறியுள்ளார். மீதி பணத்தை கல்லூரியில் சேர்ந்த பின்பு செலுத்திக் கொள்ளலாம் எனவும் கூறி இருக்கிறார்

    இதனை நம்பிய மஞ்சு கடந்த ஜனவரி மாதம் 5 லட்சம் ரூபாயை அவரது வங்கி கணக்கிற்கு செலுத்தியிருக்கிறார். பணத்தை பெற்றுக் கொண்ட அபர்ணா 5 நாட்களுக்கு பிறகு வாட்ஸ் அப்பில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்ட தாக சான்றிதழ் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

    அந்த சான்றிதழை எடுத்துக் கொண்டு ராமச்சந்திரா மருத்துவ கல்லூரிக்கு சென்று மகளை சேர்ப்பதற்காக மஞ்சு சென்றபோது, அது போலியான சான்றிதழ் என மஞ்சுவுக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மஞ்சு, தான் கொடுத்த பணத்தை அபர்ணாவிடம் திரும்ப கேட்டுள்ளார்.

    அப்போது 5 லட்சம் ரூபாய் பணத்தை தன் தம்பி வங்கிக் கணக்கிற்கு தான் அனுப்பியதாகவும், தனது தம்பியிடம் சென்று வாங்கிக் கொள்ளுமாறும் அபர்ணா கூறி அலைக்கழித்து உள்ளார். தொடர்ந்து பல்வேறு காரணங்களை கூறி அபர்ணா இழுத்தடித்ததால் மஞ்சு மாம்பலம் போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் அபர்ணா மீது 403, 406, 420, 465, 471, 120 பி ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதேபோன்று அபர்ணா எவ்வளவு பேரிடம் மோசடி செய்துள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் மாம்பலம் போலீசார் அவரை கைது செய்ய தீவிரமாக தேடி வருகின்றனர். இதேபோன்று அபர்ணா வேறுயாரிடமும் மோசடி செய்துள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அபர்ணாவை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகவுள்ள படம் போயப்பட்டிராப்போ (BoyapatiRAPO).
    • இப்படத்தின் ரிலீஸ் தேதியை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

    பிரபல இயக்குனர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகவுள்ள படம் போயப்பட்டிராப்போ (BoyapatiRAPO). இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீனின் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். இப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஸ்ரீலீலா நடிக்கிறார். சந்தோஷ் டிடேக் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார்.

    இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ்யை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 20, 2023 அன்று தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

    ×