ஒரே நாளில் மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த பத்து தல பாடல்

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’.இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பத்து தல
பத்து தல
Published on

ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் 'பத்து தல'. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை முணுமுணுக்க செய்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலானது. இப்படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதைத் தொடர்ந்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதையடுத்து இப்படத்தின் நான்காவது பாடலான 'ஒசரட்டும் பத்துதல' பாடல் நேற்று வெளியாகி ட்ரெண்டானது. நாட்டு ராஜதுரை வரிகளில் தீப்தி பாடியுள்ள இந்த பாடல் ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இதனை படக்குழு புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com