பூங்குன்றனாக மாறிய சென்றாயன்.. அடுத்தடுத்த அப்டேட்டுகளால் ரசிகர்களை கவரும் பத்து தல படக்குழு

சிம்பு நடித்துள்ள 'பத்து தல' திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இப்படத்தின் கதாப்பத்திரங்களை படக்குழு தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகிறது.
பூங்குன்றனாக மாறிய சென்றாயன்.. அடுத்தடுத்த அப்டேட்டுகளால் ரசிகர்களை கவரும் பத்து தல படக்குழு
Published on

ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் 'பத்து தல'. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை முணுமுணுக்க செய்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலானது. இப்படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதைத் தொடர்ந்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தொடர்ச்சியாக இப்படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு அறிமுகப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதில் அருண்மொழி என்ற கதாபாத்திரத்தில் சந்தோஷ் பிரதாப்பும், இன்பன் என்ற கதாபாத்திரத்தில் சவுந்தரும், ஆராதனா என்ற கதாபாத்திரத்தில் ஹர்சிதாவும் நடித்துள்ளதாக போஸ்டர்களை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பத்து தல படத்தில் பூங்குன்றனாக சென்றாயன் நடித்துள்ளதாக போஸ்டர் வெளியாகி படக்கு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com