கனவோ.. நினைவோ.. இது புரியல ஏனோ.. கவனம் ஈர்க்கும் ஜெய் பட பாடல்

இயக்குனர் ரோகின் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் திரைப்படம் ‘தீராக் காதல்’.இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
ஜெய்
ஜெய்
Published on

இயக்குனர் ரோகின் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் திரைப்படம் 'தீராக் காதல்'.இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதி செய்கிறார். பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து 'தீராக்காதல்' படத்தின் முதல் பாடலான 'உசுரான் கூட்டில்' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. மோகன் ராஜன் வரிகளில் சத்யபிரகாஷ் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com