கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் 'பத்து தல' படக்குழு

ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'.இந்த திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பத்து தல
பத்து தல
Published on

இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பத்து தல போஸ்டர்

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதைத் தொடர்ந்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

பத்து தல போஸ்டர்

இதையடுத்து இப்படத்தின் நான்காவது பாடல் நேற்று வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில், இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இதில் அருண்மொழி என்ற கதாபாத்திரத்தில் சந்தோஷ் பிரதாப்பும் இன்பன் என்ற கதாபாத்திரத்தில் சவுந்தரும் ஆராதனா என்ற கதாபாத்திரத்தில் ஹர்சிதாவும் நடித்துள்ளனர். இதனை படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com