இயக்குனர் ராம் படத்தில் 90 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'. இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார்.
ராம்
ராம்
Published on

இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை' இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ராம் -நிவின் பாலி

இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் நிவின் பாலியின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்து பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஏழு கடல் ஏழு மலை

அதன்படி, 'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் 90 நிமிடங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் இதன் பணிகள் சென்னையில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த பணிகள் முடிந்தது ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com