search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் - கமல்ஹாசன்
    X

    கமல்ஹாசன்

    எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் - கமல்ஹாசன்

    • டிக்கெட் இருந்தும் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காத சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
    • இன்று காவல்துறை தரப்பில் நேற்று சிறப்பு காட்சிக்கான அனுமதியை திரையரங்கம் பெற்றுள்ளதா என்ற நோக்கில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

    சென்னை ரோகிணி திரையரங்கில் நேற்று பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை டிக்கெட் இருந்தும் ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த சம்பவத்திற்கு பலரும் அவர்களின் கண்டன குரல்களை இணையத்தில் பதிவு செய்து வந்தனர்.

    இதையடுத்து நரிக்குறவர்களை ஏன் திரையரங்கில் அனுமதிக்கவில்லை என்று ரோகிணி திரையரங்கம் சார்ப்பில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில், யுஏ சான்றிதழ் அனுமதி பெற்ற படம் என்பதால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வந்தவர்கள் 2,6,8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    பின்னர் உரிய நேரத்தில் அவர்கள் படம் பார்த்ததாக திரையரங்க நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. மேலும், இந்த பிரச்சினை தொடர்பாக கோயம்பேடு போலீசார் மற்றும் தாசில்தார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து இன்று காவல்துறை தரப்பில் நேற்று சிறப்பு காட்சிக்கான அனுமதியை திரையரங்கம் பெற்றுள்ளதா என்ற நோக்கில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நரிக்குறவர்களை திரையரங்கில் அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது." என்று குறிப்பிட்டுள்ளது. இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    Next Story
    ×