search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விடுதலை வெற்றிக் கொண்டாட்டம்.. இளையராஜாவை சந்தித்த படக்குழு
    X

    விடுதலை படக்குழு

    'விடுதலை' வெற்றிக் கொண்டாட்டம்.. இளையராஜாவை சந்தித்த படக்குழு

    • இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'விடுதலை' திரைப்படம் நேற்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. 'விடுதலை' திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு மதுரை மக்கள் மேள தாளத்துடன் பால் குடம் எடுத்து சூரி பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.


    இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், 'விடுதலை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் எல்ரெட்குமார் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சென்று சந்தித்து பூங்கொத்து கொடுத்துள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை படக்குழு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

    Next Story
    ×