என் மலர்
- விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார்.
- நடிகையுடன் விஜய் ஜோடியாக வலம் வந்தது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
சென்னையில் நடந்த திருமண வரவேற்பு விழாவில் நடிகர் விஜய்யும், நடிகை திரிஷாவும் ஜோடியாக பங்கேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில், நடிகையுடன் அவர் ஜோடியாக வலம் வந்தது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் விஜய்க்கு எதிர்ப்புகளும், ஆதரவும் எழுந்து வரும் நிலையில், கிருத்திகா உதயநிதி வெளியிட்ட ஒரு பதிவு கவனம் ஈர்த்துள்ளது.
தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனைவியும், சினிமா இயக்குனருமான கிருத்திகா உதயநிதி தனது 'எக்ஸ்' பக்கத்தில், 'பிரபலம் என்பது யார்? நீங்களும், உங்கள் மீதான மக்களின் பார்வை மற்றும் புரிதல் தான் உங்களை ஒரு பிரபலமாக்குகிறது. ஆனால் மக்களின் பார்வை தான் நான் என்று நினைத்துக்கொண்டு, உங்கள் சுய அடையாளத்தை நீங்கள் இழக்கும்போது, நீங்கள் கடுமையான பிரச்சனையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்', என்று குறிப்பிட்டுள்ளார்.
இது பிரச்சனையில் மாட்டிக்காதீங்க... என்று நடிகர் விஜய்யை, கிருத்திகா உதயநிதி மறைமுகமாக தாக்கி எச்சரிப்பதாக இருக்கிறது என்று பேசப்படுகிறது.
- குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2500 வழங்கப்படும் என்று விஜய் அறிவித்தார்
- மகளிர் உரிமை தொகையை விமர்சித்து அருண் ராஜ் பேசிய பழைய வீடியோ வைரலாகியுள்ளது.
மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் த.வெ.க. தலைவர் விஜய் மகளிருக்கான வாக்குறுதிகளை அறிவித்தார்.
அப்போது பேசிய அவர்,த.வெ.க. ஆட்சி அமைந்த உடன் 60 வயதை கடந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2500 வழங்கப்படும்" என்று அறிவித்தார்.
இந்நிலையில், மகளிர் உரிமை தொகையை விமர்சித்து தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண் ராஜ் பேசிய பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், "இலவச பேருந்து பயணம், பெண்களுக்கு 1000 ரூபாய், பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய்... ஒரு கட்சி பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் தருகிறேன் என்று சொல்றாங்க. இன்னொரு கட்சி மாதம் 2000 ரூபாய் என்று சொல்றாங்க. இதற்கு எங்கதான் முடிவு?" என்று மகளிர் உரிமை தொகையை அருண் ராஜ் விமர்சித்திருந்தார்.
- வரும் நாட்களில் மேலும் பல இந்தியர்கள் விமானங்கள் மூலம் நாடு திரும்புவார்கள்.
- சிறப்பு விமானங்களும் இயக்கப்படுகின்றன.
ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல், அதைத்தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கிய மோதல் ஒரு வாரத்தை கடந்து நீடித்து வருகிறது. பல்வேறு நாடுகளின் வான்வழி மூடப்பட்டதால் பலர் அங்கு சிக்கித் தவித்தனர்.
இதனிடையே கடந்த சில நாட்களில் வான்வழிகள் பகுதியளவு திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்திய மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் மீண்டும் சேவையைத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் மார்ச் 1 முதல் மார்ச் 7 வரையிலான காலகட்டத்தில், பல்வேறு விமானங்கள் மூலம் மொத்தம் 52,000 இந்தியர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்பியுள்ளனர் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரும் நாட்களில் மேலும் பல இந்தியர்கள் விமானங்கள் மூலம் நாடு திரும்புவார்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வழக்கமான விமானச் சேவைகள் மட்டுமின்றி, சிறப்பு விமானங்களும் இயக்கப்படுகின்றன.
பதற்றம் நீடிப்பதை தொடர்ந்து மேற்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் சுமார் ஒரு கோடி இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
அத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகம் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி விநியோகம் தடையின்றி தொடர்வதையும் உறுதி செய்ய இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- வறுத்த கோழி இறைச்சியில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் இருக்கும்.
- சர்க்கரை பானங்கள், நொறுக்குத்தீனிகளுடன் சேர்த்து வறுத்த கோழி இறைச்சி சாப்பிடவும் கூடாது.
கோழி இறைச்சியை எண்ணெய்யில் பொரித்து தயார் செய்யப்படும் 'பிரைடு சிக்கனை' பலரும் ருசிப்பதுண்டு. அதனை அடிக்கடி சாப்பிடுபவர்களும் உண்டு. அடிக்கடியோ, தினமுமோ 'பிரைடு சிக்கன்' சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?
* இந்த வறுத்த கோழி இறைச்சியில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் இருக்கும். தினமுமோ, அடிக்கடியோ சாப்பிடும்போது உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்துவிடும்.
* கலோரிகளும் அதிகம் இருக்கும். தொடர்ந்து சாப்பிடும்போது கலோரிகள் வேகமாக சேர்ந்து உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
* 'பிரைடு சிக்கனை தொடர்ச்சியாக சாப்பிடும் நிலை நீடித்தால் காலப் போக்கில் உடல் பருமன், அதிக கொழுப்பு, இதய நோய் அபாயம் அதிகரிக்கலாம்.
* சர்க்கரை பானங்கள், நொறுக்குத்தீனிகளுடன் சேர்த்து வறுத்த கோழி இறைச்சி சாப்பிடவும் கூடாது.
எப்படி சாப்பிடலாம்?
கோழி இறைச்சியை வேகவைத்தோ, நெருப்பில் சுட்டு 'கிரில் சிக்கனாகவோ உட்கொள்ளலாம்.
- நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதி மறுப்பதால் சென்னையில் வீடின்றி தவிக்கிறேன் என்று சங்கீதா குற்றச்சாட்டு
- ஹர்ட் ஆகாதீர்கள், இது அந்த அளவிற்கு WORTH இல்லை என்று விஜய் பேசினார்.
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி செங்கல்பட்டு குடும்பல நல நீதிமன்றத்தில் சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளதாக கடந்த மாதம் 27-ந்தேதி செய்திகள் வெளியாகின. சங்கீதா தாக்கல் செய்த மனுவில் விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார்.
இந்த நிலையில், தன்னை நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்குமாறு விஜய்க்கு உத்தரவிடக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில் நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதி மறுப்பதால் சென்னையில் வீடின்றி தவிக்கிறேன். விவாகரத்து வழக்கு முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க விஜய் அனுமதிக்க வேண்டும். விஜய் வசிக்கும் நீலாங்கரை இல்லத்தில் தனக்கு சரிபாதி உரிமை உள்ளது. நீலாங்கரை வீட்டில் வசிப்பதற்கு அனுமதி கோரினால் வழக்கறிஞர் மூலமாக விஜய் தரப்பு மிரட்டுகின்றனர்.
படத்தில் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கும் விஜய் தனக்கும், பிள்ளைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும். விஜய் எனக்கும், என் பிள்ளைகளுக்கும் நியாயமாக சேர வேண்டியதை வழங்க வேண்டும். பலமுறை முயற்சித்தும் பரஸ்பரம் பிரிந்து செல்ல விஜய் மறுப்பு தெரிகிறார் என்று சங்கீதா கூறியுள்ளார்.
சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கு குறித்து தவெக மகளிர் தின விழா கொண்ட்டாட்டத்தில் பேசிய விஜய், "சமீபத்தில் ஓடிக் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு நீங்கள் போராடி, ஹர்ட் (hurt) ஆவதை நான் பார்க்கிறேன். அதை பார்த்து எனக்கு ஹர்ட் ஆகிறது. அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்களும், நானும் மக்களின் பிரச்சினைகளை மட்டும் பார்ப்போம், சரியா. ஹர்ட் ஆகாதீர்கள், இது அந்த அளவிற்கு WORTH இல்லை" என்றார்.
விஜயின் இந்த பேச்சுக்கு தவெக பெண் நிர்வாகிகள் கை தட்டி ஆரவாரம் செய்தனர். இந்நிலையில், விஜயின் இந்த பேச்சை நடிகை சனம் செட்டி விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், என்னது?? WORTH ஏ இல்லியா ??? இதற்கு பெண்கள் கைதட்டி உற்சாகம் அடைகின்றனர்" என்று விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக விஜயை ஆதரித்து வீடியோ வெளியிட்டு வந்த சனம் செட்டி, திருமண விழாவில் திரிஷாவுடன் ஒரே காரில் ஒரே நிறத்திலான ஆடைகள் அணிந்து வந்த வீடியோவை பகிர்ந்து எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நியூ யார்க்கின் மேயராக பதவியேற்ற முதல் முஸ்லீம் மம்தானி.
- அந்த நபர் இரண்டாவது குண்டைப் பற்றவைத்து ஓடிவந்து வீச முயன்றபோது சுற்றி வளைக்கப்பட்டார்.
அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் மேயர் தேர்தலில் வெற்றி பெற்று ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோரான் மம்தானி கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார்.
நியூ யார்க்கின் மேயராக பதவியேற்ற முதல் முஸ்லீம் என்ற பெருமையை அவர் பெற்றார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கடுமையாக மம்தானி விமர்சித்தும் வருகுறார்.
இந்த சூழலில் நியூ யார்க்கில் மம்தானி இல்லத்திற்கு வெளியே, வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் போர் நடந்து வரும் சூழலில் மம்தானி இல்லத்தின் முன் முஸ்லிம்களுக்கு எதிராக வலதுசாரிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.
அமெரிக்காவை இஸ்லாம் மயமாக்குவதை நிறுத்த வேண்டும், நியூ யார்க்கில் பொது இடங்களில் தொழுகை நடத்தும் உரிமையை பறிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
அப்போது போராட்டக்காரர்கள் இருந்த திசையை நோக்கி ஒரு மர்ம நபர் வெடிகுண்டை வீசியுள்ளார்.
முதல் குண்டு காவல்துறையினருக்கு சில அடி தூரத்தில் விழுந்து அணைந்து போனது. உடனே குண்டு வீசிய நபர் அங்கிருந்து ஓடிச் சென்று மற்றொரு நபரிடம் இருந்து இரண்டாவது வெடிகுண்டைப் பெற்றார்.
அந்த நபர் இரண்டாவது குண்டைப் பற்றவைத்து ஓடிவந்து வீச முயன்றபோது, போலீசார் அந்த இடத்தைச் சுற்றி வளைத்து இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் குண்டை வீசியவர் 18 வயது அமீர் பாலத் மற்றும் அவருக்கு உதவியவர் 19 வயது இப்ராஹிம் நிக் என்பது தெரியவந்துள்ளது.
குண்டு வீசப்பட்ட போது மேயர் மம்தானியும் அவரது மனைவி ரமா துவஜியும் வீட்டில் இருந்தார்களா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் மேயர் மீதான கொலை முயற்சி என்று வேகமாகப் பரவி வருகிறது.
கைது செய்யப்பட்டவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- சமூகத்தின் அடிமை விலங்குகளை உடைத்து முன்னேறிக் கொண்டிருக்கும் மகளிர் அனைவருக்கும் என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துகள்.
- “வெல்லும் தமிழ்ப்பெண்கள்” என வீறுநடைப் போட செய்திருக்கிறது நம் #DravidianModel அரசு!
உலக மகளிர் தினத்தையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
சமூகத்தின் அடிமை விலங்குகளை உடைத்து முன்னேறிக் கொண்டிருக்கும் மகளிர் அனைவருக்கும் என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
பெண்களுக்கான திட்டங்களைச் சலுகைகளாக அல்லாமல், உரிமைகளாக்கி - "வெல்லும் தமிழ்ப்பெண்கள்" என வீறுநடைப் போட செய்திருக்கிறது நம் #DravidianModel அரசு!
இந்தியாவுக்கே வழிகாட்டும் மகளிர் நலத் திட்டங்கள் மென்மேலும் தொடர, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தை அனைவரும் இணைந்து வலுப்படுத்துவோம்.
மகளிர் உயர மாநிலம் உயரட்டும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







