என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Islamists"

    • நியூ யார்க்கின் மேயராக பதவியேற்ற முதல் முஸ்லீம் மம்தானி.
    • அந்த நபர் இரண்டாவது குண்டைப் பற்றவைத்து ஓடிவந்து வீச முயன்றபோது சுற்றி வளைக்கப்பட்டார்.

    அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் மேயர் தேர்தலில் வெற்றி பெற்று ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோரான் மம்தானி கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார்.

    நியூ யார்க்கின் மேயராக பதவியேற்ற முதல் முஸ்லீம் என்ற பெருமையை அவர் பெற்றார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கடுமையாக மம்தானி விமர்சித்தும் வருகுறார்.

    இந்த சூழலில் நியூ யார்க்கில் மம்தானி இல்லத்திற்கு வெளியே, வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரான் போர் நடந்து வரும் சூழலில் மம்தானி இல்லத்தின் முன் முஸ்லிம்களுக்கு எதிராக வலதுசாரிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.

    அமெரிக்காவை இஸ்லாம் மயமாக்குவதை நிறுத்த வேண்டும், நியூ யார்க்கில் பொது இடங்களில் தொழுகை நடத்தும் உரிமையை பறிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

    அப்போது போராட்டக்காரர்கள் இருந்த திசையை நோக்கி ஒரு மர்ம நபர் வெடிகுண்டை வீசியுள்ளார்.

    முதல் குண்டு காவல்துறையினருக்கு சில அடி தூரத்தில் விழுந்து அணைந்து போனது. உடனே குண்டு வீசிய நபர் அங்கிருந்து ஓடிச் சென்று மற்றொரு நபரிடம் இருந்து இரண்டாவது வெடிகுண்டைப் பெற்றார்.

    அந்த நபர் இரண்டாவது குண்டைப் பற்றவைத்து ஓடிவந்து வீச முயன்றபோது, போலீசார் அந்த இடத்தைச் சுற்றி வளைத்து இருவரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் குண்டை வீசியவர் 18 வயது அமீர் பாலத் மற்றும் அவருக்கு உதவியவர் 19 வயது இப்ராஹிம் நிக் என்பது தெரியவந்துள்ளது.

    குண்டு வீசப்பட்ட போது மேயர் மம்தானியும் அவரது மனைவி ரமா துவஜியும் வீட்டில் இருந்தார்களா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

    இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் மேயர் மீதான கொலை முயற்சி என்று வேகமாகப் பரவி வருகிறது.

    கைது செய்யப்பட்டவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • குஜராத், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இஸ்ரலாமியளார்ளுக்கு எதிரான தாக்குதல் மற்றும் கொலை சம்பவங்களை அறிக்கையில் APCR மேற்கோள் காட்டியுள்ளது.
    • இஸ்லாமியர்கள் மீது கலெறிந்தது, கடைக்கு தீவைத்தது, மதராசாவில் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

    2024 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு இஸ்லாமிய சமூகத்தினரின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக ட சமூக உரிமைகள் பாதுகாப்பு அமைப்பான [APCR] வெளியிட்டுள்ள அறிக்கையின் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆகியுள்ளார். இந்துத்துவ சித்தாந்தத்தை வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு நெருங்கிய தொடர்புடைய பாஜகவின் ஆட்சியில் சிறுபான்மையினர்களுக்கு குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பப்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த அறிக்கை மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

     

    டெல்லியை தலைமையிடமாக கொண்ட APCR வெளியிட்டுள்ள அறிக்கையில், '2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு நாட்டின் பல பகுதிகளில் வெவ்வேறு சமயங்களில் இஸ்லாமியர்கள் மீது தனிநபர் மற்றும் குழு தாக்குதல்கள் நடந்துள்ளன. மேலும் இஸ்லாமியர்களின் கட்டடங்கள் சட்டவிரோதமாக இடிக்கப்பட்டுள்ளன' என்று கூறப்பட்டுள்ளது. குஜராத், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இஸ்ரலாமியளார்ளுக்கு எதிரான தாக்குதல் மற்றும் கொலை சம்பவங்களை அறிக்கையில் APCR மேற்கோள் காட்டியுள்ளது.

    மேலும் தெலங்கானா, ஒடிசா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீது கலெறிந்தது, கடைக்கு தீவைத்தது, மதராசாவில் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. பசு வதை, மாட்டிறைச்சியை வைத்திருந்தது, மதம் தொடர்பான கொடிகளை நிறுவியது, பசு பலியிடப்படும் காட்சிகளை இணையத்தில் பகிர்ந்தது உள்ளிட்டவற்றை காரணங்காட்டி இந்த தாக்குதல்கள் நடத்துள்ளதகாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் மத்தியப் பிரேதசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் அரசு அதிகரிகளாலேயே இஸ்லாமியர்களின் கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேசம் மாண்டலா மற்றும் ரத்தலம் பகுதியில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இஸ்லாமியர்களின் வீடுகளை அரசு அதிகாரிகள் இடித்துள்ளனர் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

     

    மிகவும் தீவிரமான பிரச்சனையான இதுபோன்ற தாக்குதலைகளை தடுத்து இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளை APCR வலியுறுத்தியுள்ளது. 

    ×