என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி ஸ்விஃப்ட் பிளேகிரவுண்ட் உருவாக்கிய இந்திய மாணவர் ஆப்பிள் விருது போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார்.
ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வுக்கான 2020 ஸ்விஃப்ட் ஸ்டூடன்ட் மாணவர் விருதினை புது டெல்லியை சேர்ந்த 19 வயது மாணவரான பலாஷ் தனெஜா வென்றிருக்கிறார். 2020 ஸ்விஃப்ட் ஸ்டூடன்ட் மாணவர் போட்டியில் 41 நாடுகளை சேர்ந்த 350 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியில் கலந்து கொண்ட தனெஜா கொரோனா வைரஸ் பாதிப்பின் போது சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதால் நோய் தொற்று எவ்வாறு குறைகிறது என்பதை விவரிப்பதோடு, கோடிங்கை கற்பிக்கும் ஸ்விஃப்ட் பிளேகிரவுண்டினை உருவாக்கினார்.
இவருடன் இந்திய வம்சாவெளியை சேர்ந்த டேவ் ஜா எனும் மாணவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு சார்ந்த சிமுலேட்டரை உருவாக்கியதற்கு இதே விருதினை வென்றிருக்கிறார். இவர் சமூக இடைவெளியை பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகளை விவரித்து இருந்தார்.

ஸ்விஃப்ட் பிளேகிரவுண்ட் தவிர ஆன்லைன் வலைதளம் சார்ந்த சேவையினை தனெஜா உருவாக்கி இருக்கிறார். இந்த சேவை மெஷின் லெர்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொசுக்களால் பரவும் டெங்கு போன்ற நோய்கள் எவ்வாறு பரவுகின்றன என்பதை கணிக்கும்.
புதிய ஸ்விஃப்ட் பிளேகிரவுண்ட் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால் உருவாக்கப்பட்டது. இதை கொண்டு மக்களுக்கு சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதன் நன்மைகளை பற்றி விவரிக்க முடியும்.
முன்னதாக இவர் கண்டறிந்த சேவை ஒன்று ஆன்லைனில் கிடைக்கும் முன்னணி கல்வி சார்ந்த வீடியோக்களை 40 மொழிகளில் மொழிமாற்றம் செய்கிறது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய சுமார் 52 செயலிகளை தேசிய பாதுகாப்பு அமைப்பு அடையாளம் கண்டு தெரிவித்து இருக்கிறது.
தேசத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் தடை செய்யப்பட வேண்டிய 52 சீன மொபைல் பயன்பாடுகளை இந்திய பாதுகாப்பு அமைப்பு அடையாளம் கண்டுள்ளது. இந்த செயலிகளை பயன்படுத்த தடை விதிக்கவோ அல்லது மக்கள் இவற்றை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிட தேசிய பாதுகாப்பு அமைப்பு தெரிவித்து இருக்கிறது.
பாதுகாப்பு அமைப்பு அறிக்கையின்படி, இந்த பயன்பாடுகள் மூலம் நாட்டின் முக்கியமான பாதுகாப்பு தரவு இந்தியாவுக்கு வெளியே அனுப்பப்படுகிறது. டிக்டாக், ஹலோ, யுசி பிரவுசர் போன்ற மொபைல் பயன்பாடுகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகின்றன.

இவை தவிர வால்ட்-ஹைடு, வீகோ வீடியோ, பிகோ லைவ், வெய்போ, வீசாட், ஷேர் இட், லைக், எம்ஐ கம்யூனிட்டி, யுகேம் மேக்கப், கிளீன் மாஸ்டர், கிளாஷ் ஆஃப் கிங்ஸ் போன்ற முன்னணி செயலிகள் தேசிய பாதுகாப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இடம்பிடித்து இருக்கின்றன.
ஆனால் பயனர் தரவை நாட்டிற்கு வெளியே அனுப்பும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் இந்த நிறுவனங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளன.
இந்தியாவில் 4ஜி நெட்வொர்க் மேம்படுத்தல்களில் சீன உபகரணங்களை பயன்படுத்தும் விவகாரத்தில் மத்திய அரசின் அதிரடி முடிவு விவரங்களை பார்ப்போம்.
அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் தொலைதொடர்பு துறை நிறுவனம் 4ஜி மேம்படுத்தல்களில் சீன உபகரணங்களை நிராகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதால் சீன உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று "பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு கூற மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக மறு டெண்டர் விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீன நிறுவனங்களால் தயாரிக்கப்படும் உபகரணங்களை பயன்படுத்துவதை குறைக்க தனியார் ஆபரேட்டர்களைக் கேட்டுக்கொள்ளவும் மத்திய அரசு பரிசீலினை செய்து வருகிறது.
தொலைதொடர்பு நிறுவனங்களான பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்களது தற்போதைய நெட்வொர்க்குகளில் ஹூவாய் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றன, அதே நேரத்தில் இசட்இஇ நிறுவனம் அரசு நடத்தும் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.
லடாக்கில் பெரும் பதற்றத்திற்கு மத்தியில் அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளது. சீன நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட சாதனங்களின் நெட்வொர்க் பாதுகாப்பு எப்போதும் சந்தேகத்திற்குரியது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 251 சலுகையில் அசத்தல் மாற்றத்தை செய்திருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
வோடபோன் ஐடியா நிறுவனம் தனது ரூ. 251 பிரீபெயிட் சலுகையினை நாடு முழுக்க அனைத்து வட்டாரங்களிலும் வழங்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட சில வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில வட்டாரங்களில் மட்டும் வழங்கப்பட்டிருந்த ரூ. 251 சலுகை அதன்பின் இதர வட்டாரங்களிலும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த வரிசையில் தற்சமயம் இச்சலுகை அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் ஐடியா ரூ. 251 சலுகையில் 50 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதுதவிர டாக்டைம் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இச்சலுகை பெரும்பாலும் அதிக டேட்டா தேவைப்படுவோருக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டைம் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற பலன்களை பெற வாடிக்கையாளர்கள் கூடுதலாக மற்ற பலன்களில் ஒன்றை ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். முன்னதாக இந்த சலுகை நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் வீட்டில் இருந்து பணி செய்வோருக்கு உபயோகப்படும் என்ற நோக்கில் வெளியிடப்பட்டது.
இன்டெல் நிறுவனத்தை தொடர்ந்து பிராட்காம் நிறுவனத்துடன் நோக்கியா புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ஃபின்லாந்தை சேர்ந்த நோக்கியா ஸ்மார்ட்போன் பிராண்டு 5ஜி வசதி கொண்ட சிப்செட்களை உருவாக்கி விநியோகம் செய்ய பிராட்காம் நிறுவனம் ஒப்பந்தமிட்டுள்ளது. இதன் மூலம் இன்டெல் மற்றும் மார்வெல் நிறுவனங்களை தொடர்ந்து நோக்கியாவுடன் இணைந்திருக்கும் மூன்றாவது நிறுவனமாக பிராட்காம் இருக்கிறது.
புதிய ஒப்பந்தத்தின் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் நோக்கியா வெளியிடும் 5ஜி ஸ்மார்ட்போன்களில் சுமார் 35 சதவீதம் மாடல்களில் பிரத்யேக சிப்செட் வழங்க முடியும் என நோக்கியா எதிர்பார்க்கிறது.

இதுதவிர தற்போதைய சந்தை சூழ்நிலை அதிவேகமாக வளர்ந்து வருவதால், நோக்கியா நிறுவனமும் தனது பணிகளை முடுக்கி விடும் நோக்கில் புது நிறுவனங்களுடன் கூட்டணி அமைக்க காரணியாக பார்க்கப்படுகிறது. பிராட்காம் உடனான கூட்டணியில் நோக்கியா நிறுவனம் Application-Specific Integrated Circuit அல்லது ASIC தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறது.
இது அதிவேக செயல்பாட்டை வழங்குகிறது. எனினும், கட்டணம் மற்றும் விநியோக சவால்கள் போன்ற காரணங்களால் நோக்கியா ASIC தொழில்நுட்பத்தை பயன்படுத்து எனும் முடிவை எட்டியிருப்பதாக தெரிகிறது.
வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் பேமண்ட் வசதியினை வழங்க துவங்கியுள்ளது. முதற்கட்டமாக இந்த அம்சம் பிரேசில் நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் நீண்ட நாட்களாக சோதனை செய்து வந்த பேமண்ட் சேவையை முதற்கட்டமாக பிரேசில் நாட்டில் வெளியிட துவங்கியுள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் வாட்ஸ்அப் சாட் செய்தபடி தனிநபர் மற்றும் உள்ளூர் வியாபாரங்களுக்கு பணம் அனுப்பலாம்.
வழக்கமாக வாட்ஸ்அப் செயலியில் புகைப்படம் அல்லது வீடியோ உள்ளிட்டவற்றை மற்றவர்களுக்கு அனுப்புவது போன்றே வாட்ஸ்அப் பேமண்ட் சேவையில் மற்றவர்களுக்கு பணம் அனுப்ப முடியும். வாட்ஸ்அப் நிறுவனம் இந்த அம்சத்தினை 2018 ஆம் ஆண்டு முதல் சோதனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் வாட்ஸ்அப் மூலம் நேரடியாக பணம் செலுத்தும் வசதியை பெற்ற முதல் நாடாக பிரேசில் இருக்கிறது. பிரேசில் நாட்டில் வாட்ஸ்அப் செயலியை சுமார் 12 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவுக்கு அடுத்தப்படி வாட்ஸ்அப் செயலியை அதிகம் பயன்படுத்தும் நாடாகவும் பிரேசில் இருக்கிறது.
பிரேசில் நாட்டில் பல்வேறு சிறு வியாபரங்கள் வாட்ஸ்அப் செயலியை கொண்டு வியாபாரத்திற்கு விளம்பரம் செய்ய பயன்படுத்தி வருகின்றன. புதிய அம்சம் பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்கும் என பிரேசில் நாட்டிற்கான வாட்ஸ்அப் நிர்வாக அலுவலர் மேட் இடெமா தெரிவித்தார்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் வார்ப் சார்ஜ் 30 ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனுடன் 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த தொழில்நுட்பம் ஒரு நாளுக்கு தேவையான சார்ஜ் அதாவது 50 சதவீதத்தை 20 நிமிடங்களிலும், 100 சதவீதம் சார்ஜ் செய்ய ஒரு மணி நேரம் தான் எடுத்துக் கொள்ளும் என ஒன்பிளஸ் தெரிவித்தது.
இதன் பின் வார்ப் சார்ஜ் 30டி தொழில்நுட்பத்தை 7டி சீரிஸ் மாடலுடன் அறிமுகம் செய்தது. இதே தொழில்நுட்பம் ஒன்பிளஸ் 8 சீரிஸ் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனிற்கு 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.

தற்சமயம் ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஆண்ட்ராய்டு 11 பீட்டா என்ஜினீயரிங் மோட் செயலியில் 65 வாட் சூப்பர் வார்ப் சார்ஜர் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. ஒப்போ ஏற்கனவே 65 வாட் சூப்பரவூக் 2.0 தொழில்நுட்பத்தை ரெனோ ஏஸ், ஃபைண்ட் எக்ஸ்2 சீரிஸ் போன்ற ஸ்மார்ட்போன்களில் வழங்கி இருக்கிறது.
ஒப்போ தவிர ரியல்மி நிறுவனமும் 65 வாட் சூப்பர்டார்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ரியல்மி எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போனில் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஒப்போ நிறுவனத்தின் சூப்பர்வூக் 3.0 தொழிலநுட்பம் அதிகபட்சமாக 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஒப்போ நிறுவனம் அடுத்த தலைமுறை ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய தொழில்நுட்பம் பற்றி ஒப்போ இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. எனினும், இதுபற்றிய விவரங்கள் லீக் ஆக துவங்கி விட்டன.
தற்சமயம் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டுள்ள ஒப்போ சூப்பர்வூக் 2.0 தொழில்நுட்பம் 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியினை வழங்குகிறது. அந்த வகையில் புதிய தலைமுறை தொழில்நுட்பம் தற்சமயம் இருப்பதைவிட அதிக திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தொழில்நுட்பம் 2021 ஆண்டு வெளியாக இருக்கும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட இருக்கிறது.

தற்போதைய தகவல்களின்படி ஒப்போ சூப்பர்வூக் 3.0 தொழில்நுட்பம் அதிகபட்சமாக 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கும் என கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களை 0 முதல் 100 சதவீதம் சார்ஜ் செய்ய 15 நிமிடங்களையே எடுத்துக் கொள்ளும்.
இதுபோன்ற சூழலில் ஸ்மார்ட்போன் அதிக சூடாகும் வாய்ப்புகள் இருக்கிறது. இதனை எதிர்கொள்ள ஒப்போ வேறு வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். மேலும் இத்தகைய திறன் எந்த பேட்டரியையும் வெகு விரைவில் பாழாக்கி விடும். இதனால் பேட்டரி சீக்கிரம் பாழாவதை தடுக்கவும் ஒப்போ புதிய வழியை கண்டுபிடிக்க வேண்டும்.
தற்சமயம் சூப்பர்வூக் 2.0 தொழில்நுட்பம் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2, ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ, ரெனோ ஏஸ்2 மற்றும் பல்வேறு இதர ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த தொழில்நுட்பம் பேட்டரியை 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது.
கொரோனா வைரஸ் பரிசோதனையை செய்ய வழிவகுக்கும் கூகுள் அம்சம் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கொரோனா வைரஸ் தொடர்பாக சரியான விவரங்களை வழங்க கூகுள் பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு இருக்கிறது. தற்சமயம் ஐசிஎம்ஆர் (ICMR) மற்றும் எம்வைஜிஒவி (MyGov) உள்ளிட்டவற்றுடன் இணைந்து கூகுள் சர்ச், அசிஸ்டண்ட் மற்றும் மேப்ஸ் சேவைகளில் புதிய அம்சம் ஒன்றை கூகுள் நிறுவனம் இணைத்து இருக்கிறது.
புதிய அம்சம் மூலம் பயனர்கள் நாடு முழுக்க இயங்கி வரும் கொரோனா பரிசோதனை மையங்களை கண்டறிந்து கொள்ளலாம். இந்த அம்சம், பயனர்கள் கொரோனா வைரஸ் சார்ந்த வார்த்தைகளை கூகுளில் தேடினால் புதிதாக டெஸ்டிங் (Testing) எனும் டேப் தெரியும். இத்துடன் தேடலுக்கான பதில்களும் இடம்பெற்று இருக்கும்.

இதுதவிர கொரோனா பரிசோதனை சார்ந்து பயனர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள், தேவையான விவரங்கள் உள்ளிட்டவற்றையும் கூகுள் தெரிவிக்கிறது. இவற்றில்:
கொரோனா பரிசோதனைக்கு செல்லும் முன் தேசிய அல்லது மாநில உதவி எண்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
மருத்துவர் வழங்கிய பரிசோதனை செய்யக் கோரும் மருந்து சீட்டை எடுத்து செல்ல வேண்டும்.
பரிசோதனை நிபந்தனைகள்.
பரிசோதனை மையம் அரசாங்கத்தால் இயக்கப்படுகிறதா அல்லது தனியார் நிறுவனத்தால் இயக்கப்படுகிறதா என்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது.
கூகுள் மேப்ஸ் சேவையில் தேடும் போது, முதலில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்களின் விவரங்கள் மற்றும் அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் அடங்கிய கூகுள் சர்ச் பக்கத்திற்கான இணைய முகவரி காண்பிக்கப்படுகிறது.
தற்சமயம் கூகுள் நிறுவனம் சர்ச், அசிஸ்டண்ட் மற்றும் மேப்ஸ் சேவையில் நாடு முழுக்க 300 நகரங்களில் மொத்தம் 700 பரிசோதனை மையங்களின் விவரங்களை வழங்குகிறது. இந்த அம்சம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, மராத்தி, குஜராத்தி, இந்தி மற்றும் பெங்காலி என எட்டு இந்திய மொழிகளில் கிடைக்கிறது.
ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயமா என்ற கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மே 25ம் தேதி முதல் உள்ளூர் விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் விமானப் பயணிகள் அனைவரும் தங்களது செல்போனில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இது கட்டாயமல்ல என்றும் ஆரோக்கிய சேது செயலில் பச்சை நிற அனுமதி கிடைத்தால் மட்டுமே விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோன்று சிறப்பு ரெயில்களில் பயணிக்கும் அனைவரும் தங்கள் செல்போனில் ‘ஆரோக்கிய சேது’ செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டது. ஒருவேளை பயணிகள் தங்கள் செல்போனில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்யாமல் வரும் பட்சத்தில், ரெயில் நிலையத்தில் வைத்து அவர்களை செயலியை பதிவிறக்கம் செய்ய வலியுறுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் இல்லை என்று பதில் அளித்துள்ளது. மேலும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பமே தவிர கட்டாயமில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ ஃபைபர் சலுகைகளில் அமேசான் பிரைம் சந்தாவினை வழங்குவதாக அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தாவினை இலவசமாக வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. ரூ. 999 மதிப்புள்ள அமேசான் பிரைம் சந்தாவில் வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைம் வீடியோக்களை பார்த்து ரசிக்க முடியும்.
புதிய சலுகை மைஜியோ செயலியில் காணப்படுகிறது. புதிய சலுகையை பெற ஜியோ ஃபைபர் கோல்டு அல்லது அதற்கும் அதிக விலையுள்ள பலன்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இந்த சலுகை புதிய ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்கள் மற்றும் ஏற்கனவே பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜியோ ஃபைபர் சலுகையை தேர்வு செய்த பின் மைஜியோ செயலி அல்லது ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளம் சென்று ஜியோ ஃபைபர் அக்கவுண்ட்டில் லாக் இன் செய்ய வேண்டும். பின் ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தாவுக்கான விளம்பர பேனரை க்ளிக் செய்து அமேசான் பிரைம் அக்கவுண்ட்டில் லாக் இன் செய்ய வேண்டும்.
அமேசான் பிரைம் சந்தாவில் வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைம் வீடியோ, இலவச வேகமான டெலிவரி, சலுகைகளை முன்கூட்டியே பயன்படுத்தும் வசதி, பிரைம் விளம்பரம் இல்லா மியூசிக், பிரைம் கேமிங் மற்றும் பிரைம் ரீடிங் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியும்.
முன்னதாக ஜியோ செட் டாப் பாக்சில் பிரைம் வீடியோ செயலி இணைக்கப்பட்டது. ஏற்கனவே ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, சன் நெக்ஸ்ட், வூட் மற்றும் ஜியோசினிமா சந்தா உள்ளிட்டவற்றை தேர்வு செய்யப்பட்ட சில ஜியோ ஃபைபர் சலுகைகளில் வழங்கப்படுகிறது.
ரூ. 300 விலையுள்ள லோஷனை ஆர்டர் செய்த நபருக்கு அமேசான் நிறுவனம் ரூ. 19 ஆயிரம் மதிப்புள்ள ஹெட்போன்களை டெலிவரி செய்திருக்கிறது.
நாட்டில் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் தொடர்ந்து அதிரித்து வருகிறது. ஆன்லைன் ஷாப்பிங்கில் பயனர்களுக்கு அடிக்கடி அதிரடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாகவே இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் புதிய உச்சத்தை தொடுகிறது.
அவ்வப்போது ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்களை முன்பதிவு செய்தவர்களுக்கு செல்போனுக்கு மாற்றாக செங்கல் வரும் சம்பவங்கள் நடைபெறுவது சர்ச்சையை ஏற்படுத்தி விடுகின்றது.

அந்த வகையில் அமேசான் தளத்தில் ரூ. 300 மதிப்புள்ள ஸ்கின் லோஷனை முன்பதிவு செய்த வாடிக்கையாளருக்கு அமேசான் தரப்பில் இருந்து ரூ. 19 ஆயிரம் மதிப்புள்ள போஸ் ஹெட்போன் டெலிவரி செய்யப்பட்டு விட்டது. தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ட்விட்டர் மூலம் அமேசானுக்கு பாதிக்கப்பட்ட கவுதம் என்ற வாடிக்கையாளர் தெரிவித்தார்.
எனினும், இது திரும்ப பெறும் வசதி இல்லை என அமேசான் தெரிவித்துள்ளது. கவுதம் பகிர்ந்ததை போன்று ஆன்லைன் ஷாப்பிங்கில் சந்தித்த அனுபவங்களை பலர் ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.






