என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒப்போ
    X
    ஒப்போ

    80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கும் ஒப்போ சூப்பர்வூக் 3.0

    ஒப்போ நிறுவனத்தின் சூப்பர்வூக் 3.0 தொழிலநுட்பம் அதிகபட்சமாக 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.



    ஒப்போ நிறுவனம் அடுத்த தலைமுறை ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய தொழில்நுட்பம் பற்றி ஒப்போ இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. எனினும், இதுபற்றிய விவரங்கள் லீக் ஆக துவங்கி விட்டன.

    தற்சமயம் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டுள்ள ஒப்போ சூப்பர்வூக் 2.0 தொழில்நுட்பம் 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியினை வழங்குகிறது. அந்த வகையில் புதிய தலைமுறை தொழில்நுட்பம் தற்சமயம் இருப்பதைவிட அதிக திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தொழில்நுட்பம் 2021 ஆண்டு வெளியாக இருக்கும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட இருக்கிறது. 

    ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 - கோப்புப்படம்

    தற்போதைய தகவல்களின்படி ஒப்போ சூப்பர்வூக் 3.0 தொழில்நுட்பம் அதிகபட்சமாக 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கும் என கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களை 0 முதல் 100 சதவீதம் சார்ஜ் செய்ய 15 நிமிடங்களையே எடுத்துக் கொள்ளும்.

    இதுபோன்ற சூழலில் ஸ்மார்ட்போன் அதிக சூடாகும் வாய்ப்புகள் இருக்கிறது. இதனை எதிர்கொள்ள ஒப்போ வேறு வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். மேலும் இத்தகைய திறன் எந்த பேட்டரியையும் வெகு விரைவில் பாழாக்கி விடும். இதனால் பேட்டரி சீக்கிரம் பாழாவதை தடுக்கவும் ஒப்போ புதிய வழியை கண்டுபிடிக்க வேண்டும்.

    தற்சமயம் சூப்பர்வூக் 2.0 தொழில்நுட்பம் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2, ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ, ரெனோ ஏஸ்2 மற்றும் பல்வேறு இதர ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த தொழில்நுட்பம் பேட்டரியை 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது. 
    Next Story
    ×