என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஆப்பிள் நிறுவனம் புதிதாக இரண்டு பவர் அடாப்டர்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 12 சீரிஸ் மாடல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஐபோன்களுடன் ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் 20 வாட் பவர் அடாப்டர் ஆஸ்திரேலியாவில் சான்று பெற்றதை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.
    ஆப்பிள்
    அதன்படி இரண்டு புதிய சார்ஜர் யூனிட்களும் ஆண்டு இறுதியில் ஆப்பிள் அறிமுகம் செய்யும் சாதனங்களுடன் வெளியாகும் என கூறப்படுகிறது. இரண்டு புதிய சார்ஜர்களும் யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    இதன் காரணமாக புதிய ஐபோன் மாடல்களில் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. மேலும் புதிய சார்ஜர்கள் உண்மையில் ஐபோன்களில் வேளை செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்த சார்ஜர்கள் 2305 மற்றும் 2247 எனும் குறியீட்டு பெயர்களை கொண்டிருக்கின்றன.

    இரண்டு சார்ஜர்களும் 20 வாட் பவர் அவுட்புட் மற்றும் யுஎஸ்பி பவர் டெலிவரி ப்ரோடோகால் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இரு சார்ஜர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
    கால் ஆஃப் டியூட்டி மொபைல் கேம் வெளியான ஒரே வருடத்திற்குள் சுமார் 25 கோடி டவுன்லோட்களை கடந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    சந்தையில் வெளியான ஒரு வருடத்திற்குள் கால் ஆஃப் டியூட்டி கேம் உலகம் முழுக்க சுமார் 25 கோடி டவுன்லோட்களை கடந்துள்ளது. இதனை சென்சார் டவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த டவுன்லோட்களில் மொபைல் கேமின் அனைத்து வெர்ஷன்கள், ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட கால் ஆஃப் டியூட்டி கேம் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் அதிக பிரபலமாகி உள்ளது.
    கால் ஆஃப் டியூட்டி
    உலகிலேயே இந்த இரு நாடுகளில் தான் இந்த கேம் அதிக டவுன்லோட்களை கடந்து இருக்கிறது என சென்சார் டவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த டவுன்லோட்களில் அமெரிக்கா மட்டும் 18 சதவீதம் பங்கு வகிக்கிறது. இதே காலக்கட்டத்தில் பப்ஜி மொபைல் கேமினை சுமார் 23.6 கோடி பேரும், ஃபோர்ட்னைட் கேமினை சுமார் 7.8 கோடி பேரும் டவுன்லோட் செய்துள்ளனர்.

    இதிலும் கூகுள் பிளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் டவுன்லோட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கால் ஆஃப் டியூட்டி கேம் அதிகபட்ச டவுன்லோட்கள் அமெரிக்காவில் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் இதனை அதிகம் பேர் டவுன்லோட் செய்துள்ளனர்.

    சென்சார் டவர் விவரங்களின்படி கால் ஆஃப் டியூட்டி கேமில் பயனர்கள் செலவிட்ட தொகை மூலம் இந்த கேம் ரூ. 2470 கோடி வருவாய் ஈட்டியிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. டென்சென்ட் நிறுவனம் கால் ஆஃப் டியூட்டி கேமினை கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்தது. அறிமுகமான முதல் இரண்டு மாதங்களில் இதனை சுமார் 17.2 கோடி பேர் டவுன்லோட் செய்திருந்தனர்.
    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா பதிப்பு செயலிகளில் அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சம் சோதனை செய்யப்படுகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சத்தை வழங்குவதற்கான சோதனையை அந்நிறுவனம் துவங்கி உள்ளது. புதிய அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பதிப்புகளில் துவங்கி இருக்கிறது. 

    புதிய அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா V2.20.194.7 பதிப்பிலும், வாட்ஸ்அப் ஐபோன் பீட்டா V2.20.70.26 வெர்ஷனில் சோதனை செய்யப்படுகிறது. அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சத்தை வாட்ஸ்அப் வழங்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.
     வாட்ஸ்அப்
    தற்சமயம் இந்த அம்சத்தின் ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. எனினும், இந்த அம்சம் எப்போது வெளியாகும் என்பது பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. பீட்டா பதிப்புகளில் சோதனை செய்யப்படும் இந்த அம்சம் தற்சமயம் சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    புதிய அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சம் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியிலும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அனிமேட்டெட் ஸ்டிக்கர்கள் சாட்களில் ஒருமுறை மட்டுமே அனிமேட் ஆகும் என கூறப்படுகிறது. இவை மீண்டும் அனிமேட் ஆக பயனர்கள் ஸ்கிரால் செய்ய வேண்டும்.

    வாட்ஸ்அப் செயலியில் 2019 ஆம் ஆண்டு முதல் ஸ்டிக்கர்களை இயக்குவதற்கான வசதியினை வழங்கியது. தற்சமயம் வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இதை க்ளிக் செய்ததும் மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர்களை டவுன்லோட் செய்ய வேண்டும்

    வோடபோன் ஐடியா நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளில் கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.


    வோடபோன் ஐடியா நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 5 ஜிபி கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி வோடபோன் ஐடியா ரூ. 149, ரூ. 219, ரூ. 249, ரூ. 399 மற்றும் ரூ. 599 உள்ளிட்ட சலுகைகளில் 5 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

    புதிய கூடுதல் டேட்டா சலுகை வோடபோன் மற்றும் ஐடியா வலைதளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. ரூ. 149 சலுகையில், 2ஜிபி டேட்டாவுடன் 1ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இதனால் இச்சலுகையில் 3ஜிபி டேட்டா பெற முடியும். இத்துடன் வோடபோன் பிளே சந்தா, ஜீ5 சந்தா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
    போன் பயன்பாடு - கோப்புப்படம்
    வோடபோன் ஐடியா ரூ. 219 பிரீபெயிட் சலுகையில் முந்தைய 1 ஜிபி டேட்டாவுடன் 2 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் அன்லிமிட்டெட் அழைப்புகளுடன், தினமும் 100 எஸ்எம்எஸ், வோடபோன் பிளே சந்தா மற்றும் ஜீ5 சந்தா வழங்கப்படுகிறது.

    ரூ. 249 பிரீபெயிட் சலுகையில் 5ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் அன்லிமிட்டெட் அழைப்புகளுடன், தினமும் 100 எஸ்எம்எஸ், வோடபோன் பிளே சந்தா மற்றும் ஜீ5 சந்தா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    ரூ. 399 சலுகையில் இதே அளவு டேட்டா 56 நாட்களுக்கும் ரூ. 599 சலுகையில் ரூ. 249 சலுகை பலன்கள் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. புதிய கூடுதல் டேட்டா சலுகை நாட்டின் அனைத்து வட்டாரங்களுக்கும் பொருந்தும். இதே சலுகைகள் ஐடியா வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி சீரிஸ் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தி செரிஃப் 4கே கியூஎல்இடி டிவி மாடல்களை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய டிவி இன்பில்ட் என்எஃப்சி தொழில்நுட்பம் கொண்ட முதல் சாம்சங் டிவி ஆகும். இது ஸ்மார்ட்போன்களில் உள்ள தரவுகளை மிக எளிதில் டிவியில் ஒளிபரப்பும் திறன் கொண்டதாகும். இந்த அம்சத்தை இயக்க பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களை டிவியின் மீது வைத்தாலே போதும்.
    சாம்சங் டிவி
    மேலும் தி செரிஃப் டிவி ஏர்பிளே 2 வசதி கொண்டிருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் வீடியோக்கள், மியூசிக், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை ஆப்பிள் சாதனங்களில் இருந்து டிவியில் இயக்க முடியும். மேலும் இந்த டிவியை பயனர்கள் தங்களின் குரல் மூலம் இயக்க வசதியாக பிக்ஸ்பி மற்றும் அலெக்சா போன்ற சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய டிவி 40 வாட் சேனல் ஸ்பீக்கர்களுடன் டால்பி டிஜிட்டல் பிளஸ் கொண்டிருக்கின்றன. இதில் உள்ள ஆக்டிவ் வாய்ஸ் ஆம்ப்ளிஃபையர் பயனர் அருகில் ஏற்படும் தொந்தரவளிக்கும் சத்தத்தை கண்டறிந்து, திரையில் வரும் குரல்களை மேலும் தெளிவாக மாற்றி வழங்குகிறது.

    சாம்சங் தி செரிஃப் டிவி 43 இன்ச், 49 இன்ச் மற்றும் 55 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 85 ஆயிரம் முதல் துவங்கலாம் என தெரிகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் 2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் சேவைகளின் முழு விவரங்களை பார்ப்போம்.



    ஆப்பிள் நிறுவனத்தின் 2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு நேற்று துவங்கியது. இவ்விழாவில் அறிமுகமான ஐஒஎஸ் 14 விவரங்களை தொடர்ந்து, புதிய ஐபேட் ஒஎஸ் 14, மேக் ஒஎஸ் பிக் சர், வாட்ச் ஒஎஸ் 7, என ஆப்பிள் அறிவித்த சேவைகளின் முக்கிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன...

    ஆப்பிள் ஐபேட் ஒஎஸ் 14

    ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ஒஎஸ் 14 இயங்குதளத்தின் யுசர் இன்டர்ஃபேஸ் மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய இயங்குதளத்தில் போட்டோஸ் மற்றும் மியூசிக் ஆப் போன்று பக்கவாட்டில் சைடு-பார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்று காலண்டர், ஐமெசேஜ் மற்றும் மெயில் போன்ற சேவைகளை எளிதில் இயக்க இன்டர்ஃபேசில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் ஐபேட் ஒஎஸ் 14 பதிப்பில் புதிதாக யுனிவர்சல் சர்ச் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் காண்டாக்ட், டாக்யூமென்ட் உள்ளிட்டவற்றையும், இந்த அம்சத்தை இயக்கும் வசதி கொண்ட செயலியினுள் தேடவும் வழி செய்யும். இதேபோன்று அழைப்புகளுக்கான நோட்டிஃபிகேஷன் ஆண்ட்ராய்டு தளத்தில் காணப்படுவதை போன்று அளவில் சிறியதாக மாற்றப்பட்டுள்ளது.

    டிவி ஒஎஸ் 14

    ஆப்பிள் புதிய டிவி ஒஎஸ் ஹோம்கிட் அம்சம் கொண்டு பயனரின் கேமரா வீடியோக்களை சின்க் செய்து அவற்றை பிக்ச்சர் இன் பிக்ச்சர் மோடில் பார்க்க முடியும். இத்துடன் பயனர் தங்களின் 4K வீடியோக்களை டிவியில் ஏர்பிளே செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    மேக் ஒஎஸ் பிக் சர்

    மேக் ஒஎஸ் பிக் சர்

    மேக் ஒஎஸ் பிக் சர் பதிப்பு மிக எளிய வடிவமைப்பு, புதிய ஐகான்கள், மென்மையான அனிமேஷன் மற்றும் பிரீ இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகள் புது வடிவமைப்பு கொண்டிருக்கின்றன. இத்துடன் புதிய மெனு பார் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஐபோன்களில் உள்ளது போன்று கண்ட்ரோல் சென்ட்டர் அம்சமும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய மேக் ஒஎஸ் இயங்குதளத்தில் சஃபாரி பிரவுசர் கூகுள் குரோமை விட 50 சதவீதம் வேகமாக இயங்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. எந்தெந்த செயலிகள் மற்றும் வலைதளங்கள் எக்ஸ்டென்ஷன்களை எவ்வளவு நேரம் அவை செயல்பட வேண்டும் என்பதை பயனர்களே முடிவு செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் சிலிகான்

    ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் சிலிகான் சிப்செட் அறிமுகம் செய்யப்பட்டது. இது இன்டெல் நிறுவனத்துக்கு மாற்றான ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த பிராசஸர் ஆகும். ஆப்பிள் சிலிகான் சிப்செட் அதிவேக செயல்திறன் மற்றும் மிக குறைந்த மின்சக்தியை எடுத்துக் கொள்ளும்.

    ஆப்பிள் வாட்ச் ஒஎஸ் 7
     
    ஆப்பிள் வாட்ச் ஃபேஸ்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அம்சத்தை இயக்க குறிப்பிட்ட வாட்ச் ஃபேசை அழுத்தி பிடிக்க வேண்டும். வாட்ச் ஃபேஸ்களை மூன்றாம் தரப்பு செயலிகளில் இருந்தும் பயன்படுத்த முடியும். 

    புதிய வாட்ச் ஒஎஸ் ஸ்லீப் டிராக்கிங் அம்சம் கொண்டிருக்கிறது. இந்த அம்சத்தை பயன்படுத்தி பயனர் மூச்சு விடும் வழக்கத்தை கண்காணிக்க முடியும். இத்துடன் வேக்-அப் அலாரம் மற்றும் பெட்-டைம் அலாரம் போன்றவற்றை ஷெட்யூல் செய்யலாம். 

    புதிய இயங்குதளத்தில் ஹேண்ட்வாஷ் டிடெக்ஷன் இருக்கிறது. இது பயனர் கை கழுவுவதை தானாக கண்டறிந்து, அவர்கள் எவ்வளவு நேரம் கைகளை கழுவ வேண்டும் என்பதை தெரிவிக்க டைமர் அம்சத்தை இயக்கும். கை கழுவுவதற்கான நேரம் முடிந்தவுடன் வாட்ச் ஹேப்டிக் சென்சார் மூலம் பயனருக்கு தகவல் தெரிவிக்கும். 

    ஆப்பிள் நிறுவனத்தின் ஏ14 பயோனிக் பிராசஸர் உற்பத்தி விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.



    ஆப்பிள் நிறுவனத்தின் ஏ14 பயோனிக் சிப்செட் உற்பத்தி இம்மாத இறுதியில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய சிப்செட்  ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது.

    புதிய ஆப்பிள் ஏ14 பயோனிக் சிப்செட் 5 நானோமீட்டர் வழிமுறையில் உருவாக்கப்படுகிறது. இதனால் இது முந்தைய பிராசஸர்களை விட அதிக சக்திவாய்ந்த ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    ஆப்பிள்
    தற்போதைய ஏ13 பயோனிக் சிப்செட் ஐபோன் 11 சீரிஸ், ஐபோன் எஸ்இ 2020 போன்ற மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் ஏ14 பயோனிக் சிப்செட்களை தாய்வான் நாட்டை சேர்ந்த TSMC எனும் நிறுவனம் உற்பத்தி செய்து வழங்க இருக்கிறது. 

    இதே நிறுவனம் ஹூவாய் நிறுவனத்திற்கு ஹைசிலிகான் கிரின் 1020 சிப்செட்டை உற்பத்தி செய்து வழங்க இருக்கிறது. இந்த சிப்செட் ஹூவாய் மேட் 40 சீரிஸ் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கிறது.
    இந்தியாவில் சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதாக கூறும் தகவல்களின் உண்மை பின்னணியை தொடர்ந்து பார்ப்போம்.



    மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தியாவில் சீன செயலிகளை தடை செய்ய உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

    தேசிய தகவல் ஆணையம் வெளியிட்டதாக வைரலான தகவல்களில் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர்களில் உள்ள சில சீன செயலிகளுக்கு தடை செய்ய உத்தரவிடப்பட்டதாக கூறப்பட்டது.

    வைரல் தகவல்களில் தேசிய தகவல் ஆணையம், 14 சீன செயலிகளில் பயனர்களின் தனியுரிமைக்கு ஆபத்து மற்றும், இவை நாட்டின் பாதுகாப்புக்கு கலங்கம் ஏற்படுத்தலாம் என்பது போன்ற காரணங்களால் இவற்றை தடை செய்ய கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் வட்டார அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

    பிஐபி விளக்கம் ஸ்கிரீன்ஷாட்

    வைரலான சீன செயலிகள் பட்டியல் போலி என தெரியவந்துள்ளது. வைரல் தகவலை ஆய்வு செய்த பிரஸ் இன்பர்மேஷன் பீரோ அமைப்பு வைரல் தகவலில் துளியும் உண்மையில்லை என தெரிவித்துள்ளது.

    தடை செய்யப்படுவதாக வைரலான செயலிகள் பட்டியலில், லைவ்மி, பிகோ லைவ், விகோ வீடியோ, பியூட்டி பிளஸ், கேம்ஸ்கேனர், கிளாஷ் ஆஃப் கிங்ஸ், மொபைல் லெஜண்ட்ஸ், கிளப் ஃபேக்ட்ரி, ஷெயின், ரோம்வி, ஆப்லாக், விமேட் மற்றும் கேம் ஆஃப் சுல்தான் உள்ளிட்டவை இடம்பெற்று இருந்தன. இத்துடன் டிக்டாக் செயலிக்கும் தடை விதிக்க உத்தரவிடப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களின் டாப் 5 மாடல்களின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    2019 ஆண்டு துவங்கியது முதல் சாம்சங் நிறுவனம் அதிகளவு கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய துவங்கியது. வெளியான கேலக்ஸி ஏ சீரிஸ் வெற்றி பெற்றதால், தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனம் சந்தையில் இழந்த தனது பங்குகளை மீட்டெடுத்துள்ளது.

    ஒமிடா எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி 2019 ஆண்டு உலகில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடலாக கேலக்ஸி ஏ10 இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் சாம்சங் முதலிடம் பிடித்துள்ளது. 

    ஒட்டுமொத்தமாக அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் XR மற்றும் ஐபோன் 11 முன்னணி இடங்களை பிடித்துள்ளன. 2019 ஆண்டு சர்வதேச அளவில் சுமார் 137 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதில் 4.63 கோடி யூனிட்கள் ஆப்பிள் ஐபோன் XR ஆகும். 

    கேலக்ஸி ஏ சீரிஸ்

    இது சந்தையில் விற்பனையான ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன்களில் 3 சதவீதம் ஆகும். இதைத் தொடர்ந்து ஐபோன் 11 ஸ்மார்ட்போன் 3.73 கோடி யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. இது சந்தையில் 2.1 சதவீத பங்குகளை பெற்றுள்ளது.

    ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த ஆண்டு நிலவரப்படி உலகில் அதிகம் விற்பனையான ஐந்து ஸ்மார்ட்போன்களில் இரு மாடல்கள் ஆப்பிள் நிறுவனம் உற்பத்தி செய்தி இருக்கிறது. இதுதவிர 2019 ஆண்டு விற்பனையான ஸ்மார்ட்போன்கள் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்கள் ஆகும்.

    கேலக்ஸி ஏ10 கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும். கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனை சுமார் 3.03 கோடி பேர் வாங்கியுள்ளனர். இது சந்தையில் 1.8 சதவீதம் பங்குகளை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து கேலக்ஸி ஏ50 மற்றும் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களின் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளன.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ மாடலின் உற்பத்தி விரைவில் இந்தியாவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2020 விரைவில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஐபோன்களை இறக்குமதி செய்யும் போது விதிக்கப்படும் 20 சதவீத வரி செலவை குறைக்கும் நோக்கில் புதிய முடிவை ஆப்பிள் நிறுவனம் எடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் தாய்வான் நாட்டு உற்பத்தியாளரான விஸ்ட்ரன் இந்தியாவில் புதிய ஐபோனை உற்பத்தி செய்வதற்கான பணிகளை ஏற்கனவே துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது. 

    ஐபோன் எஸ்இ

    ஆப்பிள் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஐபோன் மாடல்களை உற்பத்தி செய்ய துவங்கியது. எனினும், இதுவரை பழைய ஐபோன் மாடல்களே இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

    சீனாவில் உள்ள உதிரிபகாங்கள் விநியோகம் செய்யும் நிறுவனத்திடம் இருந்து புதிய ஐபோன் எஸ்இ மாடலுக்கு தேவையான பாகங்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய விஸ்ட்ரன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி உதிரிபாகங்கள் ஜூலை மாதத்தில் இந்தியா வரும் என தெரிகிறது.

    இந்திய உற்பத்தி தொடர்பாக ஆப்பிள் மற்றும் விஸ்ட்ரன் நிறுவனங்கள் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. இந்தியாவில் புதிய ஐபோன் எஸ்இ மாடல் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. 
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனிற்கு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது.



    சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ. 4 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகமான கேலக்ஸி நோட் 10 லைட் ரூ. 38999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பின், மொபைல் போன்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதால் இதன் விலை ரூ. 41999 ஆக மாறியது.

    இதைத் தொடர்ந்து, கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ. 4 ஆயிரம் குறைக்கப்படுவதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய விலை குறைப்பின் படி சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் 6ஜிபி ரேம் மாடல் ரூ. 37999 விலையிலும், 8ஜிபி ரேம் மாடல் ரூ. 39999 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    விலை குறைப்பு மட்டுமின்றி சிட்டிபேங்க் வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனால் சிட்டிபேங்க் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் 6ஜிபி வேரியண்ட்டைடை ரூ. 32999 விலையிலும், 8ஜிபி வேரியண்ட்டை ரூ. 34999 விலையிலும் வாங்க முடியும்.

    இவைதவிர கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் அதிகபட்சம் ஒன்பது மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியும், இரண்டு மாதங்களுக்கு யூடியூப் பிரீமியம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. வங்கி சலுகை ஜூன் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

    கேலக்ஸி நோட் 10 லைட்

    கேலக்ஸி நோட் 10 லைட் சிறப்பம்சங்கள்:

    - 6.7 இன்ச் FHD+ 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 9 சீரிஸ் 9810 பிராசஸர்
    - மாலி G72MP18 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம்
    - 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ், f/1.7, OIS
    - 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, OIS
    - 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4,500எம்ஏஹெச் பேட்டரி
    ட்விட்டர் நிறுவனம் தனது ஐஒஎஸ் செயலியில் புதிய அம்சத்தினை வழங்க துவங்கி உள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ட்விட்டர் ஐஒஎஸ் செயலியை பயன்படுத்துவோருக்கு அந்நிறுவனம் புதிய அம்சத்தை வெளியிட துவங்கி உள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் வாய்ஸ் ட்விட் பதிவிட முடியும்.

    பயனர்கள் ட்விட்டரில் பதிவிட விரும்பும் கருத்துக்களை அதிகபட்சமாக இரண்டு நிமிடங்களுக்குள் பேசி அவற்றை ஆடியோ வடிவில் பதிவிட முடியும். பின் ட்விட்டரில் அவர்களது ஃபாளோவர்கள் வாய்ஸ் ட்விட்களை கேட்கலாம்.

    வாய்ஸ் ட்விட் உருவாக்க ட்விட் கம்போசர் ஆப்ஷனை க்ளிக் செய்து கேமரா ஐகானுக்கு முந்தைய வேவ்லெந்த் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். பின் பயனர்கள் தங்களது ப்ரோபைல் புகைப்படத்துடன் ரெக்கார்ட் செய்யக் கோரும் பட்டனை பார்க்க முடியும். இதில் பயனர்கள் தங்களது வாய்ஸ் ட்விட் உருவாக்கிக் கொள்ளலாம்.

    வாய்ஸ் ட்விட்

    ஒவ்வொரு வாய்ஸ் ட்விட் அளவு அதிகபட்சம் 140 நொடிகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயனர் நீண்ட நேரத்திற்கு வாய்ஸ் ட்விட் செய்ய விரும்பினால், ட்விட்டர் தானாக புதிய வாய்ஸ் ட்விட் ஒன்றை உருவாக்கி அதனை திரெட் ஆக மாற்றி அடுத்த ட்விட்டாக பதிவிடும்.

    வாய்ஸ் ட்விட்களை அனைத்து பயனர்களும் பார்க்க முடியும். ஐஒஎஸ் பயனர்களுக்கு மட்டும் வாய்ஸ் ட்விட் தனி விண்டோவில் திறக்கிறது. இந்த விண்டோ செயலியின் கீழ் காணப்படுகிறது. வாய்ஸ் ட்விட் கேட்டுக் கொண்டே பயனர்கள் மற்ற ட்விட்களை ஸ்கிரால் செய்யலாம்.

    முதற்கட்டமாக வாய்ஸ் ட்விட் பதிவிடும் அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. வரும் வாரங்களில் இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என தெரிகிறது.
    ×