search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஐபேட் ஒஎஸ் 14
    X
    ஐபேட் ஒஎஸ் 14

    ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகமான ஆப்பிள் சேவைகள்

    ஆப்பிள் நிறுவனத்தின் 2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் சேவைகளின் முழு விவரங்களை பார்ப்போம்.



    ஆப்பிள் நிறுவனத்தின் 2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு நேற்று துவங்கியது. இவ்விழாவில் அறிமுகமான ஐஒஎஸ் 14 விவரங்களை தொடர்ந்து, புதிய ஐபேட் ஒஎஸ் 14, மேக் ஒஎஸ் பிக் சர், வாட்ச் ஒஎஸ் 7, என ஆப்பிள் அறிவித்த சேவைகளின் முக்கிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன...

    ஆப்பிள் ஐபேட் ஒஎஸ் 14

    ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ஒஎஸ் 14 இயங்குதளத்தின் யுசர் இன்டர்ஃபேஸ் மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய இயங்குதளத்தில் போட்டோஸ் மற்றும் மியூசிக் ஆப் போன்று பக்கவாட்டில் சைடு-பார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்று காலண்டர், ஐமெசேஜ் மற்றும் மெயில் போன்ற சேவைகளை எளிதில் இயக்க இன்டர்ஃபேசில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் ஐபேட் ஒஎஸ் 14 பதிப்பில் புதிதாக யுனிவர்சல் சர்ச் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் காண்டாக்ட், டாக்யூமென்ட் உள்ளிட்டவற்றையும், இந்த அம்சத்தை இயக்கும் வசதி கொண்ட செயலியினுள் தேடவும் வழி செய்யும். இதேபோன்று அழைப்புகளுக்கான நோட்டிஃபிகேஷன் ஆண்ட்ராய்டு தளத்தில் காணப்படுவதை போன்று அளவில் சிறியதாக மாற்றப்பட்டுள்ளது.

    டிவி ஒஎஸ் 14

    ஆப்பிள் புதிய டிவி ஒஎஸ் ஹோம்கிட் அம்சம் கொண்டு பயனரின் கேமரா வீடியோக்களை சின்க் செய்து அவற்றை பிக்ச்சர் இன் பிக்ச்சர் மோடில் பார்க்க முடியும். இத்துடன் பயனர் தங்களின் 4K வீடியோக்களை டிவியில் ஏர்பிளே செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    மேக் ஒஎஸ் பிக் சர்

    மேக் ஒஎஸ் பிக் சர்

    மேக் ஒஎஸ் பிக் சர் பதிப்பு மிக எளிய வடிவமைப்பு, புதிய ஐகான்கள், மென்மையான அனிமேஷன் மற்றும் பிரீ இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகள் புது வடிவமைப்பு கொண்டிருக்கின்றன. இத்துடன் புதிய மெனு பார் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஐபோன்களில் உள்ளது போன்று கண்ட்ரோல் சென்ட்டர் அம்சமும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய மேக் ஒஎஸ் இயங்குதளத்தில் சஃபாரி பிரவுசர் கூகுள் குரோமை விட 50 சதவீதம் வேகமாக இயங்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. எந்தெந்த செயலிகள் மற்றும் வலைதளங்கள் எக்ஸ்டென்ஷன்களை எவ்வளவு நேரம் அவை செயல்பட வேண்டும் என்பதை பயனர்களே முடிவு செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் சிலிகான்

    ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் சிலிகான் சிப்செட் அறிமுகம் செய்யப்பட்டது. இது இன்டெல் நிறுவனத்துக்கு மாற்றான ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த பிராசஸர் ஆகும். ஆப்பிள் சிலிகான் சிப்செட் அதிவேக செயல்திறன் மற்றும் மிக குறைந்த மின்சக்தியை எடுத்துக் கொள்ளும்.

    ஆப்பிள் வாட்ச் ஒஎஸ் 7
     
    ஆப்பிள் வாட்ச் ஃபேஸ்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அம்சத்தை இயக்க குறிப்பிட்ட வாட்ச் ஃபேசை அழுத்தி பிடிக்க வேண்டும். வாட்ச் ஃபேஸ்களை மூன்றாம் தரப்பு செயலிகளில் இருந்தும் பயன்படுத்த முடியும். 

    புதிய வாட்ச் ஒஎஸ் ஸ்லீப் டிராக்கிங் அம்சம் கொண்டிருக்கிறது. இந்த அம்சத்தை பயன்படுத்தி பயனர் மூச்சு விடும் வழக்கத்தை கண்காணிக்க முடியும். இத்துடன் வேக்-அப் அலாரம் மற்றும் பெட்-டைம் அலாரம் போன்றவற்றை ஷெட்யூல் செய்யலாம். 

    புதிய இயங்குதளத்தில் ஹேண்ட்வாஷ் டிடெக்ஷன் இருக்கிறது. இது பயனர் கை கழுவுவதை தானாக கண்டறிந்து, அவர்கள் எவ்வளவு நேரம் கைகளை கழுவ வேண்டும் என்பதை தெரிவிக்க டைமர் அம்சத்தை இயக்கும். கை கழுவுவதற்கான நேரம் முடிந்தவுடன் வாட்ச் ஹேப்டிக் சென்சார் மூலம் பயனருக்கு தகவல் தெரிவிக்கும். 

    Next Story
    ×