search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஆப்பிள்
    X
    ஆப்பிள்

    இரண்டு பவர் அடாப்டர்களை உருவாக்கும் ஆப்பிள்

    ஆப்பிள் நிறுவனம் புதிதாக இரண்டு பவர் அடாப்டர்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 12 சீரிஸ் மாடல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஐபோன்களுடன் ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் 20 வாட் பவர் அடாப்டர் ஆஸ்திரேலியாவில் சான்று பெற்றதை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.
    ஆப்பிள்
    அதன்படி இரண்டு புதிய சார்ஜர் யூனிட்களும் ஆண்டு இறுதியில் ஆப்பிள் அறிமுகம் செய்யும் சாதனங்களுடன் வெளியாகும் என கூறப்படுகிறது. இரண்டு புதிய சார்ஜர்களும் யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    இதன் காரணமாக புதிய ஐபோன் மாடல்களில் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. மேலும் புதிய சார்ஜர்கள் உண்மையில் ஐபோன்களில் வேளை செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்த சார்ஜர்கள் 2305 மற்றும் 2247 எனும் குறியீட்டு பெயர்களை கொண்டிருக்கின்றன.

    இரண்டு சார்ஜர்களும் 20 வாட் பவர் அவுட்புட் மற்றும் யுஎஸ்பி பவர் டெலிவரி ப்ரோடோகால் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இரு சார்ஜர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
    Next Story
    ×