என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பிஎஸ்என்எல்
    X
    பிஎஸ்என்எல்

    4ஜி மேம்படுத்தலில் சீன உபகரணங்கள் - மத்திய அரசின் அதிரடி முடிவு

    இந்தியாவில் 4ஜி நெட்வொர்க் மேம்படுத்தல்களில் சீன உபகரணங்களை பயன்படுத்தும் விவகாரத்தில் மத்திய அரசின் அதிரடி முடிவு விவரங்களை பார்ப்போம்.



    அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் தொலைதொடர்பு துறை நிறுவனம் 4ஜி  மேம்படுத்தல்களில் சீன உபகரணங்களை நிராகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதால் சீன உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று "பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு  கூற மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

    கோப்புப்படம்

    இதுதொடர்பாக மறு டெண்டர் விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீன நிறுவனங்களால் தயாரிக்கப்படும் உபகரணங்களை பயன்படுத்துவதை குறைக்க தனியார் ஆபரேட்டர்களைக் கேட்டுக்கொள்ளவும் மத்திய அரசு பரிசீலினை செய்து வருகிறது.

    தொலைதொடர்பு நிறுவனங்களான பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்களது தற்போதைய நெட்வொர்க்குகளில் ஹூவாய் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றன, அதே நேரத்தில் இசட்இஇ நிறுவனம் அரசு நடத்தும் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.

    லடாக்கில் பெரும் பதற்றத்திற்கு மத்தியில் அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளது. சீன நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட சாதனங்களின் நெட்வொர்க் பாதுகாப்பு எப்போதும் சந்தேகத்திற்குரியது என்று அரசு வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.
    Next Story
    ×