என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
ஐஒஎஸ் 14.2 அப்டேட் இன்ஸ்டால் செய்ததும் ஐபோனில் அந்த கோளாறு ஏற்படுவதாக பயனர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
ஐபோன்களை புதிய ஐஒஎஸ் 14.2 தளத்திற்கு அப்டேட் செய்வோருக்கு பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதிய ஒஎஸ் அப்டேட் செய்தவர்களில் பலர் இந்த பிரச்சினை குறித்து சமூக வலைதளங்களில் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த கோளாறு ஐபோன் XR, ஐபோன் XS, ஐபோன் எக்ஸ், ஐபோன் 7 மற்றும் ஐபோன் எஸ்இ 2020 உள்ளிட்ட மாடல்களில் ஏற்படுவதாக தெரிகிறது. ஐபோன் மட்டுமின்றி ஐபேட் ஒஎஸ் 14.2 அப்டேட் செய்தவர்களுக்கும் இதேபோன்று பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போவதாக தெரிவித்து இருக்கின்றனர்.

பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போகும் கோளாறை சரி செய்யும் அப்டேட் வழங்குவது பற்றி ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. ஐஒஎஸ் 14.2 இன்ஸ்டால் செய்தவர்களில் பலருக்கு 30 நிமிடங்களில் 50 சதவீதம் வரை பேட்டரி தீர்ந்து போவதாக கூறப்படுகிறது.
செப்டம்பர் மாதத்தில் அதிக பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை இணைத்ததில் ஜியோ பைபர் முன்னணியில் இருந்தது.
மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் செப்டம்பர் 2020 மாதம் வரையிலான காலக்கட்டத்தில் டாப் 5 பிராட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் வையர்டு மற்றும் வயர்லெஸ் சேவை சேர்க்கப்பட்டு உள்ளது.
டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பிஎஸ்என்எல் நிறுவனம் வையர்டு பிராட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனங்களில் முதலிடம் பிடித்து இருக்கிறது. பிஎஸ்என்எல் சேவை சுமார் 78 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. வயர்லெஸ் பிரிவில் ஜியோ சுமார் 40.41 கோடி வாடிக்கையாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது.

வயர்லெஸ் பிரிவில் 4ஜி சிம் மற்றும் மொபைல் ஹாட்ஸ்பாட் டாங்கிள் உள்ளிட்டவை அடங்கும். அதன்படி வையர்டு மற்றும் வயர்லெஸ் பிராட்பேண்ட் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 55.85 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. செப்டம்பர் 2020 மாதத்தில் மட்டும் ஜியோ பைபர் சேவையில் மூன்று லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.
செப்டம்பர் 30 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் டாப் 5 வையர்டு பிராண்ட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனங்கள் பட்டியலில் பிஎஸ்என்எல், பாரதி ஏர்டெல், அட்ரியா கன்வெர்ஜன்ஸ் டெக்னாலஜிஸ் (ACT), ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஹாத்வே கேபிள் உள்ளிட்டவை முறையே இடம்பெற்று இருக்கின்றன.
இதேபோன்று வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவை நிறுவனங்கள் பட்டியலில் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா, பி.எஸ்.என்.எல். மற்றும் டிகோனா உள்ளிட்டவை முறையே முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து புதிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. எனினும், புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெறலாம் என கூறப்படுகிறது.
தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் சோதனை பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அறிமுகமாக சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் விலை ரூ. 4 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
புதிய ஸ்மார்ட்போன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2ஜி பீச்சர் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை கவர திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 கோடி வாடிக்கையாளர்களிடம் புதிய ஸ்மார்ட்போனினை விற்பனை செய்ய ஜியோ இலக்கு நிர்ணயித்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோன்று ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை குவால்காம் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக குவால்காம் வென்ச்சர்ஸ் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் 0.15 சதவீத பங்குகளை வாங்க முதலீடு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் மீது அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு எச்1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த எச்1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர்.
இதனிடையே அமெரிக்க நிறுவனங்கள் தகுதி வாய்ந்த அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்காமல் குறைவான ஊதியத்தில் எச்1 பி விசாதாரர்களை பணியமர்த்தி வருவதாக ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனால் எச்1 பி விசா பெறுவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை டிரம்ப் நிர்வாகம் விதித்து வருகிறது.
இந்த நிலையில் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களை புறக்கணித்துவிட்டு வெளிநாட்டினருக்கு முன்னுரிமை அளிப்பதாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுகுறித்து டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “தகுதி வாய்ந்த அமெரிக்க தொழிலாளர்களுக்கு மாற்றாக எச் 1 பி விசா போன்ற தற்காலிக விசா வைத்திருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்காக பேஸ்புக் நிறுவனம் வேண்டுமென்றே ஒரு பணியமர்த்தல் முறையை உருவாக்கியது. இது தொடர்பாக அமெரிக்க நீதித்துறை 2 ஆண்டுகள் நடத்திய விசாரணைக்கு பிறகு அந்த நிறுவனத்தின் மீது தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது” என்றார்.
இந்த வழக்கில், ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த அமெரிக்க தொழிலாளர்களை கருத்தில் கொள்ளாமல் தற்காலிக விசா வைத்திருப்பவர்களுக்கு பதவிகளை ஒதுக்குவதன் மூலம் வேண்டுமென்றே மற்றும் பரவலாக சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக பேஸ்புக் நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பப்ஜி மொபைல் கேமிற்கு மாற்றான இந்திய கேம் ஃபாஜி கூகுள் பிளே ஸ்டோர் முன்பதிவில் அசத்தி இருக்கிறது.
பப்ஜி மொபைல் கேமிற்கு மாற்றாக உருவாகி வரும் ஃபாஜி கூகுள் பிளே ஸ்டோரில் முன்பதிவு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முன்பதிவு துவங்கிய 24 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிமான முன்பதிவுகளை பெற்று அசத்தி இருக்கிறது.
இதுவரை ஃபாஜி கேம் விளையாட பிளே ஸ்டோரில் சுமார் 10.6 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருப்பதாக இந்த கேமை உருவாக்கி வரும் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

ஃபாஜி கேமினை என் கோர் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் செப்டம்பர் மாத வாக்கில் தடை செய்யப்பட்டது. அதன்பின் ஃபாஜி கேமிற்கான அறிவிப்பு வெளியானது.
கூகுள் பிளே ஸ்டோரில் ஃபாஜி கேமிற்கு முன்பதிவு செய்வோருக்கு, கேம் எப்போது டவுன்லோட் செய்ய கிடைக்கும், கேமின் அளவு, எந்தெந்த சாதனங்களில் விளையாட முடியும் என்ற தகவல்கள் நோட்டிபிகேஷன் மூலம் அனுப்பப்படுகிறது.
ஃபாஜி கேம்பிளே கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெறும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், வெளியீட்டின் போது இந்த கேமில் பேட்டிள் ராயல் மோட் வழங்கப்படாது என பாஜி இணை நிறுவனர் விஷால் கோண்டல் தெரிவித்து இருந்தார்.
வி நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் சலுகை கட்டணங்களில் இந்தியாவில் திடீர் மாற்றம் செய்து இருக்கிறது.
வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் தனது என்ட்ரி லெவல் போஸ்ட்பெயிட் சலுகை விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ரூ. 598 மற்றும் ரூ. 749 ரெட் போஸ்ட்பெயிட் சலுகைகளுக்கு பொருந்தும். இரு சலுகைகளின் விலையும் ரூ. 50 அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இரு சலுகைகளும் ஒற்றை போஸ்ட்பெயிட் சலுகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் வழங்கப்படுகின்றன. வி ரூ. 598 சலுகையில் இரு இணைப்புகளையும், ரூ. 749 சலுகையில் மூன்று இணைப்புகள் வரை பயன்படுத்த முடியும். புதிய விலை உயர்வு மை வி வலைதளத்தில் ஏற்கனவே மாற்றப்பட்டுவிட்டது.

வி அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி வி ரூ. 598 சலுகை விலை ரூ. 649 என்றும், ரூ. 749 சலுகை விலை ரூ. 799 என்றும் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. ரூ. 749 சலுகையில் 80 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதில் பிரைமரி இணைப்பிற்கு 50 ஜிபி டேட்டாவும், இரண்டாவது இணைப்பிற்கு 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
ரூ. 799 போஸ்ட்பெயிட் சலுகையில் 120 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதில் பிரைமரி இணைப்பிற்கு 60 ஜிபி டேட்டா, இரண்டாவது இணைப்புகளுக்கு முறையே 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
என்ட்ரி லெவல் போஸ்ட்பெயிட் சலுகைகளில் வி பிரைமரி இணைப்பிற்கு 200 ஜிபி வரை டேட்டா ரோல் ஒவர் வசதியை வழங்குகிறது. இரண்டாவது இணைப்புகளுக்கு 50 ஜிபி வரை டேட்டா ரோல் ஒவர் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.
வாட்ஸ்அப் செயலியில் கஸ்டம் வால்பேப்பர் உள்பட பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.
வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்களை வழங்கும் அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய அப்டேட் வாட்ஸ்அப்பில் கஸ்டம் வால்பேப்பர், ஸ்டிக்கர், எமோஜி என பல்வேறு வசதிகளை வழங்குகிறது.
அதன்படி பயனர்கள் வால்பேப்பர் கேலரியில் இருக்கும் படங்களை வெவ்வேறு சாட்களில் வால்பேப்பராக செட் செய்து கொள்ளலாம். இத்துடன் தற்போதைய டூடுள் வால்பேப்பர்களின் நிறமும் புது அப்டேட்டில் மாற்றப்பட்டு இருக்கிறது.

வால்பேப்பர் சார்ந்த மாற்றங்கள் மட்டுமின்றி ஸ்டிக்கர்களை டெக்ஸ்ட் மற்றும் எமோஜி மூலம் தேடும் வசதியும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வாட்ஸ்அப் உலக சுகாதார மையத்தின் Together at Home ஸ்டிக்கர் பேக் ஒன்றை செயலியில் வழங்கி உள்ளது.
இந்த ஸ்டிக்கர் பேக் பயனர்களை கொரோனாவைரஸ் பரவல் காலக்கட்டத்தில் வீட்டினுள் இருக்க வலியுறுத்தும் ஸ்டிக்கர்களை கொண்டிருக்கிறது. இத்துடன் கஸ்டம் வால்பேப்பர் அம்சம் வழங்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு ஒவ்வொரு சாட்களுக்கும் பிரத்யேக வால்பேப்பர்களை செட் செய்து கொள்ள வழி செய்கிறது.
இத்தாலி நாட்டு ஒழுங்குமுறை ஆணையம் ஆப்பிள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்து இருக்கிறது.
இத்தாலி நாட்டின் ஒழுங்குமுறை ஆணையம் ஆப்பிள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.879008769) அபராதம் விதித்து இருக்கிறது.
புதிய ஐபோன்களில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கியது பற்றி தவறான தகவல்களை விளம்பரப்படுத்திய காரணத்திற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
ஐபோன் மாடல்களில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி குறிப்பிட்ட காலநிலைகளில் மட்டும் வேலை செய்யும் என்பதை ஆப்பிள் தெளிவாக விவரிக்கவில்லை என இத்தாலி நாட்டின் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்து உள்ளது.

ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் எக்ஸ்ஆர், ஐபோன் எக்ஸ்எஸ், ஐபோன் எக்ஸ்எஸ் பிளஸ், ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கான விளம்பரங்களில் ஆப்பிள் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி பற்றி தெளிவாக விவரிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஐபோன்களில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி இருப்பதாக தெரிவித்து, திரவங்களால் சேதமடைந்தால் வாரண்டி பொருந்தாது என பொறுப்புத்துறப்பில் தெரிவித்து இருப்பது வாடிக்கையாளர்களை ஏமாற்றும் செயல் என இத்தாலி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் பாஜி கேம் முன்பதிவு துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவில் பப்ஜி மொபைல் உள்பட 118 செயலிகளுக்கு செப்டம்பர் மாத வாக்கில் தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவை சேர்ந்த என்கோர் கேம்ஸ் நிறுவனம் பப்ஜி மொபைல் கேமிற்கு மாற்றாக பாஜி எனும் கேமை வெளியிடுவதாக அறிவித்து இருந்தது.
அறிவிக்கப்பட்டது முதல் இந்தியாவில் பாஜி கேம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. இந்நிலையில், பாஜி கேமிற்கான முன்பதிவு கூகுள் பிளே ஸ்டோரில் துவங்கி உள்ளது. முன்பதிவு விவரங்களுடன் கேம் கதைக்களம் மற்றும் கேம்பிளே படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன.

பாஜி கேம்பிளே கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெறும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், வெளியீட்டின் போது இந்த கேமில் பேட்டிள் ராயல் மோட் வழங்கப்படாது என பாஜி இணை நிறுவனர் விஷால் கோண்டல் தெரிவித்து இருந்தார்.
சோனி நிறுவனத்தின் புதிய பிளே ஸ்டேஷன் 5 இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சோனி நிறுவனம் தனது பிளே ஸ்டேஷன் 5 கேமிங் கன்சோலை உலகின் பல்வேறு நாடுகளில் வெளியிட்டுவிட்டது. எனினும், இதன் இந்திய வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து வெளியான தகவல்களில் சோனி தனது பிளே ஸ்டேஷன் 5 கன்சோலை இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டது. எனினும், பிஎஸ்5 இந்திய வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என சோனி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

பிஎஸ்5 இந்திய வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்திய வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டதும் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என சோனி நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.
இந்திய வெளியீட்டிற்கு முன் சோனி இந்தியாவில் எத்தனை பிஎஸ்5 யூனிட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிக்க வேண்டும் என தெரிகிறது. தற்போதைய தகவல்களின் படி முதற்கட்டமாக 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பிஎஸ்5 யூனிட்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு அதிக வாய்ஸ் கால் நிமிடங்களை வழங்கும் சலுகைகளை பார்ப்போம்.
ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளில் மற்ற நெட்வொர்க் எண்களுடன் வாய்ஸ் கால் செய்ய பேர் யூசேஜ் பாலிசி நடைமுறையை கடைப்பிடித்து வருகிறது. ஜியோவில் இருந்து ஜியோ எண்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
எனினும், ஜியோ நெட்வொர்க்கில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 3000 நிமிடங்கள் வரை வாய்ஸ் கால் வழங்கும் சலுகைகள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 555 பிரீபெயிட் சலுகையில் 3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.
ஜியோ ரூ. 599 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 3000 நிமிட வாய்ஸ் கால் வசதி வழங்கப்படுகிறது. ரூ. 777 பிரீபெயிட் சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
இத்துடன் 3000 நிமிடங்கள் வாய்ஸ் கால், ஜியோ எண்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளிலும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.
ஜியோ ரூ. 999 சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், 3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இந்த சலுகை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் மொத்தம் 252 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
பப்ஜி மொபைல் இந்தியா வெளியீடு பற்றி மைக்ரோசாப்ட் அஸ்யூர் கொடுத்த அப்டேட் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
இந்திய கேமிங் சந்தையில் பப்ஜி மொபைல் மீண்டும் வெளியாக இருப்பது பயனர்கள் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை இந்த கேமின் சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த கேம் விரைவில் வெளியாகலாம் என்ற வாக்கில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பப்ஜி மொபைல் இந்தியாவில் மீண்டும் வெளியிட கேமர்களின் தரவுகளை மைக்ரோசாப்ட் அஸ்யூர் பிளாட்பார்மில் இந்திய எல்லைக்குள் சேமிக்கப்பட இருக்கின்றன. இதன் காரணமாக பலர் பப்ஜி மொபைல் இந்திய வெளியீட்டு தேதியை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் கேட்க தொடங்கினர்.

சிலர் மைக்ரோசாப்ட் அஸ்யூர் சமூக வலைதள பக்கங்களை டேக் செய்து இதே கேள்வியை எழுப்பினர். பயனர் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில், மைக்ரோசாப்ட் அஸ்யூர் - பப்ஜி மொபைல் இந்திய வெளியீட்டிற்கு இதுவரை சரியான தேதி குறிக்கப்படவில்லை என தெரிவித்து இருக்கிறது.
மேலும் இந்த கேம் வெளியீட்டு விவரங்களை பப்ஜி மொபைல் இந்தியா பிரத்யேக வலைதளத்தில் அறிந்து கொள்ள முடியும் என்றும் மைக்ரோசாப்ட் அஸ்யூர் தெரிவித்து உள்ளது.






