என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
கேலக்ஸி நோட் சீரிஸ் மாடல்களின் எதிர்காலம் பற்றிய உண்மையை சாம்சங் நிறுவனம் வெளிப்படுத்தி இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யாது என சமீபத்தில் பலமுறை தகவல்கள் வெளியாகின. மேலும் நோட் சீரிஸ் மாடல்களில் பிரபல அம்சமான எஸ் பென் கேலக்ஸி எஸ்20 சீரிசில் வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டன.
இந்நிலையில், சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் சீரிஸ் பற்றி வெளியான தகவல்களை முற்றிலும் மறுத்துள்ளது. அடுத்த ஆண்டு கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மாடலின் மேம்பட்ட ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என்றும் சாம்சங் நிறுவனம் தெரிவித்து இறுக்கிறது.
முன்னதாக சாம்சங் மொபைல் பிரிவு தலைவர் ரோ டே மூன், எஸ் பென் ஸ்டைலஸ் அனுபவத்தை மேலும் சில கேலக்ஸி சாதனங்களில் வழங்க முடிவு செய்து இருப்பதாக தெரிவித்தார். கேலக்ஸி நோட் சீரிஸ் அம்சங்களில் அதிகம் விரும்பப்பட்ட சிலவற்றை மேலும் அதிக கேலக்ஸி சாதனங்களில் வழங்க இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த வகையில் இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் எஸ் பென் ஸ்டைலஸ் கேலக்ஸி எஸ்21 சீரிசில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி எஸ்21 சீரிஸ் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய மந்திரி சபை கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் தொலைத்தொடர்பு துறைக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது குறித்து மத்திய சட்டம் மற்றும் தொலைத் தொடர்பு துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவ்டேகர் ஆகி யோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தொலைத் தொடர்புக்கான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக அவற்றை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 2251.25 மெகா ஹெட்ஸ் அலைவரிசையில் 700, 800, 900, 2,100, 2,300, 2,500 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றைகளை ஏலம் விட மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் 5ஜி சேவைகளை வழங்கும் 3,300 முதல் 3,600 மெகா ஹெட்ஸ் வரையிலான அலைக்கற்றைகள் ஏலம் விடப்படாது. மற்ற அலைகற்றைகள் ஏலம் விடப்படும். ஏலம் விடப்பட இருக்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளின் அடிப்படை விலை மதிப்பு ரூ. 3.92 லட்சம் கோடி. இதற்கான அலைக்கற்றை ஏலத்துக்கான விண்ணப்பம் இந்த மாதத்தில் வெளியிடப்படும்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை விற்பனை செய்வதற்கான ஏலம் வருகிற மார்ச் மாதம் நடைபெறும். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை பயன்படுத்தும் நிறுவனங்கள் மூலம் தொலைத்தொடர்பு துறை அமைச்சகத்துக்கு கணிசமான வருமானம் கிடைக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 மாடலுடன் அந்த அம்சம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் விரைவில் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போனி சீரிசை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கேலக்ஸி எஸ்21 சீரிஸ் விவரங்கள் இணையத்தில் பலமுறை வெளியாகி வருகிறது. இந்நிலையில் சாம்சங் மொபைல் பிரிவு தலைவர் டிஎம் ரோ புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எஸ் பென் வசதியுடன் ஜனவரி மாத வாக்கில் அறிமுகமாகும் என ரோ தனது வலைதள பதிவில் தெரிவித்து உள்ளார். 2020 ஆம் ஆண்டு எங்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி, ஜனவரி மாதம் மேலும் பல விஷயங்களை பகிர்ந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்21, கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி எஸ்21 பிளஸ் என மூன்று மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் எஸ் பென் வசதி கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா அல்லது டாப் எண்ட் எஸ்21 ஸ்மார்ட்போனிற்கு மட்டும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் விர்ச்சுவல் நிகழ்வு மூலம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து இந்த சீரிஸ் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடனான கூட்டணி அதற்கு உதவியாக இருக்கும் என மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார்.
ஜியோ பிளாட்பார்ம்ஸ் உடனான கூட்டணி மூலம் இந்தியாவில் இயங்கி வரும் பல லட்சம் சிறு வியாபாரங்களுக்கு உதவியாக இருக்க முடியும் என பேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார்.
இந்த தகவலை மார்க் ஜூக்கர்பர்க், பேஸ்புக் பியூவல் பார் இந்தியா 2020 நிகழ்வில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானியுடனான உரையாடலின் போது தெரிவித்தார்.

சிறு வியாபாரங்களுக்கு உதவி செய்வதே பேஸ்புக்கில் எங்களின் நோக்கம். இதற்கு இந்தியாவை தவிர சிறந்த இடம் இருக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார். இந்தியாவில் சுமார் 6 கோடிக்கும் அதிகமான சிறு வியாபாரங்கள் நடைபெற்று வருகின்றன. வேலைவாய்ப்புக்காக பல லட்சம் பேர் இவற்றை நம்பி இருக்கின்றனர்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பேஸ்புக் நிறுவனம் ஜியோ பிளாட்பார்ம்ஸ்-இல் 9.99 சதவீத பங்குகளை வாங்க ரூ. 43,574 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது.
பல்வேறு புதிய அம்சங்களுடன் ஐஒஎஸ் 14.3 அப்டேட் வெளியிடப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 14.3 அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது. இந்தியா உள்பட உலகம் முழுக்க ஐபோன்களுக்கு இந்த அப்டேட் வெளியிடப்பட்டு உள்ளது.
புது அப்டேட் ஆப்பிள் பிட்னஸ் பிளஸ் மற்றும் ஏர்பாட்ஸ் மேக்ஸ் வசதியை வழங்குகிறது. இத்துடன் ஐபோன் 12 ப்ரோ மாடலில் ஆப்பிள் ப்ரோ-ரா தரத்தில் புகைப்படங்களை எடுக்கும் வசதி மற்றும் ஆப் ஸ்டோர் பாதுகாப்பு விவரங்களை வழங்கி இருக்கிறது.

புது அம்சங்கள் மட்டுமின்றி ஐபோனில் ஒஎஸ் தரப்பில் இருந்து வந்த பிழைகள் சரிசெய்யப்பட்டு இருக்கின்றன. ஐஒஎஸ் மட்டுமின்றி வாட்ச் ஒஎஸ் 7.2 அப்டேட்டும் வெளியிடப்பட்டு உள்ளது. ஐஒஎஸ் 14.3 மற்றும் வாட்ச்ஒஎஸ் 7.2 அப்டேட் மூலம் ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் கார்டியோ பிட்னஸ் விவரங்களை பெற முடியும்.
ஐஒஎஸ் 14.3 மற்றும் வாட்ச்ஒஎஸ் 7.2 மூலம் ஆப்பிள் வாட்ச் பயனர்கள் தங்களின் உடலில் கார்டியோ பிட்னஸ் அளவு குறைந்தால் உடனடியாக அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் நீண்ட காலத்திற்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது.
புதிய ஐஒஎஸ் 14.3 அப்டேட் பெற பயனர்கள் முதலில் சீரான வைபை இணைப்பில் இணைந்து கொள்ள வேண்டும். பின் செட்டிங்ஸ் -- ஜெனரல் -- சாப்ட்வேர் அப்டேட் போன்ற ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும். பின் ஐஒஎஸ் 14.3 ஆப்ஷனை தேர்வு செய்து டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
குறு வீடியோ செயலியான டப்ஸ்மாஷ்ஐ ரெடிட் விலைக்கு வாங்கி இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஆன்லைன் தளமான ரெடிட் வீடியோ பகிரும் செயலியான டப்ஸ்மாஷை விலைக்கு வாங்கி இருக்கிறது. வீடியோ தளத்தை ரெடிட் எவ்வளவு தொகைக்கு வாங்கி இருக்கிறது என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
ஒப்பந்தத்தின் பிறகும் டப்ஸ்மாஷ் தனது பிளாட்பார்ம் மற்றும் பிராண்டிங்கில் மாற்றம் செய்யாது. ரெடிட் நிறுவனம் டப்ஸ்மாஷ் குழுவை ஒருங்கிணைத்து தற்போதுள்ள டப்ஸ்மாஷ் அனுபவத்தை மாற்றும் பணிகளில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது.

ரெடிட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் படி டப்ஸ்மாஷ் இணை நிறுவனர்களுடன் ஒட்டுமொத்த குழுவும் ரெடிட் உடன் இணைகிறது. டப்ஸ்மாஷ் வித்தியாசமான வீடியோ டூல்கள் ரெடிட் தளத்தில் ஒருங்கிணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் ரெடிட் பயனர்கள் தங்களின் கற்பனையை புதுவிதங்களில் வெளிப்படுத்த முடியும். டப்ஸ்மாஷ் தளத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் 100 கோடி வியூக்களை பெற்று வருகிறது.
அமேசான் வலைதளத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
அமேசான் ஆன்லைன் தளத்தில் ஆப்பிள் டேஸ் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஐபோன் 11 சீரிஸ், ஐபோன் 7 மற்றும் இதர ஆப்பிள் சாதனங்களுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அமேசானின் ஆப்பிள் டேஸ் சிறப்பு விற்பனை டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த விற்பனையின் போது ஐபோன் 11 மாடல் ரூ. 51,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும் இதுவரை இல்லாத வகையில் ஐபோன் 7 மாடல் ரூ. 23,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் மட்டுமின்றி ஐபேட் மினி வாங்குவோருக்கு ரூ. 5 ஆயிரம் சேமிப்பு மற்றும் ரூ. 3 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
இதேபோன்று மேக்புக் ப்ரோ மாடலுக்கும் ரூ. 6 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுவும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
உலகில் முதல்முறையாக பிஎஸ்என்எல் வழங்கும் அசத்தல் சேவை பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பிஎஸ்என்எல் மற்றும் ஸ்கைலோடெக் இந்தியா நிறுவனங்கள் இணைந்து உலகில் முதல்முறையாக செயற்கைக்கோள் சார்ந்த இணைய சேவையை இந்தியாவில் வழங்குகிறது.
இந்த சேவையின் மூலம் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பம் கொண்டு இந்திய கடல் பகுதிகள், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி மற்றும் குஜராத் முதல் வட கிழக்கு இந்திய எல்லைகளுக்குள் சீரான இணைய வசதி வழங்கப்பட இருக்கிறது.

தற்சமயம் இந்த சேவை கனவரக வாகனங்கள், வணிக வாகனங்கள், ரெயில்வே மற்றும் மீன்படி படகுகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய தொழில்நுட்பம் செல்லுலார் கிரேடு ஹார்டுவேர் கொண்டு தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள இருக்கிறது.
புதிய தொழில்நுட்பத்தை கொண்டு அதிக தரமான சேவையினை மிகவும் குறைந்த கட்டணத்தில் வழங்க முடியும் என ஸ்கைலோடெக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் இந்தியா முழுக்க இணைய சேவையை அனைவருக்கும் வழங்க முடியும்.
பேஸ்புக் மீது அமெரிக்காவில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட விவகாரத்தில் அந்நிறுவன அதிகாரி பதில் அளித்து இருக்கிறார்.
உலகின் பிரபல சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் மீது அமெரிக்காவில் 45 மாகாணங்களில் அரசு வக்கீல்கள் வழக்குகளை தொடர்ந்துள்ளனர். பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க அரசு எடுத்துள்ள மிக முக்கியமான சட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
தனது போட்டி நிறுவனங்களை வாங்குவதற்கும், போட்டிகளை தடுப்பதற்கும் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் பேஸ்புக் நிறுவனம் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகியவற்றை சொந்தமாக வாங்கி நிர்வகித்து வரும் இந்த நிறுவனத்தை உடைப்பது குறித்து பரிசீலினை செய்ய அதிகாரிகள் கோர்ட்டுகளை கோரி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுபற்றி பேஸ்புக் நிறுவனம் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் புகார்களை ஆய்வு செய்கிறோம். இதுபற்றி விரைவில் விரிவாக சொல்வோம். பெடரல் வர்த்தக ஆணையம் (எப்டிசி) எங்கள் கையகப்படுத்துதல்களை அனுமதித்துள்ளது” என கூறியது.
பேஸ்புக், பேஸ்புக் மெசேஞ்சர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய அனைத்தும் பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமானவை, அவற்றை மாதம்தோறும் 100 கோடி பேருக்கு மேல் உபயோகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுளில் பயனர்கள் அதிகம் தேடிய பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கூகுள் நிறுவனம் தனது பாரம்பரிய வழக்கப்படி Year In Search 2020 பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பயனர்கள் கூகுளில் அதிகம் தேடிய தலைப்புகளை இந்தியா மற்றும் உலகளவில் பிரித்து பட்டியலிடும்.
அந்த வகையில் இந்த கூகுள் தேடலில் ‘coronavirus’, ‘US election’, ‘IPL’ மற்றும் ‘PM Kisan Yojana’ உள்ளிட்ட தலைப்புகளை மக்கள் அதிகளவில் தேடியுள்ளனர்.
இந்திய அளவில் பயனர்கள் ஐபிஎல், கொரோனாவைரஸ், அமெரிக்க தேர்தல் முடிவுகள் உள்ளிட்ட தலைப்புகளில் அதிகளவு தேடியுள்ளனர். இதைத் தொடர்ந்து பிரதான் மந்த்ரி கிசான் சம்மன் நிதி திட்டம் பற்றியும் தேடி இரு்கின்றனர்.
இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட பட்டியல்
- இந்திய பிரீமியர் லீக்
- கொரோனாவைரஸ்
- அமெரிக்க தேர்தல் முடிவுகள்
- பிரதமர் கிசான் யோஜனா
- பீகார் தேர்தல் முடிவுகள்
- டெல்லி தேர்தல் முடிவுகள்
- தில் பெச்ரா
- ஜோ பைடன்
- லீப் நாள்
- அர்னாப் கோஸ்வாமி
உலகளவில் அதிகம் தேடப்பட்டவை
- கொரோனாவைரஸ்
- தேர்தல் முடிவுகள்
- கோப் ப்ரியன்ட்
- ஜூம்
- ஐபிஎல்
- இந்தியா v நியூ சிலாந்து
- கொரோனவைரஸ் அப்டேட்
- கொரோனாவைரஸ் சிம்ப்டம்ஸ்
- ஜோ பைடன்
- கூகுள் கிளாஸ்ரூம்
ஒட்டுமொத்த பட்டியல் தவிர செய்தி நிகழ்வுகள், பிரபலங்கள் மற்றும் திரைப்படங்கள் போன்ற தலைப்புகளில் அதிகம் தேடப்பட்டவற்றையும் கூகுள் பட்டியலிட்டு உள்ளது. இத்துடன் How To மற்றும் What is போன்ற கேள்விகள் நிறைந்த தேடல்களும் இந்த ஆண்டு அதிகரித்து இருப்பதாக கூகுள் தெரிவித்து இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலியில் ஷாப்பிங் செய்ய புது வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியை பயன்படுத்துவோருக்கு புதிய அம்சம் சேர்க்கப்பட்டு உள்ளது. இது ஷாப்பிங் அனுபவத்தை மேலும் எளிமையாக்குகிறது. கொரோனா தொற்று காலக்கட்டத்தில் டிஜிட்டல் சேவைகள் பல்வேறு துறைகளிலும் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் புதிதாக கார்ட்ஸ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த அம்சத்தில் பயனர்கள் பல்வேறு பொருட்களை ஒரே சமயத்தில் ஒற்றை மெசேஜ் மூலம் ஆர்டர் செய்ய முடியும். இதன் மூலம் வியாபாரம் செய்வோர் ஆர்டர் விவரங்களை சரியாக கண்காணிக்க முடியும்.
`ஆடை விற்பனையகம், உணவகம் போன்ற வியாபாரங்களுக்கு புதிய கார்ட்ஸ் அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்' என வாட்ஸ்அப் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில் தெரிவித்து இருக்கிறது. புதிய கார்ட்ஸ் அம்சத்திற்கான அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது.
வேண்டுமென்றே செய்த காரியத்தால் சர்ச்சையில் சிக்கிய சீன நிறுவனம் என்ன செய்தது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோணி பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் வேண்டுமென்றே ட்ரோஜன் ஹோர்ஸ் குறியீடுகளை செலுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த செயலை சீன ஒழுங்குமுறை ஆணையம் கண்டறிந்து இருக்கிறது.
ஸ்மார்ட்போன்களில் ட்ரோஜன் செலுத்தியதன் மூலம் சட்டவிரோதமாக பயனர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் வருவாய் ஈட்டும் முயற்சியில் ஜியோணி ஈடுபட்டு வந்திருக்கிறது. இதுபோன்ற ட்ரோஜன் ஹோர்ஸ் குறியீடுகள் சுமார் 2.6 கோடி ஸ்மார்ட்போன்களில் செலுத்தப்பட்டு இருக்கிறது.
ஜியோணியின் தாய் நிறுவனமான ஷென்சென் ஷிபு டெக்னாலஜி கோ லிமிட்டெட் இந்த செயலை செய்ததாக கூறப்படுகிறது. டிசம்பர் 2018 முதல் அக்டோபர் 2019 வரையிலான காலக்கட்டத்தில் இந்த நிறுவனம் ஜியோணி ஸ்மார்ட்போன்களில் `ஸ்டோரி லாக் ஸ்கிரீன்' எனும் செயலியை இன்ஸ்டால் செய்தது.
இந்த செயலி தேவையற்ற விளம்பரங்களை புகுத்தி, பயனர்களை நீண்ட நேரம் செயலியை பயன்படுத்த வைத்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வந்துள்ளது. இதுபோன்ற செயல் புல் மெத்தட் என அழைக்கப்படுகிறது. ட்ரோஜன் ஹோர்ஸ் அப்டேட் மூலம் ஜியோணி நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ. 31.5 கோடி வரை வருவாய் ஈட்டி இருக்கிறது.
குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து சு லி, ஷூ யிங், ஜியா ஹென்குயிங் மற்றும் பான் குயி உள்ளிட்ட நிர்வாக அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு 3 முதல் 3.5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் இந்திய மதிப்பில் ரூ. 22,60,428 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.






