என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இது அந்நிறுவனத்தின் பிளாக்ஷிப் மாடல் என கூறப்படுகிறது.
புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன் XT2125 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் நியோ எனும் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், மூன்று கேமரா சென்சார், இருவித ரேம் மற்றும் மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

மோட்டோரோலா நியோ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
- 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2520 பிக்சல் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- ஆண்ட்ராய்டு 11
- 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
- 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
- 64 எம்பி பிரைமரி கேமரா
- 16 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
- 2 எம்பி டெப்த் சென்சார்
- பன்ச் ஹோல் 16 எம்பி சென்சார்
- யுஎஸ்பி டைப் சி
- வைபை, ப்ளூடூத் 5
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- பாஸ்ட் சார்ஜிங் வசதி
சீல் செய்யப்பட்ட சூப்பர் மேரியோ ப்ரோஸ் 3 இந்திய மதிப்பில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.
சூப்பர் மேரியோ ப்ரோஸ் 3 சீல் செய்யப்பட்ட வீடியோ கேம் 1,56,000 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,15,48,758 விலைக்கு ஏலம் விடப்பட்டு இருக்கிறது. வீடியோ கேம் ஏல விற்பனை வரலாற்றில் இத்தனை கோடிகளுக்கு ஏலம் போன வீடியோ கேம் இது தான் என எக்ஸ்ப்ளிகா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நவம்பர் 20 ஆம் தேதி இந்த கேமிற்கான ஏலம் நடைபெற்றது. இந்த வீடியோ கேமிற்கான துவக்க விலை 62 ஆயிரம் டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் மொத்தம் 20 பேர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சூப்பர் மேரியோ ப்ரோ என்இஎஸ் 11400 டாலர்களுக்கு ஏலம் போனது. அந்த வகையில் இம்முறை இதுவரை இல்லாத அளவு அதிக தொகைக்கு வீடியோ கேம் விற்பனையாகி இருக்கிறது.
வீடியோ கேம் ஏல தொகை இத்தனை லட்சம் டாலர்கள் வரை சென்று இருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என ஹெரிடேஜ் ஆக்ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
கூகுள் நிறுவனம் தடை செய்யப்பட்ட தரவுகளை நீக்க தவறி விட்டதாக கூறி ரஷியா வழக்கு தொடர்ந்து இருக்கிறது.
இணைய தேடலில் அமெரிக்காவை சேர்ந்த கூகுள் நிறுவனத்தின் ‘கூகுள் சர்ச்’ தேடுபொறி பயனாளர்களின் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ரஷியாவில் ‘கூகுள் சர்ச்’ தேடுபொறி தடை செய்யப்பட்ட உள்ளடக்கங்களை நீக்க தவறி விட்டதாக கூறி கூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுகுறித்து ரஷியாவின் தகவல் கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் “பயங்கரவாதம், ஆபாசம் மற்றும் தற்கொலையை தூண்டுவது உள்ளிட்ட ஆபத்தான தரவுகளை அகற்ற கூகுள் தவறிவிட்டது.
எனவே கூகுள் நிறுவனத்துக்கு எதிராக ரஷிய அரசு நிர்வாக நடவடிக்கைகளை துவங்கி உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது மட்டுமல்லாமல் 65 ஆயிரத்து 670 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 48 லட்சத்து 60 ஆயிரம்) அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
ஸ்னாப்சாட் நிறுவனம் அதிரடி பரிசு தொகையுடன் ஸ்பாட்லைட் பெயரில் புதிய சேவையை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஸ்னாப் நிறுவனம் டிக்டாக் போன்று செயல்படும் புதிய அம்சத்தை ஸ்பாட்லைட் எனும் பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தங்களின் மிகவும் பொழுதுபோக்கான ஸ்னாப்களை பதிவு செய்து பரிசு வென்றிட வழி செய்கிறது.
ஸ்பாட்லைட் சேவையை பயன்படுத்த வைக்கும் நோக்கில் ஸ்னாப்சாட் அதிகபட்சம் 1 மில்லியன் டாலர்கள் வரையிலான பரிசு தொகையை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வோர் குறைந்தபட்சம் 16 வயதுடையவராக இருக்க வேண்டும்.

மேலும் ஸ்னாப் அறிவித்து இருக்கும் வழிமுறைகளை சரியாக பின்பற்றியிருக்க வேண்டும். வீடியோக்கள் 60 நொடிகளில் செங்குத்தாக சவுண்ட் சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும். புகைப்படங்கள், செங்குத்தாக இருக்கும் படங்கள், தெளிவற்ற படங்கள், எழுத்துக்கள் மட்டும் அடங்கிய ஸ்னாப்கள் ஸ்பாட்லைட்டில் இடம்பெறாது.
பயனர்கள் கேமரா ரோலில் இருந்தபடி ஸ்பாட்லைட்டிற்கு பதிவு செய்ய முடியும். இதற்கு பயனர்கள் Send To பக்கத்தில் #topic என குறிப்பிட்டு தங்களின் சிறந்த ஸ்னாப்களை அனுப்பலாம். எனினும், நாள் ஒன்றிற்கு இத்தனை பதிவுகள் தான என கட்டுப்பாடுகள் உள்ளன.
தற்சமயம் ஸ்னாப்சாட் ஸ்பாட்லைட் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஐயர்லாந்து, நார்வே, ஸ்வீடன், டென்மார்க், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் மட்டும் கிடைக்கிறது. விரைவில் இது மற்ற நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.
ரெட்மி நோட் 9 சீரிசுக்கு போட்டியாக உருவாகும் லெனோவோ ஸ்மார்ட்போன் சீரிஸ் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
லெனோவோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது. லெனோவோ புது ஸ்மார்ட்போன் சீரிஸ் நவம்பர் 26 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகிறது.
புதிய லெனோவோ ஸ்மார்ட்போன்கள் லெமன் சீரிஸ் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. டீசர்களின் படி மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என தெரிகிறது. மேலும் இது பார்க்க தலைகீழாக ரெட்மி டீசர் போன்றே காட்சியளிக்கிறது.

லெனோவோ லெமன் சீரிஸ் மாடல்கள் குறைந்த விலையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இது அதிக வரவேற்பை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் லெனோனோ நிறுவனம் லெமன் பிராண்டு ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் விற்பனை செய்து வந்தது.
எனினும், இவற்றின் விற்பனை ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டது. அந்த வகையில் இந்த பிராண்டு மீண்டும் விற்பனைக்கு வர இருப்பது தெரியவந்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஜூம் சேவையுடனான போட்டியை எதிர்கொள்ள அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையில் நாள் முழுக்க இலவச வீடியோ மற்றும் வாய்ஸ் கால் வசதியை வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பு ஜூம் சேவையுடனான போட்டியை எதிர்கொள்ளும் வகையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய அறிவிப்பின் படி மைக்ரோசாப்ட் டீம்ஸ் இலவச சேவையில் அதிகபட்சம் 300 பேர் வரை கலந்து கொண்டு சுமார் 24 மணி நேரத்திற்கு உரையாட முடியும். சமீபத்தில் Thanksgiving தினத்தை முன்னிட்டு ஜூம் தனது சேவையில் 40 நிமிடங்களுக்கு வழங்கப்பட்ட சேவையை தற்காலிகமாக நீக்குவதாக அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் ஜூம் சேவை அறிவிப்பை தொடர்ந்து மைக்ரோசாப்ட் இலவச அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இலவச சேவை மட்டுமின்றி மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையில் அதிகபட்சம் 249 பேருடன் சாட் செய்யும் வசதி, 49 பேருடன் விர்ச்சுவல் உரையாடல்களை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் வசதியை வழங்கும் அப்டேட் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது.
நாள் முழுக்க வீடியோ காலிங் வசதியுடன் மைக்ரோசாப்ட் டீம்ஸ் ஜூம் சேவையை பயன்படுத்துவோரை ஈர்க்க முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. புதிய இலவச சேவை வசதியை மைக்ரோசாப்ட் தனது வலைதள பதிவின் மூலம் அறிவித்து இருக்கிறது.
2020 ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டுகள் இவை தான் என நார்டுபாஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
2020 ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டுகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி இந்த ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்டு ‘123456' என நார்டுபாஸ் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பாஸ்வேர்டு சுமார் 2.3 கோடி முறை பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
உலகம் முழுக்க பெரும்பாலானோர் ‘123456' பாஸ்வேர்டை பயன்படுத்தி இருக்கின்றனர். நார்டுபாஸ் வெளியிட்டு இருக்கும் மோசமான பாஸ்வேர்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 200 பாஸ்வேர்டுகள் இடம்பெற்று இருக்கும். இந்த வரிசையில் இரண்டாவது மோசமான பாஸ்வேர்டு ‘123456789' இருக்கிறது. மூன்றாவது இடத்தில் ‘picture1' இருக்கிறது.

2015 ஆண்டு வாக்கில் வெளியான இதேபோன்ற அறிக்கையில் மென்பொருள் ஆய்வு நிறுவனம் மோசமான பாஸ்வேர்டுகளை பட்டியலிட்டது. அப்போதும் ‘123456' முதலிடம் பிடித்து இருந்தது. இதைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ‘password' இருந்தது.
தற்சமயம் ஐந்து ஆண்டுகள் கழிந்தும் மோசமான பாஸ்வேர்டுகள் பட்டியலில் ‘123456' முதலிடம் பிடித்து இருக்கிறது. ‘password' இம்முறை நான்காவது இடத்தில் உள்ளது. இந்த அறிக்கையின் மூலம் மக்கள் மிக எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள கூடிய பாஸ்வேர்டுகளை அதிகம் விரும்புவது தெளிவாக தெரிகிறது.
சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிராக அவதூறு கருத்து பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் ட்விட்டர் நிறுவனத்திடம் நாடாளுமன்றக்குழு விசாரணை.
அர்ணாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் தலைமை நீதிபதிக்கு எதிராக பிரபல நகைச்சுவை கலைஞர் குணால் காம்ரா, ட்விட்டர் தளத்தில் அவதூறு கருத்து வெளியிட்டு இருந்தார். இதற்காக அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் தகவல் பாதுகாப்பு மசோதா தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக ட்விட்டர் நிறுவன பிரதிநிதிகள் நேற்று நாடாளுமன்றக்குழு முன் ஆஜராகி இருந்தனர். அப்போது அவர்களிடம் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் தலைமை நீதிபதிக்கு எதிராக இத்தகைய அவதூறு கருத்துகளை வெளியிட அனுமதித்தது ஏன்? என நாடாளுமன்றக்குழு உறுப்பினர்கள் விசாரணை நடத்தினர்.

பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக 7 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கு, நாடாளுமன்றக்குழு உத்தரவிட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்றக்குழு தலைவர் மீனாட்சி லெகி, சுப்ரீம் கோர்ட்டு மற்றும் தலைமை நீதிபதிக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட ட்விட்டர் நிறுவனம் தனது தளத்தை அனுமதித்து இருப்பது அவமானத்துக்குரியது என்று தெரிவித்தார்.
லடாக்கை சீனாவுடன் இணைத்து வரைபடம் வெளியிட்டதற்காக ட்விட்டர் நிறுவனம் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டிருந்த நிலையில், நகைச்சுவை கலைஞர் விவகாரத்தில் மீண்டும் அது விசாரணைக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை வர்த்தக வெளியீடு பற்றி மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் விரைவில் முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 4ஜி சேவை அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இதுவரை முடிவு செய்யப்படவில்லை. எனினும், அரசாங்கம் விரைவில் இதுபற்றிய அறிவிப்பை வெளியிடும் என தெரிகிறது.
வர்த்தக ரீதியில் 4ஜி வெளியீட்டு விவகாரத்தில் நாங்கள் எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்க முடியாது. மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் தான் இதுபற்றிய இறுதி முடிவை எடுக்க வேண்டும் என மூத்த அதிகாரி ஒருவர் தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

ஏற்கனவே இதுபற்றி மத்திய அமைச்சகத்திற்கு பிஎஸ்என்எல் சார்பில் பதில் அளிக்கப்பட்டு விட்டது. எனினும், இதற்கு எம்பவர்டு டெக்னாலஜி குரூப் பரிந்துரை வழங்க வேண்டும்.
ரிலையன்ஸ் ஜியோவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் திறன் இருந்தும் மத்திய அரசு பிஎஸ்என்எல் சலுகை விஷயத்தில் அலட்சியம் காட்டி வருவதாக கூறி பிஎஸ்என்எல் அதிகாரிகள் நவம்பர் 26 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளனர்.
இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ 2016 ஆண்டு வாக்கில் குறைந்த விலை டேட்டா வழங்கும் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து களமிறங்கியது. தற்சமயம் டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக உருவெடுத்து இருப்பதோடு டெலிகாம் சந்தையை முழுமையாக மாற்றியமைத்து இருக்கிறது.
இந்தியாவில் பண்டிகை காலக்கட்டத்தில் ரியல்மி பிராண்டு பல லட்சம் சாதனங்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்து இருக்கிறது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி இந்திய சந்தையில் சமீபத்திய பண்டிகை காலக்கட்டத்தில் மட்டும் ரியல்மி நிறுவனம் சுமார் 83 லட்சம் யூனிட்களை விற்பனை செய்ததாக அறிவித்து உள்ளது. இது கடந்த ஆண்டு பண்டிகை காலத்துடன் ஒப்பிடும் போது 20 சதவீதம் அதிகம் ஆகும்.
உலகில் ஐந்து கோடி சாதனங்களை வேகமாக விற்பனை செய்த பிராண்டாக ரியல்மி இருக்கிறது. இந்த விற்பனையில் மூன்று கோடி சாதனங்கள் இந்தியாவில் மட்டும் விற்பனையாகி இருக்கிறது. தொடர்ச்சியாக ஐந்து காலாண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் பிராண்டாக ரியல்மி இருக்கிறது.

ரியல்மி நிறுவனத்தின் dare to leap நிலைப்பாடு காரணமாக வெளியான 30 மாதங்களில் வேகமான வளர்ச்சியை பெற முடிந்ததாக ரியல்மி தெரிவித்து உள்ளது. 2020 ஆண்டில் ரியல்மி பிராண்டு 50 இண்டர்நெட் ஆப் திங்ஸ் சாதனங்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
2021 ஆண்டு இந்த எண்ணிக்கையை இருமடங்கு அதிகரிக்க ரியல்மி திட்டமிட்டு இருக்கிறது. ரியல்மி டிசைன் ஸ்டூடியோவில் உலக தரம் மிக்க வடிவமைப்பாளர்களுடன் கூட்டு சேர்ந்து பணியாற்றியதால் ஐந்து விருதுகளை ரியல்மி பிராண்டு சர்வதேச சந்தையில் வென்று இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் மாணவர்களுக்கு விசேஷ தள்ளுபடி வழங்கும் சிறப்பு திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு Education Benefits பெயரில் அசத்தல் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையில் ஒன்பிளஸ் சாதனங்களை வாங்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விசேஷ தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் இந்தியா முழுக்க 760 பல்கலைக்கழகங்கள் மற்றும் 38,498 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. ஒன்பிளஸ் Education Benefits திட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அல்லது ஒன்பிளஸ் டிவி வாங்கும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி பெற முடியும்.

இதுதவிர கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் செல்வோர் ஒன்பிளஸ் அக்சஸரீ வாங்கும் போது ஐந்து சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும். இந்த சலுகை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் பொருந்தும். சலுகையில் பயன்பெற முதலில் கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
தற்போதைய கல்வியாண்டில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுகிறது. மேலும் இதனை ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும். ஐந்து சதவீத தள்ளுபடி ஆடியோ சாதனங்கள், கேஸ் மற்றும் ப்ரோடக்ஷன் உள்ளிட்டவைகளுக்கு பொருந்தும்.
வோடபோன் நிறுவனம் செலுத்த வேண்டிய வரி விவகாரத்தில் மத்திய அரசு கூடுதல் அவகாசம் வேண்டும் என கேட்டுள்ளது.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன், சில ஆண்டுகளுக்கு முன்பு, ஹட்சிசன் என்ற மற்றொரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகளை 1,100 கோடி டாலருக்கு விலைக்கு வாங்கியது. இதற்காக, ரூ.22 ஆயிரத்து 100 கோடி வரி செலுத்த வேண்டும் என்று வோடபோனுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் வோடபோன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வோடபோன் செயலுக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இதற்கிடையே, சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் வோடபோனுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறதா? அல்லது எதிர்ப்பு தெரிவிக்கிறதா? என்று கடந்த மாதம் 7-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. இந்த நிலையில், நேற்று நீதிபதிகள் ராஜீவ் சஹாய் எண்ட்லா, ஆஷா மேனன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மா, “மத்திய அரசின் அதிகார குழு இன்னும் கூடாததால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆகவே, முடிவு எடுக்க 2 வாரம் கால அவகாசம் வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அதை ஏற்ற நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 8-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.






