என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
ஹூவாய் நிறுவனம் தனது ஹானர் பிராண்டை விற்பனை செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
சீனாவை சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய், தனது ஹானர் ஸ்மார்ட்போன் பிராண்டை விற்பனை செய்வதாக அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் ஹூவாய் நிறுவனம் தனது வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்ய திட்டமிட்டு இருக்கிறது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மற்றும் செயலிகள் மக்களின் தரவுகளை திருடுவது மற்றும் கண்காணிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதையே காரணம் காட்டி அமெரிக்காவில் ஹுவாய் டெலிகாம் உபகரணங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் காரணமாக ஹூவாய் நிறுவனத்தின் மீதான தடை நீங்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் ஹானர் பிராண்டை விற்கும் முடிவை ஹூவாய் எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஹானர் பிராண்டு விற்பனை பற்றிய வர்த்தக விவரங்கள் வெளியாகவில்லை.
தற்சமயம் ஹானர் பிராண்டை மட்டும் விற்பனை செய்துவிட்டு, ஹூவாய் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பிரிவில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சாம்சங், ஆப்பிள் போன்ற நிறுவனங்களுக்கு ஹூவாய் கடும் போட்டியை ஏற்படுத்தலாம்.
ஏற்கனவே வெளியான தகவல்களின் படி ஹானர் பிராண்டை ஷென்சென் பகுதியை ஒட்டிய தெற்கு நகர அரசாங்கம் அமைத்த நிறுவனம் வாங்க இருப்பதாக தெரிகிறது. ஹூவாய் தனது ஹானர் பிராண்டை இந்திய மதிப்பில் ரூ. 1,13,300 கோடிகளுக்கு விற்பனை செய்யும் என கூறப்படுகிறது.
டூயல் கேமரா சென்சார் மற்றும் 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனினை இம்மாத இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளில் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
அந்த வரிசையில் தற்சமயம் இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், அதிகபட்சம் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி, 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் மற்றும் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
சர்வதேச சந்தையில் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனின் விலை 119 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 10,500 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் சார்கோல், டஸ்க் மற்றும் ஜோர்ட் நிறங்களில் கிடைக்கிறது.
இன்ஸ்டாகிராம் ஹோம் ஸ்கிரீனில் இரண்டு அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இதன் விவரங்களை பார்ப்போம்.
இன்ஸ்டாகிராம் செயலியில் புது அப்டேட் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி இன்ஸ்டா ஹோம் ஸ்கிரீனில் ரீல்ஸ் மற்றும் ஷாப் அம்சங்களுக்கான டேப்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
ரீல்ஸ் மற்றும் ஷாப் போன்ற அம்சங்களை தொடர்ந்து அதிக பயனர்கள் பயன்படுத்தியதே இந்த அப்டேட்டிற்கு முக்கிய காரணியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் தனது ஹோம் ஸ்கிரீனில் மாற்றம் செய்து சில காலம் ஆகிவிட்டது. புதிய அப்டேட்டில் ரீல்ஸ் மற்றும் ஷாப் டேப்கள் ஹோம் ஸ்கிரீனின் கீழ்புறத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே இந்த பகுதியில் காணப்பட்ட நியூ போஸ்ட் மற்றும் போஸ்ட் லைக் ஹிஸ்ட்ரி உள்ளிட்டவைகளுக்கான டேப்கள் நீக்கப்பட்டு உள்ளன.
இந்திய சந்தையில் மீண்டும் பப்ஜி மொபைல் கேம் வெளியாக இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் மீண்டும் வெளியாக இருக்கிறது. முன்னதாக பப்ஜி மொபைல் கேமிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பப்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் கேமினை இந்திய எல்லைக்குள் முழுமையாக முடக்கியது. பின் இந்த கேம் மீண்டும் வெளியாக இருப்பதாக பலமுறை தகவல்கள் வெளியாகி வந்தன.
தற்சமயம் பப்ஜி கார்ப்பரேஷன் பப்ஜி மொபைல் இந்தியா கேமினை இந்திய சந்தையில் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்த கேம் இந்தியர்களுக்காக கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கும் என பப்ஜி கார்ப்பரேஷன் அறிவித்து உள்ளது.

இம்முறை பப்ஜி விளையாடும் இளம் கேமர்கள் பரிந்துரைக்கப்பட்ட கேம்பிளே வழக்கங்களில் ஈடுபட கட்டுப்பாடுகள் இருக்கும். மேலும் கேம் விர்ச்சுவல் சிமுலேஷன் டிரெய்னிங் கிரவுண்டில் துவங்கி கேம் கதாபாத்திரங்கள் ஆடை அணிந்து கொள்ளும் வகையில் செட் செய்யப்பட்டு இருக்கும்.
இதுதவிர பப்ஜி கார்ப்பரேஷன் தாய் நிறுவனமான கிராப்டன் இன்க் இந்தியாவில் உள்ளூர் வீடியோ கேம், பொழுதுபோக்கு, இ ஸ்போர்ட்ஸ் மற்றும் ஐடி துறையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் 100 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய அப்டேட் அந்த வசதியையும் வழங்குகிறது.
வாட்ஸ்அப் செயலியில் ஷாப்பிங் பட்டன் வசதியை பேஸ்புக் நிறுவனம் தனது அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த வசதி இந்தியா உள்பட பல்வேறு இதர நாடுகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.
ஷாப்பிங் பட்டன் வசதியில் சாட் செய்வதை போன்றே பொருட்களை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். மேலும் இந்த அம்சம் பயனர்கள் வியாபாரங்கள் வழங்கும் பொருட்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளவும் வழி செய்கிறது.

முன்னதாக இதுபோன்ற அம்சத்தை இயக்க பயனர்கள் அந்தந்த வியாபாரங்களின் பிஸ்னஸ் ப்ரோபைலை க்ளிக் செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது. தற்சமயம் ஷாப்பிங் பட்டனை பார்த்ததும், பயனர்கள் க்ளிக் செய்து குறிப்பிட்ட வியாபார பொருட்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
இந்த அம்சம் பயனர்கள் மட்டுமின்றி வியாபாரங்கள் தங்களின் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவியாக இருக்கும். இதன் மூலம் விற்பனை அதிகரிக்கும்.
புதிய ஷாப்பிங் பட்டன் வாட்ஸ்அப் பிஸ்னஸ் அக்கவுண்ட் சாட் ஸ்கிரீன்களில் மட்டுமே காணப்படும். அந்த வகையில், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சாட் ஸ்கிரீனில் ஷாப்பிங் பட்டன் இடம்பெறாது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுக்க யூடியூப் சேவை பலருக்கு இயங்காமல் போனது.
கூகுள் நிறுவனத்தின் வீடியோ தளமான யூடியூப் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. இதன் காரணமாக பயனர்களால் யூடியூப் வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியவில்லை.
யூடியூபில் வீடியோக்களை க்ளிக் செய்தால், அது சீராக லோட் ஆனது. எனினும், வீடியோ பிளே ஆகாமல் பபர் ஆனதால் பயனர்கள் கோபமுற்றனர். பலர் தங்களின் கோபத்தை சமூக வலைதளத்தில் பதிவுகளாகவும். சிலர் யூடியூபை கேலி செய்யும் மீம்களுடன் வெளிப்படுத்தினர்.
சேவையில் தடங்கல் ஏற்பட்டதை உறுதிப்படுத்திய யூடியூப் தனது தளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிவித்தது. பின் சிறிது நேரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டது, தடங்கலுக்கு வருந்துகிறோம் என யூடியூப் தெரிவித்தது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமுறை மேக் மாடல்களின் இந்திய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனத்தின் One More Thing நிகழ்வில் புதிய மேக்புக் ஏர், மேக் மினி மற்றும் மேக்புக் ப்ரோ மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவை அனைத்திலும் அந்நிறுவனத்தின் புதிய எம்1 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மேக் சாதனங்களை இதுவரை இல்லாத வகையில் திறன் மிக்கதாக மாற்றி இருக்கிறது.
சர்வதேச அறிமுக நிகழ்வை தொடர்ந்து புதிய மேக் சாதனங்களின் இந்திய விலை விவரங்களும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
அந்த வகையில் புதிய மேக்புக் ஏர் விலை ரூ. 92,900 முதல் துவங்குகிறது. இதன் 512 ஜிபி மாடல் விலை ரூ. 1,171,900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இது முந்தைய மேக்புக் ஏர் மாடல்களை விட குறைந்த விலை ஆகும். இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.

மேக் மினி 256 ஜிபி மாடல் விலை ரூ. 64,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் 512 ஜிபி விலை ரூ. 84,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.
மேக்புக் ப்ரோ 13 இன்ச் 256 ஜிபி எஸ்எஸ்டி மாடல் விலை ரூ. 1,22,900 என்றும் 512ஜிபி எஸ்எஸ்டி மாடல் விலை ரூ. 1,42,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. விற்பனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம்.
ஆப்பிள் நிறுவன நிகழ்வில் அந்நிறுவனம் அறிமுகம் செய்த புதிய சாதனங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனத்தின் One More Thing நிகழ்வில் புதிய கம்ப்யூட்டிங் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முதலில் ஆப்பிள் தனது சக்திவாய்ந்த அதிநவீன எம்1 சிப்செட்டை அறிமுகம் செய்தது.
புதிய எம்1 5நானோமீட்டர் முறையில் உருவான முதல் கம்ப்யூட்டிங் சிப் ஆகும். இதில் 16 மில்லியன் டிரான்சிஸ்டர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இது உலகின் அதிவேக கோர் ஆகும். இதில் 8 கோர் சிபியு மற்றும் 8 கோர் ஜிபியு வழங்கப்பட்டு உள்ளது.

புதிய பிராசஸருடன் இணைந்து செயல்பட ஏதுவாக மேக் ஒஎஸ் பிக் சர் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது புதிய சிப்செட் வழங்கும் செயல்திறனை சீராக இயக்க வழி செய்கிறது. மேலும் இது பயனர் தரவுகளை மற்ற கம்ப்யூட்டர்களை விட சிறப்பாக பாதுகாக்கும் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதைத் தொடர்ந்து மேக்புக் ஏர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இது புதிய எம்1 சிப் கொண்டு வெளியான முதல் மேக் சாதனம் ஆகும்.
புதிய மேக்புக் ஏர் இது முந்தைய மாடலை 3.5 மடங்கு சிறப்பான சிபியு மற்றும் 5 மடங்கு வேகமான ஜிபியு திறன் கொண்டுள்ளது. இத்துடன் 13.3 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே, அதிகபட்சமாக 16 ஜிபி ரேம், 2 டிபி வரையிலான எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.

மேலும் தண்டர்போல்ட் / யுஎஸ்பி 4, டச் ஐடி, வைபை 6, செக்யூட்டி என்கிளேவ் அம்சம், ஐபோன் மற்றும் ஐபேட் செயலிகளை இயக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. புதிய மேக்புக் ஏர் மாடல் துவக்க விலை 999 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பின் எம்1 சிப் கொண்ட மேம்பட்ட மேக் மினி மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது. மேக் மினி மாடலில் 3 மடங்கு வேகமான சிபியு, 8 கோர் ஜிபியு வழங்கப்பட்டு இருக்கிறது. இது முன்பை விட ஆறு மடங்கு வேகமான கிராபிக்ஸ் அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் நியூரல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை புதிய மேக் மினி மாடலில் ஈத்தர்நெட், யுஎஸ்பி 4 / தண்டர்போல்ட், ஹெச்டிஎம்ஐ 2.0, யுஎஸ்பி ஏ, ப்ரோ டிஸ்ப்ளே எக்ஸ்டிஆர் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. புதிய மேக் மினி மாடல் விலை 699 டாலர்கள் முதல் துவங்குகிறது.

இதே வரிசையில் புதிய 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலும் புதிய எம்1 சிப் உடன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மேக்புக் ப்ரோ மாடலில் அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 2 டிபி வரையிலான எஸ்எஸ்டி வசதி, தண்டர்போல்ட் / யுஎஸ்பி 4, டச் ஐடி, வைபை 6 போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதில் உள்ள பேட்டரி அதிகபட்சம் 20 மணி நேர பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதிய மேக்புக் ப்ரோ மேஜிக் கீபோர்டு, டச் பார், முன்பை விட 11 மடங்கு அதி வேகமான மெஷின் லெர்னிங் திறன் கொண்டிருக்கிறது. மேம்பட்ட மேக்புக் ப்ரோ மாடல் விலை 1299 டாலர்கள் முதல் துவங்குகிறது.
ஆப்பிள் நிறுவனம் சக்திவாய்ந்த எம்1 சிப் கொண்ட புதிய 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மேக்புக் ப்ரோ 13.3 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே, ஆப்பிள் எம்1 சிப், நியூரல் என்ஜின், ஆக்டிவ் கூலிங் சிஸ்டம் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
மேலும் இதில் ஸ்டூடியோ தர மைக்ரோபோன், தலைசிறந்த கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிக் சர் மற்றும் செக்யூர் என்கிளேவ் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இது மேக்புக் ப்ரோ மாடலை பாதுகாப்பானதாக மாற்றுகிறது.

இவற்றுடன் அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 2 டிபி வரையிலான எஸ்எஸ்டி வசதி, தண்டர்போல்ட் / யுஎஸ்பி 4, டச் ஐடி, வைபை 6 போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில் உள்ள பேட்டரி அதிகபட்சம் 20 மணி நேர பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய மேக்புக் ப்ரோ மேஜிக் கீபோர்டு, டச் பார், முன்பை விட 11 மடங்கு அதிவேகமான மெஷின் லெர்னிங் திறன் கொண்டிருக்கிறது. மேம்பட்ட மேக்புக் ப்ரோ மாடல் விலை 1299 டாலர்கள் முதல் துவங்குகிறது.
ரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸருடன் உருவாகி வருகிறது.
ரியல்மி நிறுவனம் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருகிறது. இதில் RMX2194 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகும் ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருக்கிறது.
இது ரியல்மியின் புதிய ஸ்மார்ட்போனா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், பென்ச்மார்க் விவரங்களில் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. இந்த பிராசஸர் 11 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 8 கோர்கள் 240 க்ரியோ மற்றும் அட்ரினோ 610 ஜிபியு கொண்டிருக்கிறது. இத்துடன் 4ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.
ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வழங்கப்படுவதால் இது என்ட்ரி லெவல் ரியல்மி சி சீரிஸ் மாடலாக இருக்கும் என தெரிகிறது. தற்சமயம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் கொண்ட இரு ஸ்மார்ட்போன்களை ரியல்மி விற்பனை செய்து வருகிறது. இவை ரியல்மி சி17 மற்றும் ரியல்மி சி15 என அழைக்கப்படுகின்றன.
இந்தியாவில் வாட்ஸ்அப் பேமெண்ட் சேவைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது உற்சாகம் அளிப்பதாக0 மார்க் ஜூக்கர்பர்க் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
வாட்ஸ்அப் செயலியில் பேமெண்ட் வசதியை வழங்க தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் அனுமதி வழங்கி இருக்கிறது. இதன் மூலம் வாட்ஸ்அப் மெசேஜிங் சேவையிலேயே பயனர்கள் உடனுக்குடன் பணம் அனுப்ப முடியும்.
வாட்ஸ்அப் பயன்படுத்தும் இரண்டு கோடி பேருக்கு முதற்கட்டமாக வாட்ஸ்அப் பேமெண்ட் வசதி வழங்கப்பட இருக்கிறது. இந்தியாவில் 2018 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட பேமெண்ட் வசதிக்கு தற்சமயம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. புதிய பேமெண்ட் வசதியை பயனர்கள் சாட் பாக்சில் இருந்தபடி பயன்படுத்த முடியும்.

இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் பேமெண்ட் வசதி வழங்கப்பட்டு இருப்பது பற்றி பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் கருத்து தெரிவித்து இருக்கிறார். இந்தியாவில் வாட்ஸ்அப் பேமெண்ட் வசதிக்கு அனுமதியளிக்கப்பட்டு இருப்பது உற்சாக உணர்வை ஏற்படுத்துகிறது என தெரிவித்தார்.
குறுந்தகவல் அனுப்புவதை போன்றே வாட்ஸ்அப் செயலி மூலம் பணம் அனுப்ப முடியும். இந்த சேவையில் 140-க்கும் அதிகமான வங்கிகள் இணைக்கப்படுகின்றன. வாட்ஸ்அப் என்பதால் பண பரிமாற்றங்கள் பாதுகாப்பாகவும் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஒப்போ மற்றும் சியோமி நிறுவனங்கள் சாம்சங் சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கின்றன.
சியோமி மற்றும் ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களில் சாம்சங் நிறுவனத்தின் எக்சைனோஸ் சிப்செட் வழங்கப்பட இருக்கின்றன.
அதன்படி 2021 வாக்கில் அறிமுகமாக இருக்கும் ஒப்போ மற்றும் சியோமி நிறுவன ஸ்மார்ட்போன்களில் எக்சைனோஸ் சிப்செட் வழங்கப்பட இருக்கிறது. தற்சமயம் விவோ நிறுவனம் மட்டும் எக்சைனோஸ் சிப்செட்களை பயன்படுத்தி வருகிறது.

அந்த வகையில் சியோமி மற்றும் ஒப்போ நிறுவனங்களும் எக்சைனோஸ் சிப்செட் கொண்ட மாடல்களை விரைவில் வெளியிட இருக்கின்றன. குவால்காம் மற்றும் மீடியாடெக் நிறுவனங்களை தவிர்த்து எக்சைனோஸ் சிப்செட்டை தேர்வு செய்ய அதன் விலை தான் முக்கிய காரணியாக இருக்கலாம் என தெரிகிறது.






