என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய போஸ்ட்பெயிட் சலுகைகளை அறிமுகம் செய்ய இருக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் டிசம்பர் 1 ஆம் தேதி புதிய போஸ்ட்பெயிட் சலுகைகளை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 798 மற்றும் ரூ. 999 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இரண்டு புதிய சலுகைகளிலும் டேட்டா மற்றும் டாக்டைம் தவிர பல்வேறு இதர பலன்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. புதிய சலுகைகள் தவிர ரூ. 199 போஸ்ட்பெயிட் சலுகை மாற்றம் செய்யப்பட்டு டேட்டா ரோல்ஓவர் பலன்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

பிஎஸ்என்எல் புதிய சலுகைகள் அறிமுகமானதும் ரூ. 99, ரூ. 225, ரூ. 325, ரூ. 799 மற்றும் ரூ. 1125 விலை சலுகைகள் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. பிஎஸ்என்எல் ரூ. 798 போஸ்ட்பெயிட் சலுகை நாடு முழுக்க அனைத்து வட்டாரங்களிலும் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த சலுகையில் மாதம் 50 ஜிபி டேட்டா, 150 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் வசதி, தினமும் 100 எஸ்எம்எஸ், இரண்டு குடும்ப உறுப்பினர்களுக்கு ஆட் ஆன் இணைப்புகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
பிஎஸ்என்எல் ரூ. 999 சலுகையில் மாதம் 75 ஜிபி டேட்டா, 225ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் வசதி, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் மூன்று குடும்ப உறுப்பினர்களுக்கு ஆட் ஆன் இணைப்புகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் வாட்ஸ்அப் செயலி மூலம் பணம் அனுப்பும் புதிய சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் யுபிஐ சேவையை வழங்கி வரும் தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் வாட்ஸ்அப் பே சேவைக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் செயலியில் இருந்தபடி பணம் அனுப்ப முடியும். முதற்கட்டமாக இந்த அம்சம் 2 கோடி பேருக்கு வழங்கப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட இந்த அம்சம் தற்சமயம் படிப்படியாக பயன்பாட்டிற்கு வருகிறது. புதிய அம்சம் வாட்ஸ்அப் சாட் பாக்சில் இருந்தபடி பயனர்கள் மற்றவர்களுக்கு பணம் அனுப்பும் வசதியை வழங்குகிறது.
பணம் அனுப்புவது மட்டுமின்றி பண பரிமாற்ற விவரங்கள், முந்தைய பரிமாற்ற தகவல்கள் உள்ளிட்டவைகளை எப்போது வேண்டுமானாலும் பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது.

வாட்ஸ்அப் பே அம்சத்தை இயக்குவது எப்படி?
- முதலில் காண்டாக்ட்டில் யாருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்
- அடுத்து வாட்ஸ்அப் செயலியின் சாட் பாக்ஸ் ஆப்ஷனில் இருக்கும் ஷேர் ஃபைல் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்
- இனி டாக்யூமென்ட் மற்றும் கேலரி ஆப்ஷன்களுக்கு இடையில் உள்ள பேமெண்ட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
- பின் அனுப்ப வேண்டிய தொகையை பதிவிட்டு யுபிஐ விவரங்களை உள்ளீடு செய்தால் பணம் அனுப்பப்பட்டு விடும்
இந்திய சந்தையில் பவர் பேங்க் விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளதாக சியோமி நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ஒரு கோடி எம்ஐ பவர் பேங்க் மாடல்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. ஒரு கோடி யூனிட்களும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டவை என சியோமி அறிவித்து உள்ளது.
சீன நிறுவனமான சியோமி 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் பவர் பேங்க் மாடல்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்திய விற்பனை துவங்கிய மூன்று ஆண்டுகளில் ஒரு கோடி யூனிட்களை விற்பனை செய்ததாக அறிவித்து இருக்கிறது.

முன்னதாக காம்பேக்ட் பவர் பேங்க் மாடலின் இந்திய வெளியீட்டை சியோமி அறிவித்த நிலையில், தற்சமயம் புதிய மைல்கல் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒரு கோடி எம்ஐ பவர்பேங்க் விற்பனை விவரங்களை சியோமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்து இருக்கிறது.
இந்தியாவில் சியோமி நிறுவனம் ஐந்து பவர் பேங்க் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதில் எம்ஐ பவர்பேங்க் 3ஐ 20,000 எம்ஏஹெச், எம்ஐ பவர்பேங்க் 3ஐ 10,000 எம்ஏஹெச், எம்ஐ வயர்லெஸ் பவர்பேங்க் 10,000 எம்ஏஹெச், ரெட்மி பவர் பேங்க் 20,000 எம்ஏஹெச் மற்றும் ரெட்மி பவர் பேங்க் 10,000 எம்ஏஹெச் உள்ளிட்டவை அடங்கும்.
இந்தியாவில் விவோ நிறுவன ஸ்மார்ட்போனிற்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் விவோ நிறுவனம் தனது வை91ஐ ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது. புதிய விலை அந்நிறுவன வலைதளத்தில் மாற்றப்பட்டு விட்டது.
விவோ வை91ஐ ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி + 16 ஜிபி, 2 ஜிபி + 32 ஜிபி மற்றும் 3 ஜிபி + 32 ஜிபி போன்ற மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
விலை குறைப்பை தொடர்ந்து விவோ வை91ஐ மாடல் 3 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 8490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை விவோ வலைதளம், அமேசானில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது.

ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த மாடல் ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் பேஸ் மாடல் 2 ஜிபி + 16 ஜிபி மாடல் ரூ. 7490, 2 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 7,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
விவோ வை91ஐ ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ஹாலோ ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஹீலியோ P22 ஆக்டா-கோர் 12 என்.எம். பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.
டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2, 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.8 வழங்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் பிராட்பேண்ட் மற்றும் போஸ்ட்பெயிட் சலுகைகளுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.
ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் மற்றும் போஸ்ட்பெயிட் சலுகைகளுக்கு ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை இலவசமாக வழங்குகிறது. இந்த சலுகை ஏர்டெல் தேங்ஸ் செயலி மூலம் வழங்கப்படுகிறது.
முன்னதாக ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா ரூ. 399, ரூ. 401, ரூ. 612, ரூ. 1208 மற்றும் ரூ. 2599 போன்ற பிரீபெயிட் சலுகைகளுக்கு அறிவிக்கப்பட்டது. ஏர்டெல் போன்றே ஜியோ நிறுவனமும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா கொண்ட சலுகைகளை வழங்கி வருகிறது.

புதிய டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா தேர்வு செய்யப்பட்ட ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது ரூ. 999 மற்றும் அதற்கும் அதிக விலையில் கிடைக்கும் பிராட்பேண்ட் சலுகைகளில் வழங்கப்படுகிறது. போஸ்ட்பெயிட் சலுகைகளில் ரூ. 499 மற்றும் அதற்கும் அதிக விலை சலுகைகளுடன் வழங்கப்படுகிறது.
ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை பயனர்கள் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
சாம்சங் நிறுவனத்திற்கு போட்டியாக சியோமி நிறுவனம் புதிதாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. இதில் 108 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதன் வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெறலாம் என கூறப்படுகிறது.
புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் எம்ஐயுஐ12 குறியீடுகளில் இருந்து கிடைத்து இருக்கிறது. இவற்றை தனியார் செய்தி நிறுவனம் கண்டறிந்து வெளியிட்டு இருக்கிறது. அதன்படி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சீடஸ் எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த எம்ஐயுஐ இயங்குதளம் கொண்டிருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 2021 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், 5ஜி கனெக்டிவிட்டி, 108 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படலாம். இந்த சென்சார் சியோமி தனது எம்ஐ10 சீரிஸ் மாடலில் வழங்கியதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி சாதனங்களை கண்டறியும் புதிய சேவையை அறிமுகம் செய்து உள்ளது.
சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்திங்ஸ் எனும் சேவையை தனது ஸ்மார்ட்திங்ஸ் செயலியில் அறிமுகம் செய்து உள்ளது. இந்த அம்சம் ப்ளூடூத் லோ எனர்ஜி மற்றும் அல்ட்ரா வைடுபேண்ட் கொண்டு இணைக்கப்பட்ட சாம்சங் சாதனங்களை கண்டறிகிறது.
இந்த அம்சம் சாம்சங் ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் வயர்லெஸ் இயர்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் போன்ற சாதனங்களிடையே சீராக இயங்குகிறது. ப்ளூடூத் சார்ந்து இயங்குவதால் இது சாதனம் 30 நிமிடங்கள் வரை ஆப்லைனில் இருந்தாலும் சாதனங்களை கண்டறியும்.

சாதனங்களிடையே தரவுகள் அனைத்தும் என்க்ரிப்ட் செய்யப்பட்டு பரிமாற்றம் செய்யப்படுகிறது. ஸ்மார்ட்திங்ஸ் செயலியினுள் இன்டகிரேட் செய்யப்பட்ட மேப் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு காணாமல் போன சாதனங்களை ரிங் செய்யும் வசதியை வழங்குகிறது.
மேலும் சாதனங்களின் அருகில் இருக்கும் போது சாதனங்களை ஏஆர் சார்ந்த சர்ச் வசதி மூலம் கண்டறிய முடியும். இது சாதனத்தின் அருகில் இருக்கும் போது கலர் கிராபிக்ஸ் திரையில் தோன்றும்.
ஆண்ட்ராய்டு 8 மற்றும் அதற்கும் அதிக இயங்குதளம் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்களில் ஸ்மார்ட்திங்ஸ் பைண்ட் அம்சம் அப்டேட் மூலம் வழங்கப்பட இருக்கிறது.
இந்தியாவின் அதிவேக நெட்வொர்க் விவரங்கள் வெளியாகி உள்ளது. இது ஜியோ பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்திய டெலிகாம் சந்தையில் 2020 ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அதிவேக மொபைல் ஆபரேட்டராக வி (வோடபோன் ஐடியா) இருந்தது.
முன்னணி நிறுவனமான ஜியோ 4ஜி சேவை வழங்குவதில் முதலிடம் பிடித்து இருக்கிறது. நெட்வொர்க் ஆய்வு நிறுவனமான ஊக்லா வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டில் அதிவேக இணைய வசதி ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஏற்ப வேறுபடுகிறது. இதில் ஐதராபாத் அதிவேக டவுன்லோட் வேகம் வழங்கி இருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த டவுன்லோட் வேகம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 11.6 சதவீதம் அதிகரித்து உள்ளது.
ஊக்லா அறிக்கையின் படி வி நிறுவனத்தின் சராசரி டவுன்லோட் வேகம் 13.74Mbps ஆகவும், 6.19Mbps அப்லோட் வேகம் வழங்கி இருந்தது. இதைத் தொடர்ந்து ஏர்டெல் 13.58Mbps டவுன்லோட், 4.15Mbps அப்லோட் வேகம் வழங்கி உள்ளது.
இதே காலக்கட்டத்தில் ஜியோ 9.71Mbps டவுன்லோட் வேகமும், 3.41Mbps அப்லோட் வேகம் வழங்கி இருக்கிறது. நாட்டில் அதிவேக டேட்டா கிடைக்கும் நகரங்கள் பட்டியலில் சென்னை நான்காவது இடத்தில் உள்ளது.
வெளியீடு தாமதம் ஆனதால் ஆத்திரத்தில் கேம் டெவலப்பருக்கு கொலை மிரட்டல் விடுத்த கேமரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கணினி மற்றும் கன்சோல்களில் வெளியாக இருந்த சைபர்பண்க் 2077 கேம் வெளியீடு மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இம்முறை இதன் வெளியீடு நவம்பர் 19 இல் இருந்து டிசம்பர் 10 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
அதிக எதிர்பார்ப்பு உள்ளதால், கேம் வெளியீட்டை தாங்க முடியாத கேமர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆதங்கத்தை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த கேமை உருவாக்கும் சிடி ப்ரோஜெக்ட் நிறுவன பங்குகள் வார்சா பங்கு சந்தையில் 5.25 சதவீதம் சரிவடைந்தது.

தொடர்ந்து கேம் வெளியீடு தாமதமாகி வருவதால், ஒருத்தர் இந்த கேம் ஒருவேளை 2077 ஆண்டில் தான் வெளியாகுமா என கிண்டலாக கேள்வி எழுப்பி உள்ளார். இதுமட்டுமின்றி பலரும் கேம் டெவலப்பர்கள் குறித்து தவறான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிடி ப்ரோஜெக்ட் நிறுவனத்தின் மூத்த கேம்ஸ் டிசைனர் ஆண்ட்ரெஸ் வடஸ்கி கேம் பிரியர்களுக்கு பதில் அளித்துள்ளார்.
அதில், ``உங்களின் கோபம் எனக்கு புரிகிறது, விவகாரத்தில் உங்களது கருத்துக்களை வெளிப்படுத்த நீங்கள் நினைக்கின்றீர்கள். எனினும், டெவலப்பர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது, மேலும் அது முற்றிலும் தவறான நடவடிக்கை. நாங்களும் உங்களை போன்று மனிதர்கள் தான்'' என குறிப்பிட்டுள்ளார்.
அமேசான் தளத்தில் எக்சேன்ஜ் முறையில் புதிய மொபைல் போன் ஆர்டர் செய்தவருக்கு கிடைத்தது இது தான்.
அமேசான் தளத்தில் நவராத்திரி சிறப்பு விற்பனை சமீபத்தில் நடைபெற்றது. இந்த விற்பனை அதிரடி சலுகைகளை வழங்கிய நிலையில், ஷாப்பிங் செய்த பலர் மகிழ்ச்சியுற்ற போதும், சிலருக்கு ஆன்லைன் ஷாப்பிங் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் தனது பழைய மொபைல் போனை எக்சேன்ஜ் செய்து புதிதாக ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் வாங்க அமேசான் தளத்தின் சிறப்பு விற்பனையில் ஆர்டர் செய்தார்.

அதன்படி அவரது பழைய மொபைல் போனை கொடுத்து புதிய போன் அடங்கிய பார்சலை டெலிவரி செய்த ஊழியரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். பின் தனது பார்சலை திறந்தவர் அதனுள் இருந்த ரின் சோப்பை கண்டு அதிர்ந்து போனார். தனக்கு ஏற்பட்ட நிலையை முதலில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இவரது ட்விட்டர் பதிவுக்கு பதில் அளித்த அமேசான் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட பிரச்சினையை 4 முதல் 5 நாட்களுக்குள் தீர்வு செய்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளது.
ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் தீபாவளி சேல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ப்ளிப்கார்ட் நிறுவனம் அடுத்த சில வாரங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மற்றொரு சிறப்பு விற்பனையை நடத்த இருக்கிறது. இந்தியாவில் இந்த சிறப்பு விற்பனை அக்டோபர் 29 ஆம் தேதி துவங்குகிறது.
தற்போதைய அறிவிப்பின் படி தீபாவளி சிறப்பு விற்பனை அக்டோபர் 29 ஆம் தேதி துவங்கி நவம்பர் 4 வரை நடைபெற இருக்கிறது. எனினும், ப்ளிப்கார்ட் பிளஸ் வாடிக்கையாளர்கள் 12 மணி நேரம் முன்னதாகவே சிறப்பு விற்பனையில் பங்கேற்க முடியும்.

பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் 29 ஆம் தேதி நள்ளிரவு முதல் சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது. ப்ளிப்கார்ட் பிக் தீபாவளி 2020 விற்பனை அக்டோபர் 29 மதியம் 12 மணிக்கு நடைபெற இருக்கிறது.
சிறப்பு விற்பனையின் போது மொபைல்கள், டிவி மற்றும் இதர சாதனங்களுக்கு விசேஷ கேஷ்பேக் மற்றும் வங்கி சார்ந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர முந்தைய விற்பனைகளை போன்றே வட்டியில்லா மாத தவணை வசதி, கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
அசத்தலான டீசருடன் பாஜி கேம் இந்திய வெளியீட்டு விவரங்களை என்கோர் கேம்ஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
பாஜி கேம் இந்திய வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த கேமை உருவாக்கி வரும் என்கோர் கேம்ஸ் தனது பாஜி கேம்வெளியீட்டு விவரங்களை தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் அறிவித்து உள்ளது.
பாஜி - பியர்லெஸ் அண்ட் யுனைட்டெட் கார்ட்ஸ் என்ற விரிவாக்கம் கொண்ட கேம் நவம்பர் மாதம் வெளியாகிறது. மேலும் இந்த கேமின் 1 நிமிட டீசர் வீடியோவையும் என்கோர் கேம்ஸ் வெளியிட்டு உள்ளது. டீசரில் புதிய கேம் கிராபிக்ஸ் மற்றும் கேம்பிளே தெரியவந்துள்ளது.

முன்னதாக இந்த கேம் பற்றிய அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியானது. முன்னதாக இந்தியாவில் பப்ஜி கேமிற்கான தடை உத்தரவு வெளியானது. கேம் அறிவிப்பின் போது, இது அக்டோபர் மாத இறுதியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த கேம் வெளியீடு எதிர்பார்க்கப்பட்டவிட மேலும் தாமதமாகும் என தெரிகிறது.
பாஜி கேம்பிளே கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெறும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், வெளியீட்டின் போது இந்த கேமில் பேட்டிள் ராயல் மோட் வழங்கப்படாது என பாஜி இணை நிறுவனர் விஷால் கோண்டல் தெரிவித்து இருக்கிறார்.






