search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்
    X
    சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

    சாம்சங் நிறுவனத்திற்கு போட்டியாக உருவாகும் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

    சாம்சங் நிறுவனத்திற்கு போட்டியாக சியோமி நிறுவனம் புதிதாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    சியோமி நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. இதில் 108 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதன் வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெறலாம் என கூறப்படுகிறது. 

    புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் எம்ஐயுஐ12 குறியீடுகளில் இருந்து கிடைத்து இருக்கிறது. இவற்றை தனியார் செய்தி நிறுவனம் கண்டறிந்து வெளியிட்டு இருக்கிறது. அதன்படி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சீடஸ் எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருகிறது.

     சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த எம்ஐயுஐ இயங்குதளம் கொண்டிருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 2021 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், 5ஜி கனெக்டிவிட்டி, 108 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படலாம். இந்த சென்சார் சியோமி தனது எம்ஐ10 சீரிஸ் மாடலில் வழங்கியதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
    Next Story
    ×