என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
முன்னணி ஆன்லைன் விற்பனையாளர்கள் நடத்திய பண்டிகை கால விற்பனையில் பல ஆயிரம் கோடிகளுக்கு வியாபாரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் இதர ஆன்லைன் விற்பனையாளர்கள் பண்டிகை காலத்தை முன்னிட்டு அசத்தல் சலுகைகளுடன் சிறப்பு விற்பனையை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற பண்டிகை கால விற்பனையில் இந்த நிறுவனங்கள் சுமார் ரூ. 47 ஆயிரம் கோடி வருவாயை அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ஈட்டும் என நுகர்வோர் செலவீனம் பற்றி ஆய்வு செய்யும் நிறுவனம் கணித்து இருக்கிறது.

மேலும் இந்த தொகையில் கிட்டத்தட்ட 75 சதவீதம் அதாவது ரூ. 35,400 கோடிகள் அக்டோபர் 15 முதல் அக்டோபர் 21 வரையிலான காலக்கட்டத்தில் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையிலேயே நுகர்வோர் செலவு செய்து இருக்கலாம் என தெரிவித்து இருக்கிறது.
சமீபத்திய ஆன்லைன் விற்பனைகளில் சுமார் 5.5 முதல் 6 கோடி பயனர்கள் கலந்து கொண்டிருப்பர் என்றும், இந்த ஆண்டு பண்டிகை கால விற்பனை அதிகபட்சம் 34 சதவீத வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் அதிகம் விரும்பப்படும் சாதனமாக இருக்கிறது.
ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரி விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலின் பேட்டரி விவரங்கள் சீனாவின் TENAA சான்றளிக்கும் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. இந்த மாடல் A2412 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி இருக்கிறது.
ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலில் ஆப்பிள் 3687 எம்ஏஹெச் பேட்டரி வழங்கி உள்ளது. இது ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி மாடல்களில் வழங்கப்பட்டதை விட அதிகம் ஆகும். எனினும், இது ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மாடலில் வழங்கப்பட்ட 3969 எம்ஏஹெச் பேட்டரியை விட குறைவு தான்.

ஐபோன் 12 மாடலில் 2815 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுவும் ஐபோன் 11 மாடலில் வழங்கப்பட்ட 3110 எம்ஏஹெச் பேட்டரியை விட குறைவே. ஐபோன் 12 ப்ரோ மாடலின் பேட்டரி விவரம் இதுவரை அறியப்படவில்லை.
ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ மாடல்களுக்கான முன்பதிவு அக்டோபர் 23 ஆம் தேதி துவங்குகிறது. ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கான முன்பதிவு நவம்பர் 6 ஆம் தேதி துவங்குகிறது.
இந்தியாவில் ஐபோன் 12 மினி மாடல் ரூ. 69,900, ஐபோன் 12 விலை ரூ. 79,900, ஐபோன் 12 ப்ரோ ரூ. 1,19,900 மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல் ரூ. 1,29,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சோதனையில் அதிகபட்சம் 1Gbps வேகத்தில் இணைய சேவை கிடைத்திருக்கிறது.
குவால்காம் நிறுவனத்தின் 5ஜி நிகழ்வு நேற்று துவங்கியது. இவ்விழாவில் குவால்காம் 5ஜி தொழில்நுட்பத்தில் புதிய வளர்ச்சி மற்றும் மேம்பாடு பற்றிய தகவல்களை வெளியிட்டது. இதன் மூலம் அடுத்த தலைமுறை இணைய சேவையை வழங்குவதை சாத்தியப்படுத்தும் உள்கட்டமைப்பை உறுதி செய்ய குவால்காம் திட்டமிட்டு உள்ளது.
இத்துடன் உலகம் முழுக்க பல்வேறு டெலிகாம் நிறுவனங்களுடன் நீண்ட கால கூட்டணியை வைத்துக் கொள்ளும் நோக்கில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அந்த வகையில் ஜியோ நிறுவனத்தில் குவால்காம் நிறுவனம் 0.15 சதவீத பங்குகளை சமீபத்தில் வாங்கியது.

இதன் மூலம் இந்தியாவில் குறைந்த விலையில் ஜியோ 5ஜி போன்களை வெளியிட இரு நிறுவனங்களும் திட்டமிட்டு இருக்கின்றன. குவால்காம் கீநோட் உரையின் போது ரிலையன்ஸ் ஜியோ 5ஜிஎன்ஆர் சொல்யூஷனில் அதிகபட்சம் 1Gbps இணைய வேகம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக தெரிவித்தது.
5ஜி தொழில்நுட்பத்தில் பயனர்கள் அதிவேக டவுன்லோட் மற்றும் அப்லோட் வேகங்களை சீராக அனுபவிக்க முடியும். மேலும் இதன் மூலம் IoT சாதனங்கள் மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன்களில் சீரான இணைப்பை பெறலாம்.
எல்ஜி நிறுவனத்தின் ரோலபிள் டிவி ரூ. 63.8 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
எல்ஜி நிறுவனம் 2019 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் உலகின் முதல் ரோலபிள் OLED டிவி மாடலை அறிமுகம் செய்தது. இது சிக்னேச்சர் OLED ஆர் எனும் பெயர் கொண்டுள்ளது.
முற்றிலும் வித்தியாசமான வடிவமைப்பு கொண்டிருக்கும் இந்த டிவி உலகின் முதல் ரோபிள் டிவி மாடல் ஆகும். இது கடந்த ஆண்டே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இதன் விற்பனை தற்போது தான் துவங்கி உள்ளது.

முதற்கட்டமாக எல்ஜி சிக்னேச்சர் OLED ஆர் டிவி 65 இன்ச் மாடல் தென் கொரிய சந்தையில் 87 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 63.8 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்தது. இதில் உள்ள OLED பேனல்கள் டிவி பயன்படுத்தாத போது, வித்தியாசமாக சுருங்கும் வசதி கொண்டுள்ளது.
இந்த டிவியை புல் வியூ, லைன் வியூ மற்றும் ஜீரோ வியூ என மூன்றுவித பார்மேட்களில் பார்க்க முடியும். இது சிக்னேச்சர் பிளாக், மூன் கிரே, டோபஸ் புளூ அல்லது டாபி பிரவுன் என நான்குவித ஷேட்களில் கிடைக்கிறது.
முதற்கட்டமாக தென் கொரியாவில் விற்பனை துவங்கி இருக்கும் நிலையில், எல்ஜியின் ரோலபில் டிவி மற்ற சந்தைகளில் எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் தென் கொரிய நிறுவனமான சாம்சங் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தி இருக்கிறது.
2020 ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் முதலிடம் பிடித்து இருப்பதாக கவுண்ட்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. சர்வதேச சந்தை மட்டுமின்றி இந்திய சந்தையிலும் சாம்சங் முதலிடம் பிடித்து உள்ளது.
சர்வதேச சந்தையில் சாம்சங் நிறுவனம் 22 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. இத்தகைய பங்குகளை பெற்ற முதல் நிறுவனம் சாம்சங் தான் என கவுண்ட்டர்பாயிண்ட் தெரிவித்து இருக்கிறது. இதே காலக்கட்டத்தில் ஹூவாய் நிறுவனம் 16 சதவீத சரிவை சந்தித்து இருக்கிறது.

2020 ஆகஸ்ட் மாதத்தில் சியோமி நிறுவனம் 11 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. சர்வதேச சந்தையில் ஏப்ரல் மாதம் முதல் சாம்சங் மொபைல் விற்பனை ஊரடங்கு போன்ற காரணங்களால் தொடர்ந்து சரிவடைந்து வந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் சாம்சங் வளர்ச்சி பாதைக்கு திரும்பி இருக்கிறது.
கொரோனா ஊரடங்கு மந்த நிலையில் இருந்து சாம்சங் மீண்டுள்ளதாக தெரிகிறது. இந்திய சந்தையில் ஆன்லைன் விற்பனையில் அதிக கவனம் செலுத்தியது மற்றும் இந்தியர்கள் மத்தியில் சீனா பொருட்களுக்கு எதிரான மனநிலை போன்ற காரணங்களால், சாம்சங் விற்பனை அதிகரித்து இருக்கலாம் என தெரிகிறது.
இனி வெளியாகும் ஒன்பிளஸ் மாடல்களில் பேஸ்புக் செயலி இடம்பெறாது என தகவல் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒன்பிளஸ் 8டி மாடலில் பேஸ்புக் சேவைகள் எதுவும் இடம்பெறாமல் இருந்தது.

பேஸ்புக் நிறுவன செயலிகள் நீக்கப்பட்ட விவகாரம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் பதில் அளித்துள்ளது. அந்த வகையில் இனி வெளியாகும் புதிய ஒன்பிளஸ் மாடல்களில் பேஸ்புக் நிறுவன செயலிகள் மற்றும் சேவைகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படாது என ஒன்பிளஸ் தெரிவித்து இருக்கிறது.
இதனால் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்குவோர் பேஸ்புக் நிறுவன சேவைகள் மற்றும் செயலிகளை அவர்களாக இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.
ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2020 விற்பனை அதிரடி சலுகைகளுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
பிக் பில்லியன் டேஸ் 2020 சிறப்பு விற்பனையில் ப்ளிப்கார்ட் 22 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பது தெரியவந்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களில் பிரீமியம், மிட்-பிரீமியம் பிரவுகளை சேர்ந்த மாடல்கள் இடம்பெற்று இருக்கின்றன.
நேற்று (அக்டோபர் 16) துவங்கிய சிறப்பு விற்பனை அக்டோபர் 21 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த விற்பனையில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் முதல்முறையாக விற்பனைக்கு வருகின்றன.

அனைவரும் வாங்கக் கூடிய விலை மற்றும் சலுகைகளில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளதாக ப்ளிப்கார்ட் நிறுவன மூத்த இயக்குனர் ஆதித்யா சோனி தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
வட்டியில்லா மாத தவணை வசதி, ப்ளிப்கார்ட் ஸ்மார்ட் அப்கிரேடு, ப்ளிப்கார்ட் வாரண்டி அசிஸ்ட் ப்ரோகிராம், கம்ப்லீட் மொபைல் ப்ரோடெக்ஷன் மற்றும் பை-பேக் ப்ரோகிராம் உள்ளிட்டவை சலுகைகள் சிறப்பு விற்பனையில் வழங்கப்படுகிறது.
சிறப்பு விற்பனையில் பிக்சல் 4ஏ, ஐபோன் எஸ்இ, ஐபோன் XR, ஐபோன் 11, அசுஸ் ரோக் 3, கேலக்ஸி எஸ்20 பிளஸ், நோட் 10 பிளஸ், மோட்டோரோலா எட்ஜ் பிளஸ், மோட்டோ ரேசர் மற்றும் எம்ஐ 10டி சீரிஸ் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.
ஜியோ நிறுவனம் விரைவில் டிஸ்னி பிளஸ் பிரீமியம் சந்தா கொண்ட புதிய சலுகையை அறிமுகம் செய்ய இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. எனினும், ஜியோ வலைதள பக்கத்தில் புதிய சலுகை பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருக்கின்றன.
முன்னதாக ஜூன் மாத வாக்கில் ஜியோ ரூ. 401, ரூ. 612, ரூ. 1208 மற்றும் ரூ. 2599 சலுகைகளுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை வழங்கியது. பின் ஏர்டெல் நிறுவனமும் தேர்வு செய்யப்பட்ட சலுகைகளுடன் டிஸ்னி பளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை வழங்கியது.

இந்நிலையில், ஜியோ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய சலுகை வெளியீட்டு தேதி பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
தற்சமயம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவின் விலை மாதத்திற்கு ரூ 299 என்றும் வருடாந்திர சந்தா ரூ. 1499 விலையிலும் வழங்கப்படுகிறது.
ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையில் மொபைல்போன்களுக்கான சலுகை விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை நாளை (அக்டோபர் 16) துவங்கி அக்டோபர் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சிறப்பு விற்பனையின் போது தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. 2020 பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் மொபைல் போன்களுக்கான சலுகை விவரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில் போக்கோ எம்2 மாடலின் விலை ரூ. 500 குறைக்கப்படுகிறது. இதேபோன்று போக்கோ எம்2 ப்ரோ மாடலின் விலை ரூ. 1000 குறைக்கப்படுகிறது. விலை குறைப்பின்படி இரு மாடல்களும் முறையே ரூ. 10,499 மற்றும் ரூ. 12,999 எனும் துவக்க விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
இதேபோன்று ரியல்மி சி11 ஸ்மார்ட்போனுக்கு ரூ. 1000, மோட்டோ இ7 பிளஸ் ரூ. 500 மற்றும் மோட்டோ ஜி9 மாடலுக்கு ரூ. 1500 வரை விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவை சிறப்பு விற்பனையின் போது முறையே ரூ. 6,499, ரூ. 8,499, ரூ. 9,999 விலையில் விற்பனைக்கு வருகின்றன.
மோட்டோ எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ. 10 ஆயிரம் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு ரூ. 64,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதேபோன்று ஐகூ 3 மாடல் ரூ. 29,990 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. கேலக்ஸி எஸ்20 பிளஸ் மாடல் ரூ. 49,999 துவக்க விலையில் விற்பனைக்கு வருகிறது.
அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கருப்பின ஆதரவாளர்கள் என கூறிய போலி அக்கவுண்ட்களை ட்விட்டர் கண்டறிந்து நீக்கி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கருப்பின ஆதரவாளர்கள் என கூறும் கணக்குகள் ட்விட்டர் தளத்தை தவறாக கையாண்டதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
"இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டறிய எங்களது குழுக்கள் பணியாற்றி வருகின்றன. ட்விட்டர் விதிகளை மீறி பதியப்படும் ட்வீட்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட அக்கவுண்ட்களில் தவறான புகைப்படங்களை பதிவிட்டு, டிரம்ப்பிற்கு வாக்களிக்க கோரும் வகையில் ட்விட் செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இவற்றில் பெரும்பாலான அக்கவுண்ட்கள் முன்னாள் ராணுவ வீரர்கள் அல்லது சட்ட துறையை சேர்ந்தவர்கள் என்ற பெயரில் இயங்கி வந்தது.
ஆப்பிள் நிகழ்வில் அறிமுகமான புதிய 5ஜி ஐபோன்கள் முதல் ஹோம்பாட் மினி ஸ்பீக்கர் பற்றிய முக்கிய அறிவிப்புகளை தொடர்ந்து பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஹை ஸ்பீடு நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஐந்து புதிய சாதனங்களை அறிமுகம் செய்து உள்ளது. ஹோம்பாட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர், ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் என உள்ளிட்டவைகளை ஆப்பிள் அறிமுகம் செய்து இருக்கிறது.
புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் மற்றும் ஐபோன்களில் சக்திவாய்ந்த பிராசஸர், நீண்ட பேட்டரி பேக்கப் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

ஆப்பிள் ஹோம்பாட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கரில் ஆப்பிள் எஸ்5 பிராசஸர், சிரி தொழில்நுட்பம் கொண்டு இயங்குகிறது. இது வீடு முழுக்க தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை சீராக வழங்கும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 4 மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளது.
இது ஹே சிரி சேவையின் அனுபவத்தை மேம்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள ஃபுல்-ரேன்ஜ் டிரைவரினை ஆப்பிள் பிரத்யேகமாக டியூன் செய்து விசேஷ வேவ்-கைடு வழங்குகிறது. இது 360 டிகிரி ஆடியோ வசதியை வழங்குகிறது.
இத்துடன் ஃபோர்ஸ்-கேன்சலிங் பேசிவ் ரேடியேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹோம்பாட் மினி ஸ்பீக்கரில் பிரத்யேகமாக மூன்று மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு ஹோம்பாட் மினி ஸ்பீக்கர்களை ஒருங்கிணைத்து ஸ்டீரியோ அனுபவத்தை வழங்குகிறது.
ஆப்பிள் ஹோம்பாட் மினி வைட் மற்றும் ஸ்பேஸ் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை நவம்பர் 16 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

புதிய ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 மாடல்களில் ஆப்பிள் ஏ14 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. இவற்றில் முறையே 5.4 இன்ச் மற்றும் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இரு மாடல்களிலும் முதல் முறையாக 5ஜி வசதி வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 12 எம்பி வைடு கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இது குறைந்த வெளிச்சத்திலும் தெளிவான புகைப்படங்களை வழங்குகிறது. இத்துடன் ட்ரூ டெப்த் செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் ஐபோன் 12 மினி 64ஜிபி மாடல் விலை ரூ. 69,900, 128 ஜிபி மாடல் விலை ரூ. 74,900, 256 ஜிபி மாடல் விலை ரூ. 84,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 12 64 ஜிபி மாடல் விலை ரூ. 79,900, 128 ஜிபி ரூ. 84,900 மற்றும் 256 ஜிபி மாடல் ரூ. 94,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றின் விற்பனை நவம்பர் 13 ஆம் தேதி துவங்குகிறது.
ஐபோன் 12 ப்ரோ மற்றும் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் OLED சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேக்கள், செராமிக் ஷீல்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் ஆப்பிள் ஏ14 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கின்றன.

புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 12 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 12 ப்ரோ மாடலில் ஹெச்டிஆர் வீடியோ மற்றும் டால்பி விஷன் வசதி வழங்கப்பட்டுள்ளன. இது ஸ்மார்ட்போன்களில் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் லிடார் ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. இது அதிக துல்லியமான ஏஆர் அனுபவங்களை வழங்குவதோடு, குறைந்த வெளிச்சங்களிலும் அதிக துல்லியமான புகைப்படங்களை எடுக்க வழிவகை செய்யும்.
இந்தியாவில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 128 ஜிபி மாடல் விலை ரூ. 129900 என்றும் 256 ஜிபி மாடல் ரூ. 139900 என்றும் 512 ஜிபி மாடல் விலை ரூ. 159900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை நவம்பர் 13 ஆம் தேதி துவங்குகிறது.
ஆப்பிள் நிகழ்வு பற்றிய வீடியோ தமிழில்...,
அசத்தல் அம்சங்களை கொண்ட ரியல்மி கியூ2 சீரிஸ் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரியல்மி நிறுவனம் கியூ2 ஸ்மார்ட்போன்களை அக்டோபர் 13ஆம் தேதி சீனாவில் வெளியிடுவதாக வெய்போ தளத்தில் அறிவித்துள்ளது. இந்த புதிய சீரிஸ் ரியல்மி கியூ2 ப்ரோ மற்றும் ரியல்மி கியூ2 ஸ்மார்ட் போன்களாக இருக்கலாம் என தெரிகிறது.
இதே தகவல்கள் கீக்பேன்ச் தளத்திலும் வெளியிட்டு உள்ளது. கியூ2 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெறும் தேதி மற்றும் நேரத்தை வெய்போவில் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்த தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளது.

ரியல்மி நிறுவனம் இத்தகவல்களை சீனாவின் மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் பகிர்ந்துள்ளது. வெய்போவில் அறிவித்தபடி ரியல்மி கியூ2 வெளியிட்டு நிகழ்ச்சி அக்டோபர் 13 ஆம் தேதி (இந்திய நேரப்படி காலை 7:30 மணி) நடைபெறும்.
இந்த அறிவிப்பில் கியூ2 ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் பற்றி தெரிவிக்கப்படவில்லை. ஆனால் கியூ2 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆன்ராய்டு 11 ஒஎஸ்-ஐ கொண்டிருக்கலாம் என ஒரு நிமித்தமாக தெரிவித்துள்ளது.






