search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரியல்மி ஸ்மார்ட்போன்
    X
    ரியல்மி ஸ்மார்ட்போன்

    அசத்தல் அம்சங்களை கொண்ட ரியல்மி கியூ2 சீரிஸ் வெளியீட்டு விவரம்

    அசத்தல் அம்சங்களை கொண்ட ரியல்மி கியூ2 சீரிஸ் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ரியல்மி நிறுவனம் கியூ2 ஸ்மார்ட்போன்களை அக்டோபர் 13ஆம் தேதி சீனாவில் வெளியிடுவதாக வெய்போ தளத்தில் அறிவித்துள்ளது. இந்த புதிய சீரிஸ் ரியல்மி கியூ2 ப்ரோ மற்றும் ரியல்மி கியூ2 ஸ்மார்ட் போன்களாக  இருக்கலாம் என தெரிகிறது.

    இதே தகவல்கள் கீக்பேன்ச் தளத்திலும் வெளியிட்டு உள்ளது. கியூ2 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெறும் தேதி மற்றும் நேரத்தை வெய்போவில் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்த தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளது.

     ரியல்மி 7

    ரியல்மி நிறுவனம் இத்தகவல்களை சீனாவின் மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் பகிர்ந்துள்ளது. வெய்போவில் அறிவித்தபடி ரியல்மி கியூ2 வெளியிட்டு நிகழ்ச்சி அக்டோபர் 13 ஆம் தேதி (இந்திய நேரப்படி காலை 7:30 மணி) நடைபெறும். 

    இந்த அறிவிப்பில் கியூ2 ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் பற்றி தெரிவிக்கப்படவில்லை. ஆனால் கியூ2 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆன்ராய்டு 11 ஒஎஸ்-ஐ  கொண்டிருக்கலாம் என ஒரு நிமித்தமாக தெரிவித்துள்ளது.

    Next Story
    ×