என் மலர்tooltip icon

    கணினி

    ட்விட்டர் தளத்தில் துணை ஜனாதிபதி பயன்படுத்தி வந்த தனிப்பட்ட அக்கவுண்டின் புளூ டிக் நீக்கப்பட்டு இருக்கிறது.

    ட்விட்டர் நிறுவனம் இந்திய குடியரசின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் அக்கவுண்டில் இருந்த வெரிபைடு சின்னத்தை நீக்கியுள்ளது. எனினும், இவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் வெரிபைடு புளூ டிக் காணப்படுகிறது.

     வெங்கையா நாடு ட்விட்டர் அக்கவுண்ட்

    தொடர்ச்சியாக பயன்படுத்தவில்லை என்ற காரணத்தால் இந்த நடவடிக்கையை ட்விட்டர் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் அக்கவுண்ட் கடந்த ஆறு மாதங்களாக பயன்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக ட்விட்டர் வெரிபைடு புளூ டிக் நீக்கப்பட்டதாக துணை ஜனாதிபதியின் அதிகாரி தெரிவித்தார்.

    முன்னதாக நைஜீரியா குடியரசு தலைவர் முகமது புகாரியின் ட்விட்டர் பதிவை நீக்கியதற்காக நைஜீரியாவில் ட்விட்டர் சேவையை இரண்டு நாட்களுக்கு இடைக்கால தடை விதித்தது.
    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஏர்டேக் மாடலுக்கு விரைவில் இந்த வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் ஏர்டேக் சாதனத்தை அறிமுகம் செய்து ப்ளூடூத் டிராக்கர் பிரிவில் களமிறங்கியது. தற்போது இந்த சாதனம் ஒஎஸ் தளத்தில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த நிலையில், ஏர்டேக் சாதனத்தை ஆண்ட்ராய்டு பயனர்களும் பயன்படுத்தும் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

     ஆப்பிள் ஏர்டேக்

    ஏர்டேக் சாதனத்தை பயன்படுத்துவதற்கென ஆப்பிள் விரைவில் ஆண்ட்ராய்டு செயலியை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. ஏர்டேக் சாதனத்திற்கான புது ஆப் கொண்டு ஆண்ட்ராய்டு பயனர்கள் ப்ளூடூத் சாதனத்தை பயன்படுத்தி காணாமல் போன பொருட்களை கண்டுபிடிக்க முடியும்.

    ஆண்ட்ராய்டு செயலி பற்றிய விவரங்களை ஆப்பிள் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடும் என கூறப்படுகிறது. சமீபத்தில் ஏர்டேக் சாதனத்திற்கான புது அப்டேட் ஒன்றை ஆப்பிள் வெளியிட்டது. இந்த அப்டேட் ஏர்டேக் அலெர்ட்களை வழங்கும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    நாய்ஸ் பிராண்டின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    நாய்ஸ் பிராண்டு இந்தியாவில் ஏர் பட்ஸ் மினி வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. இது பாதி இன்-இயர் டிசைன், ப்ளூடூத் 5, ஹைப்பர் சின்க் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கேசை திறந்ததும் இயர்பட்ஸ் தானாக ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொள்ளும்.

    இதில் ட்ரூ பாஸ் தொழில்நுட்பம், 14.2 எம்எம் ஸ்பீக்கர் டிரைவர் உள்ளது. இதனால் தெளிவான ஆடியோ அனுபவம் கிடைக்கிறது. ஒவ்வொரு இயர்பட்களிலும் தனித்தனி மைக்ரோபோன்கள் உள்ளன. இதனால் அழைப்புகளின் போது கால் தரம் அதிகமாக இருக்கும். 

     நாய்ஸ் ஏர் பட்ஸ் மினி

    இத்துடன் டச் கண்ட்ரோல் மூலம் பாடல்களை மாற்றுவது, வால்யூம் அடஜஸ்ட் செய்வது, அழைப்புகளை மேற்கொள்வது மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை இயக்க முடியும். இதில் IPX4 தர சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. மேலும் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் உள்ளது.

    நாய்ஸ் ஏர் பட்ஸ் மினி ஜெட் பிளாக் மற்றும் பியல் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது. இதன் அறிமுக விலை ரூ. 1299 ஆகும்.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோபுக், குறைந்த விலை 5ஜி போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலை ஜியோபோன் 5ஜி ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இம்மாத 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

     ஜியோ 5ஜி

    இந்த நிகழ்வில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் கூகுள் மற்றும் ஜியோ நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகி இருக்கிறது. மேலும் இதே கூட்டத்தில் 5ஜி வெளியீட்டு விவரம் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

    இதுதவிர ஜியோபுக் குறைந்த விலை லேப்டாப் மாடலும் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் ஜியோபுக் குறைந்த விலை லேப்டாப் விவரங்கள் இணையத்தில் லீக் ஆனது. அதன்படி இந்த லேப்டாப் கஸ்டம் ஆண்ட்ராய்டு வெர்ஷன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
    ஆப்பிள் நிறுவனத்தின் 2022 ஐபேட் மாடல்கள் OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் புது ஐபேட் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. 2022 ஐபேட் மாடல்கள் OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக OLED டிஸ்ப்ளேக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அதன்பின் மைக்ரோ LED டிஸ்ப்ளேக்களை பயன்படுத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

     ஐபேட்

    ஆப்பிள் நிறுவனம் சில ஐபேட் மாடல்களுக்கு OLED ஸ்கிரீன்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், எந்த மாடலில் OLED வழங்கப்படும் என இதுவரை எந்த தகவலும் இல்லை. மிட்-ரேன்ஜ் ஐபேட் ஏர் மாடலில் OLED வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்கள் உற்பத்தி செய்யும்  OLED ஸ்கிரீன்களை ஆப்பிள் தனது ஐபோன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் வழங்கி வருகிறது. இதே முறை தொடரும் என கூறப்படுகிறது. அந்த வகையில் எதிர்கால ஐபேட் மாடல்களிலும் OLED ஸ்கிரீன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
    ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை வெவ்வேறு அளவுகளில் அறிமுகம் செய்தது.

    ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் ஸ்மார்ட்போனுடன் புதிய ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்களின் 43 இன்ச் மற்றும் 50 இன்ச் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இவை 10.7 கோடி நிறங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் டால்பி விஷன், ரியல்மியின் பிரத்யேக குரோமா பூஸ்ட் பிக்சர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பெசல் லெஸ் டிசைன் கொண்டிருக்கும் புது ரியல்மி ஸ்மாட் டிவி 24 வாட் குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் ஹேன்ட்ஸ் - பிரீ வாய்ஸ் கண்ட்ரோல், பில்ட்-இன் மைக்ரோபோன்கள் உள்ளன. இதனால் கூகுள் அசிஸ்டண்ட் சேவையுடன் எளிதில் பேச முடியும். 

     ரியல்மி ஸ்மார்ட் டிவி

    ரியல்மி ஸ்மார்ட் டிவி 43 இன்ச் மற்றும் 50 இன்ச் அம்சங்கள்

    - 43 / 50 இன்ச் 3840x2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே, HDR 10, குரோமா பூஸ்ட் பிக்சர் என்ஜின், டால்பி விஷன்
    - 1.5GHz குவாட்-கோர் கார்டெக்ஸ் A53 மீடியாடெக் பிராசஸர்
    - மாலி-G52MC1 GPU
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி மெமரி
    - ஆண்ட்ராய்டு டிவி 10.0 
    - பில்ட் இன் குரோம்காஸ்ட், நெட்ப்ளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ, லைவ் சேனல்
    - பில்ட் இன் மைக்ரோபோன்கள்
    - வைபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0, 3 x HDMI, 2 x USB, ஈத்தர்நெட்
    - 24 வாட் (12W x 2 ஸ்பீக்கர் + ட்வீட்டர்), டால்பி அட்மோஸ் 

    ரியல்மி ஸ்மார்ட் டிவி 4K 43 இன்ச் மாடல் விலை ரூ. 27,999 என்றும் 50 இன்ச் மாடல் ரூ. 39,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த டிவி ப்ளிப்கார்ட், ரியல்மி மற்றும் ஆப்லைன் தளங்களில் ஜூன் 4 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.
    சோனி நிறுவனம் பிஎஸ் சாதனங்களில் பிரபலமாக இருந்த கேம்களை மொபைலுக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறது.

    சோனி நிறுவனத்தின் பிஎஸ் பிராண்டுகள் மற்றும் ஐபிக்களை மூன்றாம் தரப்பு மொபைல் சாதனங்களுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதனை சோனி இன்டராக்டிவ் என்டர்டெயின்மென்ட் பிரிவு தலைமை செயல் அதிகாரி ஜிம் ரியான் உறுதிப்படுத்தி இருக்கிறார். சோனியின் ஐகானிக்ஐபி மார்ச் 2022 வாக்கில் மொபைல் தளங்களில் வெளியாக இருக்கிறது.

     சோனி பிஎஸ்5 - கோப்புப்படம்

    கன்சோல் அல்லாத மொபைல் மற்றும் இதர சாதனங்களுக்கு முன்னணி கேம் பிரான்சைஸ்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம் என ரியான் தெரிவித்தார். 2020 ஆண்டு உலகம் முழுக்க மொபைல் கேமிங்கில் 121 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டியதை ரியான் சுட்டிக்காட்டினார்.  

    பிளேஸ்டேஷன் சார்பில் முன்னணி கேம்களை மொபைல் சாதனங்களில் இயங்க வைக்க தனி வியாபார பிரிவு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரிவில் பணியாற்ற டெவலப்பர்களை பணியமர்த்தி மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் எனும் காலக்கட்டத்தில் மொபைல் கேம்களை வெளியிட சோனி திட்டமிட்டுள்ளது.
    இந்தியாவில் நடைபெறும் 5ஜி சோதனையில் பங்கேற்க மத்திய டெலிகாம் துறை சீன நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    மத்திய டெலிகாம் துறை இந்தியாவில் 5ஜி சோதனையை மேற்கொள்ள ஸ்பெக்ட்ரம் பேண்ட்களை பயன்படுத்த டெலிகாம் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்களுக்கு 700 MHz, 3.5 GHz மற்றும் 26 GHz பேண்ட்களை ஒதுக்கியுள்ளது. 

     5ஜி

    சோதனையில் பங்கேற்க மத்திய டெலிகாம் துறை சீன நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதன் காரணமாக டெலிகாம் நிறுவனங்கள் சீன நிறுவனங்களுடன் கூட்டணி அமைக்க அனுமதி கிடையாது. 3.5 GHz, 26 GHz மற்றும் 700 MHz ஸ்பெக்ட்ரம்களில் முறையே 800, 100 மற்றும் 10 யூனிட்கள் நிர்ணயம் செய்துள்ளது. 

    இந்த ஸ்பெக்ட்ரம்களை ஆறு மாத காலத்திற்கு ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் சோதனைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி ரெடி நெட்வொர்க் வைத்திருப்பதால், இரு நிறுவனங்களுக்கும் இது மிகமுக்கியமான ஒன்றாக இருக்கிறது.
    மத்திய அரசு விதிமுறைகளை எதிர்த்து கருத்து தெரிவித்த ட்விட்டர் நிறுவனத்திற்கு அரசு சார்பில் காட்டமான பதில் அளிக்கப்பட்டு உள்ளது.


    புதிய விதிமுறைகள் விவகாரத்தில் சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசிடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக வாட்ஸ்அப் இந்த விதிமுறைகள் பற்றி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது ட்விட்டர் மத்திய அரசை சீண்டும் வகையில் கருத்து தெரிவித்து இருக்கிறது.

    அரசு பிறப்பித்து இருக்கும் புது விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் கருத்து சுதந்திரத்தை அச்சுறுத்துகிறது. இதற்கு பதில் அளித்து இருக்கும் மத்திய அரசு, ட்விட்டர் தனது சொந்த விதிகளை இந்தியா பின்பற்றி, நாட்டின் சட்டத்திட்டங்களை மீற முயற்சிக்கிறது என தெரிவித்துள்ளது.

     ட்விட்டர்

    இந்தியாவில் செயல்படும் பல்வேறு சமூக வலைதளம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில், புது விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு இதுவரை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் நிறுவனங்களில் ஒன்றாக ட்விட்டர் இருக்கிறது. புது விதிமுறைகளில், `குறைகளை உடனக்குடன் நிவா்த்தி செய்ய சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவில் ஒரு அதிகாரி தலைமையில் குறைதீர்க்கும் முறையை செயல்படுத்த வேண்டும்.' 

    `அதுபோல, அவதூறான செய்தியை முதலில் பரப்பும் நபரை சமூக வலைதளங்கள் கண்டறிய வேண்டும்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது. புது விதிமுறைகள் இந்திய குடிமக்களின் பேச்சுரிமையை குறைப்பதாக ட்விட்டர் தெரிவித்து இருக்கிறது. 

    கருத்து சுதந்திரம் ட்விட்டர் தளத்தில், ட்விட்டர் மூலமாகவே தடுக்கப்படுகிறது. ட்விட்டரின் வெளிப்படையற்ற விதிகள் மூலம் பயனர் அக்கவுண்ட் மற்றும் ட்வீட்கள் அழிக்கப்பட்டு வருகின்றன என்று மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சோனி நிறுவனத்தின் பிஎஸ் 5 கேமிங் கன்சோல் ரி-ஸ்டாக் இன்று மதியம் விற்பனைக்கு வந்தது.


    இந்தியாவில் சோனி நிறுவனத்தின் புதிய பிஎஸ் 5 கேமிங் கன்சோலுக்கான விற்பனை நடைபெற்றது. 12 மணிக்கு துவங்கிய விற்பனை நொடிகளில் நிறைவுற்றது. அமேசான் தளத்தில் மட்டும் பிஎஸ் 5 யூனிட்கள் சில நிமிடங்கள் விற்பனைக்கு இருந்தது. ப்ளிப்கார்ட் தளத்தில் 12 மணிக்கே விற்றுத்தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

     சோனி பிஎஸ் 5

    இதேபோன்று கேமிங் சார்ந்த பல்வேறு வலைதளங்களில் பிஎஸ் 5 விற்பனை நடைபெற்றது. எனினும், சில தளங்கள் விற்பனை துவங்கியதும் முடங்கி போயின. இந்த முறையும் முன்பு போலவே சோனி நிறுவனம் மிக குறைந்த யூனிட்களை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் என தெரிகிறது.

    இதுதவிர புது கேமிங் கன்சோலை வாங்க இந்திய வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். முன்னதாக பிஎஸ் 5 விற்பனை இந்தியா அல்லாத நாடுகளில் நடைபெற்றது. அங்கும் பிஎஸ் 5 வாங்க பலத்த வரவேற்பு இருந்ததால், விற்பனை நிமிடங்களில் நிறைவுற்று போனது.
    மத்திய அரசு பிறப்பித்து இருக்கும் விதிமுறைகளை ஏற்கும் விவகாரத்தில் வாட்ஸ்அப் வழக்கு தொடர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    மத்திய அரசு அறிவித்து இருக்கும் புதிய விதிமுறைகளை தடை செய்ய வலியுறுத்தி வாட்ஸ்அப் சார்பில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இந்த விதிமுறைகள் பேஸ்புக் மற்றும் இதர நிறுவனங்கள் வழங்கி வரும் பிரைவசி பாதுகாப்பை மீறும் வகையில் இருப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்து உள்ளது.

     கோப்புப்படம்

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில், வாட்ஸ்அப் தொடர்ந்து இருக்கும் வழக்கில் புது விதிமுறைகள் இந்திய அரசியலமைப்பின் தனியுரிமை கொள்கைகளுக்கு எதிராக இருக்கிறது என உயர்நீதிமன்றம் உத்தரவிட கோரியுள்ளது. தகவலை முதலில் உருவாக்கியவர் விவரங்களை அரசு கோரும் பட்சத்தில் அதனை வழங்க புது விதிமுறைகளில் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் செயலியில் அனைத்து சாட்களும் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுவதால், அந்த விவரங்களை வழங்க முடியாது என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வாட்ஸ்அப் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. புது விதிமுறைகளை ஏற்க சமூக வலைதள நிறுவனங்களுக்கு 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.  
    போட் நிறுவனத்தின் ராக்கர்ஸ் 330 வயர்லெஸ் ஹெட்போன் 10 எம்எம் டைனமிக் டிரைவர்களை கொண்டிருக்கிறது.

    போட் நிறுவனம் இந்திய சந்தையில் 330 வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய நெக்பேண்ட் வயர்லெஸ் ஹெட்செட் ப்ளூடூத் 5.0, 10 எம்எம் டைனமிக் டிரைவர்களை கொண்டிருக்கிறது. இது போட் நிறுவனத்திற்கு உரிய தலைசிறந்த ஆடியோ அனுபவம் மற்றும் மேம்பட்ட பேஸ் வழங்குகிறது. 

    இந்த ஹெட்போன் கொண்டு ஒரே சமயத்தில் இரு சாதனங்களுடன் பேர் செய்ய முடியும். பின் இரு சாதனங்களிடையே மிக எளிமையாக ஸ்விட்ச் செய்து கொள்ளலாம். பட்டனை க்ளிக் செய்து வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவை இயக்க முடியும். சிலிகான் பின்களை கொண்டிருப்பதால், இது சவுகரிய அனுபவத்தை வழங்கும்.

     போட் ராக்கர்ஸ் 330

    ஒவ்வொரு இயர்பட்களிலும் காந்தம் இருப்பதால், பயன்படுத்தாத சமயங்களில் இரு இயர்பட்களும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும். மெட்டல் அலாய், பிரீமியம் பினிஷ் கொண்டிருக்கும் ராக்கர்ஸ் 330 IPX5 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

    இத்துடன் 150 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது. இது 30 மணி நேர பேக்கப் வழங்குகிறது. மேலும் ASAP பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்து ஹெட்போனினை பத்து மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும். இது யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டுள்ளது. 
    ×