search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புளூ டிக்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலக கத்தோலிக்கர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் முதல் பில்கேட்ஸ் வரை பலரது கணக்குகளின் புளூ டிக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, விஜய், விஜய் சேதுபதி உள்பட பலரது டுவிட்டர் புளூ டிக்குகள் நீக்கப்பட்டுள்ளது.

    நியூயார்க்:

    டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பின்னர் புதிய சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.

    அதன்படி டுவிட்டர் கணக்குகளை சரிபார்க்கும் சேவைக்கு நிறுவனம் கட்டணம் நிர்ணயித்தது. இதற்காக ஒரு பயனர் ஒரு மாதத்திற்கு 8 டாலர் கட்டணம், அதாவது இந்திய ரூபாயில் 650 செலுத்த வேண்டும் என்றும் அறிவித்தது.

    இதற்கு டுவிட்டர் வாடிக்கையாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் இந்த அறிவிப்பை வரவேற்றனர்.

    டுவிட்டர் கணக்கு சரிபார்ப்புக்கு வரவேற்பு தெரிவித்த வாடிக்கையாளர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்தினர். ஆனால் பல வாடிக்கையாளர்கள் இந்த கட்டணத்தை செலுத்தாமல் இருந்தனர்.

    இதையடுத்து கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் புளூ டிக் கணக்குகளை நீக்கி விடுவோம் என்று டுவிட்டர் நிறுவனம் தெரிவித்தது. அதன் பின்பும் வாடிக்கையாளர்கள் இதற்கான கட்டணத்தை செலுத்தவில்லை.

    இதையடுத்து டுவிட்டர் நிறுவனம் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் கணக்குகளில் புளூ டிக்கை நீக்க தொடங்கியது.

    உலக கத்தோலிக்கர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் முதல் பில்கேட்ஸ் வரை பலரது கணக்குகளின் புளூ டிக்குகள் நீக்கப்பட்டுள்ளன.

    இதுபோல தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, விஜய், விஜய் சேதுபதி உள்பட பலரது டுவிட்டர் புளூ டிக்குகள் நீக்கப்பட்டுள்ளது.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான குஷ்பு தற்போது தீவிர அரசியலில் ஈடுப்பட்டு வருகிறார்.
    • இவர் தனது டுவிட்டர் கணக்கில் புளூ டிக்கை இழந்துள்ளார்.

    தமிழ் திரையுலகிற்கு 1988-ம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் குஷ்பு. அதன்பின் பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த குஷ்பு சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.


    குஷ்பு

    குஷ்பு

    இவர் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியல் வாதியாகவும் வலம் வருகிறார். சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகை குஷ்பு தனது டுவிட்டர் கணக்கின் புளு டிக்கை இழந்தார். இது குறித்து டுவிட்டரிடம் கேள்வி எழுப்பிய குஷ்பு, டியர் டுவிட்டர், என் புளூடிக் ஏன் ஒரே இரவில் காணாமல் போனது?? எனது கணக்கு செயலில் உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

    இந்திய பயனாளர்கள் மாதத்திற்கு ரூ.900 கட்டணம் செலுத்தி உறுப்பினராக இணைந்து கொள்ளலாம் என்றும் ஏப்ரல் 20-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • டுவிட்டரில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் கணக்குக்கு பயன்படுத்தும் புளூ டிக்குக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
    • தற்போது சந்தா செலுத்தாத ரஜினி, தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் கணக்கில் புளூ டிக்கை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

    உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் டுவிட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். டுவிட்டரில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் கணக்குக்கு பயன்படுத்தும் புளூ டிக்குக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்திய பயனாளர்கள் மாதத்திற்கு ரூ.900 கட்டணம் செலுத்தி உறுப்பினராக இணைந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 20-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும் என்று டுவிட்டர் சி.இ.ஓ எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.


     முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - பிரியங்கா காந்தி - ராகுல் காந்தி

     முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - பிரியங்கா காந்தி - ராகுல் காந்தி

    இந்நிலையில் சந்தா செலுத்தாத அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கணக்கில் புளூ டிக்கை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட கணக்குகளின் புளூ டிக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.


    சமந்தா - கீர்த்தி சுரேஷ்
    சமந்தா - கீர்த்தி சுரேஷ்

    நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், சிலம்பரசன், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி, ஷாருக்கான் உள்ளிட்டோரின் புளூ டிக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இயக்குனர்கள் சங்கர், செல்வராகவன், அட்லீ, லோகேஷ் கனகராஜ், நடிகைகள் சமந்தா, கீர்த்தி சுரேஷ் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோரின் கணக்குகளின் புளூ டிக்கும் நீக்கப்பட்டுள்ளது.

    சந்தா கட்டியவர்களின் கணக்குளின் புளூ டிக்குகள் நீக்கப்படவில்லை. எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் கணக்குகளில் புளூ டிக்குகள் உள்ளன. நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்டோரின் புளூ டிக்குகள் நீக்கப்படவில்லை.

    ×