என் மலர்
கணினி
இந்தியாவில் விரைவில் வெளியாக இருக்கும் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேமிற்கான புது டீசர் வெளியாகி இருக்கிறது.
பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேம் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கேமினை உருவாக்கி வரும் கிராப்டான் புது கேமிற்கான புது டீசரை வெளியிட்டு இருக்கிறது. டீசரில் இந்த கேம் எராங்கிள் (Erangle) மேப் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
டீசரில் இன்-கேம் மேப்களுக்கான போஸ்ட்கார்டுகள் மற்றும் தேநீர் கோப்பைகள் இடம்பெற்று இருக்கின்றன. இவற்றில் ஒரு போஸ்ட்கார்டு எராங்கிள் எனும் பெயர் கொண்டிருக்கிறது. பப்ஜி மொபைல் கேமிலும் எராங்கில் (Erangel) எனும் மேப் வழங்கப்பட்டு இருக்கிறது. இது அந்த கேமில் பிரபல மேப்-ஆக இருந்தது.

பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேம்பிளே பப்ஜி மொபைல் கேம்பிளே போன்றே இருக்கும் என தெரிகிறது. முன்னதாக புதிய கேம் இந்தியா சார்ந்த சில அம்சங்களை கொண்டிருக்கும் என கிராப்டான் தெரிவித்து இருந்தது. அந்த வகையில் இந்த கேமில் மேப் பெயர்கள் மட்டும் சற்றே வித்தியாசமாக இருக்கும் என தெரிகிறது.
பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் பப்ஜி மொபைல் கேமின் இந்திய வேரியண்ட் ஆகும். எனினும், இந்த கேம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தடை செய்யப்பட்டது. புதிய பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேமிற்கான முன்பதிவு கூகுள் பிளே ஸ்டோரில் மே 18 ஆம் தேதி துவங்கியது.
சியோமி நிறுவனத்தின் எம்ஐ 30000 எம்ஏஹெச் பவர் பேங்க் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தது.
சியோமி நிறுவனம் மார்ச் மாத வாக்கில் புதிய எம்ஐ 30000 எம்ஏஹெச் பவர் பேங்க் மாடலை கிரவுட் பண்டிங்கிற்கு கொண்டு வந்தது. இம்மாத துவக்கத்தில் இதன் விநியோகம் துவங்கப்பட்டது. இந்த பவர் பேங்க் 24W யுஎஸ்பி டைப் சி இன்புட், 18W அவுட்புட் வழங்கும் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
பாலிகார்பனைட் மற்றும் ஏபிஎஸ் பாடி, ஆன்டி-ஸ்கிட் பினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பவர் பேங்க் இரண்டு யுஎஸ்பி டைப் ஏ போர்ட்களை அதிகபட்சம் 18W அவுட்புட் திறனுடன் கொண்டிருக்கிறது. மேலும் இதில் நான்கு எல்இடி சார்ஜ் இன்டிகேட்டர்கள், பக்கவாட்டில் பட்டன் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் எம்ஐ பேண்ட், ஹெட்செட் போன்ற சாதனங்களை சார்ஜ் செய்ய ஏதுவாக இந்த பவர் பேங்க் லோ பவர் மோட் கொண்டிருக்கிறது. இந்த பவர் பேங்க் மாடலில் 30000 எம்ஏஹெச் பேட்டரி இருப்பதால், இதனை விமானங்களில் கொண்டு செல்ல முடியாது.
இந்தியாவில் எம்ஐ 30000 எம்ஏஹெச் பவர் பேங்க் விலை ரூ. 2299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட், எம்ஐ வலைதளங்கள், எம்ஐ ஹோம் ஸ்டோர் மற்றும் இதர ஆப்லைன் விற்பனையகங்களிலும் நடைபெறுகிறது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காலக்கட்டத்தில் பல்ஸ் ஆக்சிமீட்டர் சேவையை வழங்கும் மொபைல் செயலி வெளியாகி இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் தொற்று பாதிப்பு கொண்டவர்கள் பல்ஸ் ஆக்சிமீட்டர் கொண்டு உடலில் சுவாச அளவு சீராக உள்ளதா என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கிறது.

எனினும், தரமான பல்ஸ் ஆக்சிமீட்டர் வாங்க குறைந்தபட்சம் ரூ. 2 ஆயிரம் வரை செலவிட வேண்டும். ஊரடங்கு காலக்கட்டத்தில் அனைவராலும் இவ்வளவு தொகையை செலவிட முடியாது என்பதை அறிந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் மொபைல் செயலி மூலம் ஆக்சிமீட்டர் பயன்பாட்டை வழங்குகிறது.
கொல்கத்தாவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம், கேர்ப்ளிக்ஸ் வைட்டல்ஸ் எனும் பெயரில் செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த செயலி பயனரின் ஆக்சிஜன் அளவு, பல்ஸ், சுவாச அளவு உள்ளிட்டவைகளை கண்டறிந்து தெரிவிக்கும். செயலியை பயன்படுத்த கைவிரலை ஸ்மார்ட்போனின் கேமரா, பிளாஷ்லைட் மீது சில நொடிகளுக்கு வைக்க வேண்டும்.
கிராப்டான் நிறுவனத்தின் பப்ஜி மொபைல் கேமின் ரீமேக் வெர்ஷனான பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்தியாவுக்கான பப்ஜி மொபைல் வேரியண்ட் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் எனும் பெயரில் வெளியாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன் இந்த கேமிற்கான முன்பதிவு துவங்கிய நிலையில், தற்போது இந்த கேம் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
முன்னதாக பப்ஜி மொபைல் கேம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. தென் கொரிய நிறுவனமான கிராப்டான் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேமின் இந்திய வெளியீட்டு தேதியை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

எனினும், இந்த கேமின் பயனர்கள் ஜூன் 18 ஆம் தேதி பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியாவில் வெளியாகும் என நம்புகின்றனர். மே 18 ஆம் தேதி இந்த கேமிற்கான முன்பதிவு ஆண்ட்ராய்டு தளத்தில் துவங்கியது. முன்பதிவு துவங்கியது முதல் இந்த கேமின் வெளியீட்டுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அந்நிறுவன வலைதளத்தில் இந்த கேமிற்கான இந்திய வெளியீட்டு தேதியை முடிவு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், முன்பதிவு துவங்கிய ஒரு மாதத்தில் இந்த கேம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஆப்பிள் நிறுவனத்தின் மியூசிக் செயலியில் ஜூன் மாதம் முதல் புது அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன.
ஆப்பிள் நிறுவனம் தனது மியூசிக் செயலியில் ஸ்பேஷியல் ஆடியோ, டால்பி அட்மோஸ் மற்றும் லாஸ்லெஸ் ஆடியோ போன்ற அம்சங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது. ஆப்பிள் மியூசிக் சந்தாதாரர்களுக்கு இந்த சேவைகள் ஜூன் மாதம் முதல் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.
ஸ்பேஷியல் ஆடியோ அம்சம் வாடிக்கையாளர்களுக்கு தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இது இசை கலைஞர்களின் திறமையை சிறப்பாக வெளிப்படுத்த வழிவகுக்கும். ஹெச்1 அல்லது டபிள்யூ1 சிப் கொண்டிருக்கும் அனைத்து ஏர்பாட்ஸ், பீட்ஸ் ஹெட்போன்கள் டால்பி அட்மோஸ் பாடல்களை தானாக இயக்கும்.

இதே வசதி ஐபோன், ஐபேட் மற்றும் ஐமேக் சாதனங்களிலும் பிரதிபலிக்கும். ஹெட்போன்களில் இந்த அம்சத்தை பெற செட்டிங்ஸ் -- மியூசிக் -- ஆடியோ மற்றும் டால்பி அட்மோஸ் ஆப்ஷன்களை தேர்வு செய்து ஆல்வேஸ் ஆன் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
லாஸ்லெஸ் ஆடியோ அம்சம் இசையை ஸ்டூடியோ தரத்தில் கேட்க வழி வகுக்கும். இந்த அம்சம் ஆப்பிள் மியூசிக் சேவையில் கிடைக்கும் சுமார் 7.5 கோடி பாடல்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த அம்சத்தை இயக்க செட்டிங்ஸ் -- மியூசிக் -- ஆடியோ குவாலிட்டி ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.
இந்தியாவில் ஆப்பிள் மியூசிக் சந்தா மாதத்திற்கு ரூ. 99 ஆகும். மாணவர்களுக்கு இந்த சேவை மாதம் ரூ. 49 என்றும் குடும்ப சந்தாவுக்கான மாதாந்திர கட்டணம் ரூ. 149 ஆகும். இந்த சந்தாவில் அதிகபட்சம் ஆறு பேர் பயன்படுத்தலாம்.
அவிட்டா நிறுவனத்தின் காஸ்மோஸ் லேப்டாப் இன்டெல் செலரான் டூயல் கோர் பிராசஸர் கொண்டிருக்கிறது.
அவிட்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய காஸ்மோஸ் 2 இன் 1 லேப்டாப் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லேப்டாப் 11.6 இன்ச் FHD IPS டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, இன்டெல் செலரான் டூயல் கோர் பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி eMMC வழங்கப்பட்டு இருக்கிறது.
2 இன் 1 மாடல் என்பதால் இதனை டேப்லெட் போன்றும் பயன்படுத்த முடியும். இது கழற்றக்கூடிய வசதி கொண்ட கீபோர்டு, பில்ட்-இன் ஸ்டான்டு கொண்டிருக்கிறது.

அவிட்டா காஸ்மோஸ் அம்சங்கள்:
- 11.6 இன்ச் 1920×1080 பிக்சல் FHD IPS மல்டி-டச் டிஸ்ப்ளே
- இன்டெல் செலரான் N4000 டூயல் கோர் பிராசஸர்
- UHD 600 Graphics
- 4 ஜிபி DDR4 ரேம்
- 64 ஜிபி eMMC மெமரி
- மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
- விண்டோஸ் 10 ஹோம்
- 2 எம்பி பிரைமரி மற்றும் செல்பி கேமரா
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- கழற்றக்கூடிய கீபோர்ட
- வைபை, ப்ளூடூத் 4
- அதிகபட்சம் 6 மணி நேர பேட்டரி பேக்கப்
அவிட்டா காஸ்மோஸ் சார்கோல் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 17,990 ஆகும். இது ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால் வழங்குகிறது.
ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் பயனர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்பில் இருக்க இரண்டு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

ஜியோ மற்றும் ரிலையன்ஸ் பவுன்டேஷன் இணைந்து ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 300 நிமிடங்களுக்கு இலவச வாய்ஸ் கால் வழங்குகிறது. இந்த சலுகை கொரோனா தொற்று சரியாகும் வரை வழங்கப்படுகிறது. தொற்று காலக்கட்டத்தில் ரீசார்ஜ் செய்ய முடியாத நிலையில் இருக்கும் ஜியோபோன் பயனர்களுக்கு இந்த சலுகை பயனுள்ளதாக இருக்கும்.
இத்துடன் ஜியோபோன் சலுகைக்கு ரீசார்ஜ் செய்யும் போது ஜியோபோன் பயனர்களுக்கு அதே மதிப்புள்ள கூடுதல் ரீசார்ஜ் சலுகை இலவசமாக வழங்கப்படுகிறது. உதாரணத்திற்கு ரூ. 75 சலுகையை தேர்வு செய்யும் போது கூடுதலாக ரூ. 75 சலுகை இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த சலுகை ஜியோபோன் வருடாந்திர அல்லது சாதனத்துடன் வரும் சலுகைகளுக்கு பொருந்தாது. இரு சலுகைகளும் மே 15 முதல் வழங்கப்படுகிறது.
பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேமிற்கான முன்பதிவு கூகுள் பிளே ஸ்டோரில் நடைபெற இருக்கிறது.
பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேமிற்கான முன்பதிவு கூகுள் பிளே ஸ்டோரில் மே 18 ஆம் தேதி துவங்குகிறது. இதற்கான அறிவிப்பு அந்நிறுவன வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் பப்ஜி மொபைல் இந்திய வெர்ஷனுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேமினை தென் கொரியாவை சேர்ந்த கிராப்டான் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. புது கேம் பற்றிய அறிவிப்பு கடந்த வாரம் வெளியான நிலையில், தற்போது இதன் முன்பதிவு விவரம் வெளியிடப்பட்டு இருக்கிறது.
முன்பதிவு தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், இதன் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த கேமினை முன்பதிவு செய்வோருக்கு பிரத்யேக ரிவார்டுகள் வழங்கப்படும் என கிராப்டான் தெரிவித்து இருக்கிறது. இத்துடன் கேமிற்கான மேப் ஒன்றின் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது.
இந்திய சந்தையில் ரெட்மி வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 1.4 இன்ச் டச் கலர் LCD ஸ்கிரீன், 200-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள், 24 மணி நேர இதய துடிப்பு சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, அதிகபட்சம் 11 ஸ்போர்ட் மோட்கள் உள்ளன.

ரெட்மி வாட்ச் அம்சங்கள்
- 1.4 இன்ச் 320×320 பிக்சல் 323 PPI டச் கலர் LCD ஸ்கிரீன்
- 3-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், 3-ஆக்சிஸ் கைரோஸ்கோப்
- ப்ளூடூத் 5.1
- 11 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- இதய துடிப்பு சென்சார்
- ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் / GLONASS
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (5ATM)
- 230 எம்ஏஹெச் பேட்டரி
ரெட்மி வாட்ச் பிளாக், புளூ மற்றும் ஐவரி நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் எம்ஐ ஹோம் ஸ்டோர்களில் மே 25 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
கூகுள் நிறுவனத்தின் பேமண்ட் செயலியில் பண பரிமாற்றத்தை செயல்படுத்துவதில் புது வசதி வழங்கப்படுகிறது.
கூகுள் பே சேவையில் பண பரிமாற்றம் முதன்மையான ஒன்றாக இருந்து வருகிறது. பேமண்ட் செயலிகள் பிரிவில் இந்தியாவின் முன்னணி தளமாக கூகுள் பே இருக்கிறது. தற்போது இந்த செயலியில் சர்வதேச பண பரிமாற்ற வசதி வழங்கப்படுகிறது.
முதற்கட்டமாக பண பரிமாற்ற வசதி அமெரிக்காவில் இருந்து இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பண பரிமாற்றம் செய்ய முடியும். கூகுள் பே செயலியில் சர்வதேச பண பரிமாற்ற வசதி மிக எளிமையான வழிமுறையாக வழங்கப்பட்டு இருக்கிறது.

கூகுள் பே செயலியில் உள்ள Pay ஆப்ஷனில் Western Union அல்லது Wise போன்ற ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். பின் அடுத்தடுத்த வழிமுறைகளை பின்பற்றி எளிமையாக பணம் அனுப்பலாம். அறிமுக சலுகையாக Western Union சேவையில் அன்லிமிடெட் பரிமாற்றங்கள் வழங்கப்படுகிறது. Wise சேவையில் முதல் பரிமாற்றம் இலவசமாக வழங்கப்படுகிறது.
சர்வதேச பண பரிமாற்ற சேவை அமெரிக்க பயனர்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. இவர்கள் அமெரிக்காவில் இருந்தபடி இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள பயனர்களுக்கு பணம் அனுப்பலாம். இந்த ஆண்டு இறுதிக்குள் உலகின் 200 நாடுகளுக்கு இந்த சேவை நீட்டிக்கப்பட இருக்கிறது.
இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள ட்விட்டர் நிறுவனம் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.
இந்தியாவில் ஏற்பட்டு இருக்கும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பை எதிர்கொள்ள ரூ. 110 கோடி வழங்குவதாக ட்விட்டர் தெரிவித்து உள்ளது. முன்னதாக கூகுள், மைக்ரோசாப்ட், சியோமி போன்ற நிறுவனங்கள் இதேபோன்று நிவாரண உதவிகளை அறிவித்தன.

மூன்று தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதாக ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சி தனது சமூக வலைதள அக்கவுண்டில் தெரிவித்தார். அதன்படி CARE, Aid India மற்றும் Sewa International USA போன்ற நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது.
நிதி தொகை தற்காலிக கொரோனா மையங்களை கட்டமைத்தல், ஆக்சிஜன் வழங்குதல், பிபிஐ கிட் மற்றும் இதர தேவையான உபகரணங்களை வழங்க பயன்படுத்தப்படுகிறது. இத்துடன் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் பற்றி எடுத்துரைக்க ட்விட்டர் திட்டமிட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனம் தனது தளத்தில் பேமண்ட் வசதி வழங்க மூன்றாம் தரப்பு நிறுவனங்களுடன் இணைந்துள்ளது.
உலகில் ட்விட்டர் சேவையை பயன்படுத்துவோரில் டிப் ஜார் அம்சம் தற்போது தொண்டு நிறுவனங்கள், செய்தியாளர்கள் மற்றும் கிரியேட்டர்களுக்கு மிக குறைந்த எண்ணிக்கையில் வழங்கப்பட்டு வருகிறது.

இதுதவிர டிப் ஜார் வசதியை வழங்க இந்திய பேமண்ட் நிறுவனங்களுடன் ட்விட்டர் பணியாற்றி வருகிறது. இந்த சேவையை ஆங்கிலம் மட்டுமின்றி மேலும் சில மொழிகளில் வழங்க இருக்கிறது. தற்போது டிப் ஜார் அம்சம் பேண்ட்கேம்ப், கேஷ் ஆப், பேட்ரியான், பேபால் மற்றும் வென்மோ போன்றே ஆப்ஷன்களை வழங்குகிறது.
ட்விட்டர் நிறுவனம் பேமண்ட் வசதியை வழங்க இந்த சேவைகளை நாடி இருக்கிறது. ஒருவரின் ப்ரோபைலில் இருக்கும் டிப் ஜார் ஐகான் கொண்டு மற்றவர்களுக்கு பணம் அனுப்பலாம் என ட்விட்டர் தெரிவித்துள்ளது.






