search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஆப்பிள் மியூசிக்
    X
    ஆப்பிள் மியூசிக்

    மியூசிக் செயலியில் புது அம்சங்களை இலவசமாக வழங்கும் ஆப்பிள்

    ஆப்பிள் நிறுவனத்தின் மியூசிக் செயலியில் ஜூன் மாதம் முதல் புது அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன.

    ஆப்பிள் நிறுவனம் தனது மியூசிக் செயலியில் ஸ்பேஷியல் ஆடியோ, டால்பி அட்மோஸ் மற்றும் லாஸ்லெஸ் ஆடியோ போன்ற அம்சங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது. ஆப்பிள் மியூசிக் சந்தாதாரர்களுக்கு இந்த சேவைகள் ஜூன் மாதம் முதல் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.

    ஸ்பேஷியல் ஆடியோ அம்சம் வாடிக்கையாளர்களுக்கு தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இது இசை கலைஞர்களின் திறமையை சிறப்பாக வெளிப்படுத்த வழிவகுக்கும். ஹெச்1 அல்லது டபிள்யூ1 சிப் கொண்டிருக்கும் அனைத்து ஏர்பாட்ஸ், பீட்ஸ் ஹெட்போன்கள் டால்பி அட்மோஸ் பாடல்களை தானாக இயக்கும்.

     ஆப்பிள் மியூசிக்

    இதே வசதி ஐபோன், ஐபேட் மற்றும் ஐமேக் சாதனங்களிலும் பிரதிபலிக்கும். ஹெட்போன்களில் இந்த அம்சத்தை பெற செட்டிங்ஸ் -- மியூசிக் -- ஆடியோ மற்றும் டால்பி அட்மோஸ் ஆப்ஷன்களை தேர்வு செய்து ஆல்வேஸ் ஆன் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

    லாஸ்லெஸ் ஆடியோ அம்சம் இசையை ஸ்டூடியோ தரத்தில் கேட்க வழி வகுக்கும். இந்த அம்சம் ஆப்பிள் மியூசிக் சேவையில் கிடைக்கும் சுமார் 7.5 கோடி பாடல்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த அம்சத்தை இயக்க செட்டிங்ஸ் -- மியூசிக் -- ஆடியோ குவாலிட்டி ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும். 

    இந்தியாவில் ஆப்பிள் மியூசிக் சந்தா மாதத்திற்கு ரூ. 99 ஆகும். மாணவர்களுக்கு இந்த சேவை மாதம் ரூ. 49 என்றும் குடும்ப சந்தாவுக்கான மாதாந்திர கட்டணம் ரூ. 149 ஆகும். இந்த சந்தாவில் அதிகபட்சம் ஆறு பேர் பயன்படுத்தலாம்.
    Next Story
    ×