என் மலர்
கணினி
சியோமி நிறுவனத்தின் புதிய எம்ஐ பேட் 5 அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சியோமி நிறுவனம் புதிய டேப்லெட் மாடல்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது எம்ஐ பேட் 5 விவரங்கள் சீன வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. புது எம்ஐ பேட் 5 சீனாவின் 3சி சான்று பெற்று இருக்கிறது.

எம்ஐ பேட் 5, எம்ஐ பேட் 5 ப்ரோ என இரு மாடல்களை அறிமுகம் செய்ய சியோமி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில் ப்ரோ வெர்ஷனில் 2560x1600 பிக்சல் WQXGA எல்சிடி ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 8720 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இந்த டேப்லெட் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், ஸ்டைலஸ் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. எம்ஐ பேட் 5 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வழங்கப்படுகிறது. எம்ஐ பேட் 5 ப்ரோ பிளாக்ஷிப் மாடலாக இருக்கும் என்றும் இது ஐபேட், கேலக்ஸி டேப் மற்றும் ஹூவாய் மேட் பேட் ப்ரோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
பப்ஜி மொபைல் கேமினை உருவாக்கிய கிராப்டான் இன்க் நிறுவனம் விரைவில் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேம் வெளியாகும் என தெரிவித்து உள்ளது.
கிராப்டான் இன்க் நிறுவனம் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் எனும் புது கேம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்து இருக்கிறது. இந்த கேம் பிரத்யேக இன்-கேம் ஈவென்ட்களான அவுட்பிட்களை கொண்டிருக்கும். இத்துடன் டோர்னமென்ட் மற்றும் லீக் என பல சுற்றுக்களை கொண்டிருக்கும்.
புது கேம் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா பப்ஜி மொபைல் கேமின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்தியாவில் பப்ஜி மொபைல் தடை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து புது கேமிற்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

முன்னதாக பப்ஜிமொபைல் வலைதளத்தை மூடியதோடு, பப்ஜி மொபைல் இந்தியா பெயரில் செயல்பட்டு வந்த யூடியூப் சேனல் பெயர் மாற்றப்பட்டு, அதில் இருந்து வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. புது கேம் வெளியீட்டிற்கு முன் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா முன்பதிவு நடைபறும் என கிராப்டான் இன்க் தெரிவித்து இருக்கிறது.
இந்க கேம் இந்தியாவுக்கென பிரத்யேகமானதாக இருக்கும். வெளியீட்டை தொடர்ந்து இந்த கேமிற்கான அறிமுக நிகழ்வு நடைபெற இருக்கிறது. இதில் கேம் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
இந்திய சந்தையில் முன்னணி நிறுவனங்கள் 5ஜி சோதனையை மேற்கொள்ள மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம், வோடபோன் ஐடியா மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சோதனையை மேற்கொள்ள மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இந்த நிறுவனங்கள் உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களான- எரிக்சன், நோக்கியா, சாம்சங் மற்றும் டெலிமேடிக்ஸ் துறையுடன் கூட்டணி அமைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் தனது சொந்த தொழில்நுட்பத்தை கொண்டு சோதனையை மேற்கொள்ள இருப்பதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டது. இந்த சோதனைக்கான அவகாசம் ஆறு மாதங்கள் ஆகும். இதில் முதல் இரு மாதங்கள் உபகரணங்களை கட்டமைக்கலாம்.
சோதனைக்கான ஸ்பெக்ட்ரம் மிட்-பேண்ட் 3.2 GHz துவங்கி 3.67GHz வரையிலான பேண்ட்களிலும், மில்லிமீட்டர் வேவ் பேண்ட் 24.25GHz துவங்கி 28.5 GHz வரை வழங்கப்படுகிறது. இந்த நிறுவனங்கள் தற்போது இருக்கும் ஸ்பெக்ட்ரமிலேயே 5ஜி சோதனையை மேற்கொள்ளலாம்.
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் ரெட்மி வாட்ச் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
ரெட்மி பிராண்டு தனது ரெட்மி வாட்ச் இந்தியாவில் மே 13 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்துள்ளது. இதே தினத்தில் ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனும் அறிமுகமாகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
எம்ஐ வாட்ச் லைட் மாடலும் சில சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. டீசரில் வாட்ச் சிலிகான் ஸ்டிராப் மற்றும் வலது புறத்தில் பட்டன் இடம்பெற்று இருக்கிறது. புது ரெட்மி வாட்ச் பில்ட்-இன் ஜிபிஎஸ் / GLONASS வசதி, 11 ஸ்போர்ட்ஸ் மோட்கள், இதய துடிப்பு சென்சார் வழங்கப்படுகிறது.

ரெட்மி வாட்ச் அம்சங்கள்
- 1.4 இன்ச் 320×320 பிக்சல் LCD ஸ்கிரீன்
- 3-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், 3-ஆக்சிஸ் கைரோஸ்கோப்
- ப்ளூடூத் 5.0
- 11 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- வாட்டர் ரெசிஸ்டண்ட்
- 230 எம்ஏஹெச் பேட்டரி
இந்தியாவில் கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கான தடுப்பூசி திட்டம் விரிவான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் மூன்றாம் கட்ட தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி 18 வயதுடையோரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் CoWIN தளத்தில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த தளத்தில் பயனர் அருகாமையில் உள்ள தடுப்பூசி மையங்கள் பற்றிய விவரம் வழங்கப்படுகிறது. எனினும், வாட்ஸ்அப் செயலியில் இயங்கும் மத்திய அரசின் MyGov Corona Helpdesk சாட்பாட் பொது மக்களுக்கு, அவர்களின் அருகாமையில் செயல்படும் தடுப்பூசி மையம் பற்றிய விவரங்களை வழங்குகிறது.
இந்த சாட்பாட் சேவையானது கொரோனா தொற்று குறித்து பரவும் போலி தகவல்களை குறைக்கும் நோக்கில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமான பத்தே நாட்களில் இந்த சேவையை சுமார் 1.7 கோடி பேர் பயன்படுத்த துவங்கினர். இந்த சேவையில் தடுப்பூசி மையம் பற்றிய தகவல்கள் வழங்கப்படுவதை மத்திய அரசு ட்விட்டர் மூலம் தெரிவித்தது.
டெலிகிராம் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட க்ரூப் வீடியோ கால் அம்சம் எப்போது வழங்கப்படும் என அதன் சிஇஒ தெரிவித்து இருக்கிறார்.
2020 ஆண்டு வீடியோ கால் சேவைக்கான தேவை பலமடங்கு அதிகரித்தது. இதன் காரணமாக பல்வேறு குருந்தகவல் சேவை வழங்கும் செயலிகளில் வீடியோ கால் சேவையை அறிமுகம் செய்வதும், அவற்றை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் அதிக கவனம் செலுத்த துவங்கின.
தற்போது டெலிகிராம் நிறுவனம் தனது செயலியில் வீடியோ கால் வசதியை வழங்க இருக்கிறது. இத்துடன் ஸ்கிரீன்-ஷேரிங், என்க்ரிப்ஷன் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. டெலிகிராம் சிஇஒ மற்றும் நிறுவனர் பவெல் துரோவ், வாய்ஸ் சாட் அம்சத்துடன் வீடியோ கால் சேவையை மே மாத வாக்கில் வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

மற்ற வீடியோ கால் சேவைகளை போன்றே டெலிகிராம் சேவையிலும் வீடியோ கால் அம்சம் ஸ்கிரீன் ஷேரிங், என்க்ரிப்ஷன், நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற வசதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் டெலிகிராம் செயலி மட்டுமின்றி டெஸ்க்டாப் மற்றும் டேப்லெட் சாதனங்களிலும் வழங்கப்படுகிறது.
உலகளவில் கணினி மற்றும் கேமிங் கன்சோல்களில் பிரபல கேம்களில் ஒன்றாக அபெக்ஸ் லெஜண்ட்ஸ் இருக்கிறது.
உலக கேமிங் சந்தையின் பேட்டில் ராயல் கேம்கள் பிரிவில் அபெக்ஸ் லெஜண்ட்ஸ் கணினி மற்றும் கேமிங் கன்சோல்களில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. தற்போது ரீஸ்பான் என்டர்டெயின்மென்ட் மற்றும் எலெக்டிரானிக் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த கேமினை மொபைலில் வெளியிட இருக்கின்றன.

சமீபத்தில் இந்த கேமிற்கான மொபைல் வெர்ஷன் முன்பதிவு கூகுள் பிளே ஸ்டோரில் உலகளவில் துவங்கப்பட்டது. முன்பதிவை தொடர்ந்து இந்த கேமிற்கான Early Access வழங்கப்படுகிறது. இது கேமினை ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
இந்த கேம் கடந்த வாரம் முன்பதிவு செய்த ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இந்த கேம் 1.34 ஜிபி அளவு கொண்டுள்ளது. Early Access பெற்ற பயனர்கள் கேம் ஸ்கிரீன்ஷாட்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். முதற்கட்டமாக இந்த கேம் ஆண்ட்ராய்டு தளத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது.
கார்மின் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புது ஸ்மார்ட்வாட்ச் கொல்ப் விளையாடுவோருக்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
கார்மின் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் அப்ரோச் எஸ்12 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. இது ஜிபிஎஸ் சார்ந்து இயங்குகிறது. இது கொல்ப் விளையாடுவோருக்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் சுமார் 42 ஆயிரம் உலகளாவிய கொல்ப் கோர்ஸ்களை கொண்டிருக்கிறது. இது 1.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது நேரடி சூரிய வெளிச்சத்திலும் டிஸ்ப்ளேவை சிறப்பாக பார்க்க வழி செய்கிறது. இதில் விரைந்து மாற்றக்கூடிய பேண்ட்கள் உள்ளன.

இது விளையாட்டு வீரரின் தரவுகளை கார்மின் கொல்ப் செயலி மூலம் அப்டேட் செய்கிறது. இந்த செயலி புள்ளிப்பட்டியலை வாராந்திர அடிப்படையில் மட்டுமின்றி விளையாட்டு தொடர், நேரலை புள்ளி பட்டியல், தானியங்கி ஸ்கோர்கார்டு என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. இந்தியாவில் கார்மின் அப்ரோச் எஸ்12 விலை ரூ. 20,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பல்வேறு முன்னணி வலைதளம் மற்றும் ஆப்லைன் தளங்களில் கிடைக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 14.5 அப்டேட்டில் ஏடிடி எனும் பாதுகாப்பு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 14.5 அப்டேட் வெளியிட துவங்கியது. இது செப்டம்பரில் வெளியாகும் முழு ஒஎஸ் அப்டேட் இல்லை எனினும், இது அசத்தலான புதிய அம்சங்களை வழங்குகிறது. முகக்கவசம் அணிந்த படி ஐபோனினை அன்லாக் செய்யும் வசதி, ஏடிடி எனப்படும் ஆப் டிராக்கிங் டிரான்ஸ்பெரன்சி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
புது அப்டேட் வழங்கும் முக்கிய அம்சமாக ஏடிடி இருக்கிறது. இந்த அம்சம் சாதனத்தில் செயலிகள் பயனர் விவரங்களை சேகரிக்கும் முன் அவர்களின் அனுமதியை கேட்க வழி செய்துள்ளது. இந்த அம்சம் விளம்பர வியாபாரத்தை பெரிதும் பாதிக்கும் என பேஸ்புக் கருத்து தெரிவித்து இருக்கிறது.

புதிய மாற்றங்களுக்கு அனுமதி அளிக்காத செயலிகள் நீக்கப்படும் என ஆப்பிள் ஏற்கனவே தெரிவித்து விட்டது. ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு பின் சமர்பிக்கப்படும் செயலிகள் ஏடிடி திட்டத்திற்கு ஆதரவளிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் ஆப்பிள் தெரிவித்து உள்ளது.
ஐஒஎஸ் 14.5 அப்டேட் டூயல் சிம் 5ஜி, 200-க்கும் அதிக புது எமோஜிக்கள், புது வடிவமைப்பில் தடுப்பூசி எமோஜி, சிரி சேவையில் புது குரல்கள், விரும்பிய மியூசிக் பிளேயரை தேர்வு செய்யும் வசதி, பிஎஸ்5, எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் கண்ட்ரோலர்களுக்கான சப்போர்ட் வழங்கப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி டால்பி விஷன் மற்றும் HDR10+ அம்சங்களை கொண்டிருக்கிறது.
எம்ஐ 11 அல்ட்ரா மற்றும் எம்ஐ 11 எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் சியோமி நிறுவனம் தனது டாப் எண்ட் QLED ஸ்மார்ட் டிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய QLED 4K டிவி 75 இன்ச் எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளே, குவாண்டம் டாட் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.
இத்துடன் டால்பி விஷன், HDR10+, மெல்லிய பெசல்கள், விவிட் பிக்ச்சர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், HDMI 2.1 போர்ட், ஆட்டோ லோ லேடென்சி மோட், 30 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம், டால்பி ஆடியோ மற்றும் DTS-HD போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

சியோமி எம்ஐ டிவி கியூ1 / எம்ஐ QLED டிவி (75″) அம்சங்கள்
- 75 இன்ச் 3840×2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே
- குவாட்கோர் மீடியாடெக் MT9611 (ஏ55) பிராசஸர்
- மாலி G52 MP2 GPU
- 2 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு 10
- வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.0, 1 x HDMI 2.1, 2 x HDMI 2.0, 2 x யுஎஸ்பி
- 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், ஈத்தர்நெட்
- 30 வாட் ( 2 x 15 வாட்) 6 ஸ்பீக்கர் சிஸ்டம்
- டால்பி ஆடியோ, DTS-HD
சியோமி எம்ஐ QLED டிவி 75 விலை ரூ. 1,19,999 ஆகும். இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஏப்ரல் 27 ஆம் தேதி துவங்குகிறது.
டைவா நிறுவனம் மிக மெல்லிய பெசல்களை கொண்ட புது ஸ்மார்ட் டிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
நுகர்வோர் மின்சாதன பொருட்கள் உற்பத்தியாளரான டைவா இந்திய சந்தையில் 50 இன்ச் D50162FL 4K ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்தது. இது மேட் இன் இந்தியா டிவி மாடல் ஆகும். பெசல்-லெஸ் டிசைன், HDR10, dbx-டிவி ஆடியோ தொழில்நுட்பம் போன்ற அம்சங்கள் இந்த டிவியில் வழங்கப்பட்டுள்ளன.
புதிய டைவா D50162FL மாடல் மெல்லிய பெசல்களை கொண்டுள்ளது. மேலும் 96 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே 4K ரெசல்யூஷன், குவாண்டம் லுமினிட் தொழில்நுட்பம் கொண்டது ஆகும். இது ஏ-55 குவாட் கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 9 ஒஎஸ் மற்றும் தி பிக் வால் யுஐ கொண்டிருக்கும் டைவா ஸ்மார்ட் டிவி டிஸ்னி பிளஸ், ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லிவ், வூட் போன்ற ஸ்டிரீமிங் சேவைகளை இயக்கும் வசதி கொண்டுள்ளது. இது 20 வாட் ஸ்பீக்கர் சிஸ்டம், 5 சவுண்ட் மோட்களை கொண்டுள்ளது.
டைவா D50162FL 4K ஸ்மார்ட் டிவி விலை ரூ. 39,990 ஆகும். இது நாடு முழுக்க பெரும்பாலான விற்பனை மையங்களில் கிடைக்கிறது.
ஏசர் நிறுவனம் 5ஜி வசதி கொண்ட முதல் கன்வெர்டிபில் லேப்டாப் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
ஏசர் நிறுவனம் இந்தியாவில் ஸ்பின் 7 கன்வெர்டிபில் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்தது. இது 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட முதல் கன்வெர்டிபில் லேப்டாப் ஆகும். இது எம்எம்வேவ் மற்றும் சப்-6 ஜிகாஹெர்ட்ஸ் பிரீக்வன்சிக்களை சப்போர்ட் செய்யும்.
மெல்லிய மக்னீசியம் - அலுமினியம் அலாய் பாடி கொண்டிருக்கும் புது லேப்டாப் 15.9 எம்எம் தடிமனாகவும், 1.4 கிலோ எடை கொண்டிருக்கிறது. ஏசர் ஸ்பின் 7 மாடல் 360 டிகிரி ஹின்ஜ் கொண்டிருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் ஸ்கிரீனை சுழல செய்து டேப்லெட் அல்லடு டென்ட் மோட் விதங்களில் பயன்படுத்த முடியும்.

ஏசர் ஸ்பின் 7 அம்சங்கள்
- 14 இன்ச் FHD 1920×1080 IPS டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8cx Gen 2 5G பிராசஸர்
- அட்ரினோ 685 GPU
- 8 ஜிபி LPDDR4x மற்றும் 512 ஜிபி UFS மெமரி
- விண்டோஸ் 10 ப்ரோ 64-பிட்
- 720p வெப்கேமரா
- 3.5mm ஆடியோ ஜாக், கைரேகை சென்சார்
- 5ஜி – சப்-6 GHz மற்றும் எம்எம் வேவ், 4ஜி எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி 2
- 56WH பேட்டரி
ஏசர் ஸ்பின் 7 கன்வெர்டிபில் லேப்டாப் விலை ரூ. 1,34,999 ஆகும். இது ஏசர் எக்ஸ்குளூசிவ் ஸ்டோர், ஏசர் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் இதர விற்பனை மையங்களில் கிடைக்கிறது.






