என் மலர்
கணினி
ஆடியோ சாதனங்களை உற்பத்தி செய்யும் ட்ரூக் நிறுவனம் இந்திய சந்தையில் புது இயர்பட் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
வயர்லெஸ் ஸ்டீரியோ, வயர்லெஸ் ஹெட்போன் போன்ற சாதனங்களை உற்பத்தி செய்யும் ட்ரூக் நிறுவனம் மூன்று புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ்- பிட் 1 பிளஸ், பட்ஸ் கியூ1 மற்றும் பட்ஸ் எஸ்1 இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
புதிய இயர்பட்ஸ் 10எம்எம் டிரைவர், ப்ளூடூத் 5.1, AAC கோடெக், IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட், ஒன் டச் கண்ட்ரோல், 85ms லோ லேடென்சி மோட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் பேட்டரி நிலவரத்தை காண்பிக்கும் டிஜிட்டல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
ட்ரூக் பிட் 1 பிளஸ் MEMS மைக், வளைந்த கேஸ், டிஜிட்டல் டிஸ்ப்ளே, 50 எம்ஏஹெச் பேட்டரி, 12 மணி நேர பிளேபேக், சார்ஜிங் கேஸ் சேர்த்து 48 மணி நேர பேக்கப் வழங்குகிறது. இதனை சார்ஜ் செய்ய மைக்ரோ யுஎஸ்பி போர்ட் வழங்கப்படுகிறது.

ட்ரூக் பட்ஸ் கியூ1 மாடலில் குவாட் MEMS மைக், டிஜிட்டல் டிஸ்ப்ளே கொண்ட காம்பேக்ட் கேஸ், 10 மணி நேர பிளேபேக், சார்ஜிங் கேஸ் சேர்த்து 60 மணி நேர பேக்கப் வழங்குகிறது. இதில் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
ட்ரூக் பட்ஸ் எஸ்1 மாடலிலும் குவாட் MEMS மைக், டிஜிட்டல் டிஸ்ப்ளே கொண்ட ஸ்லைடிங் கேஸ் டிசைன், லோ லேடென்சி மோட், அதிகபட்சம் 10 மணி நேர பிளேபேக், சார்ஜிங் கேஸ் சேர்த்து 60 மணி நேர பேக்கப் வழங்குகிறது. இதில் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் ட்ரூக் பிட் 1 பிளஸ் விலை ரூ. 999, பட்ஸ் கியூ1 விலை ரூ. 1299 மற்றும் பட்ஸ் எஸ்1 விலை ரூ. 1499 ஆகும். இவற்றில் ட்ரூக் பட்ஸ் எஸ்1 ப்ளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது. மற்ற இரு மாடல்கள் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வில் பல்வேறு புது சேவைகள் மற்றும் சாதனங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வு விர்ச்சுவல் முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் ஆப்பிள் பாட்காஸ்ட் செயலி பற்றி புது தகவல்களை வெளியிட்டார். அதன்படி இந்த செயலி புது தோற்றம் பெற்று இருக்கிறது.

மேலும் புது யுஐ கொண்டிருக்கும் பாட்காஸ்ட் செயலியுடன் பாட்காஸ்ட் சந்தா எனும் புது சேவையும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது பாட்காஸ்ட் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார். இத்துடன் ஆப்பிள் பைண்ட் மை சர்வீஸ் பற்றியும் டிம் குக் தெரிவித்தார்.
இத்துடன் ஆப்பிள் ஏர் டேக்ஸ் எனும் புது சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. இது பயனர்களின் பொருட்கள் காணாமல் போனால் அவற்றை கண்டறியும் வசதி கொண்டுள்ளது. மேலும் இது ஆப்பிளின் மற்ற சாதனங்களை போன்றே பயனர் விவரங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பின்க் நிறத்தில் வாட்ஸ்அப் செயலி அறிமுகம் செய்யப்பட்டதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வாட்ஸ்அப் செயலியை பின்க் நிறத்தில் பயன்படுத்தலாம் என கூறும் தகவல் வேகமாக பரவி வருகிறது. இந்த தகவலுடன் வாட்ஸ்அப் பின்க் செயலியை டவுன்லோட் செய்யக் கூறி அதற்கான இணைய முகவரியும் வழங்கப்படுகிறது. இதனை க்ளிக் செய்ததும், ஸ்மார்ட்போனின் தீங்கு விளைவிக்கும் செயலி இன்ஸ்டால் ஆகிவிடும்.

பின் செயலியை இன்ஸ்டால் செய்தவரின் விவரங்களை ஹேக்கர்கள் இயக்க முடியும். இந்த செயலிக்கும் வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது. இதுபற்றிய விவரங்களை சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர் ராஜசேகர் ராஜாரியா வெளியிட்டு இருக்கிறார்.
இத்துடன் செயலி வாட்ஸ்அப் இன்டர்பேஸ் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் ஸ்கிரீன்ஷாட்களையும் அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். போலி செயலி மூலம் முடிந்தவரை பயனர்களின் விவரங்களை சேகரிக்க ஹேக்கர்கள் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் 8 ஸ்போர்ட்ஸ் மோட் வசதி கொண்ட புது பிட்னஸ் பேண்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிட்2220சிஹெச் பிட்னஸ் பேண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பிட்னஸ் பேண்ட் மாடலில் இரத்த அழுத்தத்தை டிராக் செய்யும் சென்சார், இதய துடிப்பு சென்சார், எஸ்பிஒ2 சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 3.3செ.மீ டிஎப்டி டச் கலர் டிஸ்ப்ளே, 2.5டி வளைந்த கிளாஸ், 100-க்கும் அதிக வாட்ச் பேஸ்களை கஸ்டமைஸ் செய்யும் வசதி உள்ளிட்டவை வழழங்கப்படுகிறது. இத்துடன் ஐபி68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது. இதனை ப்ளூடூத் 5.0 மூலம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களுடன் இணைந்து கொள்கிறது.

இது உடலில் உறக்கம், நடந்தே கடந்த தூரம், உடலில் எரிக்கப்பட்ட கலோரிகள் எண்ணிக்கை போன்ற விவரங்களை வழங்குகிறது. 200 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஜெப் பிட்2220சிஹெச் ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 நாட்கள் ஸ்டான்ட்-பை வழங்கும். ஸ்மார்ட் பேண்ட் ஜெப் பிட் 20 சீரிஸ் செயலி கொண்டு இயக்க முடியும்.
ஜெப்ரானிக்ஸ் டெப் பிட் 2220சிஹெச் மாடல் பிளாக் கேஸ், பிளாக் ஸ்ட்ரிப், கோல்டு கேஸ் மற்றும் ரோஸ் கோல்டு ஸ்டிராப் மற்றும் சில்வர் கேஸ் மற்றும் கேடெட் கிரே ஸ்டிராப் நிறங்களில் கிடைக்கிறது. இந்த பிட்னஸ் பேண்ட் அமேசான் தளத்தில் ரூ. 2999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
போட் நிறுவனத்தின் புதிய எக்ஸ்புளோரர் ஸ்மார்ட்வாட்ச் மாடல் அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கிறது.
போட் நிறுவனம் தனது முதல் ஸ்மார்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. போட் எக்ஸ்புளோரர் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.3 இன்ச் கலர் 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, இதய துடிப்பு சென்சார், 8 வித்தியாச ஸ்போர்ட் மோட்கள், வாட்டர் ரெசிஸ்டண்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

போட் எக்ஸ்புளோரர் அம்சங்கள்
- 1.3 இன்ச் 240x240 பிக்சல் கலர் டச் 2.5D வளைந்த டிஸ்ப்ளே
- ப்ளூடூத் 4.2
- அழைப்புகள், குறுந்தகவல், அலாரம் உள்ளிட்டவைகளுக்கு வைப்ரேஷன் அலெர்ட்
- 24/7 இதய துடிப்பு சென்சார்
- 8 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- பில்ட் இன் ஜிபிஎஸ்
- வாட்டர் ரெசிஸ்டண்ட்
- ரிமோட் கேமரா, மியூசிக் கண்ட்ரோல், Find my phone அம்சம்
- 210 எம்ஏஹெச் பேட்டரி
போட் வாட்ச் எக்ஸ்புளோரர் மாடல் பிட்ச் பிளாக், ஆரஞ்சு பியூஷன் மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2999 ஆகும். இது ப்ளிப்கார்ட் மற்றும் போட் வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வுக்கான தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் ஏப்ரல் 28 ஆம் தேதி கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு நடைபெற இருப்பதாக அறிவித்து உள்ளது. இந்த நிகழ்வில் இதுவரை வெளியானதில் சக்திவாய்ந்த கேலக்ஸி சாதனம் அறிமுகமாகும் என தெரிகிறது.

அடுத்த வாரம் நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் புதிய கேலக்ஸி புக் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. முன்னதாக கேலக்ஸி புக் ப்ரோ மற்றும் கேலக்ஸி புக் ப்ரோ 360 போன்ற மாடல்களின் ரென்டர் இணையத்தில் வெளியாகி இருந்தது.
தற்போது கேலக்ஸி புக் மாடல் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இத்துடன் கேலக்ஸி புக் கோ மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இந்த மாடல் ஏஆர்எம் சார்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் 2021 ஏப்ரல் மாத நிகழ்வில் புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஏப்ரல் 20 ஆம் தேதி பிரத்யேக நிகழ்வை நடத்த இருக்கிறது. இந்த தகவல் தவறுதலாக வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் புதிய ஐபேட் ப்ரோ, ஏர்டேக்ஸ் டிராக்கர் போன்ற சாதனங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

ஏப்ரல் 20 நிகழ்வு குறித்து ஆப்பிள் எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், சிரியிடம் அடுத்த ஆப்பிள் நிகழ்வு தேதி கேட்டதற்கு `ஏப்ரல் 20 ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சி ஆப்பிள் பார்க் வளாகத்தில் நடைபெறுகிறது. இதுபற்றிய விவரங்கள் ஆப்பிள் வலைதளத்தில் காணலாம்' என பதில் அளித்துள்ளது.
அடுத்த வாரம் நடைபெற இருக்கும் நிகழ்வு குறித்து விரைவில் ஆப்பிள் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடலாம் என கூறப்படுகிறது. மேலும் இது விர்ச்சுவல் முறையில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஐபேட் ப்ரோ மாடல்கள், ஆப்பிள் ஏர்டேக்ஸ் போன்றவை அறிமுகம் செய்யப்படலாம்.
2021 மார்ச் மாதத்தில் உலகளவில் பேஸ்புக் செயலியை அதிகம் டவுன்லோட் செய்த நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பிடித்து இருக்கிறது.
உலகளவில் கேமிங் அல்லாத செயலிகள் பிரிவில் அதிக டவுன்லோட்களை டிக்டாக் பெற்று இருக்கிறது. மார்ச் மாதத்தில் மட்டும் 5.8 கோடி டவுன்லோட்களை பெற்றுள்ளது. டிக்டாக்கை தொடர்ந்து பேஸ்புக் அதிக டவுன்லோட்களை பெற்று இருக்கிறது. பேஸ்புக் செயலியை 5.6 கோடி பேர் டவுன்லோட் செய்துள்ளனர்.

கேமிங் அல்லாத செயலிகள் பிரிவில் அதிக டவுன்லோட்களை பெற்ற டாப் 5 செயலிகளில் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. பேஸ்புக் செயலியை அதிகம் டவுன்லோட் செய்த நாடுகள் பட்டியலில் 25 சதவீதம் இந்தியாவில் இருந்தும், அமெரிக்காவில் இருந்து 8 சதவீதம் ஆகும்.
டாப் 10 செயலிகள் பட்டியலில் ஸ்னாப்சாட், ஜோஷ், ஜூம், டெலிகிராம் மற்றும் கேப்கட் உள்ளிட்டவையும் இடம்பெற்று இருக்கிறது. கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் பேஸ்புக் முதலிடம் பிடித்து உள்ளது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா லைட் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. இது தோற்றத்தில் ஒன்பிளஸ் பட்ஸ் இசட் போன்றே காட்சியளிக்கிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 36 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்கும்.

இது 6எம்எம் டிரைவர், ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி, யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இதன் இயர்பட்கள் முறையே 40 எம்ஏஹெச் பேட்டரியும் சார்ஜிங் கேஸ் 400 எம்ஏஹெச் பேட்டரியுடம் கொண்டிருக்கின்றன. இயர்பரட்கள் 6 மணி நேரமும், சார்ஜிங் கேஸ் கொண்டு கூடுதலாக 30 மணி நேரமும் பேக்கப் வழங்குகின்றன.
புதிய நோக்கியா லைட் இயர்பட்ஸ் பிளாக் மற்றும் போலார் சீ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 39 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 3,400 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
ஜாப்ரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த வயர்லெஸ் இயர்போனில் அப்டேட் மூலம் புது வசதி வழங்குகிறது.
ஜாப்ரா நிறுவனம் தனது எலைட் 85டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலுக்கு அமேசான் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியை வழங்குகிறது. இந்த அம்சம் ஜாப்ரா சவுண்ட் பிளஸ் செயலி மூலம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களுக்கு வழங்கப்படுகிறது.
மென்பொருள் அப்டேட்டை பயனர்கள் ஜாப்ரா சவுண்ட் பிளஸ் செயலி மூலம் எலைட் 85டி மாடலில் இன்ஸ்டால் செய்து கொளஅளலாம். அப்டேட் நிறைவுற்றதும், அலெக்சா சேவையை செட் செய்ய மீண்டும் ஜாப்ரா சவுண்ட் பிளஸ் செயலியில் செட்டிங்ஸ் அம்சத்தை இயக்க வேண்டும்.

செமி ஓபன் டிசைன் கொண்டிருக்கும் இந்த இயர்போன்களில் 12 எம்எம் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இரு்கின்றன. இதன் வடிவமைப்பு காதுகளில் சவுகரிய அனுபவத்தை வழங்குகின்றன. இதன் வடிவம் காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
இதில் உள்ள பிரத்யேக நாய்ஸ் கேன்சலேஷன் சிப் சிறப்பான நாய்ஸ் கேன்சலேஷன் வசதியினை வழங்குகிறது. இதில் உள்ள HearThrough Mode கொண்டு வெளிப்புற சத்தத்தை இயர்பட்கள் வழியே கேட்க முடியும். இந்த இயர்பட் ஒவ்வொன்றும் அதிகபட்சம் 5.5 மணி நேர பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கின்றன. மேலும் இத்துடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது 25 மணி நேர பேக்கப் கிடைக்கும்.
கூகுள் நிறுவனம் இந்த ஆண்டுக்கான டெவலப்பர் நிகழ்வு தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
கூகுள் நிறுவனம் தனது கூகுள் I/O வருடாந்திர டெவலப்பர் நிகழ்வு மே 18 துவங்கி மே 20 வரை நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இந்த ஆண்டு டெவலப்பர் நிகழ்வு விர்ச்சுவல் முறையில் நடைபெறுகிறது. இதில் அனைவரும் இலவசமாக கலந்து கொள்ளலாம்.
வழக்கமாக கூகுள் தனது டெவலப்பர்கள் நிகழ்வில் புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷனை வெளியிடும். மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்வில் கூகுள் வழங்கும் மென்பொருள் சேவைகள் பற்றி டெவலப்பர்களுடன் விவாதங்கள், உரையாடல்கள் நடைபெறும்.

இவற்றுடன் இந்த ஆண்டு கூகுள் நிறுவனம் ஹார்டுவேர் சாதனங்களான மேம்பட்ட பிக்சல் பட்ஸ் மற்றும் பிக்சல் 5ஏ உள்ளிட்டவைகளை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு கூகுள் I/O நிகழ்வு கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் இந்த நிகழ்வு நடத்தப்படவில்லை.
கொரோனாவைரஸ் பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராத காரணத்தால் கூகுள் 2021 I/O நிகழ்வினை விர்ச்சுவல் முறையில் நடத்துகிறது. இதற்கென பிரத்யேக வலைதளம் ஒன்றையும் கூகுள் திறந்துள்ளது. இதில் கலந்து கொள்பவர்களுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெறுகிறது.
நுகர்வோர் மின்சாதன பொருட்களை விற்பனை செய்யும் போர்டிரானிக்ஸ் பிராண்டு இந்திய சந்தையில் புது நெக்பேண்ட் இயர்போனை அறிமுகம் செய்தது.
போர்டிரானிக்ஸ் பிராண்டின் புதிய ஹார்மோனிக்ஸ் 230 வயர்லெஸ் ஸ்போர்ட்ஸ் நெக்பேண்ட் இயர்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது ஆக்டிவ் சிவிசி 8.0 நாய்ஸ் ரிடக்ஷன் தொழில்நுட்பம், 7 மணி நேர பேட்டரி பேக்கப், ப்ளூடூத் 5 மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.
ஹார்மோனிக்ஸ் 230 வயர்லெஸ் ஹெட்செட் 10எம்எம் டிரைவர்களை கொண்டுள்ளது. இதில் உள்ள நாய்ஸ் ரிடக்ஷன் தொழில்நுட்பம் அழைப்புகளின் போது தெளிவான ஆடியோவை வழங்குகிறது. இயர்பட்களின் பின்புறம் காந்தம் உள்ளதால், அவை எளிதில் வைத்துக் கொள்ள முடியும். மேலும் சிலிகான் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதால், இதன் எடை குறைவாக இருக்கிறது.

இதில் உள்ள 110 எம்ஏஹெச் பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும். மேலும் இதில் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதால், 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கு பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.
போர்டிரானிக்ஸ் ஹார்மோனிக்ஸ் 230 ப்ளூடூத் ஹெட்செட் பிளாக் மற்றும் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1999 ஆகும். னினும், அமேசானில் இந்த இயர்போன் ரூ. 999 விலையிலும், ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 899 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.






