என் மலர்
கணினி
ஹெச்பி நிறுவனம் அசத்தல் அம்சங்கள் நிறைந்த புது குரோம்புக் மாடலை பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
ஹெச்பி நிறுவனம் இந்திய சந்தையில் புது குரோம்புக் 11ஏ மாடலை அறிமுகம் செய்தது. இதில் 11.6 இன்ச் ஹெச்டி டச் ஸ்கிரீன், மீடியாடெக் எம்டி8183 ஆக்டாகோர் பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் வழங்கும் கூகுள் ஒன் சந்தா, ஒரு வருடத்திற்கு கூகுள் எக்ஸ்பர்ட்ஸ் சந்தா மற்றும் பல்வேறு பலன்கள் வழங்கப்படுகிறது.
1.05 கிலோ எடை கொண்டிருக்கும் புது குரோம்பு, க் 11ஏ மேட் பினிஷ் மற்றும் டெக்ஸ்ச்சர் கவர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பேட்டரி 16 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.

ஹெச்பி குரோம்புக் 11ஏ அம்சங்கள்
- 11.6 இன்ச் 1366x768 பிக்சல் HD LED பேக்லிட் டச் டிஸ்ப்ளே
- 2 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் எம்டி8183 ஆக்டாகோர் பிராசஸர்
- ARM மாலி-G72 MP3 GPU
- 4 ஜிபி DDR4 ரேம்
- 64 ஜிபி eMMC மெமரி
- புல்-சைஸ் ஆஷ் கிரே கீபோர்டு
- ஹெச்டி ட்ரூ விஷன் ஹெச்டி வெப்கேம்
- கம்பைன்டு ஹெட்போன் / மைக்ரோபோன் ஜாக்
- பில்ட்-இன் டூயல் ஸ்பீக்கர்
- வைபை 5, ப்ளூடூத் 5.0, 1 x யுஎஸ்பி 2.0 டைப் சி
- 1 x யுஎஸ்பி 2.0 டைப் ஏ, 3-இன்-1 கார்டு ரீடர் (SD, SDHC, SDXC)
- 37wh லி-அயன் பாலிமர் பேட்டரி
ஹெச்பி குரோம்புக் 11ஏ இன்டிகோ புளூ நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 21,999 ஆகும். இது ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் பிரீமியம் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் வாட்ச் ஒடிஏ அப்டேட் மூலம் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வசதி பெறுகிறது.
ஒன்பிளஸ் வாட்ச் மாடலில் விரைவில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வசதி வழங்கப்படுகிறது. இந்த வசதி ஒவர் தி ஏர் அப்டேட் மூலம் வழங்கப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய ஒன்பிளஸ் வாட்ச் மார்ச் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த வாட்ச் ரூ. 14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதிகம் விரும்பப்படும் அம்சமாக இருந்தாலும், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வசதி ஸ்மார்ட்வாட்ச் சார்ஜிங் பயன்பாட்டை 50 சதவீதம் வரை எடுத்துக் கொள்ளும். ஒன்பிளஸ் அறிமுகம் செய்திருக்கும் முதல் ஸ்மார்ட்வாட்ச் என்ற வகையில் இது பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.
ஒன்பிளஸ் வாட்ச் மாடல் அந்நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் மாடல்களான ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. பெரும்பாலான பயனர்கள் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வசதியை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் இந்த கோரிக்கை ஒடிஏ அப்டேட் மூலம் நிறைவேற்றப்படும் என ஒன்பிளஸ் தெரிவித்து உள்ளது.
இந்திய நிறுவனமான ஐகியர் பில்ட்-இன் சப்-வூபர் வசதி கொண்ட புது வயர்லெஸ் சவுண்ட்பார் மாடலை அறிமுகம் செய்தது.
இந்தியாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் அக்சஸரீ பிராண்டான ஐகியர் ரேசர்பீட் வயர்லெஸ் சவுண்ட்பார் சாதனத்தை அறிமுகம் செய்தது. இந்த சவுண்ட்பார் 10வாட் அவுட்புட் பவர், ப்ளூடூத் ஆக்ஸ் என பல்வேறு இன்புட்களை சப்போர்ட் செய்கிறது.

ஐகியர் ரேசர்பீட் தனிப்பட்ட ப்ளூடூத் ஸ்பீக்கர் சிஸ்டமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் பில்ட்-இன் சப்-வூபர் மற்றும் 10 வாட் அவுட்புட் பவர் உள்ளது. மேலும், இது ப்ளூடூத் 5.0, ஆக்ஸ்-இன், யுஎஸ்பி, எப்எம் ரேடியோ மற்றும் எஸ்டி கார்டு போன்ற இன்புட் வசதிகள் உள்ளன.
ஐகியர் ரேசர்பீட் சவுண்ட்பார் 1500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் தொடர்ச்சியாக 4 முதல் 5 மணி நேரங்களுக்கு பயன்படுத்த முடியும். இந்தியாவில் இதன் விலை ரூ. 2 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ப்ளிப்கார்ட், அமேசான் தளங்களில் கிடைக்கிறது.
ஐந்து ஆண்டுகளாக நட்டத்தில் இயங்கி வந்ததால் மொபைல் போன் வியாபாரத்தில் இருந்து வெளியேறுவதாக எல்ஜி அறிவித்து இருக்கிறது.
எல்ஜி நிறுவனம் மொபைல் போன் வியாபாரத்தில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தது. இந்த முடிவிற்கான அனுமதியை அதன் நிர்வாக இயக்குனர்கள் அளித்ததை தொடர்ந்து எல்ஜி இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
அதிக போட்டி நிறைந்த மொபைல் போன் சந்தையில் இருந்து விலகுவதன் மூலம் எலெக்ட்ரிக் வாகன பாகங்கள், கனெக்டெட் சாதனங்கள், ஸ்மார்ட் ஹோம், ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு என வளர்ச்சியை ஏற்படுத்தும் வியாபாரங்களில் அதிக கவனம் செலுத்த முடியும் என எல்ஜி தெரிவித்தது.
முந்தைய தகவல்களில் எல்ஜி தனது மொபைல் போன் வியாபார பிரிவை வியட்நாமை சேர்ந்த வின்குரூப் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த போக்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால், வியாபாரத்தை நிறுத்துவதாக எல்ஜி அறிவித்து இருக்கிறது.

எல்ஜி நிறுவனத்தின் மொபைல் பிரிவு கடந்த ஐந்து ஆண்டுகளாக பெரும் நட்டத்தை சந்தித்து வந்ததது. இதனால் எல்ஜி குழுமத்திற்கு 4.5 பில்லியன் டாலர்கள் அளவு இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
தற்போது எல்ஜி மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு தொடர்ந்து மென்பொருள் அப்டேட், சர்வீஸ் வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இவை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும். இதுவும், ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வேறுபடும்.
ஜூலை 31 ஆம் தேதியுடன் எல்ஜி மொபைல் போன் வியிபாரம் முழுமையக நிறுத்தப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை சில எல்ஜி மாடல்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.
அமேஸ்பிட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை விரைவில் அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது.
ஸ்மார்ட் அணியக்கூடிய பிராண்டான அமேஸ்பிட் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் ரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் என அமேஸ்பிட் தெரிவித்து உள்ளது.
அமேஸ்பிட் புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.43 இன்ச் ஹெச்டி டிஎப்டி-எல்சிடி கலர் டிஸ்ப்ளே, 2.5டி கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 50-க்கும் அதிக வாட்ச் பேஸ்களை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்கள் சொந்த புகைப்படத்தை பேக்கிரவுண்டாக செட் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

அமேஸ்பிட் பிப் யு ப்ரோ மாடலில் பில்ட்-இன் அலெக்சா மற்றும் ஜிபிஎஸ் உள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் வாட்ச் உடன் உரையாடி மியூசிக், அலாரம், நோட்டிபிகேஷன் என பல அம்சங்களை இயக்க முடியும். மேலும் 60-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட் உள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் செயலியுடன் இணைந்து கொண்டு உடல்நலன் சார்ந்த விவரங்களை வழங்குகிறது. இது பயனரின் அன்றாட நடவடிக்கைகளை துல்லியமாக டிராக் செய்து அதுபற்றிய தகவல்களை வழங்கும். இத்துடன் குறுந்தகவல், மின்னஞ்சல் உள்ளிட்டவைகளுக்கு நோட்டிபிகேஷன் வழங்குகிறது.
அமேஸ்பிட் பிப் யு ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இது பிளாக், பின்க் மற்றும் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
ஸ்கல்கேண்டி நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலையில் புது இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. இதன் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஆடியோ சாதனங்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான ஸ்கல்கேண்டி இந்திய சந்தையில் புதுய ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. புதிய இயர்பட்ஸ் 12 மணி நேர பேட்டரி பேக்கப் கொண்டுள்ளது. இத்துடன் IPX4 சான்று, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி சார்ஜிங் என பல வசதிகளை கொண்டுள்ளது.
டைம் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் காம்பேக்ட் நாய்ஸ்-ஐசோலேடிங் டிசைன் மூலம் காதுகளில் சவுகரிய உணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 6எம்எம் டிரைவர்கள் உள்ளன. இவை ஸ்கல்கேண்டியின் பிரீமியம் ஆடியோ அனுபவத்தை துல்லியமாக வழங்குகின்றன. ப்ளூடூத் 5 உள்ளதால் இது சீரான இணைப்பை வழங்கும்.

ஒவ்வொரு இயர்பட் ஒற்றை பட்டன் கொண்டுள்ளது. இதை கொண்டு மியூசிக் பிளேபேக், கால் கண்ட்ரோல் போன்ற அம்சங்களை இயக்கலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த இயர்பட்களை 3.5 மணி நேரங்களுக்கு பயன்படுத்தலாம். சார்ஜிங் கேஸ் சேர்த்தால் மொத்தம் 8.5 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம்.
புதிய ஸ்கல்கேண்டி டைம் இயர்பட்ஸ் டார்க் புளூ/கிரீன், சில் கிரே, லைட் கிரே/புளூ மற்றும் ட்ரூ பிளாக் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2,249 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது 2021 டெவலப்பர்கள் நிகழ்வு ஆன்லைனில் நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் 2021 WWDC நிகழ்வு விர்ச்சுவல் முறையில் ஜூன் 7 ஆம் தேதி துவங்குவதாக அறிவித்து இருக்கிறது. ஆன்லைனில் நடைபெறும் இந்த நிகழ்வு ஜூன் 11 வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்க பயனர்கள் 1599 டாலர்கள் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்துவோருக்கு இந்த நிகழ்வு ஆப்பிள் டெவலப்பர் ஆப் அல்லது டெவலப்பர் வலைதளத்தில் நேரலை செய்யப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் டெவலப்பர்கள் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது எதிர்கால மென்பொருள் முன்னேற்றங்கள் குறித்த விவரங்களை அறிவிக்கும். அதன்படி இந்த ஆண்டு ஐஒஎஸ் 15, ஐபேட் ஒஎஸ் 15, மேக் ஒஎஸ் 12, வாட்ச் ஒஎஸ் 8 மற்றும் டிவி ஒஎஸ் 15 உள்ளிட்டவைகளுக்கான அப்டேட் வெளியிடப்படலாம்.

டெவலப்பர்கள் நிகழ்வுடன் மாணவர்களுக்கான ஸ்விப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்ச் அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்களின் கோடிங் திறமையை வெளிப்படுத்த முடியும். இதில் மாணவர்கள் தங்களுக்கென சொந்தமாக ஸ்விப்ட் பிளேகிரவுண்ட் உருவாக்க வேண்டும்.
இந்த ஆண்டு மாணவர்கள் தங்களின் படைப்புகளை ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் சமர்பிக்கலாம். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு WWDC21 பிரத்யேக ஆடை மற்றும் பின் செட் வழங்கப்படும். இந்த நிகழ்வு பற்றிய புது தகவல்கள் நிகழ்வு துவங்கும் முன் அறிவிக்கப்படும் என ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது.
சோனி நிறுவனம் தனது கேமிங் கன்சோலுக்கு இனி இந்த சேவை கிடைக்காது என தெரிவித்து இருக்கிறது.
சோனி நிறுவனம் தனது பிஎஸ்3 மற்றும் வீடா கேம் கன்சோல்களுக்கு பிளே ஸ்டேஷன் ஸ்டோர் சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்து உள்ளது. அதன்படி பிஎஸ்3 சாதனத்தில் ஜூலை 2 ஆம் தேதியும், வீட்டா சாதனத்தில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் பிளே ஸ்டேஷன் ஸ்டோர் சேவை கிடைக்காது.
புது அறிவிப்பு காரணமாக பிஎஸ்3 மற்றும் வீட்டா சாதனங்களுக்கான கேம்களை டிஜிட்டல் வடிவில் பயனர்களால் இனி வாங்க முடியாது.

`பிளே ஸ்டேஷன் 3 கன்சோல்களுக்கு ஜூலை 2, 2021 மற்றும் பிளே ஸ்டேஷன் வீட்டா கன்சோல்களுக்கு ஆகஸ்ட் 27, 2021 ஆம் தேதியுடன் பிளே ஸ்டேஷன் ஸ்டோர் சேவையை நிறுத்துகிறோம். மேலும் பிஎஸ்பி அதாவது பிளே ஸ்டேஷன் போர்டபில் விற்பனையையும் ஜூலை 2, 2021 ஆம் தேதியுடன் நிறுத்துகிறோம்.' என சோனி தெரிவித்து உள்ளது.
சோனி நிறுவனம் தனது பிஎஸ்3 கன்சோலை நவம்பர் 2006 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதுவரை இந்த கன்சோல் சுமார் 8 கோடிக்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. பிளே ஸ்டேஷன் வீட்டா மொத்ததில் ஒரு கோடிக்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் புதிய அலெக்சா ஸ்மார்ட் ஸ்பீக்கர் சாதனத்தை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது.
ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஜெப் ஸ்மார்ட் பாட் எனும் பெயரில் புதிய அலெக்சா ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்தது. அலெக்சா வசதி கொண்ட ஜெப் ஸ்மார்ட் பாட் ஸ்பீக்கர் மூலம், இல்லத்தை ஸ்மார்ட் இல்லமாக மாற்ற முடியும். டிவி, ஏசி, போன்ற ஸ்மார்ட் தொழில்நுட்பம்-அல்லாத சாதனங்களையும் IR ரிமோட் மூலம் கட்டுப்படுத்தலாம்.
புதிய ஜெப் ஸ்மார்ட் பாட் இந்தியாவின் முன்னணி அக்சஸரி பிராண்டான ஜெப்ரானிக்ஸ்-இன் முதல் ஸ்மார்ட் ஸ்பீக்கர் ஆகும். இது சாதனங்களைத் தொலைவில் இருந்து கட்டுப்படுத்தக்கூடியது. இத்துடன் குரல் வழி (வாய்ஸ் அசிஸ்டென்ஸ்) மூலம் இயக்க உதவும் அலெக்சா சேவையை கொண்டுள்ளது.
இதன் மூலம் செய்திகளைக் கேட்கலாம், ஆடியோ புத்தகத்தை இயக்கலாம். மேலும் இதுபோன்ற பல்வேறு விஷயங்கள் உள்ளன. ஜெப் ஸ்மார்ட் பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அளவில் மிக சிறியதாக இருந்தாலும், 360 டிகிரி IR பிளாஸ்டர் அம்சத்தைக் கொண்டிருப்பதால், பலதரப்பட்ட வேலைகளைச் செய்யும்.

இது IR இயக்க வசதி உள்ள எந்த சாதனத்தையும் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தலாம். குறிப்பாக இதில் டூயல் ஃபார்-ஃபீல்ட் மைக் மற்றும் இன்-பில்ட் அலெக்சா, ஜெப் (ZEB) செயலியுடனான இணக்கும் வசதி உள்ளது. இந்த செயலி பிளேஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது.
ஜெப் ஸ்மார்ட் பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கரானது உயர் தரமான டூயல் ஃபார்-ஃபீல்ட் மைக் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இன்-பில்ட் அலெக்சா வசதி இருப்பதால் குரல் வழியே பலவற்றை செய்யலாம். நீங்கள் குரல் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்த விரும்பினால் “அலெக்சா” என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் சொன்னாலே போதுமானது.
இந்தியாவில் புதிய ஜெப் ஸ்மார்ட் பாட் ஸ்பீக்கர் விலை ரூ. 3699 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடிய தலைப்புகள் வெளியாகி இருக்கின்றன. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கொரோனாவைரஸ் பெருந்தொற்று காரணமாக உலகம் முழுக்க பெரும்பாலான பணிகள் ஆன்லைன் மயமாகி விட்டது. இந்த நிலையில், வீட்டில் இருந்தே பணியாற்றுவது (work from home jobs) குறித்த தேடல்கள் கூகுளில் கடந்த ஆண்டு 140 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அச்சம் பலருக்கும் அதிகரித்து இருப்பதால், இந்தியர்கள் பெரும்பாலான சேவைகளை ஆன்லைன் மூலமாக பெற துவங்கி உள்ளனர். கடந்த ஒரே ஆண்டில் மட்டும் ஆன்லைன் மருத்துவம் (online doctor consultation) பற்றிய தேடல் 300 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

ஆன்லைன் தேடல் சதவீதம் மணிப்பூர், பீகார் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட நகரங்களில் பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. 2020 ஆண்டு ஊரடங்கு காரணமாக டிஜிட்டல் சேவைகளின் பயன்பாடு அதிகரிக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
கல்வி சார்ந்த தேடல்களில் கல்விமுறை கடந்து தொழில்முறை, புதிய திறன் வளர்த்தல், தொழில் துவங்குதல், வருவாய் ஈட்டுதல் போன்ற துறைகள் பற்றி இந்தியர்கள் அதிகளவு தேடியுள்ளனர். 2020 கூகுள் தேடல் பற்றிய விவரங்களை அந்நிறுவனம் அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறது.
போட் நிறுவனம் இந்திய சந்தையில் புது வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை குறைந்த விலையில் அறிமுகம் செய்தது.
இந்தியாவின் முன்னணி மின்சாதன அக்சஸரீ பிராண்டான போட், ஏர்டோப்ஸ் 621 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. புது இயர்பட்ஸ் 150 மணி நேர பேக்கப், ப்ளூடூத் 5, வாட்டர் ரெசிஸ்டண்ட் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.
ஏர்டோப்ஸ் 621 மாடலில் போட் நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க சவுண்ட், 6எம்எம் டிரைவர்கள் உள்ளன. இத்துடன் புது இயர்பட்ஸ் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் மாடலின் மிகமுக்கிய அம்சமாக அதன் பேட்டரி பேக்கப் உள்ளது.

புதிய போட் ஏர்டோப்ஸ் 621 ஒவ்வொரு இயர்பட் 35 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது. இது 5.5 மணி நேரத்திற்கு தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும். மேலும் இதனுடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் 2600 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது. இது பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இது ஐந்து நிமிடம் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரம் பயன்படுத்த முடியும்.
இந்திய சந்தையில் போட் ஏர்டோப்ஸ் 621 மாடல் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அமேசான் தளத்தில் கிடைக்கிறது.
குவால்காம் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 7 சீரிசில் புதிய 5ஜி மொபைல் பிராசஸரை அறிமுகம் செய்தது.
குவால்காம் நிறுவனம் 780ஜி 5ஜி மொபைல் பிராசஸரை அறிமுகம் செய்தது. இது ஸ்னாப்டிராகன் 765ஜி / 768ஜி பிராசஸர்களின் மேம்பட்ட சிப்செட் ஆகும். இது 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிராசஸர் க்ரியோ 670சிபியு மற்றும் புதிய டிசைனில் உருவாகி இருக்கிறது.
இதில் குவால்காம் ஸ்பெக்ட்ரா 570, 6-ஆம் தலைமுறை குவால்காம் ஏஐ என்ஜின், குவால்காம் ஹெக்சாகன் 770 பிராசஸர் உள்ளது. இது முந்தைய பிராசஸரை விட இருமடங்கு வேகமாக செயல்படும். மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் எலைட் கேமிங் அம்சங்கள், அப்டேட் செய்யக்கூடிய GPU டிரைவர்கள், ட்ரூ 10 பிட் ஹெச்டிஆர் கேமிங் வசதிகள் உள்ளன.
ஸ்னாப்டிராகன் எக்ஸ்53 5ஜி மோடெம் அதிகபட்சம் 3.3 Gbps டவுன்லோட் வேகம் வழங்குகிறது. மேலும் இது வைபை 6, ப்ளூடூத் 5.2, டூயல் ஆன்டெனா மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் சவுண்ட் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களை இயக்கும் வசதி உள்ளது.






