search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    எல்ஜி போன்
    X
    எல்ஜி போன்

    மொபைல் போன் வியாபாரத்தை நிறுத்திய எல்ஜி

    ஐந்து ஆண்டுகளாக நட்டத்தில் இயங்கி வந்ததால் மொபைல் போன் வியாபாரத்தில் இருந்து வெளியேறுவதாக எல்ஜி அறிவித்து இருக்கிறது.


    எல்ஜி நிறுவனம் மொபைல் போன் வியாபாரத்தில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தது. இந்த முடிவிற்கான அனுமதியை அதன் நிர்வாக இயக்குனர்கள் அளித்ததை தொடர்ந்து எல்ஜி இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. 

    அதிக போட்டி நிறைந்த மொபைல் போன் சந்தையில் இருந்து விலகுவதன் மூலம் எலெக்ட்ரிக் வாகன பாகங்கள், கனெக்டெட் சாதனங்கள், ஸ்மார்ட் ஹோம், ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு என வளர்ச்சியை ஏற்படுத்தும் வியாபாரங்களில் அதிக கவனம் செலுத்த முடியும் என எல்ஜி தெரிவித்தது.

    முந்தைய தகவல்களில் எல்ஜி தனது மொபைல் போன் வியாபார பிரிவை வியட்நாமை சேர்ந்த வின்குரூப் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த போக்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால், வியாபாரத்தை நிறுத்துவதாக எல்ஜி அறிவித்து இருக்கிறது.

     எல்ஜி போன்

    எல்ஜி நிறுவனத்தின் மொபைல் பிரிவு கடந்த ஐந்து ஆண்டுகளாக பெரும் நட்டத்தை சந்தித்து வந்ததது. இதனால் எல்ஜி குழுமத்திற்கு 4.5 பில்லியன் டாலர்கள் அளவு இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    தற்போது எல்ஜி மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு தொடர்ந்து மென்பொருள் அப்டேட், சர்வீஸ் வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இவை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும். இதுவும், ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வேறுபடும். 

    ஜூலை 31 ஆம் தேதியுடன் எல்ஜி மொபைல் போன் வியிபாரம் முழுமையக நிறுத்தப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை சில எல்ஜி மாடல்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.
    Next Story
    ×