என் மலர்tooltip icon

    கணினி

    ஸ்கல்கேன்டி நிறுவனம் இந்திய சந்தையில் புது வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    அமெரிக்காவை பூர்விகமாக கொண்டு இயங்கி வரும் ஸ்கல்கேன்டி நிறுவனம் இந்திய சந்தையில் புது வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்கல்கேன்டி இன்டி ANC இயர்பட்ஸ் ANC எனப்படும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டுள்ளது. 

    இந்த அம்சத்தை ஸ்கல்கேன்டி செயலி கொண்டு மிக சிறப்பாக இயக்க முடியும். இத்துடன் ஆம்பியன்ட் லிசனிங் மோட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது இயர்பட்களை தனித்தனியாக பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது. இத்துடன் காதுகளில் சவுகரியமாக பொருந்தி கொள்ளும் வடிவமைப்பு கொண்டிருக்கிறது.

    வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் இந்த இயர்பட்கள் மொத்தம் 19 மணி நேர பேக்கப் வழங்குகிறது. புதிய ஸ்கல்கேன்டி இன்டி ANC மாடலின் விலை ரூ. 10,990 ஆகும்.
    இந்திய சந்தையில் புதிய பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலையும் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.39 இன்ச் ஹெச்டி 454x454 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 2.5டி வளைந்த கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய ஸ்மார்ட்வாட்ச் 46 எம்எம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் கொண்டுள்ளது. மேலும் நோட்டிபிகேஷன், அழைப்புகளை மேற்கொள்வது, நிராகரிப்பது, மியூசிக், புகைப்படங்களை எடுப்பது போன்ற அம்சங்களை இயக்கும் வசதி கொண்டுள்ளது. இத்துடன் 4 ஜிபி மெமரி உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பெரும்பாலான ப்ளூடூத் இயர்பட்களுடன் இணைந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

     ஒன்பிளஸ் வாட்ச்

    மேலும் இது ஒன்பிளஸ் டிவியுடன் இணைந்து ரிமோட் போன்றும் இயங்குகிறது. இதை கொண்டு டிவி ஒலியை குறைத்தல் மற்றும் டிவியை ஆப் செய்யவும் முடியும். 5ATM+IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இத்துடன் 110-க்கும் அதிக உடற்பயிற்சிகளை தானாக கண்டறிந்து கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது. 

    ஒன்பிளஸ் வாட்ச் மாடலில் 402 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது இரண்டு வாரங்களுக்கு தேவையான பேக்கப் வழங்குகிறது. இத்துடன் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருப்பதால், ஐந்தே நிமிடங்களில் ஒரு நாளுக்கு தேவையான திறனையும், 20 நிமிடங்களில் ஒரு வாரத்திற்கு தேவையான பேக்கப் வழங்குகிறது.

    ஒன்பிளஸ் வாட்ச் மாடல் மிட்நைட் பிளாக் மற்றும் மூன்லைட் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. அறிமுக சலுகையாக இந்த வாட்ச் ரூ. 14,999 விலையில் அமேசான் மற்றும் ஆப்லைன் தளங்களில் ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வருகிறது.
    பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தில் செயல்பட்டு வந்த சுமார் 100 கோடிக்கும் அதிகமான அக்கவுண்ட்களை நீக்கியதாக தெரிவித்து இருக்கிறது.


    பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தில் இருந்து சுமார் 130 கோடி போலி அக்கவுண்ட்களை நீக்கி இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இவை கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் நீக்கப்பட்டதாக பேஸ்புக் தெரிவித்தது.

    இது மட்டுமின்றி கொரோனாவைரஸ் பாதிப்பு குறித்து பரவிய 1.2 கோடி போலி தகவல்கள் அடங்கிய பதிவுகள் நீக்கப்பட்டதாகவும் பேஸ்புக் தெரிவித்து இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில், இதுபற்றிய போலி தரவுகள் அதிக எண்ணிக்கையில் பரவி வந்தது.

    பேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் போலி செய்தி பரவலை எவ்வாறு கையாள்கின்றன என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் விரைவில் விளக்கமளிக்க இருக்கின்றன. இந்த நிலையில், தற்போது போலி அக்கவுண்ட் நீக்கம் பற்றிய தகவல்களை பேஸ்புக் வெளியிட்டு உள்ளது.
    பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து சொந்தமாக சமூக வலைதள சேவையை துவங்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


    பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற தளங்களில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சொந்தமாக சமூக வலைதள சேவையை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய சமூக வலைதளம் பற்றிய தகவலை டிரம்ப் முன்னாள் ஆலோசகர் தெரிவித்தார்.

    டிரம்ப் மீண்டும் சமூக வலைதளங்களில் திரும்புகிறார், சுமார் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் இது நடைபெறலாம் என ஜேசன் மில்லர் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 

     கோப்புப்படம்

    இது போட்டியை முற்றிலும் மாற்றி அமைக்க போகிறது. டிரம்ப் என்ன செய்யப்போகிறார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் இது அவரின் சொந்த தளமாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். ஜேசன் மில்லர் டிரம்ப் தேர்தல் பரப்புரை பணிகளில் மூத்த பதவிகளை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கான முன்பதிவுகளை அந்த நாட்டில் துவங்கி இருக்கிறது.


    ஒன்பிளஸ் வாட்ச் மாடலுக்கான முன்பதிவு சீனாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் அறிவிப்பு வெளியாகி சில தினங்களே ஆன நிலையில், தற்போது முன்பதிவு துவங்கி இருக்கிறது.

    ஒன்பிளஸ் வாட்ச் மாடல் மார்ச் 23 ஆம் தேதி நடைபெறும் விர்ச்சுவல் நிகழ்வில் ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகமாக இருக்கிறது. முன்பதிவு மட்டுமின்றி ஒன்பிளஸ் வாட்ச் ரென்டர்கள் ட்விட்டர் தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் புதிய ஸ்மார்ட்வாட்ச் எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.

     ஒன்பிளஸ் வாட்ச்

    சீனாவில் ஒன்பிளஸ் வாட்ச் முன்பதிவு செய்ய CNY50 இந்திய மதிப்பில் ரூ. 600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ் வாட்ச் வாங்கும் போது CNY 100 இந்திய மதிப்பில் ரூ. 1,100 உடனடி தள்ளுபடி பெறலாம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஒன்பிளஸ் வாட்ச் விலை விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், தற்போதைய தகவல்களின்படி ஒன்பிளஸ் வாட்ச் மாடலில் ப்ளூடூத், ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி, வாட்டர் ரெசிஸ்டண்ட், வட்ட வடிவ டையல் கொண்டிருக்கும் என தெரிகிறது.
    சோனி நிறுவனம் தனது பிளே ஸ்டேஷன் 5 கன்சோல்களில் பயன்படுத்த புது வி.ஆர். கண்ட்ரோலர்களை அறிமுகம் செய்தது.


    பிளே ஸ்டேஷன் 5 கேமிங் கன்சோல்களுக்கான புது வி.ஆர். கண்ட்ரோலர்களை சோனி நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கிறது. புது கண்ட்ரோலர்கள் ஆர்ப் வடிவம் கொண்டுள்ளன. இவை தற்போதைய மூவ் மோஷன் கண்ட்ரோலர்களை விட வித்தியாசமாக காட்சியளிக்கின்றன. 

     சோனி வி.ஆர். கண்ட்ரோலர்

    மேலும் புது வி.ஆர். கண்ட்ரோலர்கள் பேஸ்புக்கின் ஆகுலஸ் குவெஸ்ட் 2 கண்ட்ரோலர்களை போன்றே இருக்கின்றன. புது வி.ஆர். கண்ட்ரோலர்களில் கட்டை விரல் படும் பகுதியில் ட்ரிகர் பட்டன் மற்றும் சிறு ஜாய் ஸ்டிக் உள்ளது. புது கண்ட்ரோலர்கள் வழங்கும் வித்தியாசமான அம்சங்களை சோனி நிறுவனம் தனது வலைதளத்தில் விரிவாக பட்டியலிட்டு இருக்கிறது.

    கடந்த மாதம் பிளே ஸ்டேஷன் 5 கன்சோலுக்கான அடுத்த தலைமுறை வி.ஆர். ஹெட்செட் உருவாக்கப்பட்டு வருவதாக சோனி டீசர்களில் தெரிவித்தது. தற்போது இவற்றுடன் பயன்படுத்தக்கூடிய கண்ட்ரோலர்களை மட்டும் சோனி அறிமுகம் செய்து இருக்கிறது. 

    இந்திய டெலிகாம் சந்தையில் ஏர்டெல் நிறுவனம் அந்த விஷயத்தில் அசத்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், ஜனவரி மாதத்திற்கான டெலிகாம் சந்தாதாரர்கள் பற்றிய அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதன்படி ஜனவரி 2021 மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவை விட 300 மடங்கு அதிக வயர்லெஸ் சந்தாதாரர்களை இணைத்துள்ளது. 

    ஜனவரி மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் மொத்தம் 58.9 லட்சம் சந்தாதாரர்களை இணைத்துள்ளது. இதே மாதத்தில் ஜியோ நிறுவனத்தில் 19.5 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்காத நிலையிலும், டெலிகாம் சந்தையில் ஜியோ தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

     ஜியோ

    டிராய் வெளியிட்டு இருக்கும் தற்போதைய அறிக்கையின் படி ஜியோ சேவையை சுமார் 41.073 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது ஒட்டுமொத்த சந்தையில் 35.30 சதவீதம் ஆகும். ஏர்டெல் நிறுவனம் 34.460 கோடி பயனர்களையும், வி சேவையை 28.596 கோடி பேரும் பயன்படுத்தி வருகின்றனர். 

    பி.எஸ்.என்.எல். நிறுவன சேவையை சுமார் 11.869 கோடி  பேர் பயன்படுத்தி வருகின்றனர். வளர்ச்சி விகிதத்தில் ஏர்டெல் 1.74 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து ஜியோ 0.48 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. 
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மார்ச் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் வெளியீடு சமீபத்தில் உறுதி செய்யப்பட்ட நிலையில், புதிய ஒன்பிளஸ் வாட்ச் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஒன்பிளஸ் வாட்ச் வட்ட வடிவ டையல், சிலிகான் ஸ்டிராப் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    ஒப்போ வாட்ச் போன்றே புதிய ஒன்பிளஸ் வாட்ச் மாடலும் ஒன்றுக்கும் மேற்பட்ட வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் பேண்ட் மாடலை தொடர்ந்து ஒன்பிளஸ் அறிமுகம் செய்யும் இரண்டாவது அணியக்கூடிய சாதனமாக ஒன்பிளஸ் வாட்ச் இருக்கிறது. முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ஒன்பிளஸ் பேண்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. 

     ஒன்பிளஸ் வாட்ச்

    தற்போதைய தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் வாட்ச் 46எம்எம் டையல் மற்றும் சில்வர், பிளாக் நிற ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த வாட்ச் ஆட்டோமேடிக் வொர்க்-அவுட் டிடெக்ஷன், இதய துடிப்பு சென்சார், எஸ்பிஒ2 சென்சார், ஸ்டிரெஸ், ஸ்லீப் டிராக்கிங் வசதிகளை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இத்துடன் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியும், அழைப்புகளை மேற்கொள்வது, நிராகரிப்பது போன்ற வசதியும் வழங்கப்படலாம். இதில் வழங்கப்படும் பேட்டரி 20 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு வாரத்திற்கான பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. இதுதவிர வார்ப் சார்ஜ் தொழில்நுட்பம், 4 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் ப்ரோ மாடல் வெளியீடு பற்றிய புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

     
    ஆப்பிள் நிறுவனம் 2021 ஆண்டிற்கான தனது முதல் அறிமுக நிகழ்வை ஏப்ரல் மாதத்தில் நடத்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த விழாவில் மேம்பட்ட பிராசஸர், கேமரா, மினி எல்.இ.டி. டிஸ்ப்ளே கொண்ட புதிய ஐபேட் ப்ரோ அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    புது மாடல்களும் 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் அளவுகளில் கிடைக்கும் என தெரிகிறது. வெளிப்புறம் அதே வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய மாடலில் உள்புற அம்சங்களான பிராசஸர் மற்றும் கேமரா சிஸ்டம் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது.

     ஐபேட் ப்ரோ

    ஆப்பிள் சிலிகான் எம்1 சிப்செட்-க்கு இணையான செயல்திறன் வழங்கும் புது பிராசஸர் புதிய ஐபேட் ப்ரோ மாடலில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. டிஸ்ப்ளேவை பொருத்தவரை மினி எல்இடி பேனல் கொண்ட முதல் ஐபேட் ப்ரோ மாடலை ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
     
    இவைதவிர புதிய ஐபேட் ப்ரோ தன்டர்போல்ட் வசதி கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் ஐபேட் ப்ரோ மாடலை மாணிட்டர், ஹார்டு டிரைவ் என பல்வேறு இதர சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும்.
    ரெட்மி பிராண்டின் முதல் ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்திய சந்தையில் வெளியாகி இருக்கிறது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.


    ரெட்மி பிராண்டு ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புது டிவி 50, 55 மற்றும் 65 இன்ச் 4கே மாடல்கள் ஆகும். இவற்றில் டால்பி விஷன், ஹெச்டிஆர், ஹெச்டி ஆர் 10 பிளஸ், ஹெச்எல்ஜி மற்றும் ரியால்டி புளோ டெக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இவற்றுடன் பிரத்யேக MEMC சிப், ஆட்டோமேடிக் லோ லேடன்சி மோட் உள்ளது.

    இந்த டிவிக்கள் ஆண்ட்ராய்டு டிவி 10 ஒஎஸ் கொண்டுள்ளன. இத்துடன் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் குரோம்காஸ்ட் பில்ட் இன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள அனைத்து ஹெச்டிஎம்ஐ போர்ட்களிலும் ஹெச்டிஎம்ஐ 2.1 வசதி கொண்டுள்ளன. மேலும் இது டால்பி அட்மோஸ் வசதி, 30 வாட் ஸ்பீக்கர்கள், டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் மற்றும் டால்பி ஆடியோ வசதி கொண்டிருக்கிறது.  

     ரெட்மி ஸ்மார்ட் டிவி

    டிவி ரிமோட்டில் எம்ஐ லோகோவுக்கு மாற்றாக பேட்ச்வால் லோகோ இடம்பெற்று இருக்கிறது. இந்த ரிமோட் குவிக் மியூட், குவிக் செட்டிங் மற்றும் குவிக் வேக் போன்ற ஆப்ஷன்களுக்கான பட்டன் கொண்டுள்ளது. புதிய ரெட்மி டிவி மாடல்கள் குவாட்கோர் மீடியாடெக் எம்டி9611 பிராசஸர், மாலி ஜி52, 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது.

    ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்50 மாடல் விலை ரூ. 32,999, எக்ஸ்55 மாடல் ரூ. 38,999 மற்றும் டாப் எண்ட் எக்ஸ்65 மாடல் விலை ரூ. 57,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய டிவி மாடல்கள் அமேசான், எம்ஐ வலைதளம் மற்றும் எம்ஐ ஹோம் ஸ்டோர்களில் மார்ச் 26 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ப்ரோ மாடல் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு இருக்கிறது.


    ஆப்பிள் மேக்புக் ப்ரோ மாடலுக்கு இந்தியாவில் அசத்தல் சலுகை வழங்கப்படுகிறது. இன்டெல் பிராசஸர் கொண்ட ஆப்பிள் நிறுவனத்தின் கடைசி லேப்டாப் மாடல்கள் ஆகும். இதன் 13 இன்ச் மாடல் தற்போது 256ஜிபி அல்லது 512 ஜிபி என இருவித ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

    அமேசான் தளத்தில் இன்டெல் ஐ5 பிராசஸர் கொண்ட 13 இன்ச் மேக்புக் ப்ரோ 256 ஜிபி எஸ்எஸ்டி விலை ரூ. 99,990 என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 18 ஆயிரம் குறைவு ஆகும். இதுதவிர 256 ஜிபி வேரியண்டை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 18 ஆயிரம் வரை எக்சேன்ஜ் சலுகையும் வழங்கப்படுகிறது. இதே மாடல் 512 ஜிபி வேரியண்ட் ரூ. 1,41,719 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது முந்தைய விலையை விட ரூ. 1200 குறைவு ஆகும்.

     மேக்புக் ப்ரோ

    ஆப்பிள் மேக்புக் ப்ரோ 13 மாடலுடன் மேஜிக் கீபோர்டு, சிசர் ஸ்விட்ச்கள் வழங்கப்படுகிறது. இது 8th Gen இன்டெல் ஐ5 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி அல்லது 512 ஜிபி எஸ்எஸ்டியுடன் கிடைக்கிறது. இது 13.3 இன்ச் 2560x1600 பிக்சல் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 3 தண்டர்போல்ட் போர்ட், டச் பார் வசதி கொண்டுள்ளது. 

    எம்1 பிராசஸர் கொண்ட மேக்புக் ப்ரோ மாடல் விலை ரூ. 1,22,900, எம்1 பிராசஸர் கொண்ட மேக்புக் ஏர் மாடல் விலை ரூ. 92,900 ஆகும்.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் 3 வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் பற்றிய புது விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனத்தின் புது ஏர்பாட்ஸ் 3 மாடல் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வரை அறிமுகம் செய்யப்படாது என தற்போதைய தகவல்களில் தெரியவந்துள்ளது. பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்டு உள்ள புது அறிக்கையில், ஆப்பிள் நிறுவனத்தின் ஆடியோ சாதனங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி முந்தைய தகவல்களில் கூறப்பட்டதற்கு மாறாக புது ஹெட்போன்கள் மார்ச் 23 ஆம் தேதி அறிமுகமாகாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

     ஆப்பிள் ஏர்பாட்ஸ்

    ஏர்பாட்ஸ் 3 மாடலின் உற்பத்தி பணிகள் 2021 மூன்றாவது காலாண்டில் தான் துவங்கும் என கூறப்படுகிறது. புது ஹெட்போனை வடிவமைக்கும் பணிகள் முழுமை பெறாததே இதற்கு காரணம் என தெரிகிறது. மேலும் ஆப்பிள் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு தான் புதிய ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்தது. அந்த வகையில் மற்றொரு ஆடியோ சாதனத்தை அறிமுகம் செய்ய ஆப்பிள் மேலும் சில காலம் எடுத்துக் கொள்ளலாம்.

    ஏற்கனவே வெளியான தகவல்களில் 2021, மார்ச் 23 ஆம் தேதி ஆப்பிள் நிகழ்வு நடைபெறலாம் என்றும் இதில் புதிய ஆடியோ சாதனம் அறிமுகமாகலாம் என்றும் கூறப்பட்டது. எனினும், தற்போதைய தகவல்களில், இந்த விழாவில் புது ஐபேட் மாடல்கள், ஏர்டேக், ஆப்பிள் டிவி ஸ்டிரீமிங் சாதனம் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டு இருக்கிறது. இதுவரை மார்ச் மாத ஆப்பிள் நிகழ்வு பற்றி அந்நிறுவனம் எந்த தகவலையும் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ×