என் மலர்tooltip icon

    கணினி

    மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது டீம்ஸ் சேவையில் புதிய வசதி ஒன்றை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையில் லோ பேண்ட்வித் மோட் வழங்கப்பட இருக்கிறது. பொதுவாக வீடியோ கால் மேற்கொள்ள அதிவேக இணைய வசதி கட்டாயம் தேவைப்படும். இதோடு அதிக பயனர்கள் இணையும் போது லிமிடெட் நெட்வொர்க் பயன்படுத்துவோருக்கு நிலைமை மேலும் மோசமாக மாறும்.

    இதனை எதிர்கொள்ள மைக்ரோசாப்ட் டீம்ஸ் தேவைக்கு ஏற்ப இணைய பயன்பாட்டை மாற்றிக் கொள்ளும் வசதியை வழங்க இருக்கிறது. இந்த அம்சம் கணினியில் டீம்ஸ் பயன்படுத்துவோருக்கு மட்டும் வழங்கப்பட இருக்கிறது. இந்த மாதத்திலேயே புதிய அம்சம் உலகளவில் வழங்கப்படுகிறது.

     மைக்ரோசாப்ட் டீம்ஸ்

    புது அம்சம் பற்றிய விவரங்கள் மைக்ரோசாப்ட் 365 ரோட்மேப் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. குறைவான இணைய வேகம் கிடைத்தாலும் டீம்ஸ் வீடியோ கால் மேற்கொள்ளும் போது டேட்டா பயன்பாட்டை குறைக்கும் புதிய லோ டேட்டா மோட் உதவுகிறது என மைக்ரோசாப்ட் தளத்தில் பதிவிடப்பட்டு உள்ளது.

    முன்னதாக மைக்ரோசாப்ட் இக்னைட் 2021 நிகழ்வில் மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையில் என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் வசதி, ஆயிரம் பேருடன் வெபினார் செய்வதற்கான வசதி, சேனல்-ஷேரிங் அம்சம் என பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
    சார்க் நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வில் 2020 நான்காவது காலாண்டில் இந்தியா அசத்தி இருக்கிறது.


    இந்திய சந்தையில் 2020 நான்காவது காலாண்டில் அதிவேக பிராட்பேண்ட் நெட்வொர்க் வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் ஜியோ முதலிடம் பிடித்து இருக்கிறது. இத்துடன் அதிவேக மொபைல் டவுன்லோட் வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் வி முதலிடம் பிடித்து இருக்கிறது. இந்த தகவல்களை முன்னணி ஆய்வு நிறுவனமான ஊக்லா தெரிவித்து உள்ளது.

    இதுதவிர அதிவேக பிராட்பேண்ட் வழங்கிய சார்க் நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்து இருக்கிறது. அதிவேக மொபைல் டேட்டா வழங்கிய நாடுகள் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. ஊக்லா வெளியிட்டு இருக்கும் சமீபத்திய அறிக்கையில் பல்வேறு பகுதிகளில் பிராட்பேண்ட் மற்றும் மொபைல் நெட்வொர்க் சேவையின் தரம் பற்றிய விவரங்கள் இடம்பெற்று உள்ளன.

     ஜியோ

    அதிவேக பிராட்பேண்ட் சேவை வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் ஜியோவை தொடர்ந்து ஏசிடி, ஏர்டெல், எக்சைடெல் மறஅறும் பிஎஸ்என்எல் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. மொபைல் டேட்டாவை பொருத்தவரை வி அதிவேக டவுன்லோட் வழங்கி முதலிடம் பிடித்து இருக்கிறது. வி நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல், ஜியோ அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
    வி நிறுவனத்தின் பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு முன்னணி ஒடிடி சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.


    வி நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கி வருகிறது. ஒரு ஆண்டுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா வழங்கும் புதிய பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் சலுகைகளை வி நிறுவனம் அறிவித்து இருக்கிறது. தற்போது ஒரு மாதத்திற்கான டிஸ்னி பிளஸ் சந்தாவுக்கான கட்டணம் ரூ. 399 ஆகும்.

    எனினும், இந்த சலுகை வி ரீசார்ஜ் சலுகைகளுடன் சேர்த்தே வழங்கப்படுகிறது. வி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சலுகை அனைத்து வட்டாரங்களிலும் கிடைக்கிறது. இலவச சந்தாவில் நேரலை விளையாட்டு போட்டிகள், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல், திரைப்படங்கள், டிஸ்னி பிளஸ் திரைப்படங்கள் மற்றும் ஸ்டார் டிவி நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். 

    வி பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் ரூ. 401, ரூ. 501, ரூ. 601 அல்லது ரூ. 801 கட்டண ரீசார்ஜ் செய்து இந்த சலுகையை பெறலாம். ரூ. 401 சலுகையில் அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ், தினமும் 3 ஜிபி மற்றும் 16 ஜிபி கூடுதல் டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

     டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்

    ரூ. 501 சலுகையில் 56 நாட்களுக்கு 75 ஜிபி டேட்டா, ரூ. 601 சலுகையில் அன்லிமிடெட் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், தினமும் 3 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் 32 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. ரூ. 801 சலுகையில் அன்லிமிடெட் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், 3 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் 48 ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கிறது.

    வி போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் ரூ. 499 அல்லது அதற்கும் அதிக தொகை சலுகையை தேர்வு செய்யும் போது இலவச சந்தா பெறலாம். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா பெற வாடிக்கையாளர்கள் முதலில் செயலியை டவுன்லோடு செய்து மொபைல் நம்பர் மூலம் லாக்-இன்  செய்யலாம்.
    சியோமி நிறுவனம் தனது எம்ஐ நோட்புக் மாடல்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை வழங்குகிறது.


    சியோமி நிறுவனத்தின் எம்ஐ நோட்புக் 14 ஹாரிசான் எடிஷன் இணையத்தில் அதிகம் விற்பனையான அல்ட்ரா-ஸ்லிம் ஐ7 விண்டோஸ் லேப்டாப் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. இந்த தகவல் ஐடிசி வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது.

    எம்ஐ நோட்புக் 14 ஹாரிசான் எடிஷன், எம்ஐ நோட்புக் இ லேர்னிங் எடிஷன் மற்றும் எம்ஐ நோச்புக் 14 ஐசி சீரிஸ் உள்ளிட்ட மாடல்கள் கிடைக்கின்றன. எம்ஐ நோட்புக் மாடல்களுக்கு கிடைத்த வரவேற்பை கொண்டாடும் வகையில் எம்ஐ இந்தியா தனது லேப்டாப் மாடல்களுக்கு மார்ச் 15 ஆம் தேதி வரை சிறப்பு சலுகை வழங்குவதாக அறிவித்து உள்ளது.

    அதன்படி எம்ஐ நோட்புக் இ லெர்னிங் எடிஷன் துவக்க விலை ரூ. 35,999 என்றும், எம்ஐ நோட்புக் ஹாரிசான் எடிஷன் ரூ. 49,999 என்றும் எம்ஐ நோட்புக் 14 ஐசி விலை ரூ. 40,999 ஆகும்.

     எம்ஐ நோட்புக்

    எம்ஐ நோட்புக் மாடல்கள் புதிய விலை விவரம்:

    எம்ஐ நோட்புக் 14 ஹாரிசான் எடிஷன் ஐ5 8ஜிபி + 512 ஜிபி எம்எக்ஸ்350 கிரே விலை ரூ. 49,999

    எம்ஐ நோட்புக் 14 ஹாரிசான் எடிஷன் ஐ7 8ஜிபி + 512 ஜிபி எம்எக்ஸ்350 கிரே விலை ரூ. 54,999

    எம்ஐ நோட்புக் இ லெர்னிங் எடிஷன் ஐ3 8ஜிபி + 256 ஜிபி யுஹெச்டி கேமரா சில்வர் விலை ரூ. 35,999

    எம்ஐ நோட்புக் 14 ஐசி ஐ5 8ஜிபி + 256 ஜிபி யுஹெச்டி கேமரா சில்வர் மாடல் விலை ரூ. 40,999

    எம்ஐ நோட்புக் 14 ஐசி ஐ5 8ஜிபி + 512 ஜிபி யுஹெச்டி கேமரா சில்வர் மாடல் விலை ரூ. 43,999

    எம்ஐ நோட்புக் 14 ஐசி ஐ5 8ஜிபி + 512 ஜிபி எம்எக்ஸ்250 கேமரா சில்வர் மாடல் விலை ரூ. 47,999
    ரெட்மி பிராண்டின் முதல் ஸ்மார்ட் டிவி மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ரெட்மி நோட் 10 சீரிஸ் மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து ரெட்மியின் முதல் ஸ்மார்ட் டிவி மாடல் மார்ச் 17 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    ரெட்மி ஸ்மார்ட் டிவி

    தற்போது எம்ஐ சீரிசில் 65 இன்ச் டிவி மாடல்களை சியோமி ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் 70 இன்ச் ரெட்மி டிவி அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட 86 இன்ச் மாடல் இங்கு அறிமுகமாகும் என்றும் கூறப்படுகறது.

    சியோமி இந்தியா ஸ்மார்ட் டிவி பிரிவுக்கான தலைவர் ஈஷ்வர் நீலகண்டன், புதிய ஸ்மார்ட் டிவிக்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் என தெரிவித்து இருந்தார். மேலும் சியோமி நிறுவனம் உற்பத்தியை ஊக்குவிக்க ரேடியண்ட் எனும் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து உள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் தனது ஐமேக் ப்ரோ மாடல்களின் ஸ்டாக் இருக்கும் போதே அவற்றின் விற்பனையை நிறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் தனது ஐமேக் ப்ரோ விற்பனையை நிறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த கம்ப்யூட்டர் விற்பனைக்கு கிடைக்கிறது என்றாலும், ஸ்டாக் தீர்ந்ததும் வலைதளத்தில் இருந்து நீக்கப்படும் என கூறப்படுகிறது. ஐமேக் ப்ரோ மாடலின் அனைத்து வேரியண்ட்களின் விற்பனையும் நிறுத்தப்படுகிறது.

    இந்தியாவுக்கான ஆப்பிள் வலைதளத்தில் ஐமேக் ப்ரோ ரூ. 4,64,900 விலையில் பட்டியலிடப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்தால் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இது வினியோகம் செய்யப்படுகிறது. எனினும், தற்போதைய ஸ்டாக் தீர்ந்தால், மீண்டும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

     ஐமேக் ப்ரோ

    ஆப்பிள் வலைதளத்திலும் ஐமேக் ப்ரோ சாதனங்கள் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே கிடைக்கும் என்ற தகவல் இடம்பெற்று இருக்கிறது. தற்போதைய ஐமேக் ப்ரோ மாடலில் 5கே டிஸ்ப்ளே, இன்டெல் சியான் பிராசஸர், ஏஎம்டி வீகா கிராபிக்ஸ், 10 ஜிகாபிட் ஈத்தர்நெட் மற்றும் ஆப்பிள் டி2 சிப்செட் கொண்டிருக்கிறது.
    ஆண்ட்ராய்டு சார்ந்த ஜியோஒஎஸ் கொண்ட லேப்டாப் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ரிலையன்ஸ் ஜியோ ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய லேப்டாப் மாடலை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய லேப்டாப் ஜியோபுக் எனும் பெயரில் அறிமுகமாகலாம். ஜியோவின் முதல் லேப்டாப் மாடல் ஆண்ட்ராய்டு சார்ந்த ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    ஜியோவின் முதல் லேப்டாப் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த ஜியோவின் சொந்த ஒஎஸ் கொண்டிருக்கும் என தெரிகிறது. புதிய ஒஎஸ் ஜியோஒஎஸ் என அழைக்கப்படலாம். இதுகுறித்து இணையத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் புிய லேப்டாப் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது 4ஜி எல்டிஇ வசதி கொண்டுள்ளது.

    2018 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நிறுவனங்கள் கூட்டணியில் ஜியோ லேப்டாப் உருவாகி வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இதோடு ஜியோ லேப்டாப் என கூறி ப்ரோடோடைப் மாடல் ஒன்றின் படமும் இணையத்தில் வெளியானது.

     ஜியோ

    புதிய லேப்டாப் உருவாக்க ஜியோ நிறுவனம் சீனாவை சேர்ந்த புளூபேங்க் கம்யூனிகேஷன் டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இந்த நிறுவனம் மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு மொபைல் சாதனங்கள் மற்றும் மென்பொருள்களை உருவாக்கி தருகிறது. 

    ஜியோ மற்றும் புளூபேங்க் இணைந்து மற்ற உற்பத்தியாளர்களிடம் இருந்து பாகங்களை வாங்க இருக்கின்றன. அதன்படி சாம்சங் நிறுவனத்தின் DRAM மற்றும் NAND சிப், குவால்காம் நிறுவனத்தின் சிப்செட் உள்ளிட்டவைகளை வாங்கி பயன்படுத்த இருக்கிறது.

    தற்போதைய தகவல்களின்படி ஜியோபுக் மாடலில் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. மேலும் இதில் 1366x768 பிக்சல் ரெசல்யூஷன், ஜியோ, கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவன செயலிகள் பிரீ-லோட் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.
    ஜெபிஎல் நிறுவனம் பூம்பாக்ஸ் 2, கோ 3 மற்றும் க்ளிப் 4 வயர்லெஸ் ஸ்பீக்கர்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது.


    ஜெபிஎல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ப்ளூடூத் வயர்லெஸ் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்தது. இவை பூம்பாக்ஸ் 2, கோ 3 மற்றும் க்ளிப் 4 என அழைக்கப்படுகின்றன. புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் வாட்டர் ரெசிஸ்டண்ட் டிசைன், தரமான ஆடியோ, நீண்ட நேர பேட்டரி பேக்கப், ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி சார்ஜிங் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.

    ஜெபிஎல் கோ 3 மாடல் காம்பேக்ட் டிசைன் கொண்டுள்ளது. இதனை எளிதில் எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். எனினும், இது 4.2 வாட் பவர் அவுட்புட் வழங்குகிறது. வாட்டர் ரெசிஸ்டண்ட், ப்ளூடூத் 5.1 வசதிகளை கொண்டிருக்கிறது. யுஎஸ்பி சி முறையில் சார்ஜ் ஆகும் கோ 3 ஸ்பீக்கர் ஐந்து மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும்.

     ஜெபிஎல் வயர்லெஸ் ஸ்பீக்கர்

    ஜெபிஎல் க்ளிப் 4 வயர்லெஸ் ஸ்பீக்கர் அல்ட்ரா-போர்டபிள் டிசைன், இன்டகிரேட் செய்யப்பட்ட கேராபைனர் கொண்டுள்ளது. முந்தைய கோ 3 மாடலில் உள்ளதை போன்று வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதிகளை கொண்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் பத்து மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. 

    பூம்பாக்ஸ் 2 மற்ற இரு ஸ்பீக்கர்களை விட அதிகளவு ஒலியை வெளிப்படுத்துகிறது. இது பார்டிபூஸ்ட் தொழில்நுட்பம் கொண்டு மேம்பட்ட பேஸ் அனுபவத்தை வழங்குகிறது. இதில் பில்ட்-இன் பவர் பேங்க் உள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 24 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.

    ஜெபிஎல் வயர்லெஸ் ஸ்பீக்கர் இந்திய விலை விவரம்

    ஜெபிஎல் கோ 3 விலை ரூ. 3999
    ஜெபிஎல் க்ளிப் 4 விலை ரூ. 4499
    ஜெபிஎல் பூம்பாக்ஸ் 2 விலை ரூ. 33,999

    மூன்று புதிய ஜெபிஎல் ஸ்பீக்கர்களும் ஆன்லைன் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் இந்தியா முழுக்க விற்பனைக்கு கிடைக்கின்றன.
    சியோமி நிறுவனம் ரெட்மி பிராண்டு டிவிக்கள் இந்தியாவில் வெளியாகுமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளது.


    இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் எம்ஐ டிவிக்கள் அதிக பிரபலமாக இருக்கின்றன. மேலும் நாட்டில் அதிகம் விற்பனையாகும் முன்னணி ஸ்மார்ட் டிவிக்களாகவும் எம்ஐ பிராண்டு மாடல்கள் இருக்கின்றன. இந்த நிலையில், ரெட்மி பிராண்டு ஸ்மார்ட் டிவிக்கள் இந்தியாவில் அறிமுகமாகுமா என்ற கேள்விக்கு சியோமி பதில் அளித்துள்ளது.

     ஸ்மார்ட் டிவி

    சியோமி இந்தியா நிர்வாக இயக்குனரான மனு குமார் ஜெயின் ரெட்மி நோட் 10 சீரிஸ் இந்திய வெளியீட்டு நிகழ்வில் ரெட்மி பிராண்டு டிவிக்களின் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தும் தகவலை சூசகமாக தெரிவித்தார். ரெட்மி டிவியில் எந்தெந்த மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகும் என்பது குறித்து அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

    “கடந்த ஆண்டு ரெட்மி பிராண்டு பல்வேறு புதிய பிரிவுகளில் களமிறங்கி தனது பயணத்தை முன்னோக்கி எடுத்து சென்றது. போன்-பிளஸ் திட்டத்தின் கீழ் பவர் பேங்க், ட்ரூ வயர்லெஸ் இயர்போன் மற்றும் பிட்னஸ் பேண்ட் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்தோம். இந்த ஆண்டும் மேலும் பெரியதை அறிமுகம் செய்வதில் பெருமையாக இருக்கிறோம்,” என மனு குமார் ஜெயின் தெரிவித்தார்.
    வோடபோன் ஐடியா நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது.


    வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 51 மற்றும் ரூ. 301 விலையில் இரண்டு பிரீபெயிட் காம்போ சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இரு சலுகைகளிலும் ஆதித்யா பிர்லா இன்சூரன்ஸ் பலன்களை வழங்குகிறது. இரண்டு சலுகைகளில் இன்சூரன்ஸ் பலன்கள் 18 முதல் 55 வயதுடையவர்களுக்கு கிடைக்கும். 

    வி ரூ. 51 சலுகை ஆட்-ஆன் வகையில் வழங்கப்படுகிறது. ரூ. 301 சலுகை தனி பிரீபெயிட் சலுகை ஆகும். இரு சலுகைகளும் ‘Vi Hospicare' என அழைக்கப்படுகிறது. ஆதித்யா பிர்லா வழங்கும் இன்சூரன்ஸ் திட்டம் முன்னணி மருத்துவமனைகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    மருத்துவமனையில் இருந்து பெற்ற டிஸ்சார்ஜ் சான்றை காண்பித்து இன்சூரன்ஸ் பலன்களை பெற முடியும் என வி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இன்சூரன்ஸ் பலன்கள் மட்டுமின்றி ரூ. 51 ஆட் ஆன் சலுகையில் 28 நாட்களுக்கு 500 எஸ்எம்எஸ் வழங்குகிறது.

    ரூ. 301 பிரீபெயிட் சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, கூடுதலாக 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்குகிறது. இரு சலுகைகளும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன.
    இன்ஸ்டாகிராம் செயலியில் நேரலை செய்ய புது வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    இன்ஸ்டாகிராம் செயலியில் ஒரே சமயத்தில் நான்கு பேர் இணைந்து விர்ச்சுவல் ரூம் கொண்டு நேரலை செய்வதற்கான வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக இதேபோன்ற வசதி கிளப்ஹவுஸ் எனும் சேவையிலும் வழங்கப்பட்டது. புது வசதியை இன்ஸ்டாகிராம் லைவ் ரூம்ஸ் என அழைக்கிறது.

    புதிய லைவ் ரூம்ஸ் அம்சம் கொண்டு ஒரே சமயத்தில் நான்கு பேர் ஒன்றிணைந்து நேரலை ஸ்டிரீமிங் செய்ய முடியும். இதுவரை நேரலை ஸ்டிரீமிங்கில் ஒருவர் மட்டுமே இணைந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. 

     இன்ஸ்டாகிராம்

    "முன்னதாக ஸ்டிரீம் செய்யும் போது ஒருவரை மட்டுமே இணைத்துக் கொள்ள முடியும், ஆனால் இப்போது நேரலையில் நாங்கள் இதனை இருமடங்கு அதிகரிக்கிறோம்," என இன்ஸ்டாகிராம் தனது வலைதள பதிவில் குறிப்பிட்டு உள்ளது. 

    "நேரலையில் இதுபோன்ற அம்சம் புது வாய்ப்புகளை உருவாக்க வழி செய்யும் - இதை கொண்டு விவாத நிகழ்ச்சி, மற்ற கலைஞர்களுடன் உரையாடல், பேட்டி அல்லது நண்பர்களுடன் இணைந்து உரையாட முடியும்." என தெரிவித்து இருக்கிறது.
    மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஒஎஸ் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய விண்டோஸ் ஒஎஸ் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஒஎஸ் “தி நியூ விண்டோஸ்” (The New Windows) எனும் பெயரில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

    டூயல் ஸ்கிரீன் சாதனங்களுக்காக வெளியாக இருந்த விண்டோஸ் 10எக்ஸ் வெர்ஷன் தான் தி நியூ விண்டோஸ் எனும் பெயரில் வெளியாக இருக்கிறது. முதற்கட்டமாக இது ஒற்றை ஸ்கிரீன் சாதனங்களுக்காக வெளியாகும். புது ஒஎஸ் பற்றி வேறு எந்த தகவலும் தற்போது வெளியாகவில்லை.

     கோப்புப்படம்

    முந்தைய தகவல்களின் படி விண்டோஸ் 10எக்ஸ் புதிய ஆக்ஷன் சென்டர் மற்றும் ஸ்டார்ட் மெனு கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இதில் ஸ்டார்ட் மெனு பல்வேறு செயலிகள், சமீபத்தில் இயக்கப்பட்ட டாக்யூமென்ட் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும் என கூறப்பட்டது. மேலும் மல்டி டாஸ்கிங் செய்ய புது ஜெஸ்ட்யூர்களை கொண்டிருக்கும்.

    புது ஒஎஸ் இதற்கென வடிவமைக்கப்பட்ட கணினிகளுடன் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இதன் குறைந்த விலை மாடல்கள் கல்வி மற்றும் கார்ப்பரேட் பயனர்களுக்கு ஏற்றவாரு இருக்கும். 
    ×