என் மலர்tooltip icon

    கணினி

    ஆப்பிள் நிறுவனத்தின் 2021 ஐமேக் மாடல் பற்றிய புது விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் சிறிய மேக் ப்ரோ மற்றும் 24 இன்ச் ஐமேக் சீரிஸ் மாடல்களை வெளியிட தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதிய ஐமேக் பற்றிய விவரங்களும் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய ஐமேக் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

     ஐமேக்

    இத்துடன் புதிய ஐமேக் சில்வர், ஸ்பேஸ் கிரே, ரோஸ் கோல்டு, ஸ்கை புளூ மற்றும் கிரீன் போன்ற நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் போர்ட்கள் 2020 ஐமேக் மாடல்களில் இருந்ததை போன்றே வழங்கப்படலாம். புதிய ஐமேக் மாடல்களின் போர்ட்கள் வெவ்வேறு இடங்களில் வழங்கப்படலாம்.

    புதிய ஐமேக் பேஸ் ஐடி போன்ற அம்சங்களை கொண்டிருக்காது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஐபேட் ப்ரோ, மேக்புக் ப்ரோ மாடல்களுடன் ஏர் டேக்ஸ் மற்றும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்ற சாதனங்கள் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
    பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 299 விலையில் புதிய பிராட்பேண்ட் சலுகையை அறிமுகம் செய்து இருக்கிறது.


    பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 299, ரூ. 399 மற்றும் ரூ. 555 விலைகளில் புதிய டிஎஸ்எல் பிராட்பேண்ட் சலுகையை அறிமுகம் செய்து இருக்கிறது. மூன்று புதிய சலுகைகளும் 10Mbps வேகத்தில் இணைய சேவை வழங்குகின்றன. இவை மார்ச் 1 ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கின்றன. 

    டிஎஸ்எல் பிராட்பேண்ட் சலுகைகள் பிஎஸ்என்எல் பாரத் பைபர் சலுகைகளை விட குறைந்த வேகத்தில் இணைய சேவை வழங்குகின்றன. இவற்றில் முறையே 100 ஜிபி, 200 ஜிபி மற்றும் 300 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றன. இந்த அளவை கடந்ததும், டேட்டா வேகம் மேலும் குறையும்.

     கோப்புப்படம்

    பிஎஸ்என்எல் ரூ. 299 சலுகையில் 100 ஜிபி டேட்டா, 10Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. 100 ஜிபி தீர்ந்ததும் டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படுகிறது. இந்த சலுகை ஆறு மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதன்பின் பயனர்கள் ரூ. 399 சலுகைக்கு மாற்றப்படுவர். இது அந்தமான் மற்றும் நிகோபார் தவிர அனைத்து வட்டாரங்களிலும் கிடைக்கிறது.

    ரூ. 399 சலுகையில் 200 ஜிபி டேட்டா 10Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இதிலும் முந்தைய சலுகையை போன்று நிர்ணயிக்கப்பட்ட 200 ஜிபி டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படும். ரூ. 555 டிஎஸ்எல் பிராட்பேண்ட் சலுகையில் 500 ஜிபி டேட்டா 10Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இதிலும் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் வேகம் 2Mbps ஆக குறைக்கப்படுகிறது.

    மூன்று புதிய சலுகைகளிலும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் சேவை வழங்கப்படுகிறது. ரூ. 299 மற்றும் ரூ. 399 சலுகைகளுக்கு ரூ. 500 பாதுகாப்பு முன்பணம் செலுத்த வேண்டும். ரூ. 299 மற்றும் ரூ. 555 டிஎஸ்எல் பிராட்பேண்ட் சலுகைகளை புதிய மற்றும் தற்போதைய வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும்.
    இன்பேஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஸ்மார்ட்போன் அக்சஸரீ மற்றும் கேட்ஜெட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான இன்பேஸ் இந்திய சந்தையில் அர்பன் LYF எனும் பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங், 1.75 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, பிட்னஸ் டிராக்கிங் சென்சார், IP67 சான்று மற்றும் இதர அம்சங்களை கொண்டுள்ளது.

    அர்பன் LYF ஸ்மார்ட்வாட்ச் 1.75 இன்ச் அளவில் 240x240 ரெசல்யூஷன் சதுரங்க வடிவ டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இது ப்ளூடூத் 4 கனெக்டிவிட்டி அம்சம் கொண்டுள்ளது. இதை கொண்டு அழைப்புகளை ஸ்மார்ட்வாட்ச் மூலம் ஏற்க முடியும்.

    மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இதில் உள்ள பில்ட்-இன் சென்சார்கள் இதய துடிப்பு, இசிஜி, கலோரி, எஸ்பிஒ2, ரத்த அழுத்தம் மற்றும் உறக்கம் பற்றிய விவரங்களை டிராக் செய்யும் வசதி கொண்டிருக்கின்றன.

     இன்பேஸ் அர்பன் LYF

    இத்துடன் அழைப்புகள், சமூக வலைதளம், குறுந்தகவல், வானிலை நோட்டிபிகேஷன் மற்றும் கேமரா, மியூசிக் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அழைப்புகள் இன்றி இந்த ஸ்மார்ட்வாட்ச் 7 நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என்றும் அழைப்புகளை பயன்படுத்தும் பட்சத்தில் 2 நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என இன்பேஸ் தெரிவிக்கிறது.

    இதனுடன் வரும் ஸ்டிராப்களை கழற்றி மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது. இவை ஜெட் பிளாக் கேஸ் மற்றும் மிட்நைட் பிளாக் பேண்ட், சில்வர் கேஸ் மற்றும் பிராஸ்ட் வைட் பேண்ட், ரோஸ் கோல்டு கேஸ் மற்றும் பின்க் சால்மன் பேண்ட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    இந்தியாவில் அர்பன் LYF ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 4999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அது அர்பன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கிடைக்கிறது. மார்ச் 5 ஆம் தேதிக்குள் இந்த ஸ்மார்ட்வாட்ச் வாங்குவோருக்கு ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    எக்சைனோஸ் பிராசஸர், விண்டோஸ் 10 ஒஎஸ் கொண்ட லேப்டாப்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    சாம்சங் நிறுவனம் விண்டோஸ் 10 கணினி ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ARM கட்டமைப்பில் எக்சைனோஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.

    புதிய கணினியில் AMD GPU-க்கள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக சாம்சங் நிறுவனம் விண்டோஸ் 10 லேப்டாப் ஒன்றை கேலக்ஸி புக் எஸ் எனும் பெயரில் விற்பனை செய்கிறது. இதுவும் ARM சார்ந்த மாடல் ஆகும். இந்த லேப்டாப் முதலில் குவால்காம் பிராசஸர் கொண்டிருந்தது. பின் இதில் இன்டெல் சார்ந்த சிபியு வழங்கப்பட்டது.

     சாம்சங்

    ஆப்பிள் நிறுவனம் ARM சார்ந்த ஆப்பிள் சிலிகான் எம்1 சிப் கொண்ட சாதனங்களை அறிமுகம் செய்து, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்சமயம் சாம்சங் நிறுவனமும் இதைபோன்று ARM சார்ந்த சாதனங்களை உருவாக்கி வருகிறது. 
    தென் கொரிய நிறுவனம் உருவாக்கி வரும் பப்ஜி மொபைல் 2 கேம் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    பப்ஜி மொபைல் 2 கேம் அடுத்த வாரம் வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சீன நிறுவனம் என்பதால், இந்தியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் பப்ஜி மொபைல் தடை செய்யப்பட்டது. தற்சமயம் பப்ஜி மொபைல் 2 கேம் தென் கொரியாவை சேர்ந்த கிராப்டான் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வருகிறது.

    இதுவரை பப்ஜி மொபைல் 2 வெளியீடு பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இதன் வெளியீடு மட்டுமின்றி இந்த கேம் கதைக்களம் 2051 ஆண்டு நடைபெறுவதை போன்று இருக்கும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் இதில் பல்வேறு அதிநவீன ஆயுதங்கள், கேட்ஜெட்கள் மற்றும் புதிய மேப் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது.

    முந்தைய கேம் போன்றே புதிய பப்ஜி மொபைல் 2 வெர்ஷனும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் நடைபெற இருக்கும் பப்ஜி குளோபல் இன்விடேஷனல் எஸ் 2021 நிகழ்வில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் நூற்றுக்கணக்கான அக்கவுண்ட்களை நீக்கியிருக்கிறது. இதற்கான காரணம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    ட்விட்டர் நிறுவனம் 337 அக்கவுண்ட்களை நீக்கி இருப்பதாக அறிவித்து உள்ளது. இந்த அக்கவுண்ட்கள் அர்மீனியா, ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் தொடர்பு கொண்டிருந்ததாக ட்விட்டர் தெரிவித்து இருக்கிறது. 238 அக்கவுண்ட்கள் ஈரானில் இருந்து செயல்பட்டதாகவும், இவை அந்நிறுவன வழிமுறைகளை மீறியதாகவும் தெரிவித்து உள்ளது.

    100 அக்கவுண்ட்கள் ரஷ்யாவுடன் தொடர்பு கொண்டிருந்ததாக ட்விட்டர் தெரிவித்தது. இவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனை குறிவைத்து செயல்படுவதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது. அர்மீனியாவுடன் தொடர்பு கொண்டிருந்ததாக 35 அக்கவுண்ட்களும் நீக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் தெரிவித்து இருக்கிறது.

    337 அக்கவுண்ட்களும் விதிகளை மீறியதாக கூறி ட்விட்டரில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அந்நிறுவன வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறது. 
    சோனி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர் இந்திய சந்தையில் பிரீமியம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.


    சோனி நிறுவனம் இந்திய சந்தையில் SRS-RA3000 வயர்லெஸ் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்தது. புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர் 360-டிகிரி ரியாலிட்டி ஆடியோ தொழில்நுட்பம், குரோம்காஸ்ட் பில்ட்-இன், ஸ்பாடிபை கனெக்ட் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. புதிய ஸ்பீக்கர் இந்த வாரம் முதல் இந்தியாவில் கிடைக்கும் என சோனி தெரிவித்து உள்ளது.

    புதிய SRS-RA3000 ஸ்பீக்கரின் SRS-RA5000 மாடலின் சிறு வெர்ஷன் ஆகும். இந்த ஸ்பீக்கரில் உள்ள 360 டிகிரி ரியாலிட்டி ஆடியோ தொழில்நுட்பம்3 பரிணாம ஆடியோக்களை இயக்க வழி செய்கிறது. இது அறை முழுக்க தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. 

     சோனி SRS-RA3000

    இதில் உள்ள ஆட்டோ-வால்யூம் அம்சம் அடுத்து வரும் பாடல் அல்லது இசைக்கு ஏற்ப சத்தத்தை மாற்றிமைக்கிறது. இதனை கூகுள் ஹோம் அல்லது அமேசான் அலெக்சா செயலி கொண்டு ஸ்பீக்கர் குரூப்பில் சேர்த்து மல்டி-ரூம் ஆடியோ போன்றும் பயன்படுத்தலாம்.

    சோனியின் புதிய SRS-RA3000 நாடு முழுக்க அனைத்து சோனி விற்பனை மையங்கள், அமேசான் மற்றும் இதர முன்னணி வலைதளங்களில் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் லேப்டாப் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது வணிகம் மற்றும் கல்வி சார்ந்த வாடிக்கையாளர்களை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய லேப்டாப் இன்டெல் கோர் ஐ7 11th gen பிராசஸர், 1 டிபி எஸ்எஸ்டி, மேம்பட்ட விண்டோஸ் ஹார்டுவேர் செக்யூரிட்டி அம்சங்களுடன் கிடைக்கிறது.

    புதிய சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் இன்டெல் கோர் ஐ3 துவங்கி ஐ7 வரை 11th Gen இன்டெல் கோர் சிபியு உடன் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் பேஸ் மாடல் 8 ஜிபி ரேம், 128 ஜிபி எஸ்எஸ்டி கொண்டிருக்கிறது. இதனை 32 ஜிபி ரேம், 1 டிபி எஸ்எஸ்டி வரை கான்பிகர் செய்யலாம்.

     மைக்ரோசாப்ட் 85 இன்ச் சர்பேஸ் ஹப் 2எஸ்

    இத்துடன் புதிய லேப்டாப் எல்டிஇ கனெக்டிவிட்டி வசதி கொண்டுள்ளது. எனினும், இது இன்டெல் ஐ5 மற்றும் அதற்கும் அதிக சிபியு வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 2,58,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    லேப்டாப் மட்டுமின்றி மைக்ரோசாப்ட் 85 இன்ச் சர்பேஸ் ஹப் 2எஸ் மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது 4K பிக்சல்-சென்ஸ் டச் மற்றும் இன்க் டிஸ்ப்ளே, மைக்ரோசாப்ட் டீம்ஸ் சான்று பெற்ற ஆடியோ மற்றும் வீடியோ அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் விலை ரூ. 2,14,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை ஏர்பாட்ஸ் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.


    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏர்பாட்ஸ் மாடல் படங்கள் மற்றும் ரென்டர்கள் வெளியாகி இருக்கின்றன. முன்னதாக இதன் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது. புதிய ரென்டர்கள் சீனாவை சேர்ந்த வலைதளம் ஒன்றில் வெளியாகி உள்ளது.

    தற்போதைய ரென்டர்களின் படி மூன்றாம் தலைமுறை ஆப்பிள் ஏர்பாட்ஸ் விலை உயர்ந்த ஏர்பாட்ஸ் ப்ரோ போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. புதிய மாடல் இன்-இயர் ரகம் கொண்டுள்ளது. இத்துடன் சிறிய ஸ்டெம் மற்றும் சிலிகான் இயர்-டிப்களை கொண்டிருக்கிறது.

     ஆப்பிள் ஏர்பாட்ஸ்

    புதிய ஏர்பாட்ஸ் முந்தைய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே டச் கண்ட்ரோல் வசதியை பெறும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், பிரெஷர் ரிலீப் சேம்பர் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது. பேட்டரியை பொருத்தவரை புதிய ஏர்பாட்ஸ் ஐந்து மணி நேர பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கலாம்.

    புதிய ஏர்பாட்ஸ் வெளியீடு பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. முந்தைய தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் மார்ச் 16 ஆம் தேதி நிகழ்வு ஒன்றை நடத்த இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது உண்மையாகும் பட்சத்தில் புதிய ஏர்பாட்ஸ் இந்த நிகழ்விலேயே அறிமுகம் செய்யப்படலாம். 
    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் மாடல்களின் உற்பத்தி பணிகளை இந்தியாவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை தொடர்ந்து ஐபேட் உற்பத்தியை இந்தியாவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து கணினி பாகங்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் மத்திய அரசு திட்டத்தில் ஆப்பிள் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

    மத்திய அரசு டேப்லெட், லேப்டாப் மற்றும் சர்வெர்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வோருக்கு சிறப்பு சலுகை அறிவிக்க  திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    புதிய திட்டம் மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்த ஸ்மார்ட்போன் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் திட்டத்தின் அடிப்படையில் இருக்கும். இது எலெக்டிரானிக் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும். இதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

     ஐபேட்

    ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு முதல் ஐபோன்களை உற்பத்தி செய்து வருகிறது. தற்சமயம் பாக்ஸ்கான், விஸ்ட்ரன் மற்றும் பெகட்ரான் போன்ற நிறுவனங்களை சார்ந்து இந்திய உற்பத்தியை மேற்கொள்கிறது. இதற்கென ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்திக்கென இந்தியாவில் 90 கோடி டாலர்களை ஐந்து ஆண்டுகளில் முதலீடு செய்ய இருக்கிறது.

    அதன்படி இந்தியாவில் ஐபோன்களை தொடர்ந்து ஐபேட் உற்பத்தியை துவங்கலாம் என கூறப்படுகிறது. தற்போதைய தகவல்களின் படி இந்தியாவில் ஐபேட் உற்பத்தியை ஆப்பிள் துவங்குமா என்பது தற்சமயம் கேள்விக்குறியாகவே உள்ளது. 
    மைக்ரோசாப்ட் நிறுவனம் அசத்தல் அம்சங்களுடன் எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வயர்லெஸ் ஹெட்செட் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வயர்லெஸ் ஹெட்செட் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ், சீரிஸ் எஸ், எக்ஸ்பாக்ஸ் ஒன் மற்றும் இதர விண்டோஸ் 10 சாதனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.

    புதிய எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் பிளெயின் பிளாக் பினிஷ் நிறத்தில், கேமிங் சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது. இது 40எம்எம் டிரைவர்கள், பேப்பர் கம்போசிட் டையபிராம் மற்றும் நியோடிமியம் மேக்னெட் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. இது 20Hz முதல் 20000Hz ரெஸ்பான்ஸ் ரேன்ஜ் கொண்டிருக்கிறது.

    இந்த ஹெட்செட் பவர்/பேர் பட்டன், மியூட் பட்டன், இடது மற்றும் வலதுபுற இயர்கப் மீது டையல்கள் வழங்கப்பட்டுள்ளன. வலதுபுற டையல் வால்யூம் கண்ட்ரோலர்களாக இயங்குகின்றன. இதில் உள்ள மைக் ட்விஸ்ட் செய்யக்கூடிய பூம் வடிவமைப்பு கொண்டுள்ளது. இதனால் பயன்படுத்தாத நேரத்தில் அதனை ஓரமாக வைத்துக் கொள்ளலாம்.

     எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட்

    புதிய எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் ப்ளூடூத் 4.2 மூலம் விண்டோஸ் 10 சாதனங்களுடன் இணைந்து கொள்கிறது. இவைதவிர யுஎஸ்பி டைப் சி கேபில் அல்லது எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் அடாப்டர் கொண்டும் பயன்படுத்தலாம். யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டு ஹெட்செட் சார்ஜ் செய்துகொள்ளலாம்.

    எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் 15 மணி நேர பேக்கப் வழங்கும் பேட்டரி கொண்டுள்ளது. இதனை 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் நான்கு மணி நேரத்திற்கான பேக்கப் பெற முடியும். முழுமையாக சார்ஜ் செய்ய மூன்று மணி நேரங்கள் ஆகும். இதன் விலை 99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 7300 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    இந்திய மின்சாதன உற்பத்தியாளரான லுமிபோர்டு புதிய ப்ளூடூத் ஹெட்போன் மாடல்களை அறிமுகம் செய்து உள்ளது.


    இந்திய நுகர்வோர் மின்சாதன உற்பத்தியாளரான லுமிபோர்டு புதிய ப்ளூடூத் ஹெட்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இவை HD50, HD60 மற்றும் HD70 என அழைக்கப்படுகின்றன. இவற்றில் 40mm ஹெச்டி ட்ரூ-பேஸ் டிரைவர்கள், மடிக்கக்கூடிய ஹெட்பேண்ட் டிசைன், நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற வசதிகள் உள்ளன.

    மூன்று புதிய ஹெட்போன்களும் ஒவர்-இயர் ரக மாடல்கள் ஆகும். இவற்றில் ப்ளூடூத் 5.0 மற்றும் டூயல் போன் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் ஹெட்பேண்ட்கள் அட்ஜஸ்ட் மற்றும் மடிக்கும் தன்மை கொண்டிருக்கின்றன. 

     லுமிபோர்டு HD70

    இத்துடன் நீண்ட நேரம் பயன்படுத்தும் போது காதுகளில் சவுகரியத்தை வழங்கும் வகையில் மென்மையான குஷன்கள் வழங்கப்பட்டு உள்ளன. மூன்று ஹெட்போன்களிலும் 400 எம்ஏஹெச் பேட்டரிகள் வழங்கப்பட்டு உள்ளன. HD50 மாடல் 10 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.

    லுமிபோர்டு HD60 மற்றும் HD70 ஹெட்போன்கள் 12 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளன. மூன்று ஹெட்போன்களிலும் AUX, மைக்ரோ எஸ்டி கார்டு மற்றும் எப்எம் ரேடியோ உள்ளன. 

    லுமிபோர்டு லாங் டிரைவ் HD சீரிஸ் இயர்போன்கள்- HD50, HD60 மற்றும் HD70 விலை முறையே ரூ. 2599, ரூ. 2999 மற்றும் ரூ. 3699 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.
    ×