search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட்
    X
    எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட்

    அசத்தல் அம்சங்களுடன் எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் அறிமுகம்

    மைக்ரோசாப்ட் நிறுவனம் அசத்தல் அம்சங்களுடன் எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வயர்லெஸ் ஹெட்செட் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வயர்லெஸ் ஹெட்செட் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ், சீரிஸ் எஸ், எக்ஸ்பாக்ஸ் ஒன் மற்றும் இதர விண்டோஸ் 10 சாதனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.

    புதிய எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் பிளெயின் பிளாக் பினிஷ் நிறத்தில், கேமிங் சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது. இது 40எம்எம் டிரைவர்கள், பேப்பர் கம்போசிட் டையபிராம் மற்றும் நியோடிமியம் மேக்னெட் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. இது 20Hz முதல் 20000Hz ரெஸ்பான்ஸ் ரேன்ஜ் கொண்டிருக்கிறது.

    இந்த ஹெட்செட் பவர்/பேர் பட்டன், மியூட் பட்டன், இடது மற்றும் வலதுபுற இயர்கப் மீது டையல்கள் வழங்கப்பட்டுள்ளன. வலதுபுற டையல் வால்யூம் கண்ட்ரோலர்களாக இயங்குகின்றன. இதில் உள்ள மைக் ட்விஸ்ட் செய்யக்கூடிய பூம் வடிவமைப்பு கொண்டுள்ளது. இதனால் பயன்படுத்தாத நேரத்தில் அதனை ஓரமாக வைத்துக் கொள்ளலாம்.

     எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட்

    புதிய எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் ப்ளூடூத் 4.2 மூலம் விண்டோஸ் 10 சாதனங்களுடன் இணைந்து கொள்கிறது. இவைதவிர யுஎஸ்பி டைப் சி கேபில் அல்லது எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் அடாப்டர் கொண்டும் பயன்படுத்தலாம். யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டு ஹெட்செட் சார்ஜ் செய்துகொள்ளலாம்.

    எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் 15 மணி நேர பேக்கப் வழங்கும் பேட்டரி கொண்டுள்ளது. இதனை 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் நான்கு மணி நேரத்திற்கான பேக்கப் பெற முடியும். முழுமையாக சார்ஜ் செய்ய மூன்று மணி நேரங்கள் ஆகும். இதன் விலை 99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 7300 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    Next Story
    ×