search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒன்பிளஸ் வாட்ச்
    X
    ஒன்பிளஸ் வாட்ச்

    பிரீமியம் விலையில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

    இந்திய சந்தையில் புதிய பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலையும் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.39 இன்ச் ஹெச்டி 454x454 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 2.5டி வளைந்த கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய ஸ்மார்ட்வாட்ச் 46 எம்எம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் கொண்டுள்ளது. மேலும் நோட்டிபிகேஷன், அழைப்புகளை மேற்கொள்வது, நிராகரிப்பது, மியூசிக், புகைப்படங்களை எடுப்பது போன்ற அம்சங்களை இயக்கும் வசதி கொண்டுள்ளது. இத்துடன் 4 ஜிபி மெமரி உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பெரும்பாலான ப்ளூடூத் இயர்பட்களுடன் இணைந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

     ஒன்பிளஸ் வாட்ச்

    மேலும் இது ஒன்பிளஸ் டிவியுடன் இணைந்து ரிமோட் போன்றும் இயங்குகிறது. இதை கொண்டு டிவி ஒலியை குறைத்தல் மற்றும் டிவியை ஆப் செய்யவும் முடியும். 5ATM+IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இத்துடன் 110-க்கும் அதிக உடற்பயிற்சிகளை தானாக கண்டறிந்து கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது. 

    ஒன்பிளஸ் வாட்ச் மாடலில் 402 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது இரண்டு வாரங்களுக்கு தேவையான பேக்கப் வழங்குகிறது. இத்துடன் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருப்பதால், ஐந்தே நிமிடங்களில் ஒரு நாளுக்கு தேவையான திறனையும், 20 நிமிடங்களில் ஒரு வாரத்திற்கு தேவையான பேக்கப் வழங்குகிறது.

    ஒன்பிளஸ் வாட்ச் மாடல் மிட்நைட் பிளாக் மற்றும் மூன்லைட் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. அறிமுக சலுகையாக இந்த வாட்ச் ரூ. 14,999 விலையில் அமேசான் மற்றும் ஆப்லைன் தளங்களில் ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வருகிறது.
    Next Story
    ×