என் மலர்tooltip icon

    கணினி

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் A7 லைட் மற்றும் கேலக்ஸி டேப் S7 FE மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் A7 லைட் மற்றும் கேலக்ஸி டேப் S7 FE மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. கேலக்ஸி டேப் A7 லைட் மாடலில் 8.7 இன்ச் WXGA+TFT LCD ஸ்கிரீன், ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22t பிராசஸர், 3 ஜிபி ரேம், 8 எம்பி ஆட்டோபோகஸ் பிரைமரி கேமரா, 2 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

     சாம்சங் கேலக்ஸி டேப் A7 லைட்

    ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ கொண்டிருக்கும் கேலக்ஸி டேப் A7 லைட் 5100 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    கேலக்ஸி டேப் S7 FE மாடலில் 12.4 இன்ச் WQXGA டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 4ஜி எல்டிஇ வசதி, 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் எஸ் பென் வசதி, அல்ட்ரா லோ-லேடன்சி, ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ, சாம்சங் டெக்ஸ் ஆப் போன்ற அம்சங்கள் உள்ளன.

    இந்த டேப்லெட் 10,090 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனினும், டேப்லெட் உடன் 15 வாட் சார்ஜர் மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்கான கீபோர்டு கவர் தனியாக விற்பனை செய்யப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி டேப் A7 லைட் மாடல் கிரே மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 என்றும் எல்டிஇ வெர்ஷன் விலை ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சாம்சங் கேலக்ஸி S7 FE மிஸ்டிக் பிளாக், மிஸ்டிக் சில்வர், மிஸ்டிக் கிரீன் மற்றும் மிஸ்டிக் பின்க் நிறங்களில் கிடைக்கிறது.

    இதன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 46,999 என்றும் எல்டிஇ வசதி கொண்ட 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 50,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
    மொப்வோய் நிறுவனத்தின் புதிய டிக்வாட்ச் இ3 ஸ்னாப்டிராகன் வியர் 4100 சிப்செட், 1 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.


    மொப்வோய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டிக்வாட்ச் இ3 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புது ஸ்மார்ட்வாட்ச் ஸ்னாப்டிராகன் வியர் 4100 பிராசஸர், 1 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கிறது. 

    புதிய டிக்வாட்ச் இ3 கூகுள் நிறுவனத்தின் வியர் ஒஎஸ் சார்ந்து இயங்குகிறது. இதில் 1.3 இன்ச் ஹை-டென்சிட்டி எல்சிடி டிஸ்ப்ளே, SpO2 மாணிட்டரிங் மற்றும் பல்வேறு இதர பிட்னஸ் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் 380 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகிறது.

     டிக்வாட்ச் இ3

    டிக்வாட்ச் இ3 அம்சங்கள்

    - 1.3 இன்ச் 360x360 பிக்சல் எல்சிடி டிஸ்ப்ளே
    - ஸ்னாப்டிராகன் 4100 பிராசஸர்
    - 1 ஜிபி ரேம்
    - 8 ஜிபி மெமரி
    - கூகுளின் வியர் ஒஎஸ்
    - அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி
    - பல்வேறு பிட்னஸ் அம்சங்கள்
    - உடல்நலன் அறிந்து கொள்ளும் சென்சார்கள்
    - ப்ளூடூத் 5 
    - 380 எம்ஏஹெச் பேட்டரி

    இந்தியாவில் புதிய டிக்வாட்ச் இ3 ஸ்மார்ட்வாட்ச் பேந்தர் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் பிளாக், புளூ மற்றும் எல்லோ போன்ற சிலிகான் ஸ்டிராப்களுடன் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 19,999 ஆகும்.  
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் ஜியோபைபர் போஸ்ட்பெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபைபர் போஸ்ட்பெயிட் சலுகைகளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இவற்றின் துவக்க விலை மாதம் ரூ. 399 ஆகும். ஜியோபைபர் போஸ்ட்பெயிட் சலுகையை பெற வாடிக்கையாளர்கள் எந்தவிதமான முன்பணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

     ஜியோபைபர்

    எனினும், 4கே செட் டாப் பாக்ஸ் பெற வாடிக்கையாளர்கள் ரூ. 1000 திரும்ப பெறக்கூடிய கட்டனத்தை செலுத்த வேண்டும். மாதாந்திர போஸ்ட்பெயிட் சலுகையை ஆறு மாதங்கள் மற்றும் 12 மாதங்களுக்கும் பெற முடியும். ரூ. 999 மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளுடன் 15 ஒடிடி செயலிகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.

    அனைத்து போஸ்ட்பெயிட் சலுகைகளிலும் ஒரே மாதிரியான டவுன்லோட் மற்றும் அப்லோட் வேகத்தை வழங்குகின்றன. இத்துடன் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து மாத கட்டணத்தை நேரடியாக ஜியோவுக்கு செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.
    ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் SpO2, BP மாணிட்டரிங் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.


    ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் ஜெப் பிட் 4220CH ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புது ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் கால் வசதி கொண்டிருக்கிறது. இதனால் ஸ்மார்ட்போனுடன் இணைத்துவிட்டால், பின் அழைப்பை மேற்கொள்வது மற்றும் ஏற்பது போன்றவற்றை ஸ்மார்ட்வாட்ச் மூலம் செய்துவிடலாம். 

    இந்த ஸ்மார்ட்வாட்ச் பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர் கொண்டுள்ளது. இதில் 1.3 இன்ச் TFT கலர் டிஸ்ப்ளே, 100-க்கும் அதிகமான கஸ்டமைஸ் செய்யக்கூடிய வாட்ச் பேஸ்கள், 7 ஸ்போர்ட் மோட்கள், IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, SpO2/ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை கண்டறியும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

     ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிட் 4220CH

    புதிய ஜெப்ரானிக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் ஐஒஎஸ் 9.0 மற்றும் ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் அதற்கும் பின் வெளியான ஒஎஸ் கொண்ட சாதனங்களுடன் இணைந்து கொள்ளும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இதில் பீடோமீட்டர், கலோரி கவுண்ட், டிஸ்டன்ஸ் டிராக்கர், ஸ்லீப் மாணிட்டர் என பல்வேறு இதர அம்சங்கள் உள்ளன.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் 220 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது 5 நாட்களுக்கு பேட்டரி பேக்கப், 30 நாட்களுக்கு ஸ்டான்ட்பை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக் நிற கேஸ் மற்றும் பிளாக் ஸ்டிராப், சில்வர் கேஸ் மற்றும் வைட் ஸ்டிராப், கேடட் கிரே கேஸ் மற்றும் கேடட் கிரே ஸ்டிராப் கொண்டுள்ளது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 3199 ஆகும். 
    ரியல்மி நிறுவனத்தின் புது வயர்லெஸ் இயர்பட்ஸ் விரைவில் வெளியாக இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 30 மற்றும் நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்த நிலையில், ரியல்மி பட்ஸ் கியூ2 மாடல் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.

     ரியல்மி பட்ஸ் கியூ2 டீசர்

    முன்னதாக பட்ஸ் கியூ2 மாடல் பாகிஸ்தானில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படவில்லை. புது இயர்பட்ஸ் டீசரின் படி தோற்றத்தில் இது ரியல்மி பட்ஸ் ஏர் 2 நியோ போன்றே காட்சியளிக்கிறது.

    ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மட்டுமின்றி டிரான்ஸ்பேரன்சி மோட் வசதியும் வழங்கப்படுகிறது. புது இயர்பட்ஸ் ஆர்2 சிப் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது ப்ளூடூத் 5.2, 10 மில்லிமீட்டர் பாஸ் பூஸ்ட் டிரைவர், பாஸ் பூஸ்ட் பிளஸ் மோட் போன்ற அம்சங்களை வழங்குகிறது. 
    ஏர்டெல் நிறுவனம் மேற்கொண்டு வரும் 5ஜி சோதனை குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.


    இந்தியாவில் 5ஜி வெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது. பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவைக்கான சோதனையை துவங்கி இருக்கின்றன. டெலிகாம் நிறுவனங்களுக்கு மத்திய அரசு 5ஜி ஸ்பெக்ட்ரமை ஒதுக்கீடு செய்ய இருக்கிறது. எனினும், பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வி போன்ற நிறுவனங்களை 5ஜி சோதனையை துவங்க அனுமதி அளித்தது.



    அந்த வகையில் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களும் 5ஜி சோதனையை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. ஏர்டெல் நிறுவனம் குருகிராமில் 3.5GHz பேண்ட் மூலம் 5ஜி சோதனையை மேற்கொண்டு வருகிறது. ஏர்டெல் 5ஜி சோதனையில் அதிகபட்சம் 1Gbps வேகத்தில் டவுன்லோட் வேகம் கிடைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

    இதனை உறுதிப்படுத்தும் வகையில் ட்விட்டரில் வெளியாகி இருக்கும் வீடியோவில், ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போனில் ஏர்டெல் 5ஜி 1Gbps டவுன்லோட், 100Mbps அப்லோட் வேகம் வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி நெட்வொர்க் எரிக்சன் உபகரணங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஐபேட் மினி யுஎஸ்பி டைப் சி, பாக்சி டிசைன் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் மினி 6th Gen மாடல் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புது ஐபேட் மினி விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி வருகின்றன. எனினும், முதல் முறையாக புது ஐபேட் மினி டிசைன் விவரங்கள் ரென்டர் வடிவில் வெளியாகி இருக்கிறது.

    முன்னதாக பலமுறை இணையத்தில் வெளியான ரென்டர்களில் அதிக விவரங்கள் வெளியாகவில்லை. தற்போதைய ரென்டர்கள் நேரடி புகைப்படங்கள், ஸ்கீமேடிக் மற்றும் சி.ஏ.டி. பைல்களை சார்ந்து உருவாகி இருக்கிறது. 

    கோப்புப்படம்

    புதிய ரென்டர்களின் படி புதிய தலைமுறை ஐபேட் மினி கடந்த ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக ரி-டிசைன் செய்யப்பட்டுள்ளது. 6th Gen ஐபேட் மினி தோற்றத்தில் 4th Gen ஐபேட் ஏர், புது ஐபேட் ப்ரோ மற்றும் ஐபோன் 12 சீரிஸ் போன்ற பாக்சி டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    புது ஐபேட் மினி 8.4 முதல் 8.9 இன்ச் டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த மாடலில் ஹோம் பட்டன் இருக்காது என்றும் டச் ஐடி பவர் பட்டனுடன் பொருத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனம் U1S சீரிஸ் ஸ்மார்ட் டிவியை மூன்றுவித அளவுகளில் இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் டிவி U1S சீரிஸ் ஸ்மார்ட் டிவிக்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய U1S ஸ்மார்ட் டிவி 50-இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என மூன்று அளவுகளில் கிடைக்கிறது. இவை அனைத்தும் 4K திறன் கொண்டிருக்கின்றன.

    பெசல் லெஸ் டிசைன் கொண்டிருக்கும் புது ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிக்கள் 95% அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, HDR10, HLG, HDR 10+ போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. 

     ஒன்பிளஸ் டிவி U1S

    ஒன்பிளஸ் டிவி U1S அம்சங்கள்

    - 50 / 55 / 65-இன்ச் 3840x2160 4K LED பேனல், டால்பி விஷன், HDR10, HDR10+,HLG
    - காமா என்ஜின் மற்றும் MEMC, சூப்பர் ரெசல்யூஷன், நாய்ஸ் டிக்ஷன்
    - கலர் ஸ்பேஸ் மேப்பிங், டைனமிக் காண்டிராஸ்ட், AI-PQ
    - ஆண்ட்ராய்டு டிவி 10 மற்றும் ஆக்சிஜன்பிளே 2.0
    - பில்ட்-இன் கூகுள் அசிஸ்டண்ட்
    - வைபை, ப்ளூடூத் 5.0 LE, 3x HDMI, 2x USB, ஆப்டிக்கல், ஈத்தர்நெட்
    - 30W ஸ்பீக்கர், DTS-HD, டால்பி ஆடியோ

     ஒன்பிளஸ் டிவி கேமரா

    ஒன்பிளஸ் டிவி U1S மாடலுடன் ஒன்பிளஸ் நிறுவனம் புதிதாக ஒன்பிளஸ் டிவி கேமராவையும் அறிமுகம் செய்தது. இது வைடு ஆங்கில் வீடியோ, 1080 பிக்சல் தர புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இதில் டூயல் மைக்ரோபோன்கள், நாய்ஸ் கேன்சலேஷன் அல்காரிதம்களுடன் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் டிவி கேமரா விலை ரூ. 2499 ஆகும்.

    இந்தியாவில் புதிய ஒன்பிளஸ் டிவி U1S 50 இன்ச் விலை ரூ. 39,999, 55 இன்ச் விலை ரூ. 47,999 மற்றும் 65 இன்ச் விலை ரூ. 62,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட், அமேசான் தளங்களில் நடைபெறுகிறது.
    ரியல்மி நிறுவனத்தின் புதிய லேப்டாப் மற்றும் டேப்லெட் மாடல்கள் ரியல்மி ஜிடி குளோபல் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

    ரியல்மி நிறுவனத்தின் ஜிடி குளோபல் நிகழ்வில் புது சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்து இருக்கிறார். இதுபற்றிய விவரங்களை ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி ரியல்மி ஜிடி குளோபல் நிகழ்வில் புது லேப்டாப் மற்றும் டேப்லெட் மாடல்கள் அறிமுகமாகும் என தெரிகிறது.

     ரியல்மி ஜிடி டீசர்

    முன்னதாக ரியல்மி தனது கம்யூனிட்டி தளத்தில் புது லேப்டாப் வெளியீட்டை உணர்த்தும் வகையிலான சர்வே ஒன்றை நடத்தியது. இதைத் தொடர்ந்து ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மற்றும் துணை தலைவர் மாதவ் சேத் புது சாதனங்கள் வெளியீட்டை உணர்த்தும் டீசரை வெளியிட்டுள்ளார்.

    புது லேப்டாப் மற்றும்  டேப்லெட் வெளியீடு குறித்து ரியல்மி ஏற்கனவே பல விவரங்களை வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது இவற்றின் வெளியீட்டு தேதி உறுதியாகி இருக்கிறது. ரியல்மி ஜிடி குளோபல் நிகழ்வு ஜூன் 15 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 
    பேஸ்புக் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்வாட்ச் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    உலகின் முன்னணி நிறுவனங்கள் ஒவ்வொன்றாக ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வரிசையில், பேஸ்புக் நிறுவனமும் ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை உருவாக்கி வருகிறது. புது மாடலில் பல்வேறு நவீன அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

     பேஸ்புக்

    தற்போது வெளியாகி இருக்கும் தகவலில் புது ஸ்மார்ட்வாட்ச் கழற்றக்கூடிய கேமராக்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. சந்தையில் கிடைக்கும் மற்ற ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுடனான போட்டியை எதிர்கொள்ள பேஸ்புக் தனது ஸ்மார்ட்வாட்ச் மாடலில் வீடியோ கால் மேற்கொள்ள ஏதுவாக கழற்றக்கூடிய கேமராக்களை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    கழற்றக்கூடிய கேமரா 1080 பிக்சல் தரத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்கும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. ஸ்மார்ட்போன்களை போன்றே எதிர்காலத்தில் ஸ்மார்ட்வாட்ச்களையும் பயன்படுத்த வைக்கும் நோக்கில் பேஸ்புக் புது ஸ்மார்ட்வாட்ச்-ஐ உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
    ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் புது ஒஎஸ் அம்சங்கள் மற்றும் அவற்றின் வெளியீட்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

    ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு (WWDC 21) நேற்று நடைபெற்றது. கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த நிகழ்வு ஆப்பிள் வளாகத்தில் ஏற்கனவே படமாக்கப்பட்டு, நேரலை செய்யப்பட்டது. அசத்தலான அறிமுக வீடியோவுடன் துவங்கிய டெவலப்பர்கள் நிகழ்வில் புது ஒஎஸ் அப்டேட்களை ஆப்பிள் மென்பொருள் பொறியாளர்கள் அறிவித்தனர்.

    ஐஒஎஸ் 15

    அதன்படி ஐஒஎஸ் 15 தளத்தில் பேஸ்டைம் சேவை பல்வேறு புது அப்டேட்களை பெற்றுள்ளது. இம்முறை பேஸ்டைம் சேவையில் ஸ்பேஷியல் ஆடியோ அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் ஆடியோ அனுபவம் முன்பு இருந்ததை விட மேம்பட்டு இருக்கிறது. பேஸ்டைம் செயலியில் புதிதாக போர்டிரெயிட் மோட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேலும் பேஸ்டைம் அழைப்புகளை லின்க்குகளாக மாற்றும் வசதி வழங்கப்படுகிறது. 

     ஐஒஎஸ் 15

    இதேபோன்று புது ஐஒஎஸ் தளத்தின் மெசேஜஸ் சேவையில் புது அம்சங்கள் வழங்கப்படுகிறது. அதன்படி மெசேஜஸ் செயலியில் பல்வேறு வசதிகள் அடங்கிய (DND-Do Not Disturb) அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. போக்கஸ் என அழைக்கப்படும் புது அம்சம் எதுபோன்ற குறுந்தகவல்களுக்கு நோட்டிபிகேஷன் வரவேண்டும் என்பதை பயனர்களே முடிவு செய்ய வழி வகுக்கிறது.

    ஐஒஎஸ் 15 தளத்தில் ஆப்பிள் கீஸ் அம்சம் பல்வேறு புது கார்கள், தனியார் விடுதிகளில் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த சேவையை விரிவுப்படுத்த பல்வேறு நிறுவனங்களுடன் ஆப்பிள் இணைந்துள்ளது. இதேபோன்று அடையாள சான்று மற்றும் இதர தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய கார்டுகளை ஆப்பிள் வாலெட் செயலியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

    இவற்றுடன் ஆப்பிள் மேப், வெதர் செயலிகளிலும் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. ஆப்பிள் மேப் சேவையில் முன்பு இருந்ததை விட அதிக நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. புது மேப் செயலியில் முகவரிகள் முற்றிலும் புது முறையில் அதிக தெளிவாக காட்சியளிக்கும்படி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐஒஎஸ் 15 ஆப்பிள் ஏர்பாட்ஸ் சாதனத்தில் அதிக அம்சங்களை வழங்குகிறது. மேலும் இது ஆடியோ அனுபவத்தை முன்பு இருந்ததை விட அதிகளவு மேம்படுத்தி இருக்கிறது. இத்துடன் ஏர்பாட்ஸ் சாதனத்தில் ஸ்பேஷியல் ஆடியோ வசதி வழங்கப்பட்டுள்ளது.  

     ஐபேட் ஒஎஸ்

    ஐபேட் ஒஎஸ் 15

    ஐபேட் ஒஎஸ் 15 விட்ஜெட்களில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விட்ஜெட்களை பொழுதுபோக்கு, விளையாட்டு என பல விதங்களில் பிரித்து அவற்றை மிக அழகாக ஒருங்கிணைத்து அடுக்கி வைத்துக் கொள்ளலாம். ஆப் லைப்ரரி அம்சத்தில் அனைத்து செயலிகளையும் விட்ஜெட் மூலம் பார்க்கலாம்.

    இதில் உள்ள மல்டி டாஸ்கிங் அம்சம் கொண்டு ஒரே சமயத்தில் இரு செயலிகளை பயன்படுத்த முடியும். செயலியின் தன்மைக்கு ஏற்ப அவற்றின் அளவை திரையில் மாற்றியமைத்துக் கொள்ளலாம். இந்த அம்சம் ஒவ்வொரு செயலிக்கும் ஏற்ப அசத்தலான வசதிகளை வழங்குகிறது.

    இதன் டிரான்ஸ்லேட் அம்சம் கடந்த ஆண்டை விட இம்முறை அதிக வசதிகளை வழங்குகிறது. வருடாந்திர அடிப்படையில் ஆப்பிள் டிரான்ஸ்லேட் பயனர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. மேலும் ஸ்விப்ட் பிளேகிரவுண்ட் தளமும் அதிகளவு மாற்றப்பட்டு இருக்கிறது.

    இந்த தளத்தில் செயலிகளுக்கு குறியீடு எழுதும் போதே அவற்றை சோதனை செய்யும் வசதியும், அவற்றை உடனடியாக ஆப் ஸ்டோரில் பதிவேற்றம் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. 

     பிரைவசி

    பிரைவசி

    இன்றைய உரையில் ஆப்பிள் நிறுவனம் பிரைவசி சார்ந்த அம்சங்களை அறிவித்தது. அதன்படி மெயில் பிரைவசி ப்ரோடெக்ஷன் அறிமுகமாகிறது. இது ஐபி முகவரிகளை மறைக்கும். மேலும் சபாரி பிரவுசரில் டிராக் செய்வோரிடம் இருந்தும் ஐபி முகவரிகளை மறைக்கிறது. இத்துடன் செயலிகள் எவ்வாறு பிரைவசி செட்டிங்களை பயன்படுத்திகின்றன என்பதை அறிந்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

     வாட்ச் ஒஎஸ்

    வாட்ச் ஒஎஸ் 8

    புதிய வாட்ச் ஒஎஸ் 8 புதுவிதமான அனிமேஷன்களை கொண்டுள்ளது. இவை பயனர்கள் மனநிலையை ஒரே தன்மையில் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதுதவிர மன உளைச்சல் ஏற்படும் வாய்ப்பை வெகுவாக குறைக்கிறது. மேலும் பயனர் சுவாச அளவில் மாற்றம் ஏற்பட்டால் உடனே அதுபற்றிய நோட்டிபிகேஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் பல்வேறு உடற்பயிற்சிகள் வாட்ச் ஒஎஸ்-இல் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் அதிக பிரபலமான வாட்ச் பேஸ் புது ஒஎஸ்-இல் மாற்றப்பட்டு இருக்கிறது. புது தளத்தில் வாட்ச் பேஸ் முன்பை விட அதிக விவரங்களை வழங்குகிறது. இத்துடன் புதிதாக போட்டோஸ் ஆப் சேர்க்கப்பட்டு உள்ளது. வாட்ச் ஒஎஸ் கொண்டு குறுந்தகவல் அனுப்பும் வசதியில் அசத்தலான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

     மேக் ஒஎஸ்

    மேக் ஒஎஸ் 

    மேக் ஒஎஸ் மான்ட்ரெ தளத்தில் யுனிவர்சல் கண்ட்ரோல் எனும் புது அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மேக் கீபோர்டு மற்றும் மவுஸ் கொண்டு ஐபேட் சாதனத்தையும் இயக்க முடியும். இதே போன்று ஐமேக் மவுஸ் மற்றும் கீபோர்டு கொண்டு ஐபேட் மற்றும் ஐமேக் சாதனங்களை இயக்கலாம்.  

    மேக் சாதனங்களுக்கான ஏர்பிளே அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இருப்பதை போன்றே ஏர்பிளே அம்சம் ஐமேக் சாதனங்களிலும் இயங்கும். புதிய மான்ட்ரெ தளத்தில் ஷார்ட்கட்ஸ் மற்றும் ஷார்ட்கட் எடிட்டர் அம்சங்கள் உள்ளன. இது மேக் சாதனங்களின் பல்வேறு செயலிகளில் இயங்கும். 

    உலகின் அதிவேக பிரவுசராக இருக்கும் சபாரி பயனர் விவரங்களை பாதுகாப்பதில் தலைசிறந்த அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் தோற்றம் முற்றிலுமாக மாற்றப்பட்டு டேப்கள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் சர்ச் டேப் முன்பைவிட சிறியதாக இருக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு இதர டேப்களும் அளவில் சிறியதாக இருக்கின்றன. 

    புதிய சபாரி பிரவுசர் மேக், ஐமேக், ஐபேட் என அனைத்து சாதனங்களிலும் ஒரே மாதிரி காட்சியளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஐபோனில் சர்ச் பார் திரையில் மென்மையாக க்ளிக் செய்தால் தோன்றும். இதனால் சிறு திரையிலும் பெரிய பிரவுசர் போன்ற அனுபவம் கிடைக்கும்.
    கிளப்ஹவுல் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் அக்கவுண்ட்களை லின்க் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.


    சமூக வலைதள நிறுவனங்களில் புதுவரவு சேவையாக கிளப்ஹவுஸ் இருக்கிறது. மற்ற வலைதளங்கள் போன்று இல்லாமல் கிளப்ஹவுஸ் தளத்தில் பயனர்கள் தங்களின் குரலையே பதிவுகளாக மேற்கொள்ள வேண்டும். முற்றிலும் புது முயற்சியாக இருந்த போதும், துவங்கி ஒரே ஆண்டிற்குள் இந்த செயலி உலகம் முழுக்க பிரபலமாகி இருக்கிறது.

     கிளப்ஹவுஸ்

    இதுவரை கிளப்ஹவுஸ் தளத்தினை இன்வைட் மூலம் பயன்படுத்த வேண்டிய நிலை இருந்த வந்தது. ஆனால் கிளப்ஹவுஸ் ஆண்ட்ராய்டு தளத்தில் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் அக்கவுண்ட்களை லின்க் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. வரும் மாதங்களில் பயனர்கள் இந்த தளத்தில் இலவசமாகவே இணைந்து கொள்ளலாம் என இதன் டெவலப்பர்கள் தெரிவித்துள்ளனர்.

    முதல்முறை கிளப்ஹவுஸ் பயன்படுத்துவோர் தங்களின் ப்ரோபைல் பக்கத்தில் இருக்கும் Add Twitter அல்லது Add Instagram ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதுமட்டுமின்றி கிளப்ஹவுஸ் பயனர்கள் மற்றவர்களின் அக்கவுண்ட் மற்றும் கிளப்களில் நேரடியாக பாளோ செய்ய முடியும். 
    ×