search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் கேலக்ஸி டேப் S7 FE
    X
    சாம்சங் கேலக்ஸி டேப் S7 FE

    ரூ. 11,999 துவக்க விலையில் கேலக்ஸி டேப் மாடல்கள் அறிமுகம்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் A7 லைட் மற்றும் கேலக்ஸி டேப் S7 FE மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் A7 லைட் மற்றும் கேலக்ஸி டேப் S7 FE மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. கேலக்ஸி டேப் A7 லைட் மாடலில் 8.7 இன்ச் WXGA+TFT LCD ஸ்கிரீன், ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22t பிராசஸர், 3 ஜிபி ரேம், 8 எம்பி ஆட்டோபோகஸ் பிரைமரி கேமரா, 2 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

     சாம்சங் கேலக்ஸி டேப் A7 லைட்

    ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ கொண்டிருக்கும் கேலக்ஸி டேப் A7 லைட் 5100 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    கேலக்ஸி டேப் S7 FE மாடலில் 12.4 இன்ச் WQXGA டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 4ஜி எல்டிஇ வசதி, 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் எஸ் பென் வசதி, அல்ட்ரா லோ-லேடன்சி, ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ, சாம்சங் டெக்ஸ் ஆப் போன்ற அம்சங்கள் உள்ளன.

    இந்த டேப்லெட் 10,090 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனினும், டேப்லெட் உடன் 15 வாட் சார்ஜர் மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்கான கீபோர்டு கவர் தனியாக விற்பனை செய்யப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி டேப் A7 லைட் மாடல் கிரே மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 என்றும் எல்டிஇ வெர்ஷன் விலை ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சாம்சங் கேலக்ஸி S7 FE மிஸ்டிக் பிளாக், மிஸ்டிக் சில்வர், மிஸ்டிக் கிரீன் மற்றும் மிஸ்டிக் பின்க் நிறங்களில் கிடைக்கிறது.

    இதன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 46,999 என்றும் எல்டிஇ வசதி கொண்ட 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 50,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
    Next Story
    ×