என் மலர்
கணினி
சியோமி நிறுவனம் விரைவில் புது லேப்டாப் மாடல்களை எம்.ஐ. மற்றும் ரெட்மி பிராண்டிங்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனம் எம்.ஐ. மற்றும் ரெட்மி பிராண்டு லேப்டாப் மாடல்களை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே எம்.ஐ. பிராண்டு லேப்டாப்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எனினும், லேப்டாப் மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த சியோமி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

எம்.ஐ. நோட்புக் 14, எம்.ஐ. நோட்புக் 14 ஹாரிசான் எடிஷன், எம்.ஐ. நோட்புக் 14 ஐ.சி. மற்றும் எம்.ஐ. நோட்புக் 14 இ-லெர்னிங் எடிஷன் போன்ற மாடல்களை சியோமி இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. புது மாடல்கள் எம்.ஐ. நோட்புக் 14 சீரிசின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.
எம்.ஐ. பிராண்டு மட்டுமின்றி ரெட்மி பிராண்டு லேப்டாப்களும் இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இந்தியாவில் வெளியாகும் முதல் ரெட்மி பிராண்டு லேப்டாப் மாடல்களாக இவை இருக்கும். சீன சந்தையில் ஏற்கனவே ரெட்மி பிராண்டு லேப்டாப்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் நிறுவனம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் புது சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்வில் கேலக்ஸி இசட் ப்ளிப் 3, கேலக்ஸி இசட் போல்டு 3, கேலக்ஸி வாட்ச் 4, கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 4 மற்றும் கேலக்ஸி பட்ஸ் 2 போன்ற சாதனங்களை சாம்சங் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இம்முறையும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஆன்லைனில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது. இந்த நிகழ்வு சாம்சங் வலைதளம், சாம்சங்கின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல்களில் நேரலை செய்யப்படுகிறது. ஆகஸ்டில் அன்பேக்டு நிகழ்வு குறித்து சாம்சங் சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
எனினும், ஏற்கனவே வெளியான தகவல்களில் சாம்சங் இம்முறை ஐந்து சாதனங்களை அறிமுகம் செய்யும் என கூறப்பட்டது. இதுதவிர கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஆகஸ்ட் 11 இல் நடைபெறும் என்றும் இணையத்தில் பலமுறை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு ஒரே பில் மூலம் பல சேவைகளை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு ஏர்டெல் பிளாக் எனும் புது திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் மூலம் போஸ்ட்பெயிட், டி.டி.ஹெச். மற்றும் பைபர் சேவைகளுக்கு ஒரே பில் மூலம் பணம் செலுத்தலாம்.
புது திட்டத்தை செயல்படுத்த பயனர்கள் ஏர்டெல் கஸ்டமர் கேர் நம்பருக்கு தொடர்பு கொண்டு எந்தெந்த சேவைகளை இணைத்து பில் பெற வேண்டும் என்பதை தெரிவிக்கலாம். இவ்வாறு இரண்டுக்கும் மேற்பட்ட சேவைகளுக்கு ஒரே பில் பெற முடியும். ஏர்டெல் பிளாக் பிக்சட் திட்டத்தின் துவக்க விலை ரூ. 998 ஆகும்.

ஏர்டெல் பிளாக் கட்டண விவரம்:
டி.டி.ஹெச். கனெக்ஷன் + 2 போஸ்ட்பெயிட் மொபைல் இணைப்பிற்கு மாதம் ரூ. 998
டி.டி.ஹெச். கனெக்ஷன் + 3 போஸ்ட்பெயிட் மொபைல் இணைப்பிற்கு மாதம் ரூ. 1,349
பைபர் கனெக்ஷன் + 2 போஸ்ட்பெயிட் மொபைல் இணைப்பிற்கு மாதம் ரூ. 1,598
பைபர், டி.டி.ஹெச். கனெக்ஷன் + 3 போஸ்ட்பெயிட் மொபைல் இணைப்பிற்கு மாதம் ரூ. 2,099
இந்த சலுகைகளை விரும்பாத பட்சத்தில் பயனர்கள் தங்களுக்கென சொந்தமாக ஏர்டெல் பிளாக் திட்டத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கு இரண்டு அல்லது அதற்கும் அதிக சேவைகளை இணைக்க வேண்டும். இந்த திட்டம் ஏர்டெல் பிரீபெயிட் இணைப்புகளுக்கு பொருந்தாது.
வி நிறுவனத்தின் புதிய பிரீபெயிட் சலுகை ரூ. 267 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் பலன்களை பார்ப்போம்.
வி நிறுவனம் சமீபத்தில் ரூ. 447 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையில் 50 ஜிபி டேட்டா எவ்வித தினசரி கட்டுப்பாடுகள் இன்றி வழங்கப்பட்டது. முன்னதாக இதேபோன்ற சலுகையை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களும் அறிவித்து இருந்தன.

தற்போது ரூ. 267 விலையில் புது பிரீபெயிட் சலுகையை வி அறிவித்து இருக்கிறது. இதில் 30 நாட்களுக்கு 25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. டேட்டா மட்டுமின்றி வி மூவிஸ், டிவி கிளாசிக் போன்ற சேவைகளுக்கான சந்தாவும் இந்த சலுகையில் வழங்கப்படுகிறது. புது பிரீபெயிட் சலுகை வி வலைதளத்தில் பட்டியலிபட்டப்பட்டு இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 247 பிரீபெயிட் சலுகையிலும் 25 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ. 299 சலுகையில் அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ், 30 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
ரியல்மி நிறுவனத்தின் பட்ஸ் 2 நியோ இயர்போனில் 11.2mm பேஸ் பூஸ்ட் ஆடியோ டிரைவர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ரியல்மி பட்ஸ் 2 நியோ இயர்போனினை அறிமுகம் செய்தது. இது 2019 ஆண்டு அறிமுகமான ரியல்மி பட்ஸ் 2 மாடலின் குறைந்த விலை வெர்ஷன் ஆகும். இதில் கியர் வடிவ கேபிள் வழங்கப்பட்டு இருக்கிறது. இது வயர்கள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வழி செய்யும்.

பட்ஸ் 2 மாடலில் இயர்போன் நேராக வழங்கப்பட்டு இருந்தது. புதிய பட்ஸ் 2 நியோ மாடலில் 90 டிகிரி ஆங்கில் கொண்ட ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கேமிங்கின் போது கூடுதல் க்ரிப் வழங்குகிறது. மியூசிக் பிளே / பாஸ், அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது போன்ற அம்சங்களுக்கு இன்-லைன் ரிமோட் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது.
ரியல்மி பட்ஸ் 2 நியோ புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 499 ஆகும். இது ப்ளிப்கார்ட், அமேசான், ரியல்மி வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு புது பேண்ட் மற்றும் வாட்ச் பேஸ்களை அறிமுகம் செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் புது வாட்ச் பேண்ட்கள் மற்றும் வாட்ச் பேஸ்களை அவ்வப்போது அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. சமீபத்தில் பிரைட் பேண்ட் மற்றும் பிரைட் வாட்ச் பேஸ்களை ஆப்பிள் அறிமுகம் செய்தது. அந்த வரிசையில் தற்போது 22 புதிய பேண்ட்கள் அடங்கிய தொகுப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்டின் கொடியை சார்ந்து உருவாகி இருக்கின்றன.

ஒவ்வொரு பேண்ட்களும் அந்தந்த நாட்டு விளையாட்டு வீவர்களின் போட்டி மனப்பாண்மையை போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. புது பேண்ட்களுடன் ஸ்டிரைப்கள் அடங்கிய ஆப்பிள் வாட்ச் பேஸ்களும் வழங்கப்படுகின்றன. வாட்ச் பேஸ்களை பயனர்கள் ஆப்பிள் க்ளிப் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
புதிய பேண்ட்கள் International Collection Solo Loop என அழைக்கப்படுகின்றன. இவை 40mm மற்றும் 44mm அளவுகளில் கிடைக்கின்றன. ஆப்பிள் ஸ்டோரில் புது பேண்ட்களின் விலை ரூ. 3900 ஆகும். இவை ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4, ஆப்பிள் வாட்ச் SE மற்றும் அதன்பின் வெளியான மாடல்களுக்கு கிடைக்கின்றன.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் 4 அந்நிறுவன வலைதளங்களில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4 மாடலுக்கான வலைபக்கம் சாம்சங் இந்தியா, ரஷ்யா மற்றும் கரீபியன் பகுதிகளுக்கான தளங்களில் துவங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த ஸ்மார்ட்வாட்ச் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. கேலக்ஸி வாட்ச் 4 குறித்து சாம்சங் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.

எனினும், புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை சாம்சங் விரைவில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறி டீசரை வெளியிட்டு இருந்தது. ஸ்மார்ட்வாட்ச் மட்டுமின்றி கேலக்ஸி பட்ஸ் 2 ரென்டர்களும் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி கேலக்ஸி வாட்ச் 4 மாடல் வட்ட வடிவ தோற்றம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை BIA சென்சார், இதய துடிப்பு சென்சார், SpO2 டிராக்கிங், 5ATM தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 40mm மற்றும் 44mm அளவுகளில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
கார்மின் நிறுவனத்தின் புதிய போர்-ரன்னர் 55 ஸ்மார்ட்வாட்ச் இரண்டு வாரங்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
கார்மின் நிறுவனம் எளிமையாக பயன்படுத்தக்கூடிய ஜிபிஎஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புது ஸ்மார்ட்வாட்ச் போர்-ரன்னர் 55 என அழைக்கப்படுகிறது. இதில் கார்மின் பேஸ் ப்ரோ, பில்ட்-இன் ஜிபிஎஸ், ஏராளமான ஆரோக்கியம் மற்றும் உடல் நலன் சார்ந்த அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கார்மின் போர்-ரன்னர் 55 குறைந்த எடை, மிக மெல்லிய டிசைன் கொண்டிருக்கிறது. இது உடல் நலன் மற்றும் ஆரோக்கியத்தை கண்டறிந்து கொள்ள உதவும் ஏராளமான சென்சார்களை கொண்டிருக்கிறது. இதை கொண்டு மன உளைச்சல் அளவுகளை கண்டறிய முடியும். இதுபோன்று மேலும் பல்வேறு உடல்நல விவரங்களை இந்த ஸ்மார்ட்வாட்ச் மூலம் அறிந்து கொள்ளலம்.

புதிய கார்மின் போர்-ரன்னர் 55 ஸ்மார்ட்வாட்ச் 2 வாரங்களுக்கு தேவையான பேக்கப் வழங்கும் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. ஜிபிஎஸ் மோடில் இயக்கும் போது இந்த ஸ்மார்ட்வாட்ச் 20 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.
கார்மின் போர்-ரன்னர் 55 ஸ்மார்ட்வாட்ச் பிளாக், அக்வா மற்றும் மான்டெரா கிரே நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 20,990 ஆகும்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 11 ஒஎஸ் பல்வேறு மாற்றங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 11 ஒஎஸ்-ஐ அறிமுகம் செய்தது. புது ஒஎஸ் மிக எளிமையான டிசைன், யு.ஐ. கொண்டிருக்கிறது. புதிதாக ஸ்னாப் லே-அவுட்கள், டெஸ்க்டாப், டெஸ்க்டாப்பில் இருந்தபடி மைக்ரோசாப்ட் டீம்ஸ்-இல் இணைவது போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

விண்டோஸ் 11 ஒஎஸ்-இல் ஸ்டார்ட் பட்டன் மற்றும் டாஸ்க்பார் நடுவில் உள்ளது. இதன் மூலம் இரு அம்சங்களையும் வேகமாக இயக்கலாம் என மைக்ரோசாப்ட் தெரிவித்து இருக்கிறது. கிளவுட் மற்றும் மைக்ரோசாப்ட் 365 கொண்டு ஸ்டார்ட் மெனுவில் ரீசன்ட் பைல்ஸ் காண்பிக்கப்படுகிறது.
புது விண்டோஸ் 11 ஒஎஸ் இன்ஸ்டால் செய்ய 1GHz அல்லது அதைவிட வேகமான பிராசஸர், அதிக கோர்கள் அடங்கிய 64-பிட் பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி அல்லது அதற்கும் அதிக ஸ்டோரேஜ், செக்யூர் பூட் வசதி கொண்ட சிஸ்டம் பர்ம்வேர், டைரக்ட் எக்ஸ் 12 அல்லது WDDM 2.0 டிரைவர் கொண்ட கிராபிக்ஸ், மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் உள்ளிட்டவை தேவைப்படும்.
சர்வதேச பங்குச் சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவன மதிப்பு புது உச்சத்தை தொட்டது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்வதேச பங்குச் சந்தை மதிப்பு 2 ட்ரில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,48,50,100 கோடிகளாக உயர்ந்துள்ளது. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் மட்டுமே பங்குச் சந்தையில் இத்தகைய மதிப்பை எட்டியது.
உலகளவில் 2 ட்ரில்லியன் டாலர்கள் மதிப்பை ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் என இரு நிறுவனங்கள் மட்டுமே எட்டியுள்ளன. முன்னதாக 2019 டிசம்பர் மாத வாக்கில் சவுதி அராம்கோ நிறுவனத்தின் மதிப்பு 1.9 ட்ரில்லியன் அளவு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

2014 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்ற சத்ய நாதெல்லா அந்நிறுவன வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு அழைத்து சென்றார். இவரது தலைமையில் கிளவுட்-கம்ப்யூட்டிங் மென்பொருள் விற்பனையில் உலகின் முன்னணி நிறுவனமாக மைக்ரோசாப்ட் உயர்ந்தது.
சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக சத்ய நாதெல்லா தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக மைக்ரோசாப்ட் தலைவராக இருந்த ஜான் தாம்ப்சன் தற்போது அந்நிறுவனத்தின் மூத்த இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
போல்ட் ஆடியோ நிறுவனத்தின் புதிய ப்ரோபேஸ் எஸ்கேப் இயர்போன் டூயல்டோன் நிறங்கள், மிக குறைந்த எடை கொண்டுள்ளது.
போல்ட் ஆடியோ நிறுவனம் இந்திய சந்தையில் ப்ரோபேஸ் எஸ்கேப் ப்ளூடூத் நெக்பேன்ட் இயர்போனை அறிமுகம் செய்தது. புதிய ப்ரோபேஸ் எஸ்கேப் மாடல் மிக குறைந்த எடை, டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. ப்ளூடூத் 5.0, ஆன்-டிவைஸ் கண்ட்ரோல் என பல்வேறு அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன் IPX5 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, இயர்பட்கள் ஒன்றோடு ஒன்று சிக்கிக் கொள்ளாமல் இருக்க காந்த சக்தி, காதுகளில் சவுகரியமாக பொருந்திக் கொள்ளும் வகையிலான டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது. மைக்ரோ யுஎஸ்பி மூலம் சார்ஜ் ஆகும் புதிய ப்ரோபேஸ் எஸ்கேப் ஒருமுறை சார்ஜ் செய்தால் பத்து மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.
இந்த நெக்பேண்ட் இயர்போன் முழுமையாக சார்ஜ் ஆக 1.2 மணி நேரங்களை எடுத்துக் கொள்கிறது. போல்ட் ஆடியோ ப்ரேபேஸ் எஸ்கேப் வயர்லெஸ் நெக்பேன்ட் இயர்போன் ரெட், புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 999 ஆகும். இது ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
கிராப்டான் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேம் பிளே ஸ்டோர் டவுன்லோட்களில் புது மைல்கல் எட்டியது.
கூகுள் பிளே ஸ்டோர் Early Access கட்டத்திலேயே பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா சுமார் 50 லட்சத்திற்கும் அதிக டவுன்லோட்களை கடந்துள்ளது. இந்திய பயனர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நோட்டிபிகேஷன் வாயிலாக ரிவார்ட் வழங்கி மைல்கல் விவரத்தை கிராப்டான் கொண்டாடியது.

ஜூன் 17 ஆம் தேதி சிலருக்கு ஓபன் பீட்டா முறையில் இந்த கேம் வழங்கப்பட்டது. பின் ஜூன் 18 அன்று அனைவரும் டவுன்லோட் செய்ய அனுமதிக்கப்பட்டது. அந்த வகையில் வெளியான சில நாட்களிலேயே இந்த கேம் சுமார் 50 லட்சத்திற்கும் அதிக டவுன்லோட்களை கடந்துள்ளது.
பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் தடை செய்யப்பட்ட பப்ஜி மொபைல் கேமின் இந்திய வேரியண்ட் ஆகும். டவுன்லோட்களில் புது மைல்கல் எட்டியதை தொடர்ந்து கிராப்டான் நிறுவனம் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா பிளேயர் ஒவ்வொருத்தருக்கும் கிளாசிக் கிரேட் கூப்பன் வழங்கி இருக்கிறது. புது கேமின் Early Access டவுன்லோட் செய்தவர்களுக்கு கிரேட் கூப்பன், இரண்டு EXP கார்டுகள், 2x BP கார்டு வழங்கப்படுகிறது.






