என் மலர்tooltip icon

    கணினி

    செய்தியாளர்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் ஐபோன்களும் பாதிக்கப்பட்டு இருப்பதாக வெளியான தகவல்களுக்கு ஆப்பிள் நிறுவனம் பதில் அளித்துள்ளது.


    இஸ்ரேல் நாட்டை சேர்ந்த NSO குழுமத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் செய்தியாளர்கள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான தகவல் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பெகாசஸ் ஸ்பைவேர் ஐபோன் மாடல்களையும் பாதித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 மாடல்களில் பயனருக்கே தெரியாமல் இந்த ஸ்பைவேர் நுழைந்துள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஐபோன்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறது என தகவல்கள் வெளியாகி வருகின்றன. பெகாசஸ் தாக்குதலில் பல ஐபோன்கள் குறிவைக்கப்பட்டன. எனினும், எத்தனை யூனிட்கள் வெற்றிகரமாக ஹேக் செய்யப்பட்டன என்ற விவரங்கள் வெளியாகவில்லை. 

     ஐபோன்

    இதுகுறித்து ஆப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவு தலைவர் இவான் ஸ்டிக் கூறும் போது, “இதுபோன்ற தாக்குதல்கள் மிகவும் சிக்கலானவை ஆகும். இவற்றை செயல்படுத்த அதிக செலவாகும். மேலும் இவை மிகவும் குறிப்பிடத்தக்க நபர்களை குறிவைத்தே நடத்தப்படுகின்றன. ஐபோன்களில் பாதுகாப்பு அம்சத்தை மேலும் பலப்படுத்துவதற்கான பணிகளில் ஆப்பிள் ஈடுபட்டு வருகிறது.”

    “உலகை வாழ்வதற்கு ஏற்ற சிறந்த பகுதியாக மாற்ற நினைக்கும் செய்தியாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான சைபர் தாக்குதல்களை ஆப்பிள் கடுமையாக கண்டிக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக பாதுகாப்பு விஷயத்தில் புதுமையை புகுத்துவதில் ஆப்பிள் சிறந்து விளங்குகிறது. மேலும் உலகின் பல்வேறு பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் உலகில் கிடைக்கும் நுகர்வோர் மொபைல் சாதனங்களில் ஐபோன் மிகவும் பாதுகாப்பானது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர். எங்களது சாதனங்களின் தரவுகளை பாதுகாக்கும் நோக்கில் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்,” என தெரிவித்தார். 
    செப் நிறுவனத்தின் புதிய பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.


    ஹூவாமி நிறுவனத்தின் துணை பிராண்டான செப் இந்தியாவில் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்து இருக்கிறது. செப் இசட் (Zepp Z) என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்வாட்ச் 50-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள், அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை செப் இசட் மாடலில் 1.39 இன்ச் 454x454 பிக்சல் கலர் டிஸ்ப்ளே, தொடுதிரை வசதி கொண்ட AMOLED பேனல் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வலதுபுறத்தில் மூன்று பட்டன்கள் உள்ளன.

     செப் இசட் ஸ்மார்ட்வாட்ச்

    மேலும் இதில் இதய துடிப்பை டிராக் செய்யும் சென்சார், உடலின் சுவாச அளவை கண்டறியும் சென்சார், மன அழுத்தம் மற்றும் உறக்கத்தை டிராக் செய்யும் சென்சார்கள் உள்ளன. இத்துடன் 90-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், ஜி.பி.எஸ்., 340 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இந்தியாவில் செப் இசட் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 25,999 ஆகும். இதன் விற்பனை ஜூலை 20 ஆம் தேதி துவங்குகிறது.  
    ஒன்பிளஸ் நிறுவனம் தனது Y சீரிஸ் மற்றும் U1S சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல்களின் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது.
     

    ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு Y சீரிஸ் டிவி மாடல்களை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து புதிய U1S ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது இரு டிவி சீரிஸ் விலையையும் ஒன்பிளஸ் உயர்த்தி இருக்கிறது. அதன்படி ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்கள் விலை ரூ. 7 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது.

     ஒன்பிளஸ் டிவி

    ஒன்பிளஸ் டிவி புது விலை விவரம்

    ஒன்பிளஸ் டிவி Y1 32 இன்ச் ரூ. 18,999
    ஒன்பிளஸ் டிவி Y1 40 இன்ச் ரூ. 26,499
    ஒன்பிளஸ் டிவி Y1 43 இன்ச் ரூ. 29,499
    ஒன்பிளஸ் டிவி U1S 50 இன்ச் ரூ. 46,999
    ஒன்பிளஸ் டிவி U1S 55 இன்ச் ரூ. 52,999
    ஒன்பிளஸ் டிவி U1S 65 இன்ச் ரூ. 68,999

    ஸ்மார்ட் டிவி மாடல்களின் புதிய விலை ஒன்பிளஸ் மற்றும் அமேசான் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது.

    வாட்ஸ்அப் நிறுவனம் ஒரே மாதத்தில் 20 லட்சத்திற்கும் அதிக அக்கவுண்ட்களை முடக்கி இருப்பதாக அறிவித்து உள்ளது.

    வாட்ஸ்அப் நிறுவனம் மே 15 முதல் ஜூன் 15, 2021 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 20 லட்சம் அக்கவுண்ட்களை முடக்கி இருப்பதாக தெரிவித்து உள்ளது. தவறு நடக்கும் முன் நடவடிக்கை எடுக்கும் முயற்சியாக இவ்வாறு செய்யப்பட்டது என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

    புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின் படி வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 20 லட்சத்து 11 ஆயிரம் அக்கவுண்ட்கள் முடக்கப்பட்டு இருக்கிறது,' என குறிப்பிடப்பட்டு உள்ளது. 

     கோப்புப்படம்

    மேலும், 'உலகளவில் ஒப்பிடும் போது இந்தியாவில் மட்டும் 25 சதவீத அக்கவுண்ட்கள் முடக்கப்பட்டு இருக்கிறது. தேவையற்ற அல்லது தவறு நடக்க காரணமாக அமையும் குறுந்தகவல்கள் பகிரப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே எங்களின் முக்கிய நோக்கம்,' என அந்நிறுவனம் தெரிவித்தது.

    விதிகளை மீறி அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் குறுந்தகவல்களை அனுப்பும் அக்கவுண்ட்களை கண்டறிய அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
    அமேஸ்பிட் GTR 2 LTE ஸ்மார்ட்வாட்ச் இதய துடிப்பு சென்சார் மற்றும் SpO2 மாணிட்டரிங் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

    அமேஸ்பிட் நிறுவனத்தின் புதிய GTR 2 LTE ஸ்மார்ட்வாட்ச் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புது ஸ்மார்ட்வாட்ச் இசிம் காலிங் வசதி கொண்டிருக்கிறது. 

     அமேஸ்பிட் GTR 2 LTE

    புதிய LTE தவிர மற்ற அம்சங்கள் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட அமேஸ்பிட் GTR 2 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய அமேஸ்பிட் GTR 2 LTE வட்ட வடிவ டையல், சிலிகான் ஸ்டிராப், இதய துடிப்பு சென்சார் மற்றும் SpO2 மாணிட்டரிங் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

    மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., என்.எப்.சி. போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய அமேஸ்பிட் GTR 2 LTE விலை 249 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 21,900  ஆகும். இதன் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களுக்கான மேக்சேஃப் பேட்டரி பேக்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்தது.


    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக்சேஃப் பேட்டரி பேக் (Magsafe Battery Pack) ஐபோன் 12 சீரிஸ் மாடல்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வழக்கமாக ஐபோன் மாடல்களுக்கென பேட்டரி கேஸ் சாதனத்தை ஆப்பிள் அறிமுகம் செய்யும். ஆனால் இம்முறை அறிமுகமாகி இருக்கும் மேக்சேஃப் பேட்டரி பேக் ஐபோனின் பின்புறம் காந்த சக்தி மூலம் ஒட்டிக்கொள்ளும்.

     மேக்சேஃப் பேட்டரி பேக்

    புதிய மேக்சேஃப் பேட்டரி பேக் ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்களுக்கு பொருந்தும். இதை கொண்டு ஐபோன்களின் பேட்டரி ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும். இந்த பேட்டரி பேக் ஐபோனின் பின்புறம் வைத்ததும், ஐபோன் சார்ஜ் ஆக துவங்கி விடும்.

    இதனை சார்ஜ் செய்வதற்கான கேபிள் வழங்கப்படவில்லை. இதனால் ஐபோனிற்கு கொடுக்கப்பட்ட கேபிள் கொண்டு மேக்சேஃப் பேட்டரி பேக் சார்ஜ் செய்து கொள்ள வேண்டும். மேக்சேஃப் பேட்டரி பேக் ஐபோனினை 5வாட் திறன் கொண்டு சார்ஜ்செய்யும். இந்தியாவில் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களுக்கான ஆப்பிள் மேக்சேஃப் பேட்டரி பேக் விலை ரூ. 10,990 ஆகும்.
    சூப்பர் மேரியோ 64 கேம் கன்சோல் அமெரிக்காவை சேர்ந்த ஹெரிடேஜ் ஆக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் ஏலம் விடப்பட்டது.


    அமெரிக்காவை சேர்ந்த ஏல நிறுவனமான ஹெரிடேஜ் ஆக்ஷன்ஸ், திறக்கப்படாத நிலையில் இருந்த சூப்பர் மேரியோ 64 கேமினை ஏலத்தில் விற்பனை செய்துள்ளது. இந்த சூப்பர் மேரியோ 64 கேமினை ஒருவர் 15.6 லட்சம் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 11,62,00,500 கொடுத்து வாங்கி உள்ளார். 

    திறக்கப்படாத நிலையில் இருந்ததால், இந்த கேம் சேகரிக்கும் பொருளாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் நின்டென்டோவின் பல கேம்களுக்கு ஏல விற்பனையில் நல்ல விலை கிடைத்து இருக்கிறது. நின்டென்டோ கேம்களான லெஜண்ட் ஆப் செல்டா, பைனல் பேண்டஸி 3 மற்றும் சூப்பர் மேரியோ ப்ரோஸ் போன்றவை முந்தைய விற்பனைகளில் கணிசமான தொகைக்கு விற்கப்பட்டுள்ளன.

     சூப்பர் மேரியோ 64

    ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட கன்சோல் உற்பத்தி ஆலையில் இருந்து வெளியான சமயத்தில் இருந்த நிலையிலேயே தற்போதும் இருக்கிறது. என்64 கன்சோல் நின்டென்டோ நிறுவனத்திற்கு பெரும் வெற்றிகரமான ஒன்றாக அமைந்தது. இது பல லட்சம் கேமர்களை கவர்ந்த கன்சோல் ஆகும். 

    முன்னதாக லெஜண்ட் ஆப் செல்டா கேமினை ஒருவர் 8,70,000 டாலர்கள் கொடுத்து வாங்கி இருந்தார். இதுவே, அதிக தொகைக்கு விற்பனையான கேமாக இருந்து வந்தது. இதற்கு முன் சூப்பர் மேரியோ ப்ரோஸ் கேம் 6,60,000 டாலர்களுக்கு விற்பனையானது அதிகபட்ச தொகையாக இருந்தது.

    திறக்கப்படாத நிலையில் இருக்கும் சூப்பர் மேரியோ 64 கேமினை இத்தனை கோடிகளுக்கு வாங்கியவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.  
    நத்திங் நிறுவனத்தின் முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் இந்திய விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    லண்டனை சேர்ந்த நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் தனது முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை ரூ. 5,999 என அறிவித்து இருக்கிறது. இது ஐரோப்பா மற்றும் ப்ரிட்டன் சந்தை விலையை விட குறைவு ஆகும். 

    புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் தலைசிறந்த ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை கொண்டிருக்கும் என நத்திங் தெரிவித்து உள்ளது. மேலும் புதிய இயர்பட்ஸ் பற்றிய சிறு வீடியோக்களை நத்திங் வெளியிட்டு உள்ளது.

     நத்திங் இயர் 1

    இந்த அம்சத்திற்கென மூன்று ஹை டெ_ஃபனிஷன் மைக், டிரான்ஸ்பேரன்ட் பாகங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. புது இயர்பட்ஸ் பிரீமியம் பில்டு, சிறப்பான அனுபவம் கொண்டிருக்கும். இத்துடன் பல்வேறு அதிநவீன அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. 

    புதிய நத்திங் இயர் 1 இயர்பட்ஸ் ஜூலை 27 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. இது ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    வாட்ஸ்அப் உருவாக்கி வரும் புது அம்சம் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை அனுப்பும் அம்சத்தில் புதிய மாற்றம் செய்யப்படுகிறது. இன்னும் முழுமை பெறாத நிலையில், இந்த அம்சம் முதற்கட்டமாக பீட்டா பதிப்பில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் செயலியில் புகைப்படங்களை அனுப்பும் போது மூன்று ஆப்ஷன்களை வழங்குகிறது.

    இதுவரை வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் புகைப்படங்களின் தரம் தானாக குறைக்கப்பட்டு விடும். விரைவில் இந்த நிலை மாற இருக்கிறது. வாட்ஸ்அப் பீட்டா v2.21.14.16 பதிப்பில் இந்த புது அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சத்தை பயனர்கள் Storage -- Data மெனுவில் உள்ள Photo Upload Quality ஆப்ஷன்களை க்ளிக் செய்து இயக்க முடியும். 

    முந்தைய ஆப்ஷன்களை க்ளிக் செய்ததும் ஆட்டோ, பெஸ்ட் குவாலிட்டி மற்றும் டேட்டா சேவர் என மூன்று தரங்களில் புகைப்படங்களை அனுப்ப வாட்ஸ்அப் வழி செய்கிறது. 

     வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட்

    ஆட்டோ (Auto): ஒவ்வொரு புகைப்படத்திற்கும் சிறந்த தேர்வை வாட்ஸ்அப் கண்டறிந்து அனுப்பும் 

    பெஸ்ட் குவாலிட்டி (Best Quality): அதிக தரமுள்ள புகைப்படத்தை வாட்ஸ்அப் அனுப்பும்

    டேட்டா சேவர் (data saver): புகைப்படங்களின் அளவை குறைத்து, அதிவேகமாக அனுப்பும். இவ்வாறு செய்யும் போது புகைப்படத்தின் தரம் குறைந்துவிடும்.

    அதிக தரமுள்ள புகைப்படங்களை அனுப்புவது மட்டுமின்றி, வீடியோக்களிலும் இதேபோன்ற அம்சத்தை முந்தைய பீட்டாவில் வாட்ஸ்அப் வழங்கி இருந்தது. இரு அம்சங்களும் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் இவை வாட்ஸ்அப் ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும் என தெரிகிறது.
    இந்தியாவில் புதிய தனியுரிமை கொள்கைகளை அமல்படுத்துவது குறித்து வாட்ஸ்அப் விளக்கம் அளித்துள்ளது.


    இந்தியாவில் தனி நபர் தகவல் பாதுகாப்பு மசோதா சட்டமாகும் வரை புதிய தனியுரிமை கொள்கைகளை அமல்படுத்த மாட்டோம் என வாட்ஸ்அப் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது. வாட்ஸ்அப் நிறுவனம் திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கை நாட்டு மக்களிடையே பெரும் எதிர்ப்பை பெற்றது.

     கோப்புப்படம்

    வாட்ஸ்அப் தனது புதிய தனியுரிமை கொள்கைகளை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில் வாட்ஸ்அப் செயல்பாடுகளை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் வாட்ஸ்அப் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, `வாட்ஸ்அப் தனது புதிய கொள்கைகளை தற்போதைக்கு அமல்படுத்தாது,' என தெரிவித்து இருக்கிறார்.

    `இதுதவிர புது கொள்கைகளுக்கு அனுமதி வழங்காதவர்களும் செயலியின் அனைத்து அம்சங்களையும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து பயன்படுத்த முடியும்,' என வாட்ஸ்அப் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் தெரிவித்து உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
    சோனி நிறுவனத்தின் புதிய SRS-NB10 நெக்பேண்ட் ஸ்பீக்கர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    சோனி நிறுவனம் புதிதாக SRS-NB10 வயர்லெஸ் நெக்பேண்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்து இருக்கிறது. இது நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள ஸ்பீக்கர் யூனிட் மேல்புறமாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. பேசிவ் ரேடியேட்டர் மூலம் bass பூஸ்ட் செய்யப்படுகிறது.

     சோனி SRS-NB10 நெக்பேண்ட் ஸ்பீக்கர்

    இத்துடன் ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி, வாய்ஸ் பிக்கப் தொழில்நுட்பம் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த நெக்பேண்ட் ஸ்பீக்கரை ஒரே சமயத்தில் இரு சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்தலாம். இத்துடன் பிரத்யேக மியூட், வால்யூம் மற்றும் பவர் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சோனி SRS-NB10 நெக்பேண்ட் ஸ்பீக்கர் 113 கிராம் எடை கொண்டுள்ளது. இதில் உள்ள பேட்டரி அதிகபட்சம் 20 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. இத்துடன் யுஎஸ்பி டைப் சி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. புதிய சோனி SRS-NB10 விலை 149.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 11,203 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் மாதம் துவங்குகிறது.
    ஒன்பிளஸ் வாட்ச் கோபால்ட் லிமிடெட் எடிஷன் மாடலின் இந்திய விற்பனை ஜூலை 16 ஆம் தேதி துவங்குகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் ஒன்பிளஸ் வாட்ச் கோபால்ட் லிமிடெட் எடிஷன் மாடலையும் ஒன்பிளஸ் அறிமுகம் செய்தது. தற்போது லிமிடெட் எடிஷன் மாடல் இந்திய விற்பனை ஜூலை 16 ஆம் தேதி துவங்கும் என ஒன்பிளஸ் அறிவித்துள்ளது.

    புதிய லிமிடெட் எடிஷன் மாடலுக்கான முன்பதிவு ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளம், ஒன்பிளஸ் ஸ்டோர் செயலியில் ஜூலை 7 முதல் ஜூலை 10 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 1000 ஆகும். முன்பதிவு செய்வோர் ஜூலை 12 முதல் ஜூலை 15 ஆம் தேதிக்குள் மீதி தொகையை செலுத்த வேண்டும்.

     ஒன்பிளஸ் வாட்ச் கோபால்ட் லிமிடெட் எடிஷன்

    தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு மற்றும் மாத தவணை முறை போன்ற சலுகைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை செப்டம்பர் 15 வரை வழங்கப்படுகிறது. 

    ஒன்பிளஸ் வாட்ச் கோபால்ட் லிமிடெட் எடிஷன் மாடலில் 1.39 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, SpO2 மாணிட்டரிங், GPS, 5ATM+ IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, 4 ஜிபி மெமரி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாட்ச் கோபால்ட் அலாய் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    ×