என் மலர்
கணினி
சியோமி நிறுவனத்தின் புதிய எம்.ஐ. ஸ்மார்ட் டிவி ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
சியோமி நிறுவனம் புதிய எம்.ஐ. டிவி 4C மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய டிவி-யில் 32 இன்ச் ஹெச்டி ரெடி அல்ட்ரா-பிரைட் ஸ்கிரீன், விவிட் பிக்ச்சர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இதில் பேட்ச் வால் டீப் லேர்னிங் ஏ.ஐ. தொழில்நுட்பம் நாளடைவில் பயனர் விரும்பும் நிகழ்ச்சிகளை பரிந்துரை செய்கிறது.

சியோமி எம்.ஐ. டிவி 4C 32 இன்ச் அம்சங்கள்
- 32 இன்ச் 1366x768 பிக்சல் HD LED டிஸ்ப்ளே, விவிட் பிக்ச்சர் என்ஜின்
- 1.5GHz குவாட்-கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ்-A53 பிராசஸர்
- மாலி-450 MP3 GPU
- 1 ஜிபி ரேம்
- 8 ஜிபி eMMC மெமரி
- MIUI டிவி சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்
- எம்.ஐ. குவிக் வேக்
- வைபை 802.11 b/g/n (2.4 GHz), ப்ளூடூத் 4.2
- 3 x HDMI, AV, USB 2.0 x 2, ஈத்தர்நெட், S/PDIF போர்ட், AUX போர்ட்
- 2 x 10W ஸ்பீக்கர், DTS-HD
சியோமி எம்.ஐ. டிவி 4C 32 இன்ச் மாடல் ரூ. 15,999 எனும் அறிமுக விலையில் ப்ளிப்கார்ட், எம்.ஐ. வலைதளம் மற்றும் எம்.ஐ. ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.
ஜூன் மாதம் வாட்ஸ்அப் பீட்டாவில் அறிமுகமான அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலியில் வியூ ஒன்ஸ் (view once) வரும் நாட்களில் அனைவருக்கும் வெளியிடப்பட இருக்கிறது. முன்னதாக இந்த அம்சம் ஜூன் மாத வாக்கில் செயலியின் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டது. இந்த அம்சம் பயன்படுத்தும் போது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தானாக மறைந்துவிடும்.

புது அப்டேட் விவரங்கள் பேஸ்புக்கின் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் மற்ற குறுந்தகவல்களை போன்றே வியூ ஒன்ஸ் மீடியாவும் முழுமையான என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படுகிறது.
இந்த அம்சத்தின் கீழ் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஒன்-டைம் (one-time) ஐகான் மூலம் குறிப்பிடப்படுகிறது. புகைப்படம் அல்லது வீடியோவை பார்த்ததும், அது “opened” என குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் வாட்ஸ்அப் சாட்களில் ஏற்படும் குழப்பம் தீர்க்கப்படுகிறது.
ரெட்மிபுக் ப்ரோ மற்றும் ரெட்மிபுக் E Learning எடிஷன் லேப்டாப்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்ம்புக் ப்ரோ மற்றும் ரெட்மிபுக் E Learning எடிஷன் லேப்டாப்களை அறிமுகம் செய்தது. புதிய லேப்டாப்களில் ரெட்மிபுக் ப்ரோ விலை உயர்ந்த மாடல் ஆகும். ரெட்மிபுக் ப்ரோ 1.8 கிலோ எடையில், 19.9mm அளவு தடிமனாக இருக்கிறது.
ரெட்மிபுக் ப்ரோ மாடலில் 11th Gen இன்டெல் கோர் i5 பிராசஸர், இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. மெமரியை பொருத்தவரை 8 ஜிபி ரேம், 512 ஜிபி எஸ்.எஸ்.டி. ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு உள்ளது. இதில் 3.5mm ஆடியோ ஜாக், SD கார்டு ஸ்லாட், USB 2.0, LAN, HDMI, இரண்டு USB 3.2 மற்றும் சார்ஜிங் போர்ட்கள் உள்ளன.
கனெக்டிவிட்டிக்கு வைபை 5, ப்ளூடூத் 5 வழங்கப்பட்டுள்ளன. ரெட்மிபுக் ப்ரோ மாடலில் 46Whr பேட்டரி உள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. இத்துடன் 65வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. மேலும் விண்டோஸ் பிரெசிஷன் டிரைவர், 720 பிக்சல் வெப்கேமரா, 100 cm-சதுர அளவில் டிராப்க்பேட் உள்ளது.

ரெட்மிபுக் E Learning எடிஷனில் 15.6 இன்ச் FHD டிஸ்ப்ளே, 11th Gen இன்டெல் கோர் i3 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மற்றும் 512 ஜிபி எஸ்.எஸ்.டி. வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த லேப்டாப் விண்டோஸ் 10 ஹோம் ஒஎஸ் கொண்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தல் 10 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.
இந்தியாவில் ரெட்மிபுக் ப்ரோ 8 ஜிபி + 512 ஜிபி விலை ரூ. 49,999 என்றும், ரெட்மிபுக் E Learning எடிஷன் 8 ஜிபி + 256 ஜிபி விலை ரூ. 41,999 என்றும், ரெட்மிபுக் E Learning எடிஷன் 8 ஜிபி + 512 ஜிபி விலை ரூ. 44,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அறிமுக சலுகையாக புதிய லேப்டாப்கள் முறையே ரூ. 46,999, ரூ. 39,499 மற்றும் ரூ. 42,499 எனும் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. புதிய ரெட்மிபுக் ப்ரோ மற்றும் ரெட்மிபுக் E Learning எடிஷன் ப்ளிப்கார்ட், எம்.ஐ. ஹோம் மற்றும் எம்.ஐ. வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. விற்பனை ஆகஸ்ட் 6 மதியம் 12 மணிக்கு துவங்குகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ மட்டும் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மே மாதத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது. ஜியோ தவிர ஏர்டெல், வி மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.
ஏர்டெல் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதைத் தொடர்ந்து வி மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களும் மற்ற நிறுவன சேவைக்கு மாறி இருக்கின்றனர். ஜியோவின் மாதாந்திர வளர்ச்சி 0.83 சதவீதமாக இருக்கிறது. கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்திலும் ஜியோ மட்டுமே புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது.

மே 2021 வரையிலான காலக்கட்டத்தில் வயர்லெஸ் சந்தாதாரர் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோவின் பங்கு 36.15 சதவீதமாக இருக்கிறது. ஜியோவின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தற்போது 43.12 கோடியாக இருக்கிறது. பாரதி ஏர்டெல் நிறுவனம் சுமார் 46 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.
இதே போன்று வி நிறுவனம் சுமார் 42 லட்சம், பி.எஸ்.என்.எல். நிறுவனம் 8.8 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இருநிறுவனங்கள் டெலிகாம் சந்தாதாரர்கள் பிரிவில் முறையே 23.59 சதவீதம் மற்றும் 9.89 சதவீதமும் பெற்றுள்ளன. இந்த விவரங்கள் டிராய் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
இன்பினிக்ஸ் புதிய 40-இன்ச் FHD ஸ்மார்ட் டிவி மாடலில் 24 வாட் பாக்ஸ் ஸ்பீக்கர் மற்றும் டால்பி ஆடியோ தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.
இன்பினிக்ஸ் நிறுவனம் X1 சீரிசில் 40 இன்ச் FHD ஸ்மார்ட் டிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக X2 சீரிசில் 32 இன்ச் HD மற்றும் 43 இன்ச் FHD வேரியண்ட்களை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்தது.
புதிய FHD ஸ்மார்ட் டிவி மாடலில் மெல்லிய பெசல்கள், அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, மெல்லிய டிசைன், இன்பினிக்ஸ் எபிக் 2.0 பிக்ச்சர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது டிவியின் ஒட்டுமொத்த பிக்ச்சர் தரத்தை மேம்படுத்தி தலைசிறந்த அனுபவத்தை வழங்குகிறது.

இன்பினிக்ஸ் X1 40 இன்ச் அம்சங்கள்
- 40 இன்ச் 1920x1080 பிக்சல் FHD டிஸ்ப்ளே
- இனிபினிக்ஸ் EPIC 2.0 பிக்ச்சர் என்ஜின், லோ புளூ லைட் எமிஷன்
- குவாட்கோர் மீடியாடெக் 6683 பிராசஸர்
- மாலி 470 MP3 GPU
- 1 ஜிபி DDR4 ரேம்
- 8 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0
- பில்ட்-இன் குரோம்காஸ்ட், கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் பிளே ஸ்டோர்
- வைபை Wi-Fi 802.11 b/g/n (2.4 GHz), ப்ளூடூத் 5.0
- 3 x HDMI, AV, USB 2.0 x 2, ஈத்தர்நெட், ஆப்டிக்கல் அவுட்புட், மினி AV
- ப்ளூடூத் ரிமோட்
- 24 வாட் பாக்ஸ் ஸ்பீக்கர்
- டால்பி ஆடியோ
இன்பினிக்ஸ் X1 40 இன்ச் FHD மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இதன் அறிமுக விலை ரூ. 19,999 ஆகும்.
சோனியின் புதிய பிளே ஸ்டேஷன் 5 கேமிங் கன்சோல் அதிவேகமாக விற்பனையாகும் பிளே ஸ்டேஷன் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.
சோனி கார்ப்பரேஷன் தனது பிளே ஸ்டேஷன் 5 கன்சோல் உலகளாவிய விற்பனையில் ஒரு கோடி யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. மேலும் அதிவேக விற்பனையாகும் பிளே ஸ்டேஷன் கன்சோலாகவும் பிளே ஸ்டேஷன் 5 இருக்கிறது.
முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 45 லட்சம் பிளே ஸ்டேஷன் 5 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. பின் 2021 மார்ச் மாத வாக்கில் சுமார் 78 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. மொத்தத்தில் ஒரு கோடி பிளே ஸ்டேஷன் 5 யூனிட்கள் எட்டு மாதங்களில் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.

முந்தைய பிளே ஸ்டேஷன் 4 கன்சோல் விற்பனையில் பத்து கோடி யூனிட்களை ஆறு ஆண்டுகளில் எட்டியது. தற்போதைய வரவேற்பை பார்க்கும் போது, புதிய பிளே ஸ்டேஷன் 5 இந்த மைல்கல்லை முன்கூட்டியே எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வன்பொருள் பொறியியல் நிர்வாக குழு மற்றும் சர்வதேச வியாபார நிர்வாக குழுவின் ஒருங்கிணைந்த முயற்சி காரணமாகவே மிக குறுகிய காலக்கட்டத்தில் இத்தனை யூனிட்களை விற்பனை மற்றும் வினியோகம் செய்ய முடிந்தது என சோனி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் செயலியின் ரீல்ஸ் அம்சத்தில் அசத்தலான புது மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் ரீல்ஸ் அம்சத்தை அதிகளவில் பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர். இதன் காரணமாக ரீல்ஸ் அம்சத்தின் வீடியோ கால அளவை 60 நொடிகளாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
Reels. up to 60 secs. starting today. pic.twitter.com/pKWIqtoXU2
— Instagram (@instagram) July 27, 2021
இத்துடன் ஆடியோவை எழுத்துக்களாக மாற்றும் கேப்ஷன் ஸ்டிக்கர் அம்சமும் இன்ஸ்டாவில் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக கேப்ஷன் ஸ்டிக்கர் அம்சம் பரவலாக ஆங்கிலம் பயன்படுத்தப்படும் வெளிநாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அப்டேட்டில் இந்த அம்சம் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ரீல்ஸ் அம்சத்தில் முன்னதாக வீடியோ கால அளவு 30 நொடிகளாக இருந்துவந்தது. ரீல்ஸ் அம்சத்தில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றம் இன்ஸ்டாகிராமின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது.
போட் நிறுவனத்தின் ஏர்டோப்ஸ் 501 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் பீஸ்ட் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.
இந்தியாவை சேர்ந்த ஆடியோ சாதனங்கள் விற்பனையாளரான போட், ஏர்டோப்ஸ் 501 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. பெயருக்கு ஏற்றார்போல் இந்த இயர்பட்ஸ் ஹைப்ரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, பீஸ்ட் தொழில்நுட்பம், இன்ஸ்டா வேக் அன்ட் பேர் தொழில்நுட்பம், ப்ளூடூத் 5.2 போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
இதில் உள்ள 8 எம்.எம். டிரைவர்கள் போட் சிக்னேச்சர் சவுண்ட், ஹைப்ரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் வெளிப்புற சத்தத்தை 30 டிபி வரை குறைக்கிறது. இத்துடன் போட் நிறுவனத்தின் (Bionic Engine And Sonic Technology - BEAST) பீஸ்ட் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இது ஆடியோ மற்றும் வீடியோ சீராக இயங்க வழி செய்கிறது.

போட் ஏர்டோப்ஸ் 501 மாடலில் IPX4 தர ரேட்டிங், டச் கண்ட்ரோல், ஒருமுறை சார்ஜ் செய்தால் 5 மணி நேரத்திற்கான பேக்கப், யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங், ASAP சார்ஜ் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ASAP சார்ஜிங் 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 60 நிமிடத்திற்கான பிளேபேக் வழங்குகிறது.
இந்தியாவில் போட் ஏர்டோப்ஸ் 501 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை ரூ. 2499 ஆகும். இது அமேசான் மற்றும் போட் வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
லெனோவோ நிறுவனத்தின் டேப் பி11 டேப்லெட் இந்தியாவில் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
லெனோவோ நிறுவனத்தின் டேப் பி11 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த மாடல் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய லெனோவோ டேப் பி11 மாடலில் 11 இன்ச் WUXGA+ 2K தொடுதிரை வசதி கொண்ட IPS ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.
மேலும் புதிய லெனோவோ டேப்லெட் மாடலில் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 4 ஜிபி ரேம், 8 எம்பி செல்பி கேமரா, 13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிலாஷ், குவாட் ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் வசதி மற்றும் 12 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் பேட்டரி உள்ளது.

லெனோவோ டேப் பி11 அம்சங்கள்
- 11 இன்ச் 2000x1200 பிக்சல் IPS LCD ஸ்கிரீன்
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 4 ஜிபி LPDDR4 ரேம்
- 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்
- 8 எம்பி செல்பி கேமரா
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
- குவாட் ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
- 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத் 5.1
- யு.எஸ்.பி. டைப் சி
- 7500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 20 வாட் பாஸ்ட் சார்ஜிங்
லெனோவோ டேப் பி11 மாடல் பிளாட்டினம் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.24,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய லெனோவோ டேப்லெட் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏர்பாட்ஸ் 3 மாடல் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புதிய ஐபோன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இம்முறை ஐபோன்கள் மட்டுமின்றி ஏர்பாட்ஸ் 3 அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஏர்பாட்ஸ் 3 பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. மேலும் புதிய ஏர்பாட்ஸ் உதிரி பாகங்கள் ஏற்கனவே வினியோகம் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
அந்த வகையில் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களுடன் ஏர்பாட்ஸ் 3 மாடலும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஏர்பாட்ஸ் 3 விலையும் மிக அதிகமாக நிர்ணயம் செய்யப்படாது என்றே கூறப்படுகிறது. ஐபோன் 13 சீரிஸ் மாடல்களுடன் ஹெட்போன்கள் வழங்கப்படாது என்பதால், ஏர்பாட்ஸ் 3 விற்பனையில் நல்ல வரவேற்பை பெறும் என தெரிகிறது.

தோற்றத்தில் ஏர்பாட்ஸ் 3 முந்தைய தலைமுறை மாடலை போன்றே காட்சியளிக்கிறது. புதிய ஏர்பாட்ஸ் அளவில் சிறிய ஸ்டெம் பகுதியுடன், சென்சார் மற்றும் மைக்ரோபோன்களை கொண்டிருக்கிறது. தற்போதைய தகவல்களின்படி ஏர்பாட்ஸ் 3 வெள்ளை நிறத்தில் கிடைக்கும் என தெரிகிறது. ஏர்பாட்ஸ் 3 புதிய சிப்செட் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை ஏர்பாட்ஸ் 3 மாடலில் ஆப்பிள் மியூசிக் லாஸ்லெஸ் ஆடியோ, முந்தைய மாடல்களை விட சிறப்பான பேட்டரி பேக்கப் போன்றவை வழங்கப்படலாம்.
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் வாட்ச் 2 மற்றும் வாட்ச் 2 ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
ரியல்மி நிறுவனத்தின் வாட்ச் 2 மற்றும் வாட்ச் 2 ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கின்றன. இரு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களும் LCD ஸ்கிரீன், இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டரிங், ஆக்டிவிட்டி டிராக்கிங், ஸ்லீப் மாணிட்டரிங் மற்றும் 90-க்கும் அதிக ஸ்போர்ட் மோட்களை கொண்டிருக்கின்றன.
ரியல்மி வாட்ச் 2 ப்ரோ மாடலில் ஜி.பி.எஸ். வசதி, 390 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி 14 நாட்களுக்கான பேக்கப் வழங்குகிறது.

ரியல்மி வாட்ச் 2 அம்சங்கள்
- 1.4 இன்ச் 320x320 பிக்சல் LCD ஸ்கிரீன்
- 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 3-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்
- இதய துடிப்பு சென்சார், ரோட்டார் வைப்ரேஷன் மோட்டார்
- ப்ளூடூத் 5.0
- 90 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார்
- நோட்டிபிகேஷன்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP68)
- 315 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ரியல்மி வாட்ச் 2 ப்ரோ அம்சங்கள்
- 1.75 இன்ச் 320x385 பிக்சல் LCD ஸ்கிரீன்
- 2.5D ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் கிளாஸ்
- 3-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்
- இதய துடிப்பு சென்சார்
- ப்ளூடூத் 5.0
- டூயல் ஜி.பி.எஸ்.
- 90 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார்
- நோட்டிபிகேஷன்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP68)
- 390 எம்.ஏ.ஹெச். பேட்டரி
ரியல்மி வாட்ச் 2 பிளாக் நிறத்திலும் வாட்ச் 2 ப்ரோ ஸ்பேஸ் கிரே மற்றும் மெட்டாலிக் சில்வர் நிறங்களிலும் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 3,499 மற்றும் ரூ. 4,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரியல்மி வாட்ச் 2 மட்டும் ரூ. 2999 சிறப்பு விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
டிசோ பிராண்டு வயர்லெஸ் இயர்போன்களின் முன்பதிவு ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.
ரியல்மியின் டிசோ பிராண்டு இரு இயர்பட்கள் - டிசோ வயர்லெஸ் நெக்பேண்ட் மற்றும் டிசோ கோபாட்ஸ் டி இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. டிசோ வயர்லெஸ் நெக்பேண்ட் விலை ரூ. 1499, டிசோ கோபாட்ஸ் டி ரூ. 1599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது இரு இயர்போன்களின் முன்பதிவு ரூ. 1 கட்டணத்தில் நடைபெறுகிறது.

ப்ளிப்கார்ட் தளத்தில் இரு டிசோ இயர்போன்களின் முன்பதிவும் ஜூலை 21 ஆம் தேதி துவங்கி ஜூலை 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முன்பதிவில் ரூ. 1 செலுத்தி மீதமுள்ள தொகையை பின்னர் செலுத்தி இயர்போன்களை வாங்கிக் கொள்ளலாம். ப்ளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை காரணமாக டிசோ இயர்போன்களுக்கு ரூ. 200 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
டிசோ நெக்பேண்ட் பிளாக், புளூ, ஆரஞ்சு மற்றும் கிரீன் போன்ற நிறங்களிலும், கோபாட்ஸ் டி இயர்பட்ஸ் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. டிசோ வயர்லெஸ் நெக்பேண்ட் 11.2 எம்எம் பேஸ் பூஸ்ட் டிரைவர்களை கொண்டிருக்கிறது. இத்துடன் 150 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.






