என் மலர்tooltip icon

    கணினி

    சவுண்ட்கோர் ஆர்500 வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போன் வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.


    ஆன்கர் நிறுவனத்தின் சவுண்ட்கோர் இந்தியாவில் புதிய வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போனினை அறிமுகம் செய்தது. சவுண்ட்கோர் ஆர்500 என அழைக்கப்படும் புதிய நெக்பேண்ட் இயர்போன் விலை ரூ. 1,399 ஆகும்.

    குறைந்த எடை, வளையும் தன்மை, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, சிறந்த பேஸ் அவுட்புட் போன்ற அம்சங்களை சவுண்ட்கோர் ஆர்500 கொண்டுள்ளது. இந்த நெக்பேண்ட் இயர்போன் 195 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது முழு சார்ஜ் செய்தால் 20 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. 

     சவுண்ட்கோர் ஆர்500

    இத்துடன் யு.எஸ்.பி. டைப் சி பாஸ்ட் சார்ஜிங், ப்ளூடூத் 5 போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் உள்ளன. இதன் பாஸ்ட் சார்ஜிங் அம்சம் பத்து நிமிடம் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. இந்த இயர்போனில் ஏ.ஐ. சார்ந்த மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இவை சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. சவுண்ட்கோர் ஆர்500 நெக்பேண்ட் இயர்போன் இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் சர்வதேச வெளியீடு மற்றும் விலை பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    ரியல்மி நிறுவனத்தின் முதல் லேப்டாப் இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.


    ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி புக் ஸ்லிம் லேப்டாப் இந்தியாவில் அறிமுகமானது. ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போன்களுடன் புதிய லேப்டாப் மாடலையும் ரியல்மி அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த லேப்டாப் அசத்தலான டிசைன் கொண்டிருக்கிறது. 

    மேலும் மெட்டல் கொண்டு உருவாக்கப்பட்டு இருப்பதால், பிரீமியம் தோற்றம் மற்றும் அனுபவத்தை வழங்குகிறது. 2கே டிஸ்ப்ளே, 11-ம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் என பல்வேறு அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

     ரியல்மி புக் ஸ்லிம்

    ரியல்மி புக் ஸ்லிம் விலை விவரம்:

    ரியல்மி புக் ஸ்லிம் ஐ3 (8ஜிபி+256ஜிபி) ரூ. 46,999
    ரியல்மி புக் ஸ்லிம் ஐ5 (8ஜிபி+512ஜிபி) ரூ. 59,999
     
    இந்திய சந்தையில் ரியல்மி புக் ஸ்லிம் லேப்டாப் ரூ. 44,999 மற்றும் ரூ. 56,999 எனும் அறிமுக விலையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இவற்றின் விற்பனை ப்ளிப்கார்ட், ரியல்மி மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி துவங்குகிறது.

    நத்திங் நிறுவனத்தின் முதல் வயர்லெஸ் இயர்பட்ஸ் அடுத்த விற்பனை தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.


    நத்திங் நிறுவனத்தின் இயர் 1 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வந்தது. ரூ. 5999 விலையில் அறிமுகமான நத்திங் இயர் 1 இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டது.



    இந்திய சந்தையில் நத்திங் இயர் 1 ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்டது. இன்றைய விற்பனை துவங்கிய 2 நிமிடங்களில் சுமார் 4800-க்கும் அதிக யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டதாக நத்திங் தெரிவித்துள்ளது. 

     ப்ளிப்கார்ட் ஸ்கிரீன்ஷாட்

    ப்ளிப்கார்ட் விற்பனையில் நத்திங் இயர் 1 மாடலுக்கு கேஷ்பேக், தள்ளுபடி, வங்கி சலுகை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. முதல் விற்பனை நிறைவுற்ற நிலையில், நத்திங் இயர் 1 மாடலுக்கான அடுத்த விற்பனை தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

    ரியல்மி நிறுவனத்தின் முதல் லேப்டாப் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் இந்தியா மற்றும் ஐரோப்பாவில் முதல் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்திய சந்தையில் புதிய ரியல்மி புக் ஸ்லிம் லேப்டாப் துவக்க விலை ரூ. 55 ஆயிரம் வரை இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

     ரியல்மி புக் ஸ்லிம்

    ரியல்மி புக் ஸ்லிம் லேப்டாப் புதிய விண்டோஸ் ஓ.எஸ்., 3:2 ஸ்கிரீன் ரேஷியோ 2160x1440 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இந்த லேப்டாப் 55Wh பேட்டரி, 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு யு.எஸ்.பி. டைப் சி போர்ட், யு.எஸ்.பி. 3.2 போர்ட், 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் வழங்கப்படுகிறது. 

    முந்தைய தகவல்களில் இந்த லேப்டாப் 11-ம் தலைமுறை பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. தற்போதைய டீசர்களின்படி புதிய ரியல்மி லேப்டாப் ஐ5 சி.பி.யு. கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. ரியல்மி புக் ஸ்லிம் மாடலில் 14 இன்ச் டிஸ்ப்ளே, அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி எஸ்.எஸ்.டி. வழங்கப்படுகிறது. 

    ரியல்மி நிறுவனத்தின் புதிய லேப்டாப் சீரிஸ் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் தனது முதல் லேப்டாப் மாடலை ரியல்மி ஜிடி மற்றும் ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்ய இருக்கிறது. ரியல்மியின் புதிய சாதனங்கள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி அறிமுகமாக இருக்கின்றன. 

    இந்த நிலையில் புதிய ரியல்மி புக் ஸ்லிம் 2K ரெசல்யூஷன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் இது ஆப்பிள் மேக்புக் ப்ரோ மாடலை விட எடை குறைவாக இருக்கும் என்றும் ரியல்மி தெரிவித்து உள்ளது. புதிய லேப்டாப் விவரங்களை ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

     ரியல்மி புக் ஸ்லிம்

    2K புல் விஷன் டிஸ்ப்ளே மட்டுமின்றி ரியல்மி புக் ஸ்லிம் 1.38 கிலோ எடை கொண்டிருக்கும் என அவர் தெரிவித்தார். இது 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலை விட குறைவு ஆகும். இதுதவிர புதிய லேப்டாப் தண்டர்போல்ட் 4 யு.எஸ்.பி. டைப் சி போர்ட், ஒரு யு.எஸ்.பி. டைப் சி 3.2 போர்ட், ஒரு யு.எஸ்.பி. டைப் ஏ 3.1, 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் வழங்கப்படுகிறது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை ரியல்மி புக் ஸ்லிம் மாடலில் அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி எஸ்.எஸ்.டி., மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 ஓ.எஸ். வழங்கப்படுகிறது.

    சியோமி நிறுவனத்தின் புதிய லேப்டாப் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கின்றன.


    சியோமி நிறுவனம் விரைவில் எம்.ஐ. நோட்புக் லேப்டாப்பை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு எம்.ஐ. நோட்புக் 14 மற்றும் எம்.ஐ. நோட்புக் 14 ஹாரிசான் எடிஷன் மூலம் கணினி சந்தையில் சியோமி களமிறங்கியது.

    சமீபத்தில் எம்.ஐ. நோட்புக் 14 இ லெர்னிங் எடிஷன் மற்றும் எம்.ஐ. நோட்புக் 14 மாடலை சியோமி அறிமுகம் செய்தது. எனினும், பேக்லிட் கீபோர்டு கொண்ட லேப்டாப்களை இதுவரை சியோமி, இந்தியாவில் அறிமுகம் செய்யவில்லை. 

     சியோமி டீசர்

    இந்த நிலையில், புதிய எம்.ஐ. நோட்புக் வெளியீட்டை உணர்த்தும் டீசரை சியோமி இந்தியா மூத்த அதிகாரி ரகு ரெட்டி வெளியிட்டுள்ளார். புதிய எம்.ஐ. நோட்புக் மாடலில் பேக்லிட் கீபோர்டு வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இவைதவிர புது லேப்டாப் விவரங்கள் இடம்பெறவில்லை.

    சீன சந்தையில் பேக்லிட் கீபோர்டு மற்றும் பிரீமியம் சேசிஸ் கொண்ட எம்.ஐ. நோட்புக் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. ஜூன் மாதத்தில் எம்.ஐ. நோட்புக் ப்ரோ எக்ஸ் 15 மாடலை அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை CNY 7999 இந்திய மதிப்பில் ரூ. 91,700 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    சோனி நிறுவனத்தின் விலை உயர்ந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் இருவித அளவுகளில் அறிமுகமாகி இருக்கின்றன.


    சோனி நிறுவனம் பிரேவியா சீரிசில் இரண்டு புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இவை பிரேவியா XR 77A80J மற்றும் 85X85J என அழைக்கப்படுகின்றன. இரு மாடல்களிலும் டால்பி விஷன், டால்பி அட்மோஸ் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. 

    மேலும் இவை காக்னிடிவ் பிராசஸர் XR மற்றும் X1 4K HDR பிக்ச்சர் பிராசஸர், 4K, HDMI 2.1, ALLM மற்றும் VRR வசதி கொண்டுள்ளன. இத்துடன் டால்பி அட்மோஸ், டால்பி விஷன், அகவுஸ்டிக் ஆட்டோ-கேலிப்ரேஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கின்றன.

     சோனி ஸ்மார்ட் டிவி

    சோனியின் புதிய OLED டிவி மாடல்களில் XR TRILUMINOS மற்றும் TRILUMINOS Pro வசதி உள்ளன. ஆடியோவை பொருத்தவரை 77A80J மாடலில் 3டி சரவுண்ட் சவுண்ட், 85X85J மாடலில் X பேலன்ஸ் ஸ்பீக்கர் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் கூகுள் டிவி, ஆப்பிள் ஏர்பிளே 2 மற்றும் ஹோம்கிட் உள்ளிட்டவைகளுக்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் சோனி பிரேவியா XR77A80J மாடல் விலை ரூ. 5,49,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 25 ஆம் தேதி துவங்குகிறது. பிரேவியா 85X85J மாடல் விலை ரூ. 4,99,990 ஆகும். இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
    வி (வோடபோன் ஐடியா) நிறுவனத்தின் புதிய பிரீபெயிட் சலுகை இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.


    வி நிறுவனம் ரூ. 449 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையில் வழக்கமான பலன்களுடன் ஜீ5 சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 4 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்புகள் வழங்கப்படுகிறது.  

     கோப்புப்படம்

    புதிய வி ரூ. 449 சலுகை 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இந்த சலுகையில் வாராந்திர டேட்டா ரோல் ஓவர் வசதி, வி மூவிஸ் மற்றும் டி.வி. செயலிக்கான சந்தா, இரவு நேரத்தில் வரம்பற்ற டேட்டா (நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை) உள்ளிட்ட பலன்களும் வழங்கப்படுகிறது. 

    இத்துடன் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. வி ரூ. 449 சலுகை நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வழங்கப்படுகிறது. இதனை வாடிக்கையாளர்கள் வி வலைதளத்தில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 
    ரியல்மி நிறுவனத்தின் முதல் லேப்டாப் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ரியல்மி நிறுவனம் லேப்டாப் சந்தையில் களமிறங்க இருக்கிறது. கடந்த சில நாட்களாக புது லேப்டாப் விவரங்களை ரியல்மி டீசர்களாக வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், தற்போது ரியல்மி லேப்டாப் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ரியல்மியின் முதல் லேப்டாப் சீரிஸ் ஆகஸ்ட் 18 ஆம் தேதி அறிமுகமாகிறது. முதற்கட்டமாக ரியல்மி லேப்டாப் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ரியல்மி புக் என அழைக்கப்படும் புதிய லேப்டாப் சீனாவில் நடைபெறும் ரியல்மி 828 நிகழ்வில் அறிமுகமாகிறது. 

     ரியல்மி டீசர்

    லேப்டாப் மட்டுமின்றி ரியல்மி பேட் பெயரில் டேப்லெட் ஒன்றையும் ரியல்மி அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், ஆகஸ்ட் 18 ஆம் தேதியே ரியல்மி பேட் மாடலும் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

    ரியல்மி புக் லேப்டாப் மாடல் மெட்டாலிக் சேசிஸ், மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது. இதில் பேக்லிட் கீபோர்டு, பெரிய அளவில் டச்பேட் உள்ளது. இத்துடன் பிரத்யேக கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. இதன் மற்ற அம்சங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றன.

    சாம்சங் நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி பட்ஸ் 2 வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங்கின் புதிய கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

     சாம்சங் இயர்பட்ஸ்

    இதே நிகழ்வில் சாம்சங் தனது புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களையும் அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய கேலக்ஸி பட்ஸ் மாடல் விலை முந்தைய இயர்பட்ஸ்-ஐ விட குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    "அதன்படி புதிய இயர்பட்ஸ் விலை 10 முதல் 20 சதவீதம் வரை விலை குறைவாக நிர்ணயிக்கப்படலாம். புதிய இயர்பட்ஸ் விற்பனையில் நல்ல வரவேற்பை பெறும் பட்சத்தில் வயர்லெஸ் இயர்பட்ஸ் சந்தையில் சாம்சங் 18 சதவீதம் அல்லது அதற்கும் அதிக பங்குகளை பெற முடியும்," என தனியார் ஆய்வு நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் லிஸ் லீ தெரிவித்தார்.

    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் பிரீமியம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது.


    மோட்டோரோலா நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகமானது. முன்னதாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மே மாத இறுதியில் ப்ளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டது. எனினும், தற்போது தான் இதன் விற்பனை துவங்கி இருக்கிறது. 

    புதிய மோட்டோ 360 மாடல் விலை ரூ. 19,990 ஆகும். இந்த ஸ்மார்ட்வாட்ச் பேண்டம் பிளாக், ஸ்டீல் கிரே மற்றும் ரோஸ் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. புதிய மோட்டோ 360 மாடலில் 1.2 இன்ச் வட்ட வடிவ AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

     மோட்டோ 360 3rd Gen

    இதன் கேஸ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனுடன் PVD கோட்டிங் (ஸ்டீல் கிரே, ரோஸ் கோல்டு) அல்லது DLC கோட்டிங் (பேண்டம் பிளாக்) செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸர், 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

    கூகுள் வியர் ஒ.எஸ். கொண்டிருக்கும் மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் 355 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகிறது. கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 4.1, சிங்கில் பேண்ட் வைபை போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
    எல்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் எல்ஜி கிராம் லேப்டாப் சீரிசை அப்டேட் செய்து இருக்கிறது.


    எல்ஜி நிறுவனத்தின் மூன்று எல்ஜி கிராம் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கின்றன. இவை 17-இன்ச், 16-இன்ச் மற்றும் 14-இன்ச் ஸ்கிரீன் கொண்டுள்ளன. மூன்று மாடல்களின் ஸ்கிரீன்களும் 16:10 எனும் அளவில் உருவாக்கப்பட்டுள்ளன.

     எல்ஜி கிராம் 2021 லேப்டாப்

    புதிய லேப்டாப்களும் எல்ஜி கிராம் 17Z90P, 16Z90P, மற்றும் 14Z90 பெயரில் அழைக்கப்படுகின்றன. இவை இன்டெல் இவோ சான்று பெற்று இருக்கின்றன. அல்ட்ரா-போர்டபில் ரகத்தில் உருவாகி இருக்கும் மூன்று லேப்டாப்களும் MIL-STD-810G தரச்சான்று பெற்று இருக்கின்றன. 

    மூன்று லேப்டாப்களிலும் இன்டெல் டைகர் லேக் 11th-gen பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் இன்டெல் ஐரிஸ் Xe GPU வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய எல்ஜி கிராம் லேப்டாப்களின் துவக்க விலை ரூ. 74,999 ஆகும்.

    ×