என் மலர்
கணினி
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வாட்ச் சீரிஸ் 7 மாடல் 2021 ஐபோன்களுடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் சீரிஸ் 7 மாடல் இம்முறை பெரிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய சீரிஸ் 6 மாடலுடன் ஒப்பிடும் போது புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 மாடல் 16 சதவீதம் பெரிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
பெரிய டிஸ்ப்ளேவில் புது வாட்ச் பேஸ்கள் சிறப்பாக காட்சியளிக்கும் என்றும் சிறு விவரங்களும் துல்லியமாக தெரியும் என்றும் கூறப்படுகிறது. புதிய வாட்ச் சீரிஸ் 7 - 41 எம்.எம். மற்றும் 45 எம்.எம். என இருவித அளவுகளில் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 2021 ஐபோன் மாடல்களுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 மாடலில் 1.9 இன்ச் ஸ்கிரீன், புதிய வாட்ச் பேஸ்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் நைக் மற்றும் ஹெர்மஸ் எடிஷனுக்கு பிரத்யேக வாட்ச் பேஸ்கள் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. புதிய வாட்ச் சீரிஸ் 7 மாடல் அதிவேக பிராசஸர், ஆரோக்கியம் சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ரெட்மி பிராண்டின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனுடன் ரெட்மி பிராண்டு, இயர்பட்ஸ் 3 ப்ரோ மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ரெட்மி இயர்பட்ஸ் 3 ப்ரோ கியூ.சி.சி.3040 சிப்செட், ப்ளூடூத் 5.2, ஆப்ட்-எக்ஸ். அடாப்டிவ் கோடெக் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
இந்த இயர்பட்ஸ் பல்வேறு அம்சங்களை இயக்க டச் கண்ட்ரோல், ஸ்மார்ட் வியர் டிடெக்ஷன் வசதி கொண்டுள்ளது. ரெட்மி இயர்பட்ஸ் 3 ப்ரோ மாடலில் 7 மணி நேர பிளேபேக், 600 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் சார்ஜிங் கேஸ் உள்ளது. இது மொத்தத்தில் 30 மணி நேர பேக்கப் வழங்குகிறது.

ரெட்மி இயர்பட்ஸ் 3 ப்ரோ மாடல் புளூ, வைட் மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2,999 ஆகும். புதிய ரெட்மி இயர்பட்ஸ் 3 ப்ரோ அமேசான், எம்.ஐ. வலைதளம், எம்.ஐ. ஹோம் ஸ்டோர்களில் செப்டம்பர் 9 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடலின் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
ரியல்மி பேட் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது. இதனை ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் உறுதிப்படுத்தி இருக்கிறார். புதிய ரியல்மி பேட் மாடலுக்கான டீசரை அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இந்த டேப்லெட் குறைந்த எடை கொண்டிருக்கும் என்றும் டூயல்-டோன் பினிஷ் செய்யப்பட்டு இருக்கும் என்றும் தெரிகிறது. புதிய ரியல்மி பேட் மாடலில் 8 எம்பி பிரைமரி மற்றும் செல்பி கேமராக்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 8எஸ் 5ஜி மற்றும் ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 9 ஆம் தேதி அறிமுகமாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அந்த வகையில் இதே நிகழ்வில் ரியல்மி பேட் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய இயர்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய பட்ஸ் ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்போன் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரீமியம் அம்சங்கள் நிறைந்த இயர்போன் என்பதால் இதன் விலை சற்றே அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
அனைவராலும் வாங்க முடியாத விலையில், ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ விற்பனைக்கு வந்துள்ளது. இந்த நிலையில், ஒன்பிளஸ் உருவாக்கி வரும் புது இயர்போன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. புது இயர்போன் ஏ.என்.சி. எனப்படும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இதன் விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் பட்ஸ் இயர்போன் லைட் பிராண்டிங் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த இயர்போன் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பைபர் இணைய சேவை மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் அதிக பலன்களை வழங்குகிறது.
ஏர்டெல், பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் பைபர் தொழில்நுட்பத்தில் இணைய சேவையை வழங்கி வருகின்றன. சமீப காலங்களில் பைபர் சார்ந்த இணைய சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
பைபர் இணைய சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 799 மற்றும் ரூ. 999 விலையில் மாதாந்திர சலுகைகளாக வழங்கி வருகிறது. இவற்றில் முறையே 100 Mbps மற்றும் 200 Mbps வேகத்தில் டேட்டா வழங்குகின்றன.

இரு சலுகைகளிலும் 3300 ஜி.பி. டேட்டா, ஓ.டி.டி. தளங்களுக்கான சந்தா, லேண்ட்லைன் இணைப்பு உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன. இதேபோன்ற சலுகைகளை ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.
எனினும், ஏர்டெல் மற்றும் ஜியோ சலுகை கட்டணங்கள் பி.எஸ்.என்.எல். வசூலிப்பதை விட அதிகம் ஆகும். மேலும் இந்த தொழில்நுட்பத்தில் இணைய சேவையை வழங்குவதில் பி.எஸ்.என்.எல். அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் 4 மற்றும் வாட்ச் 4 கிளாசிக் மாடல்கள் அடுத்த மாதம் விற்பனைக்கு வர இருக்கின்றன.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ்- கேலக்ஸி வாட்ச் 4 மற்றும் கேலக்ஸி வாட்ச் 4 கிளாசிக் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடல்களில் எக்சைனோஸ் டபிள்யூ920 5 நானோமீட்டர் பிராசஸர், ஒன் யு.ஐ. வாட்ச் 3 ஓ.எஸ். மற்றும் வியர் ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. இரு வாட்ச்கள் முறையே 1.2 மற்றும் 1.4 இன்ச் அளவு திரை கொண்டிருக்கின்றன.
கேலக்ஸி வாட்ச் 4 மாடலில் அலுமினியம் கேஸ், டச் பெசல், கேலக்ஸி வாட்ச் 4 கிளாசிக் மாடலில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேசிங், சுழலும் பெசல் உள்ளது. இவற்றில் 5 ஏ.டி.எம். தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 20 எம்.எம். வாட்ச் ஸ்டிராப்கள் உள்ளன.

இந்திய விலை விவரம்
கேலக்ஸி வாட்ச் 4 40 எம்.எம். ப்ளூடூத் (பின்க் கோல்டு, பிளாக்&சில்வர்) ரூ. 23,999
கேலக்ஸி வாட்ச் 4 40 எம்.எம். எல்.டி.இ. (பின்க் கோல்டு, பிளாக்&சில்வர்) ரூ. 28,999
கேலக்ஸி வாட்ச் 4 44 எம்.எம். ப்ளூடூத் (கிரீன், பிளாக்&சில்வர்) ரூ. 26,999
கேலக்ஸி வாட்ச் 4 44 எம்.எம். எல்.டி.இ. (கிரீன், பிளாக்&சில்வர்) ரூ. 31,999
கேலக்ஸி வாட்ச் 4 கிளாசிக் 42 எம்.எம். ப்ளூடூத் (பிளாக்&சில்வர்) ரூ. 31,999
கேலக்ஸி வாட்ச் 4 கிளாசிக் 42 எம்.எம். எல்.டி.இ. (பிளாக்&சில்வர்) ரூ. 36,999
கேலக்ஸி வாட்ச் 4 கிளாசிக் 46 எம்.எம். ப்ளூடூத் (பிளாக்&சில்வர்) ரூ. 34,999
கேலக்ஸி வாட்ச் 4 கிளாசிக் 46 எம்.எம். எல்.டி.இ. (பிளாக்&சில்வர்) ரூ. 39,999
புதிய சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் சாம்சங் மற்றும் முன்னணி வலைதளங்கள், ஆப்லைன் விற்பனை மையங்களில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படுகின்றன. இவற்றின் விற்பனை செப்டம்பர் 10 ஆம் தேதி துவங்குகின்றன.
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் பேண்ட் 6 முழு சார்ஜ் செய்தால் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
சியோமி நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எம்.ஐ. ஸ்மார்ட் பேண்ட் 6 மாடலை அறிமுகம் செய்தது. இதில் 1.56 இன்ச் புல் ஸ்கிரீன் ஆமோலெட் டச் டிஸ்ப்ளே, 30-க்கும் அதிக உடற்பயிற்சி மோட்கள், இதய துடிப்பு சென்சார், எஸ்.பி.ஒ.2 சென்சார், உறக்கத்தை டிராக் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஸ்டிரெஸ் மாணிட்டரிங், டீப் பிரீத்திங் கைடன்ஸ், 5 ஏ.டி.எம். தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 125 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள பேட்டரி 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. மேலும் இதில் சார்ஜிங் கனெக்டர் உள்ளது.

எம்.ஐ. ஸ்மார்ட் பேண்ட் 6 பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3499 ஆகும். எம்.ஐ. ஸ்மார்ட் பேண்ட் 6 அமேசான், எம்.ஐ. மற்றும் எம்.ஐ. ஹோம் ஸ்டோர்களில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
ரெட்மி பிராண்டின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
ரெட்மி நிறுவனம் செப்டம்பர் 3 ஆம் தேதி ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. தற்போது இதே தினத்தில் ரெட்மி இயர்பட்ஸ் மாடலும் அறிமுகமாகும் என ரெட்மி தெரிவித்து இருக்கிறது.
புதிய ரெட்மி இயர்பட்ஸ் குவால்காம் பிராஸர், ப்ளூடூத் 5.2 போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என்றும் இது அதிகபட்சம் 30 மணி நேர பிளேபேக் வழங்கும் என்றும் ரெட்மி தெரிவித்துள்ளது. இத்துடன் ஸ்பிலாஷ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது.
Super rad beats are about to drop! 🎶
— Redmi India - #Redmi10Prime | All-round Superstar (@RedmiIndia) August 25, 2021
Something exciting is brewing, and we can't wait for you to get in on it.
Gear up for the "BEAT DROP" during the🌠
"SUPERSTAR" launch of the year!
#Redmi10Prime ⬇️launch event.
https://t.co/q0TK73BvEp
Jam here➡️https://t.co/QSS2cNV3uTpic.twitter.com/qxrsdFHx0n
இந்த இயர்பட்ஸ் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகமான ரெட்மி ஏர்டாட்ஸ் 3 என கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த இயர்போனின் விலை ரூ. 3 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படலாம்.
போல்ட் ஆடியோ நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் இயர்போன் முழு சார்ஜ் செய்தால் 24 மணி நேர பேக்கப் வழங்குகிறது.
போல்ட் ஆடியோ நிறுவனம் இந்திய சந்தையில் ப்ரோபேஸ் கியூசார்ஜ் நெக்பேண்ட் இயர்போன் மாடலை அறிமுகம் செய்தது. இந்த நெக்பேண்ட் இயர்போன் 24 மணி நேர பேட்டரி பேக்கப், பாஸ்ட் சார்ஜிங் வசதி, IPX5 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
குறைந்த எடையில் உருவாகி இருக்கும் போல்ட் ப்ரோபேஸ் கியூசார்ஜ் மென்மையான சிலிகான் இயர் டிப்களை கொண்டிருக்கிறது. இந்த இயர்போனில் அலுமினியம் அலாய் என்கேஸ்டு மைக்ரோ வூபர்கள் உள்ளன. இவை சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன.

இந்த இயர்போன்களில் உள்ள காந்தம் வயர்கள் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்கின்றன. இதில் இன்-லைன் கண்ட்ரோல்கள், கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த நெக்பேண்ட் இயர்போன் முழு சார்ஜ் செய்தால் 24 மணி நேர பேக்கப் வழங்குகிறது.
இந்தியாவில் போல்ட் ஆடியோ ப்ரோபேஸ் கியூசார்ஜ் இயர்போன்கள் பிளாக், புளூ மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இந்த நெக்பேண்ட் இயர்போன் முதற்கட்டமாக ரூ. 1,199 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்7 எப்.இ. வைபை மாடல் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் மற்றும் ஓர் மிட்-ரேன்ஜ் ஆண்ட்ராய்டு டேப்லெட் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. புதிய மாடல் வைபை வசதி கொண்ட கேலக்ஸி டேப் எஸ்7 எப்.இ. ஆகும். சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எப்.இ. 4ஜி மாடல் ரூ. 46,999 விலையில் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் வைபை மாடல் விலை மேலும் குறைவாக இருக்கும் என்றே தெரிகிறது.
புதிய சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எப்.இ. வைபை மாடல் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி டேப் எஸ்7 எப்.இ. மாடலில் 12.4 இன்ச் 2560x1600 பிக்சல் டி.எப்.டி. டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

4ஜி மாடலில் உள்ளதை போன்றே வைபை மாடலிலும் 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5, மற்றும் 10,090 எம்.ஏ.ஹெச். பேட்டரி, அதிகபட்சம் 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 1,498 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதிவேக டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 40 கே.பி.-யாக குறைக்கப்பட்டு விடும்.
ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் புதிய ரூ. 1,498 சலுகை நாட்டின் அனைத்து வட்டாரங்களிலும் கிடைக்கும். புதிய பிரீபெயிட் சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதுதவிர எஸ்.எம்.எஸ். மற்றும் வாய்ஸ் கால் போன்ற பலன்கள் எதுவும் இந்த சலுகையில் வழங்கப்படவில்லை. இதற்கான வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.

புதிய பி.எஸ்.என்.எல். சலுகையை ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். ஏர்டெல் நிறுவனமும் ரூ. 1,498 விலையில் பிரீபெயிட் சலுகையை வழங்கி வருகிறது. இதில் மொத்தம் 24 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், 3600 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளரான டெஸ்லா ரோபோட் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டெஸ்லா சூரிய தகடு மேற்கூரை மற்றும் சூரிய தகடுகளை விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்த நிறுவனம் மனித உருவம் கொண்ட ரோபோட் வியாபாரத்தில் களமிறங்க இருக்கிறது.
அதன்படி டெஸ்லா பாட் பெயரில் முதல் ரோபோட்டை டெஸ்லா நிறுவனம் அறிமுகம் செய்தது. இதுபற்றிய அறிவிப்பின் போது, ரோபோட் ஆடை அணிந்த நடிகர் ஒருவர் மேடையில் தோன்றினார். டெஸ்லா பாட் இப்படித் தான் காட்சியளிக்கும் என எலான் மஸ்க் தெரிவித்தார்.

டெஸ்லா பாட் ப்ரோடோடைப் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது. டெஸ்லா பாட் 'ஆப்டிமஸ்' எனும் குறியீட்டு பெயரில் உருவாகிறது. எலெக்ட்ரிக் கார்களின் தானியங்கி அம்சத்திற்கு பயன்படுத்தும் சிப் மற்றும் சென்சார்களையே டெஸ்லா தனது ரோபோட்டிலும் பயன்படுத்துகிறது.






