என் மலர்tooltip icon

    கணினி

    வி நிறுவனம் மத்திய அரசின் ஸ்பெக்ட்ரத்தில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனையை துவங்கி உள்ளது.


    வி நிறுவனம் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனையை துவங்கியது. 5ஜி சோதனையில் வி நிறுவனம் அதிவேக இணைய சேவையை பதிவு செய்தது. எம்.எம்.வேவ் ஸ்பெக்ட்ரம் பேண்டில் வி நிறுவனம் நொடிக்கு 3.7 ஜிபி வேகத்தை பதிவு செய்தது. இந்த சோதனை பூனே நகரில் நடைபெற்றது.

    காந்திநகர் பகுதியில் 3.5 ஜிகாஹெர்ட்ஸ் பேண்டில் இணைய வேகம் நொடிக்கு 1.5 ஜிபியாக பதிவானது. வி நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்தை மத்திய அரசின் 5ஜி ஸ்பெக்ட்ரத்தில் சோதனை செய்து வருகிறது. இந்த சோதனை பூனே மற்றும் காந்திநகர் பகுதிகளில் நடைபெறுகிறது. 

     5ஜி

    'எதிர்காலத்தில் இந்திய வணிகர்கள் மற்றும் நுகர்வோருக்கு உண்மையான டிஜிட்டல் அனுபவத்தை வழங்க அடுத்த தலைமுறை 5ஜி தொழில்நுட்பத்தை சோதனை செய்து வருகிறோம்,' என வி நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப அதிகாரி ஜக்பிர் சிங் தெரிவித்தார்.
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய டேப்லெட் ஸ்டாக் ஆண்ட்ராய்டு ஓ.எஸ். கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


    மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டேப்லெட் மாடலை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த டேப்லெட் ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது அறிமுகமாகும் என தெரிகிறது.

    புதிய மோட்டோ டேப்லெட் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோரோலாவின் முதல் டேப்லெட் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த டேப்லெட் விலை ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

     லெனோவோ டேப்லெட்

    மேலும் இது ரி-பிராண்டு செய்யப்பட்ட லெனோவோ டேப்லெட் ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த டேப்லெட் ஸ்டாக் ஆண்ட்ராய்டு ஓ.எஸ். கொண்டிருக்கும் என தெரிகிறது. இதில் 10.3 இன்ச் டிஸ்ப்ளே, அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம். 
    ரியல்மி நிறுவனம் புதிய பேண்ட் 2 மற்றும் ஸ்மார்ட் டிவி நியோ 2 மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.


    ரியல்மி நிறுவனம் தனது பேண்ட் 2 மாடல் இந்தியாவில் செப்டம்பர் 24 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. இதே நிகழ்வில் ரியல்மி நார்சோ 50 சீரிஸ் மாடல்களும் அறிமுகமாகிறது. ரியல்மி பேண்ட் 6 வெளிப்புற தோற்றம் ஹானர் பேண்ட் 6 / ஹூவாய் பேண்ட் 6 போன்றே காட்சியளிக்கிறது.

    இதில் 1.4 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், ஐ.பி.68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, அதிக ஸ்போர்ட் மோட்கள், 18 எம்.எம். மாற்றக்கூடிய ரிஸ்ட் ஸ்டிராப்கள் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரியல்மி பேண்ட் விலை ரூ. 1499 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. புதிய ரியல்மி பேண்ட் விலை ரூ. 2500 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

     ரியல்மி ஸ்மார்ட் டிவி நியோ 2 டீசர்

    பிட்னஸ் பேண்ட் 2 மட்டுமின்றி ரியல்மி ஸ்மார்ட் டிவி நியோ 32 இன்ச் மாடல் இதே தினத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி பெசல்-லெஸ் டிஸ்ப்ளே, 20 வாட் டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
    சியோமி நிறுவனத்தின் பேட் 5 டேப்லெட் மாடல் டால்பி விஷன் மற்றும் ஹெச்.டி.ஆர்.10 டிஸ்ப்ளே கொண்டுள்ளது.


    சியோமி நிறுவனம் சியோமி பேட் 5 மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 11 இன்ச் 2.5கே, டபிள்யூ.கியூ.எக்ஸ்.ஏ. எல்.சி.டி. ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், டால்பி விஷன் மற்றும் ஹெச்.டி.ஆர்.10 வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த டேப்லெட் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர், டால்பி அட்மோஸ், குவாட் ஸ்பீக்கர்கள், 6.85 எம்.எம். மெல்லிய வடிவமைப்பு கொண்டுள்ளது. இத்துடன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி, ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர், 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

     சியோமி பேட் 5

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, டால்பி அட்மோஸ், 4 ஸ்பீக்கர்களை சியோமி பேட் 5 கொண்டிருக்கிறது. இத்துடன் வைபை, ப்ளூடூத் 5, 8720 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. சியோமி பேட் 5 காஸ்மிக் கிரே, பியல் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 349 யூரோக்கள் என துவங்குகிறது.
    ரியல்மியின் டிசோ பிராண்டு வாட்ச் 2 மற்றும் டிசோ வாட்ச் ப்ரோ மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.


    ரியல்மி நிறுவனத்தின் டிசோ பிராண்டு இந்திய சந்தையில் டிசோ வாட்ச் 2 மற்றும் டிசோ வாட்ச் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. டிசோ வாட்ச் 2 மாடலில் 1.69 இன்ச் ஸ்கிரீன், 600 நிட்ஸ் பிரைட்னஸ், 2.5டி கிளாஸ் மற்றும் பிரீமியம் மெட்டல் பிரேம் உள்ளது.

    இத்துடன் இதய துடிப்பு சென்சார், எஸ்.பி.ஓ.2 டிராக்கிங், ஸ்லீப் மாணிட்டரிங், 15 ஸ்போர்ட் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. டிசோ வாட்ச் ப்ரோ மாடலில் இதே அம்சங்களுடன் கூடுதலாக பில்ட்-இன் டூயல் ஜி.பி.எஸ்., குளோனஸ் பொசிஷனிங், 90 ஸ்போர்ட் மோட்கள் உள்ளன.

     டிசோ வாட்ச் ப்ரோ

    டிசோ வாட்ச் 2 மாடலில் 260 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது 10 நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. டிசோ வாட்ச் ப்ரோ மாடல் 390 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது. இது 14 நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

    இந்தியாவில் டிசோ வாட்ச் 2 மாடல் கிரே, பின்க் மற்றும் வைட் நிறங்களிலும் வாட்ச் ப்ரோ மாடல் பிளாக் மற்றும் ஸ்பேஸ் புளூ நிறங்களிலும் கிடைக்கின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 2,999 மற்றும் ரூ. 4,999 ஆகும். எனினும், குறுகிய காலக்கட்டத்திற்கு டிசோ வாட்ச் 2 ரூ. 1,999 விலையிலும், டிசோ வாட்ச் ப்ரோ ரூ. 4,499 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    ஆப்பிள் கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்வில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய ஐபேட் அறிமுகம்.


    ஆப்பிள் நிறுவனத்தின் கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்வு துவங்கியது. ஆன்லைனில் நேரலை செய்யப்படும் ஆப்பிள் நிகழ்வில் அந்நிறுவனத்தின் ஆப்பிள் டிவி பிளஸ் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த ஆண்டு ஆப்பிள் டிவி பிளஸ் சேவையில் வழங்கப்பட இருக்கும் நிகழ்சிகள் குறித்த முண்ணோட்டம்  வெளியிடப்பட்டது.

    இதைத் தொடர்ந்து புதிய ஐபேட் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய ஐபேட் மாடல் ஏ13 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது அன்றாட பயன்பாடுகளுக்கு ஏற்ற அம்சங்களை முன்பைவிட அதிவேகமாக செயல்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

     ஐபேட்

    புதிய ஐபேட் மாடலில் 12 எம்பி அல்ட்ரா வைடு செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் செண்டர் ஸ்டேஜ் எனும் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது வீடியோ கால் மேற்கொள்ளும் போது பல்வேறு வசதிகளை வழங்குகிறது.

    இந்த ஐபேட் மூன்றாம் தரப்பு கீபோர்டுகள் மற்றும் இது முதல் தலைமுறை ஆப்பிள் பென்சில் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இதன் பேஸ் மாடலான 64 ஜிபி விலை 329 டாலர்கள் என துவங்குகிறது. 

     ஐபேட் மினி

    ஐபேட் மாடலை தொடர்ந்து அறிமுகமாகி இருக்கும் புதிய ஐபேட் மினி 5ஜி கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் பென்சில் சப்போர்ட், 12 எம்பி பிரைமரி கேமரா கொண்டுள்ளது. இதில் உள்ள பிராசஸர் முந்தைய மாடலை விட 40 சதவீதம் வேகமாக செயல்படும் என ஆப்பிள் தெரிவித்து உள்ளது. இதன் விலை 499 டாலர்கள் ஆகும். 
    இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு குறுகிய கால விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது.


    இன்பினிக்ஸ் நிறுவனம் தனது எக்ஸ்1 ஆண்ட்ராய்டு டி.வி. சீரிஸ் - 32 இன்ச், 43 இன்ச் மற்றும் 40 இன்ச் மாடல்களுக்கு விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது. விலை குறைப்பு செப்டம்பர் 12 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 16 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

    இன்பினிக்ஸ் எக்ஸ்1 32 இன்ச் மற்றும் 40 இன்ச் மாடல்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 40 இன்ச் மாடல் ஜூலை மாத வாக்கில் ரூ. 19,999 அறிமுக விலையில் விற்பனைக்கு வந்தது.

    புதிய விலை விவரம்

    இன்பினிக்ஸ் எக்ஸ்1 32 இன்ச் மாடல் ரூ. 14,999

    இன்பினிக்ஸ் எக்ஸ்1 43 இன்ச் மாடல் ரூ. 22,999

    இன்பினிக்ஸ் எக்ஸ்1 40 இன்ச் மாடல் ரூ. 19,999

     இன்பினிக்ஸ் எக்ஸ்1 ஸ்மார்ட் டிவி

    இந்த டிவிக்களில் மெல்லிய பெசல்கள், அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, மெல்லிய டிசைன், இன்பினிக்ஸ் எபிக் 2.0 பிக்ச்சர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புளூ லைட் ரிடக்‌ஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டி.வி. 24 வாட் டால்பி ஆடியோ கொண்ட பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளன.

    வாட்ஸ்அப் செயலியில் சாட்களை புதுவிதமாக பேக்கப் செய்யும் வழிமுறை விரைவில் வழங்கப்பட இருக்கிறது.


    வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். பதிப்புகளில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட கிளவுட் பேக்கப் அம்சம் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தங்களின் சாட்களை ஆப்பிள் ஐகிளவுட் அல்லது கூகுள் டிரைவில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்து கொள்ள முடியும்.

    எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட கிளவுட் பேக்கப் அம்சத்தை வாட்ஸ்அப் தனது பயனர்களுக்காக உருவாக்கி இருக்கிறது. குறிப்பாக வாட்ஸ்அப் செயலியின் குறுந்தகவல்களுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் அம்சம் 2016 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 

     பேஸ்புக் ஸ்கிரீன்ஷாட்

    புது அம்சம் குறித்த அறிவிப்பை பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்து இருக்கிறார். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் வரும் வாரங்களில் வழங்கப்படும் என தெரிகிறது.

    ஹூவாய் நிறுவனத்தின் வாட்ச் ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.


    ஹூவாய் நிறுவனம் வாட்ச் ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடலை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் வாட்டர் ரெசிஸ்டண்ட் சபையர் டையல், 200 வாட்ச் பேஸ்கள் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆமோலெட் டிஸ்ப்ளே, டைட்டானியம் பிரேம், செராமிக் பேக் கொண்டிருக்கிறது. மேலும் இதில் 5ஏ.டி.எம். தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, நூற்றுக்கும் அதிக வொர்க்-அவுட் மோட்கள் வழங்கப்படுகின்றன.

     ஹூவாய் வாட்ச் ஜிடி 2 ப்ரோ

    இதில் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-ஐ 5 நிமிடங்கள் வயர்லெஸ் குயிக் சார்ஜ் செய்தால் 10 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இந்த வாட்ச் முழு சார்ஜ் செய்தால் 14 நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது. மேலும் இது ஸ்மார்ட் பவர் சேவிங் 2.0 வசதி கொண்டிருக்கிறது.
    ஒப்போ நிறுவனத்தின் என்கோ பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.


    ஒப்போ நிறுவனம் என்கோ பட்ஸ் பெயரில் புது என்ட்ரி லெவல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய இயர்பட்ஸ் 8 எம்.எம். டைனமிக் டிரைவர், ப்ளூடூத் 5.2, லோ-லேடென்சி டிரான்ஸ்மிஷன் அம்சங்களை கொண்டிருக்கிறது.

    மியூசிக், பாடல்களை மாற்றுவது, வால்யூம் மாற்றுவது போன்ற அம்சங்களை இயக்க டச் கண்ட்ரோல் வசதி உள்ளது. கேமிங் ப்ரியர்களுக்கு சூப்பர்-லோ 80 எம்.எஸ். லேடென்சி கேம் மோட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை இயக்க பயனர்கள் இயர்பட் மீது மூன்று முறை க்ளிக் செய்ய வேண்டும். 

     ஒப்போ என்கோ பட்ஸ்

    இந்த இயர்பட்ஸ் கால் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கிறது. ஒப்போ என்கோ பட்ஸ் மாடலில் ஐ.பி.54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது. இந்த இயர்பட் கேஸ் 400 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 24 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.

    ஒப்போ என்கோ பட்ஸ் வைட் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், ப்ளிப்கார்ட் தளத்தில் செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 16 ஆம் தேதி வரை ரூ. 1,799 சிறப்பு விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

    வாட்ஸ்அப் செயலியில் உருவாக்கப்பட்டு வரும் புது அம்சங்களின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.


    பேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கும் புது அம்சங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி பயனர்கள் தங்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், லாஸ்ட் சீன் மற்றும் ப்ரோபைல் புகைப்படத்தை குறிப்பிட்ட சில காண்டாக்ட்களுக்கு மட்டும் மறைத்து வைக்க செய்யும் அம்சம் உருவாக்கப்படுகிறது.

    தற்போது இவற்றை யாருக்கும் வேண்டாம் (no one), அனைவருக்கும் (everyone) மற்றும் காண்டாக்ட்களுக்கு மட்டும் (only contacts) என மூன்று ஆப்ஷன்கள் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் குறிப்பிட்ட சில காண்டாக்ட்களை மட்டும் தேர்வு செய்யும் வசதி இதுவரை வழங்கப்படவில்லை. 

     வாட்ஸ்அப்

    புதிய அம்சம் வாட்ஸ்அப் செயலியின் பீட்டா பதிப்பில் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில் விரைவில் இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியின் ஸ்டேபில் பீட்டாவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    நாய்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் அந்நிறுவன வலைதளத்தில் பிரத்யேகமாக விற்பனைக்கு வந்துள்ளது.


    மின்னணு அக்சஸரீக்கள் பிராண்டான நாய்ஸ், இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்வாட்ச் நாய்ஸ்பிட் கோர் என அழைக்கப்படுகிறது. இதில் 1.28 இன்ச் டிஸ்ப்ளே, சின்க் அலாய் பாடி, 24x7 இதய துடிப்பு சென்சார், 13 ஸ்போர்ட் மோட் போன்ற அம்சங்கள் உள்ளன.

    நாய்ஸ்பிட் கோர் மாடல் சின்க் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ப்ளூடூத் 5 கனெக்டிவிட்டி, இதய துடிப்பு, உறக்கம் உள்ளிட்டவைகளை டிராக் செய்கிறது.

     நாய்ஸ்பிட் கோர்

    இதில் உள்ள 285 எம்.ஏ.ஹெச். பேட்டரி 7 நாட்களுக்கான பேக்கப் வழங்குகிறது. ஸ்டாண்ட்பை மோடில் இந்த வாட்ச் 30 நாட்களுக்கான பேக்கப் வழங்கும். நாய்ஸ்பிட் செயலி மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைந்துகொள்ளும் வசதியை இந்த ஸ்மார்ட்வாட்ச் கொண்டிருக்கிறது. 

    நாய்ஸ்பிட் கோர் ஸ்மார்ட்வாட்ச்- சார்கோல் பிளாக் மற்றும் சில்வர் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 2,999 எனும் துவக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
    ×